Pages

Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ........

2009 உங்களுக்கு மறக்கவே முடியாதளவுக்கு ஓர் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்


சோகங்களை மறப்போம் ......

சந்தோஷங்களை உருவாக்குவோம்....

பிறரை சந்தோஷபடுத்தி நாம் சந்தோஷமாக இருப்போம்......

எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம்.தினம் தினம் தீபாவளி தான்......

நமக்கு மனசு இருந்தால் எல்லா நாளையும் தீபாவளியாக கொண்டாட முடியும்......

மனசு இருந்தால் மார்க்கம் உண்டு....
யாதும் ஊரே ...யாரும் கேளிர்கலவை - 2009

மனுஷன் கொடுத்து வைச்சவன். இந்த வயசிலும் இப்படி போட்டு தக்குரரே.....மச்சம் தான். நம்ம ND திவாரி யை தான் சொல்லுறேன். த்ரிஷா குளியலுக்கு பிறகு இவரது வீடியோ தான் செம டாப் தமிழ் நாட்டில். ஆன இவ்வளவு செய்த பின்னாடி "நான் ஒன்னும் பெரிய குற்றம் செய்யலன்னு......அப்படி நான் செய்து இருக்கிறேன் என்று நீங்க நினைச்ச அதுக்கு மன்னிப்பு கேட்குறேன்" ன்னு டயலாக் விட்டு இருக்கார். எதர் எடுத்தாலும் பொங்கி எழும் மாதர் சங்கம் என்ன செய்றாங்கன்னு தெரியல.

இன்னொரு கொடுமை என்னா இவரது வீடியோ யூ டுப் ல செம ஹிட். ஐ ஐ மன்மத ராசா மன்மதராசா ..நேத்து நியூஸ்பேப்பர் கடைக்காரர் சொன்னார் ...ஜூவீ ல இவரது விளையாட்டுகளை அட்டையில் போட்டதினால் செம சேல்ஸ்....ன்னு

= = = = = = = = = =

எழுத்தாளர் முகிலின் "அகம், புறம், அந்தப்புரம்" என்கிற சரித்திர புத்தகம் இந்த புத்தக கண்காட்சியில் வருகிறதாம். இது அவர் ரிபோர்ட்டர் ல தொடராக எழுதினதோட தொகுப்பாம். அது குறித்த அவர் எழுத்துக்களை இங்கே கிளிக் பண்ணி பாருங்க.

= = = = = = = = = =

நான் ரொம்ப தேடி அலைந்து லியோ டால்ஸ்டாய் யின் போரும் அமைதியும் வாங்கிட்டேன் (ஆங்கிலத்தில் தான்) அதுவும் ரொம்ப குறைந்த விலையில்..... இன்னொரு ஆச்சிரியம் என்னவென்றால் அதை விட விலை குறைவாக ரூபாய் 125 க்கெல்லாம் கிடைக்கிறது . இந்த கதை wikisource ,classic reader போன்ற வெப்சைட்களில் இருந்தாலும், அதை புத்தகமாக படிப்பதில் தான் சுகம் அதிகம். அதுவும் classic reader ல காண கிடைக்காத சிறுகதைகளெல்லாம் இருக்கிறது. நன்றாகவே align பண்ணி இருக்காங்க அதில். அதே மாதிரி வெண்ணிற இரவுகள் சிறுகதையை ஆன்லைன் ல தேடி பார்த்து கொண்டு இருக்கிறேன்........ யாராச்சு வெப்சைட் URL சொன்ன நல்ல இருக்கும்.

= = = = = = = = = =

நண்பர் கார்த்திகை பாண்டியனின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்து இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அதே மாதிரி அடுத்த மாசத்தில் அந்த யூத் பதிவாளரின் புத்தகம் வர போகிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.

= = = = = = = = = =

வர வர திரையரங்கு போக வேண்டிய அவசியமே இருக்காது போல் இருக்கு. ரிலீஸ் யான எல்லா படத்தையும் மூன்று மாசத்தில் டிவி ல போட்டுருரங்க. என்ன கொடுமை சார் இது.

= = = = = = = = = =

இப்பொழுது எல்லாம் கேபிள்ஜி அவர்களின் பதிவை படிக்க ஆரமித்த பிறகு, நான் படம் பார்ப்பது ரொம்பவே குறைஞ்சு இருக்கு. அதனால் காசும் ரொம்ப மிச்சம். அதனால் அவருக்கு இந்த பதிவை DEDICATE செய்றேன்.

= = = = = = = = = = =

Wednesday, December 30, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர் பேட்டி அல்ல

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூறமுடியுமா?அப்படி ஒன்றும் பெரியதாக இல்லை. ஏற்கனவே எனக்கு மறதி அதிகம்...... இதில் மனசில் வாடகை தராமல் தங்கிய புத்தகங்கள் எதுவும் இல்லை. அதற்குன்னு புத்தகங்கள் படிப்பதை குறைத்து இல்லை. அது பட்டு போயிட்டே இருக்கும். சில நேரங்களில் படித்தே புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படித்த அனுபவம் எல்லாம் இருக்கு.

என்னை சோறு தண்ணி இல்லாமல் வெறி பிடிச்ச மாதிரி படிக்க வைத்த ஒரு புத்தகம்
உண்டென்றால் அது பொன்னியின் செல்வன் தான். ஓர் வாரத்துக்குள் படித்து முடித்தேன். அதே மாதிரி படிக்க முடியாமல் தவித்த ஒரு நாவல் உண்டென்றால் "வீர பாண்டியனின் மனைவி ".......அப்பரும் அமெரிக்க நாட்டில் நடந்த அடிமை வார்தகதை பற்றிய ஓர் புத்தகம்......பிறகு ஓர் ஆய்வு கட்டுரை உலக நகரங்களின் வளர்ச்சியை பற்றியது. இப்போதைக்கு இவ்வளவு தான் நியாபகம் வந்துச்சு.2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

திட்டம் போட்டு செய்யும் வழக்கம் என்னிடம் என்றுமே இருந்தது இல்லை. திட்டம் போட வேண்டுமென்றால் நல்ல ஞாபக சக்தி வேண்டும், அது தான் நம்ம கிட்ட இல்லையே. நண்பர்களின் பரிந்துரையின் பெயரில் தான் அதிகமாக புத்தகங்களை வாங்குவேன். இல்லாட்டி புரட்டி பார்த்து ...பிடித்து இருந்தால் வாங்குவேன்.


3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா சாரை ரொம்பவும் பிடிக்கும். அவரை நான் பார்த்தது இல்லை.

மற்றபடி தமிழில் நான் விரும்பிய சில எழுத்தாளர்களை பார்த்து பேசி இருக்கிறேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என்றால் சார்லஸ் டிக்கன்ஸ் தான். ஸ்கூல்ல இவரது கதைகள் தான் பாடமாக வரும். SO சிறுவயது முதலே என்னை மிகவும் கவர்ந்தவர் அவர் தான்.4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கல்லூரி நாட்களில் என்னிடம் அதிகமாக காசு இருக்காது. இருக்கும் கொஞ்சம் காசில் எதாவது புத்தகம் வங்கி படிப்பேன்.

மறக்க முடியாத அனுபவம் என்றால் .......... கல்லூரி சேர்ந்த புதுசுல CLASS கட் அடித்து விட்டு பயத்தோடு கல்லூரி நூலகத்தில் படித்த மேலாண்மை புத்தகங்கள் தான்.டிஸ்கி : நேற்று ஆதி அவர்களின் பதிவை படித்த பின் எனக்கும் அந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசை வந்தது...அதனால் தான்

Thursday, December 24, 2009

மேவி .....ஐ லவ் யூ - 3

ஆபீஸ் பிளாக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக்கும் இடையே இடது பக்கமாய் திரும்பினால் கொஞ்சம் தூரத்தில் லேடீஸ் டாய்லேட் இருக்கிறது. பாஸ்கட் பால் கோர்ட்ல இருந்து அதன் முகப்பை பார்க்க முடியும். பயற்சியில் சேர்ந்த நாள் முதல் எனக்கும் அப்பாஸுக்கும் அதனுள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் இருந்தோம்.

இருந்தாலும் பயம் தடை சொன்னது.

அதற்கு நன்கு ஆலோசித்த பிறகு .....முகுர்த்தம் குறித்தோம்.

வியாழன் மாலை.

முகர்த்த நேரம் கடந்தும் எண்ணம் நிறைவேறவில்லை. ஐந்து மணி, வழக்கமாய் இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. இப்பொழுதும் கூட்டமில்லை தான் அங்கங்கே ஓன்று, இரண்டு பேர் இருந்தார்கள்.

நாங்கள் இருவரும் மெல்ல மெல்ல இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தோம். யாரவது வருவது போல் தென்பட்டால், அந்த பக்கம் இருக்கும் கம்ப்யூட்டர் பிளாக்கு போவது போல் பவனை காட்டினோம். இன்னும் ஐந்து ஜன்னல்கள் தான் இருந்தது கடக்க.

ஓன்று ....

இரண்டு ....

மூன்று ......

எனக்கு அப்பொழுது ஓர் சந்தேகம் வந்தது.

"டேய் ...இதை இன்னிக்கே பார்தகனுமா ??"

"பேசமா வா ....."

அப்பாஸ் ரொம்ப டென்ஷனாக இருந்தேன், ஏதோ மணமேடையை நோக்கி போகும் மணமகன் போல். கக்குசுல அப்படி என்ன இருக்கு ..... திருச்சில நடக்கும் கண்காட்சிக்கு கூட நான் இப்படி போனது இல்லை. சற்று மெதுவாக தான் போனோம். ஓர் பெண் அந்த வழியாக வரவும் எங்களின் நடை உரைநடையானது. என் பார்வை அவள் மார்ப்பின் மேல் போனது.

ஆதாமுக்கு ஏவாள் ஒரு பெண் என்ற நினைவு வரவே இல்லை. அவனிடத்தில் இருந்த உறுப்பு அவளுக்கு இல்லாதது, ஆதாம் ஓர் பொருட்டாக கருதவில்லை. ஆனால் ஏவாள் வயதிற்கு வந்த பின் அவளின் உடலில் நடந்த பருவ மாற்றங்களால், வளர்ந்த மார்ப்பங்கள் அவனை ஏன்னோ செய்தது. அதை வரை இல்லாத ஓன்று, அது ஏன்ன என்ற கேள்விகளால் குழம்பிய நாளில் இருந்து ஆண்களுக்கு பெண் என்பவள் அதிசயங்களின் , ரகசியங்களின் இருப்பிடமாக தான் இருக்கிறாள். அதற்கு நான் மட்டுமென்ன விதிவிலக்க ???

அப்படி ஆராய்ந்து கொண்டு இருக்கும் போது யாரோ எங்களை நோக்கி சத்தம் போடுவது போல் ஆழ்கிணற்றின் உவமைகள் போல என் காதுகளில் கேட்டது. திரும்பி பார்த்தேன். அவள் முகம். அவளின் முகம் தாங்கிய அவளது உடல்.

குளிர் காற்று வீசியது. ஜன்னல் பக்கம் நின்ற என்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தேன். காற்றில் வேகமாய் அவளின் முக பிம்பத்தை கண்களில் ஏந்தி...... பறவை போல் பறந்து...மேடு பள்ளங்களை கடந்து கொண்டு இருக்கும் போது......

"டேய் ....என்னடா ஆச்சு ...வந்ததில இருந்து அப்படியே இருக்க ..."

மேகங்களிடையே பறந்து கொண்டு இருக்கும் நேரத்தில், என்னை தவிர என் வேகத்தில் யார் பறப்பது என்று அறியும் நோக்கத்தில் .......

நினைவு திரும்பி வந்து பார்த்த பொழுது விடுதியில் இருந்தேன். அப்பாஸ் ஏதோ ஓர் காரணத்துக்காக என்னை கையை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தான்.

"யார அவ ?"

"யாரு ....."

இந்த நேரத்தில் படித்து கொண்டு இருந்த ராஜேஷ் திரும்பி பார்த்தான்.


ராஜேஷ்.

நான் எப்படி இந்த கல்லூரிக்குள் தள்ளப்பட்டேன்னோ அதே மாதிரி அப்பாசும். ஊடக துறை சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற அவனது ஆசையும் நிராசையானது.எங்களுக்கு வகுப்புகளில் நடத்தபட்ட பாடங்கள் ஏதும் புரியவில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. ரச சாதத்திற்கு தேங்காய் சட்னி எவ்வளவு பொருத்தமாய் இருக்குமோ அந்த அளவுக்கு நாங்கள் பொருந்தி போய் இருந்தோம். ராஜேஷ் கிளாஸ்ல எங்கள் இருவரிடையே அமர்பவன். அப்பாவி அதனால் எங்களுக்கு அவன் மேல் பிரியம். படிப்பாளி. வகுப்புகளில் தரும் assignment களை முடிக்க அவனுடைய தேவை எங்களுக்குள் இருந்தது. அதனால் அவனை எங்களோடு வைத்து இருந்தோம்."அவ நம்ம கிளாஸ் தான்டா...." என்றான் அப்பாஸ்.

காதலின் புனிதம் நிர்வாணத்தில் ஆரமிக்கிறது என்று படித்துள்ளேன். அதனால் தான் அவள் மேல் எனக்கு காதல் வந்ததோ ....... அவளுக்குள் என் மேல் காதல் வர அவளும் என்னை அதே நிலையில் பார்க்க வேண்டுமா ??? என்கிற மாதிரி எல்லாம் கொக்கு மக்காக யோசிக்க ஆரமித்தேன் அவளை வகுப்பகளில் கவனிக்க ஆரமித்த பிறகு, தூக்கம் கூட வருவதில்லை.பிறகு வந்த நாட்களில் அவள் மேல் ஒரு பிரேமை கலந்த ஆளுமை வந்தது. வசந்தக்காலத்தில் பூக்கும் மலர்களை போல வகுப்பறையில் என்னுள் சந்தோஷங்கள் பூத்து கொண்டே இருந்தது அவளை பார்க்கும் நேரங்களில் எல்லாம். ரோமியோ ஜூலியட்யாய், அம்பிகாபதி அமராவதியாய் கற்பனைகளில் நான். ஸ்கூல்ல அவள் வேற குரூப், நான் வேற குரூப் அதனால் போதிய அறிமுகமில்லை எனக்கு காதலை வளர்க்க.......


தொடரும் ......

Wednesday, December 23, 2009

மேவி .....ஐ லவ் யூ - 2

ST ANNE 'S GROUND யை தாண்டி போனால் LAWRENCE HALL பக்கம் இருக்கிறது பெண்கள் விடுதி. அவர்கள் சொன்னது சின்ன வேலை தான். விடுதி ஜன்னல் பக்கமாய் போய் ஹாரிதாவின் ஹால் டிக்கெட்யை எடுத்து வர வேண்டும். அது அவள் டேபிளில் தான் இருக்குமாம்.

ஜன்னல் அருகே போன்னேன்.மறுநாள்.

கணக்கு பரீச்சையில் சரியாக எழுத முடியவில்லை. எல்லாம் மறந்தது போல் : எவ்வளவு நினைவு படுத்தி பார்த்தும் ஞாபகம் வரவில்லை. கண்களை மூடினால் அதே காட்சி தான்.

ஒரு மணி நேரம் முன்னாடியே answer - sheet யை தந்து விட்டு வெளியே வந்தேன்.


= = = = = = = = = =மே 1999

"இல்ல நான் hotel management தான் படிப்பேன் ......."

"டேய் சொன்ன கேள்ளுடா....." என்றார் அப்பா.

"அது எல்லாம் முடியாது .....என் வாழ்க்கை,நான் தான் முடிவு எடுப்பேன் ......" என்று நான் சொல்லி முடித்த மறுகணம் பெரிய அண்ணன் வேகமாய் வந்து பலமாய் ஒரு அரை விட்டார்.= = = = = = = = = =


ஜூன் 1999

காரில் பயணித்து கொண்டு இருக்கிறேன். காருடைய நிழல் நீளமாக இருந்து காரின் உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தது. சென்னை நோக்கிய பயணம். இரண்டு கார்கள்.

பெரிய அண்ணன் காரில் நான் இருந்தேன். கூடவே அண்ணி. சின்ன அண்ணன் அந்த காரை ஒட்டி கொண்டு இருந்தார்.


கதவை யாரோ தட்டுறாங்க. ......

வந்தது பக்கத்து ரூம் எம்பிஏ பசங்க. ஏதோ எகனாமிக்ஸ்ல
ஏதோ சந்தேகமாம். (என்ன கொடுமை சார் இது).ம்ம்ம் மணி 7 :30 ஆகிருச்சு. போய் சாப்பிடனும். வழக்கமாய் இந்திரா காந்தி சிலை பக்கத்தில இருக்கிற அரிய பவன்ல தான் சாப்பிடுவேன். கணபதி மெஸ் முடினத்தில் இருந்து இங்கே தான், அதுவும் பக்கத்து ரூம் பசங்க தான் சொன்னங்கன்னு போய் சாப்பிட ஆரமிச்சேன். வர வர அங்கேயும் டிப்பன் நல்ல இல்லை. அதனால் சேகர் மஹால் பக்கம் கோவை மெஸ்ன்னு ஏதோ புதுசாய் வந்து இருக்காம். இன்னைக்கு அங்க தான் ஜாகை. போயிட்டு வந்து கதையை தொடருகிறேன்.


மணி 8 : 20 .

ரூம்க்கு இப்ப தான் வந்தேன். கோவை மெஸ் பரவல. ஆன முத நாளே ரொம்ப கேள்வி கேட்டுட்டாங்க.

"வொர்க் பண்ணுரிங்க சார் ..?"

"ஆமாங்க....."

"என்ன சம்பளம் வரும் நமக்கு ??"

சொன்னேன்.

"அவ்வளவு காசுக்கு ஆபீஸ்ல என்ன பண்ணுவிங்க சார் ......."

நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். வழக்கமாய் ஆக மாட்டேன் ஆனால் பசி நேரத்தில் இப்படி அவன் கேட்டதால் ....

"ஆபீஸ் போன உடனே பேண்ட்யை கழுட்டி, பின்னாடி எண்ணையை தடவிக்கிட்டு ....குனிஞ்சு நிக்கணும்...... "

"என்ன சார் ...இப்புடி சொல்லுரிங்க ...."

"யோவ் ...முதல டிப்பன் வைச்சுட்டு, எது வேணாலும் கேள்ளு சொல்லுறேன். மனுஷன் நாள் புல்லா வேலை பார்த்துட்டு பசியோடு வந்தா, நிக்க வைச்சு கேள்விய கேக்குறிங்க ....."ஜன்னல் திறந்து விட்டேன் ...நம்ம கற்பனை குதுரை ஓட வசதியா இருக்கும்ல. கதைக்குள் போறதுக்கு முன்னாடி நம்ம ஹீரோவை பற்றி எனக்கு மட்டும் தெரிஞ்ச உண்மையை சொல்லியாகனும். ஹீரோ பிறந்த பொழுது என்னசுன்ன ....

"என்னங்க ...பாருங்க உங்க பையன் பிறந்த உடனே உச்சா போறேன்.... அவனை டாக்டர் க்கு தான் படிக்க வைக்கனும்" என்றாள் நம்ம ஹீரோட அம்மா. உடனே அதற்கு கவுன்ட்டர் தந்தார் ஹீரோட அப்பா ....

"இல்லடி...நல்ல பரு உச்சா ஓட ஆய் போறான்....அதனால் அவனை ENGINEER யாக ஆகுவேன்..."


சரி கதைக்குள் போகலாமா ???


இது வரைக்கும் யாருமே 95 % க்கு குறைந்தது இல்லை .....அதனால் REC யா IIT யா என்ற கேள்வி தான் எழும், எதொன்றில் அட்மிஷன் கிடைத்து விடும்; அதனால் எல்லோரும் ரிசல்ட் வரும் முன்னரே கூடி ஓர் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஓன்று சேர்ந்து விடுவார்கள். இந்த வருடம் எனக்காக ஓன்று சேர்ந்தனர்; கொண்டாட்டம் இல்லை. 78 % தான்.

புழுவை போல் பார்க்க பட்டேன். ஆனால் நான் அடிக்கடி கண்களை முடி ......கொடைக்கானல் குளிரில் LADIES ஹோச்டேல் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்.

குடும்ப கெளரவம். என் கனவு கனவாகவே போய்விட்டது.

சென்னை வந்து சேர்ந்தோம் ...... என்னவோ சாபத்தில் பிடியில் இருக்கும் ஓர் வாகனத்திலிருந்து இறங்கியது போல் ஓர் உணர்வு. நான் சேர போகும் கல்லூரி முன்பு இருந்தோம்...

நான் முதல் முறை கல்லூரிக்குள் அட்மிஷன்க்காக சென்ற சமயம். அது வரைக்கும் நகர பெண்களை பற்றி கேள்விப்பட்டு தான் இருக்கிறேனே தவிர பார்த்ததில்லை. அப்பொழுது தான் சென்னைக்கு முதன் முறையாக வந்தேன், உண்மையில் பெண்களில் அத்தனை விதமான அழகு உள்ளது என்று அன்று தான் அறிந்தேன். அப்பாஸ், யுவனோடு கல்லூரியிலும் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் போனது . தேவதைகளுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது சனியன்களை பற்றி என்ன கவலை. LIFE ல FIGURE வந்த உடனே நண்பனை CUT பண்ணி விடுவது தானே தமிழ் நாட்டின் பாரம்பரிய வழக்கம்.

எதிரில் இருக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தோம்.

SRENT ENGINEERING COLLEGE ..... கல்லூரியின் பெயர் சொன்னது பளபள எழுத்துக்கள். பணக்கார கல்லூரி, பணம் படைத்தவர்களுக்கான கல்லூரி.

குடும்பத்தை பொறுத்த வரைக்கும் , குடும்ப கௌரவத்தை மேம் மேலும் தொடர செய்யும் இடம்.

கனவுகளை பொசுக்கிய இடம் எனக்கு. சிந்தனைகள் பல எண்ண காற்றலையில் .....மனதிற்குள் குழப்பம்.


பெரிய அண்ணனுடைய குரல் : கேட்ட உடனே நினைவுகள் திரும்பின.

அண்ணன் இருக்கும் இடம் நோக்கி சென்ற பொழுதில் தான் கவனித்தேன் ...... அட்மிஷனுக்கு வந்திருந்த பெண்கள் அழகாய், தேவதைகளாய். போட்டிக்கு அப்பாஸ் இல்லை, இல்லாவிட்டால் பெண்களுடன் என்னை பேச விடாமல் அவனே எல்லோரையும் கவர்ந்து இருப்பான். அவன் இங்கு சேர்தது ஓர் வகையில் சந்தோஷமே. பிகர்கள் இருக்கும் இடத்தில நட்புக்கள் எல்லாம் அந்நிய நாட்டு சதிகளே.எப்புடியும் படிப்பு முடிவதற்குள் இரண்டு மூன்று பிகர்களை கரெக்ட் பண்ணிவிட முடியும் என்ற நம்பிக்கை, அப்பாஸ் என்னுடன் வந்தால் இதெல்லாம் முடியாது.

"டேய் ....அப்பா உன்னை கூப்பிட்டார் ..."

"என்ன ..அப்பா?"

"அமான் அங்கிள் போன் பண்ணினார்டா .....அப்பாஸையும் இங்க தான் சேர்க்க போறாராம் .....சந்தோசம் தானே ?"

நான் சும்மா ஒப்புக்கு சிரித்தேன்.

= = = = = = = = = = = =
செப்டம்பர் 1999

"பேண்ட்யை கழட்டுரா ......"

வகுப்புகள் ஆரமித்து சில நாள் சென்று இருக்கும். விடுதி வாழ்க்கை எனக்கு ஒன்றும் புதுதில்லை என்பது சிக்கிரம் ஒத்து போனது. இரவு நேரங்களில் சாப்பிட்ட பின் சூடாக பால் குடிப்பது எனக்கு பழக்கம். அப்படி கூடிய வெளிய சென்று விட்டு உள்ளே வரும் பொழுது தான் சீனியர்களிடம் மாட்டி கொண்டேன்.

ரொம்பவும் ஸ்ட்ரெஸ் பண்ணினாங்க. ரொம்பவே பொறுமை காத்தேன். ஓர் கட்டத்தில் முடியவில்லை.

பிரின்சிபால் ரூம்.

பிரின்சிபால். டீன். வார்டன். சப்-இன்ஸ்பெக்டர்.

அதற்குள் தகவல் கிடைத்து. பெண்களும் விடுதியிலிருந்து வந்து இருந்தனர். என்னையும், அப்பாஸையும் சுற்றி ஏதோ அரசியல் நடந்து கொண்டு இருந்தது. காலேஜ்க்கு புதியவர்கள் என்பதால் எங்கள் பேச்சு எடுபட்டது.

ஆனால் இதையெல்லாம் விட ......பழகிய பெண்ணுடைய முகத்தில் தான் என் முழு கவனமும் இருந்தது.

அவளை நான் ஏற்கனவே ஓர் முறை ஸ்கூல்ல பார்த்து இருக்கிறேன். கணக்கு பரீச்சைக்கு முந்திய இரவில்..... ஆனால் இந்த வாட்டி அவள் உடைகளோடு இருந்தாள்.


தொடரும்

Tuesday, December 22, 2009

மேவி .....ஐ லவ் யூ

பெருங்களத்தூர் முதல் ரயில்வே கேட் வழியாக வந்து செந்தில்முருகன் கம்ப்யூட்டர் சென்டருக்கும் சைக்கிள் ஸ்டாண்டுக்கும் நடுவே போகும் படிகள் வழியாக வந்தால் என் அறைக்கு வரலாம். ரயில்வே ஸ்டேஷன்யில் இருந்து ஐந்து நிமிடங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதலாய் மூன்று நிமிடங்களாகும். என் அறைக்கு வருபவர்கள் சொல்லும் ஒரே குறை வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதது தான். இதற்காக எதிரில் இருக்கும் பிரதர்ஸ் பேக்கரி முன்பு நிறுத்துவிட்டு வருவார்கள். மாவு மில் முன்பு நிறுத்த, மில்லின் ஓனர் அனுமதிக்க மாட்டார்.

என் அறைக்கு வரும் வழி தான் கொஞ்சம் எப்ப-சப்பையாக இருக்குமே தவிர, அறை வசதியாக தான் இருக்கும். ஆனால் அதை நான் வைத்திருக்கும் லச்சணம் தான் பல் இளிக்கும். பொது குப்பை தொட்டி கூட என் அறையை விட கொஞ்சம் சுத்தமாக தான் இருக்கும். புத்தகங்கள் திறந்த படி இருக்கும், சுவரில் கலோசொபு தனமான போஸ்டர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். தனியாக தங்கும் வாலிபர்களின் அறை எப்புடி இருக்கும் என்று நான் ஒன்னும் புதிதாய் கிளாஸ் எடுக்க வேண்டியது இல்லை.

சரி, இனிமேல் தான் கதைக்குள் போக போகிறோம், இடைவேளை இல்லை. ரிலாக்ஸ்செஷன் வேண்டுவோர் பிரதர்ஸ் பேக்கரியில் எதாவது சாப்பிட்டு விட்டு வாங்க.(எனக்கு அங்கு அக்கௌன்ட் இல்லை).............................
சனிக்கிழமை.

மாலை நேரம்.

வழக்கம் போல் நான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். பொதுவாய் சனிக்கிழமை மாலை நேரங்கள் ஞாயிறு மாலை நேரத்தை விடவும் சுவாரசியம் அதிகமாக தான் இருக்கும். ஏன்னு என்று சொல்ல காரணங்கள் இல்லை தான், ஆனாலும் ஏதோ ஓன்று கிடைத்து விடும், அன்றைய மாலை பொழுதை நான் சுவாரசியமாக தான் அனுபவித்தேன் என்று நம்புவதற்கு.

அன்றும் அப்படி தான். சுவாரசிய பொழுதுகளை எதிர்நோக்கி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன், என்ன பார்த்தேன் என்று ஞாபகமில்லை, ஆனால் செல்போன் தோழிகள் அழைத்தால் பாட வேண்டிய அந்த பாட்டை பாடியது. பர்சனல் மொபைல் தான். ஆபிஷியல் மொபிலேயின் இயக்கத்தை நிறுத்தி வைத்து இருந்தேன்.

"டேய். என்னடா பண்ணிட்டு இருக்க ??"

கொஞ்ச நேர யோசனைக்கு பின் பூஜா தான் பேசுகிறாள் என்பதை டிஸ்பிளேவை பார்த்து தெரிந்து கொண்டேன்.

"ஒன்னும்ல்லா.... சும்மா தான் இருக்கேன்."

"ஏன்...புக்ஸ் படிக்கல ??"

"போர் அடிக்குது..."

"ம்ம்ம்"

"வேலை எதுவும் இல்லை...."

"ஓ..... அப்படின்னா, நான் ஒரு வேலை தரேன்...செய்."

"எனது ?"

"வந்து உன் ரூம் கதவ திற ..... நான் வெளியே நான் இருக்கேன்...."

மனிதர்களின் மனசை போல் தான் என் அறையும், வெளியே இருந்து பார்க்க நல்ல தான் இருக்கும். உள்ளே செம குப்பையாய் இருக்கும். சுலபத்தில் சுத்தம் செய்ய முடியாது. இது அந்த நேரத்தில் மண்டைல பல்பு எரிஞ்சுது.

சரின்னு கண்ணதாசன் மாதிரி "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ..." மனசில் பாடிகிட்டே கதவை திறந்தேன்.

அவள்.

கண்களில் எதிர்பார்த்த மாதிரி தான் அறை இருக்கிறது என்பது போல் ஒரு ஏளன பார்வை. சுவரில் இருக்கும் படங்களை பார்த்து கொண்டே வந்த அவள் ஒரு படத்தை பார்த்த உடனே,அவள் முகம் அஷ்ட கோணலாய் போனது. போன மாதம் ஒட்டின GANG BANG படம். என்ன சொல்லுறதுன்னு தெரியல ஆன மொத்தத்தில் என் மானம் டைடானிக் ஏறி கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் விருந்தோம்பல் தான் தமிழரின் SUN BATH என்று ......சாரி பண்பாடு என்று நினைவு வருவே நூட்லஸ் வைத்து தந்தேன். திருவள்ளுவர் பாடாத ஐட்டம் ஒன்றை அவளுக்கு தந்து விட்டேன் என்ற பெருமை.

(சே...கதை ரொம்ப மொக்கைய போயிட்டு இருக்குல ...PATTERN CHANGE )

ஜன்னல் வழியே வந்த காற்று நங்கள் இருவரும் அருகே ஏதோ ஒரு அவஸ்தையுடன் அமர்ந்து இருந்ததை கண்டு பிடித்தது. எதுவென்று தெரியவில்லை பேச்சு காதல், கல்யாணம், காமம் என்று திசை திரும்பிய பொழுது தான் நாங்கள் உணர்ந்தோம் எங்களுக்குள் பற்று இருப்பதை.

தனிமை தந்த சுகந்திரம்.....

மனதிற்கு தான் சமுக கட்டுப்பாடுகளெல்லாம். உணர்வுகளுக்கு அது இல்லை.

ஆனால் மனதும், உணர்வும் ஒரே இடத்தில் இணைந்து இருந்ததால் பிரச்சனை.

என்ன செய்வது என்று தெரியவில்லை.

பயம் ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம். தனிமை ஒரு உளியை போல் காம உணர்வினை மேம்மேலும் செதுக்கி கொண்டு இருந்தது.

எதற்கு அவள் வர வேண்டும்.

அவளை நான் தடுக்கவில்லை. ஆனாலும் அவள் போகாமல்...... இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அறிவு ஆணுறை வாங்கி விடலாமா என்று யோசிக்க ஆரமித்தது.

முத்தமிட அவள் உதடுகள் நோக்கி தவிப்புடன் என் உதடுகள் ......

ஆர்வம் வந்த பொழுது முன்னேறினேன். பயம் வந்த நேரத்தில் பின் வாங்கினேன்.
கட்டுபடுத்த முடியாத ஒரு நிலையில் கையை அவள் அருகே கொண்டு போனேன். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. கதவை திறந்து கொண்டு என் பக்கம் முதுகை காட்டிய படி சொன்னாள்.....

"நான் உண்......."

"ம்ம்ம்...எனது.." என்றேன் அவஸ்தையில்

"மேவி..ஐ லவ் யூ .....உன்னை கல்யணம் பண்ணிக்க ஆசை படுறேன்......"

பிறகு ஆணுறை வாங்க வேண்டிதாக போச்சு. ஒரு பெண் மனசுக்குள் வந்தால் எவ்வளவு வெளிச்சமாக, அவள் காட்டும் பரிசுத்த அன்பினால் தூய்மையாகும் மனம் போலானது என் அறையும், மனசும்.

சிரித்தபடி பெருங்களத்தூர் தெருக்களில் சுற்றினோம். பிறகு கோவிலுக்கு சென்றோம்.

தாம்பரம் போக எண்ணமில்லை. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும்
..........
(ஒ..சின்ன தப்பு நடந்து போயிருச்சு ......இது கதையோட கடைசி பாகம்...... முதல் பாகம் இதோ கிழ இருக்கு)

மார்ச்,1999

XXX BOARDING SCHOOL

கொடைக்கானல்

"இப்ப LADIES HOSTEL க்கு போகாட்டி ....ஹால் டிக்கெட் உனக்கு கிடைக்காது ...."

நாளை +2 BOARD EXAM . கணக்கு முதல் எக்ஸாம்.

எனக்கு பயம இருந்துச்சு .......
தொடரும் .....

தற்கால அடிமைகள் -4

நான் எதற்கு கடந்த இரு பதிவுகளிலும் பிராண்டு, பிராண்டு ன்னு சொல்லி கொண்டு இருந்தேன் என்றால் பொதுவாய் நான் கவனித்து இருக்கிறேன் சிலர் சிலரிடம் பிரண்டுயை பற்றி பேசும் பொழுதெல்லாம் அதை பற்றியே விவரிப்பு செய்வதற்கே நேரம் போய் விடும். அதற்க்கு தான் எனக்கு தெரிந்த வகையில் சொல்லி கொண்டு இருந்தேன்.

மேலும் நான் சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தேன். கொஞ்சம் குழம்பி தான் போயிருந்தேன், எதை பற்றி சொல்லுவது என்று.

பொதுவாய் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருந்திர்கள் என்றால் நம்ம நாட்டில் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் அரசு (அதுவும் பெரும்பாலும் ஐடி கம்பனிகள்) நாட்டின் முதுகு எலும்பான விவசாயத்தின் மேல் அந்த அளவுக்கு அக்கறை காட்டுவது இல்லை.

நான் கொஞ்ச நாள் முன்னாடி கொரியா நாட்டு செய்தி ஆவண படத்தை பார்த்தேன். (வேறு மொழி என்பதால். நான் SUB TITLE களை கொண்டு தான் புரிந்து கொண்டேன்). அது என்ன சொலுச்சு என்றால் நகரத்தில் வாழும் நடுதர மக்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து, மொத்தமாய் காசு போட்டு, ஒரு விவசாயிடம் தந்து, அவனது மகசூல் இன்னும் அதிகமாக வர உதவி செய்றாங்க. பதிலுக்கு அந்த விவசாயி தனக்கு வரும் லாபத்தில், அந்த மக்களின் முதலிட்டுக்கு ஏற்பஅவர்களின் பங்கை பிரிந்து தருகிறான். மேலும் சிலருக்கு பொருளாகவும் தருகிறான். அதை அவர்கள் சந்தையில் நேரடியாக விற்பனை செய்து, கொஞ்சம் அதிகமாக காசு வந்தால், விவசாயிக்கும் தருகிறார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இதில் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு எந்த பங்கும் இல்லை. பொது மக்கள் எல்லாரும் தங்களின் சுய முயற்சியில் இதை செய்றாங்க. இதனால் இரண்டு பேருக்கும் வருமானம். இதற்க்கு என்று DOCUMENTATION கூட பண்ணுறாங்க.


நான் அப்படியே அசந்து போயிட்டேன். செம PROCESS . இந்த மாதிரியான திட்டங்களை ஏன் நமது இந்திய அரசாங்கம் PROMOTE செய்வது இல்லை என்ற கேள்வி எனக்குள் வந்தது.

ஆனால் நமது அரசாங்கம் செய்வது என்ன ???

அந்த காலத்தில் இயற்க்கை விவசாயத்தை கொண்டு தான் நம் முன்னோர்கள் செழுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது அரசு உர கம்பெனிகளின் BRAND PROMOTER யாக தான் செய்யல் படுகிறது.

கொஞ்சம் நாள் முன்னாடி நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டு இருக்கும் போது, அவர் சொன்னார் உரத்தின் தர கட்டுப்பாடு பற்றி எல்லாம் அரசு அதிகம் கவலை படுவது இல்லை. விவசாயிகளுக்கு அவை பரிந்துரை செய்ய படும் முன்பு சரியான முறையில் பரிசோதனை செய்ய படுகிறதா என்பது கேள்வி குறி தான் என்று சொன்னார்.


இது எல்லாம் விவசாயத்தை படித்தவர்கள் நிறைய பேர் இருந்தால் ....விவசாயிகளுக்கு இது எல்லாம் எடுத்து சொல்லி இருப்பாங்க.

ஆன, நாட்டின் முதுகு எலும்பு என்று சொல்ல படுற விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு அரசாங்கம் பெருசா ஒன்னும் செய்யவில்லை.... இன்ஜினியரிங், மெடிகல், ஆர்ட்ஸ் காலேஜ் இருக்கும் அளவுக்கு விவசாய கல்லூரிகள் இருப்பதில்லையே.

விவசாய படிப்புகளுக்கான DEMAND யை ஏற்படுத்த நமது அரசாங்கம் தவறி விட்டது. விவசாயம் படித்தால் குறைந்த பட்சம் நல்ல வாழ்க்கை முறை வாழ முடியும் என்ற நிலை வர வேண்டும். விவசாயம் சார்ந்த நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கிறது, அதை பற்றி எல்லாம் பெரியதாக விழிப்புணர்வு இல்லை மக்களிடம்.


என்னை கேட்டால் பள்ளிகளில் சயின்ஸ் குரூப், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் போன்று சில SELECT பண்ணின பள்ளிகளில் விவசாயத்தையும் ஒரு குரூப் யாக கொண்டு வர வேண்டும். அதில் முழு முழுக்க விவசாயம், பிறகு அதனை சார்ந்த துறைகள், வணிகம் போன்ற பாடங்களும் அதில் இருக்க வேண்டும்.

விவசாயத்தை சார்ந்த மாநாடுகள் மக்களுக்கு புரிற மாதிரி நடத்த வேண்டும். பேசும் மொழிக்கு மாநாடு நடத்தும் தமிழ் அரசு, விவசாயத்துக்கு நடத்தினால் நல்ல இருக்குமே. அந்த மாநாடுகள் முக்கியமாக துறை சார்ந்த மாநாடாக இல்லாமல், பொது மக்களிடம் விவசாயத்துக்கான DEMAND CREATE பண்ணும் மாநாடாக இருக்க வேண்டும். (விவசாயத்துக்கு என்று நம் தான் ஒரு பண்டிகையே கொண்டாடுகிறோம்)

தொடரும்

Monday, December 21, 2009

பதிவுலக கவர்ச்சி படங்கள் - வயதானவர்களுக்கு மட்டும்


எந்திரனில் வால்பையனை இரண்டாவது ஹீரோவாக போட ஷங்கர் யோசித்து வருகிறாராம். இதை தெரிந்து கொண்ட கேபிள் சங்கர் அவர்களை வால்பையனை வைத்து தனது அடுத்த படத்திற்கான PHOTO SHOOT நடத்தி விட்டார். அந்த புகைப்படங்கள் தான் இது என்று நான் சொல்ல மாட்டேன்.

சும்மா தோனுச்சு அதான் போட்டேன்.

எனக்கு பதிவுலகம் தந்த நண்பர்களில் ஒருவர் ....... அருமையான குணம்.

இவருக்கு ஞான டாஸ்மாக் என்ற விருதை தருகிறேன்

(விருது வேண்டுவோர் ...என்னை தொடர்பு கொள்ளவும்)தற்கால அடிமைகள் -3

உலகமயமாக்க பட்ட ஒரு பொருளாதார நாட்டில் அதன் அரசு, தனது நாட்டில் இருக்கும் NATIVE BRANDS என்று சொல்ல படும் சொந்த நாட்டின் தயாரிப்புகளை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் வெளிநாட்டு BRAND களுடன் அவை போட்டி போட முடியாது, அந்த அளவுக்கு அவர்களிடம் காசும் இருக்காது.

ஆனால் இந்தியாவில் பார்த்தால் பெரிய கம்பெனிகளுக்கு தான் அரசு சலுகை அதிகம் தருகிறது. அத்தனை வைத்து அவர்கள் மேலும் மேலும் காசு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு உழைக்கும் மக்கள் இந்தியர்கள் தானே ??? என்று யாராச்சு கேட்டால் அவர்களுக்கு நான் தரும் ஒரே பதில் வெளிநாட்டு கம்பெனிகளில் உழைக்கும் இந்திய மக்களின் குடுமி அவர்கள் கையில்.

உதாரணம் -: இந்தியாவில் இருக்கும் அணைத்து பெரும் கம்பெனிகளில் உழைக்கும் மக்களும் தொழிற்சங்கம் அமைத்து கொள்ள உரிமை உண்டு. சமீபத்தில் ஓர் கார் கம்பெனி தனது கம்பெனில உழைக்கும் தொலளிகளை சங்கம் அமைக்க விடவில்லை. நிறைய தொழிலாளிகள் அத்தனை ஆதரித்த பொழுதிலும். மாநில அரசும் தனது கையை கட்டி கொண்டது. இதே போல் ஒரு நிலைமை எதாவது இந்திய கம்பெனிகளில் நடந்து இருந்தால் அரசு இதே நிலைப்பாடு உடன் இருந்திற்க்குமா????


BRAND என்றால் என்ன ???

நான் பெரிய பெரிய புத்தகங்களை படித்ததில் இருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால்...... BRANDING என்பது அடையாள படுத்துவது. BRANDING க்கு ஓர் கம்பெனில எப்பொழுது முக்கியத்துவம் தர படுகிறது ??

சின்ன உதாரணம் :- நாராயண மூர்த்தி இன்போசிஸ்யை ஆரமித்த சமயத்தில் எல்லோரும் அதை நாராயண மூர்த்தி கம்பெனியாக தான் பார்த்து இருப்பாங்க. அதே கம்பெனி தனது வியாபார எல்லைகளை விரிவு படுத்திய சமயத்தில் எல்லோரும் அதை இன்போசிஸ்யாக தான் பார்த்தாங்க, நாராயண மூர்த்தி அவர்கள் அந்த கம்பெனியின் ஒரு அங்கமாக மாறி போயிருந்தார்.


ஆதி காலத்தில் மனிதன் நாடோடியாக மாறின சமயத்தில் அவன் புது புது விஷயங்களை பார்க்க ஆரமித்தான். அவை அனைத்தும் அவன் புரிந்து கொள்ளவும், ஞாபகத்தில் வைத்து கொள்ளவும் அதற்க்கு எல்லாம் பெயர் வைக்க துடங்கினான். அது படி படியாக வளர்த்து ....... இது தான் BRANDING பிறந்த கதை. ஆமாம் நமது பெயர்கள் எல்லாம் ஓர் வகையில் ஓர் BRAND தான். ஏனென்றால் அவை நம்மை அடையாள படுத்துவதால்.


ஏன் மக்கள் BRAND யை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ????

ஏனென்றால் பெரிய பெரிய கம்பெனிகள் DEMAND CREATE பண்ணும் பொழுது அவர்களின் BRAND யை வைத்தே பண்ணுகிறார்கள்.

நீங்களே யோசித்து பாருங்கள்..... ஒரு PEPSI குடிக்க வேண்டும் என்று தான் போவிர்கள். குளிர் பானம் குடிக்க வேண்டும் என்று யாரும் போவது இல்லைஇன்றைய காலத்தில் குளிர் பானம் என்றாலே பெப்சி அல்லது கோக் என்று ஆகி விட்டது. மாப்பிளை விநாயகர் (இருக்கிறதா ??) யாருக்கும் ஞாபகம் வருவதில்லை. அவர்களுக்கு கோக் அளவுக்கு விளம்பரம் செய்ய வசதி இல்லை. பெரிய கம்பெனிகளே ஓர் விளம்பரத்துக்கான SLOT யோட விலையை ஏற்றி, சிறு உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்ய முடியாத அளவுக்கு ஒரு நிலையை உருவாக்கி விடுகிறார்கள். அரசு ஊடகத்திலும் இதே நிலைமை தான். .

தொடரும்

Sunday, December 20, 2009

தற்கால அடிமைகள் -2

நான் ஏற்கனவே இந்த தலைப்பில் எழுதிருக்கிறேன். மீண்டும் ஓர் முறை துறை சார்ந்த பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை வந்த பொழுது, இதை விட சிறந்த தலைப்பு எனக்கு தோன்றவில்லை.

அது என்ன தற்கால அடிமைகள். இந்த தலைப்புக்கும் நமது வாழ்க்கை முறைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. நமது தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பலவற்றின் தேவை நமக்கு முன் வாழ்ந்த தலைமுறையின் மேல் வலுகட்டயமாக திணிக்க பட்ட ஒன்றாகும். பல காலங்கள் முன் மனிதன் இயற்கையோடு ஒற்றி வாழ்ந்த நாட்களில், இப்பொழுது இருக்கும் பல நவீன வசதிகளின் தேவை இருந்ததே இல்லை.

இங்கு நான் முதலாளித்துவத்தின் அடிப்படை concept ஒன்றை சொல்கிறேன். அதாவது ஒரு பொருளின் தேவையை உண்டாக்க ; மற்றொரு பொருளுக்கான தேவையை உற்பத்தி செய்வது. இதை CLUSTER MARKETING என்று சொன்னால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அது என்ன cluster மார்க்கெட்டிங் ????

அதாவது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருள்கள் இடைய இருக்கும் ஒரு பொதுவான விஷயத்தை வைத்து தேவையை உண்டாக்குவது. DEMAND CREATION . BRANDING யின் அடிப்படை.

இதை சுலபமாக புரிய வைக்க ..........

மின்சாரம் கண்டுபிடித்த பின், அதற்க்கான தேவைகள் உருவாகவில்லை. பிறகு மின்சாரத்தால் இயங்கும் பற்பல சாதங்கள் கண்டுபிடித்த பிறகு தான் மின்சாரதுக்கான தேவை கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட ஆரமித்தது.

இதை இன்னும் சுலபமாக புரிய .......

இந்திய அரசாங்கம்.... பற்பல manufacturing units க்கு சலுகை தருவது ...... அவர்கள் மின்சாரதுக்கான தேவையின் உற்பத்தி காரணிகளாக இருப்பதால் தான். FAN MIXEE GRINDER போன்ற பொருட்களின் உற்பத்தி தொழிற்சாலை என்றால் கொண்டாட்டம் தான்.
எப்புடி என்றால்..... அந்த தொழிற்சாலை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு சாதனத்தின் பயன்பாடும், அதை வாங்கும் நபர்களை இன்னும் கொஞ்சம் மின்சாரத்தை உபயோக படுத்த வைக்கும்.

சரி. தொழிற்சாலையின் மின்சார பயன்பாடும், வீடுகளில் மின்சாரத்தின் பயன்பாடும் ஒன்றாகுமா ????

அந்நியன் படத்தில் ஒரு டயலாக் வரும்... ஞாபகம் இருக்கா ??

ஒரு கோடி ஐஞ்சு பைசா ......

புரியவில்லை என்றால் ...... நம்ம தமிழிலையே ஒரு பழமொழி இருக்கு.... "சிறுதுளி பெரு வெள்ளம்"

ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரதுக்கான சின்ன சின்னதாய் தேவையை உற்பத்தி பண்ணினால்...... ஆயிரம் வீடுகளில் மின்சார பயன்பாடு எவ்வளவு வரும்..... அப்பொழுது ஒரு நகரத்தில் .... ஒரு நாட்டில் ....... (நீங்களே கணக்கு போட்டு பார்த்துகோங்க, ஏனென்றால் நான் கணக்கில் ரொம்பவே சுமார் ரகம்)
இந்த மாதிரியான முறைகள் ஏன் வந்தது என்று பார்த்தால் ......

நாட்டை நிர்வகிக்க காசு வேண்டாமா .........

சரி. ஆன இப்ப யாரு நாட்டை நிர்வாகம் செய்யுறாங்க..எல்லோரும் பணத்தை திருட தான் செய்றாங்கன்னு சொன்னால்....

அதற்க்கு என் பதில் ......

அரசியல்வாதிகள் கொளையடித்து போக மிச்சம் இருக்கும் காசில் தான் நாட்டின் நிர்வாகத்திற்கு.....

நாட்டை நிர்வாகிக்க போதுமான காசு இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது??
அதற்க்கு தானே தகவல் கேட்டு அறியும் சட்டம் இருக்கிறது என்று யாராச்சு சொன்னால் ...... சந்தேகமே வேண்டாம், அவர்களுக்கு வடிவேலுவிற்கு பின் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சில விஷயங்களில் அரசாங்கம் ரகசியம் காக்க வேண்டும். ஒரு திட்டத்தை முடிக்க ஒதுக்க பட்ட காலத்தையும் தண்டி போகிறதா ??? அதற்க்கு ஒரே ஒரு காரணம் தான். போதுமான நீதி இல்லாதது தான்.

அரசு கிட்ட காசு இல்லாட்டி ஆயிரம் காரணம் இருக்குமில்லையா ???? ஆமாம் கட்டாயமான முறையில் இருக்கும். அத்தனை காரணங்களுக்கும் முலம் சரியான நிர்வாகம் அல்லது சரியான தலைமை இல்லாதது தான்.
சரி இது எல்லாம் பொது மக்களை எப்படி பாதிக்கும் ???

கொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி கத்திபாரா மேம்பாலம் கட்டினாங்கல. அப்பொழுது சரியான மாற்று வழிகளை ஏற்பாடு செய்யாததால் .... TRAFFIC JAM அதனால் எரி பொருள் வீண், அதற்க்கு செலவு செய்த காசு வீண், அதிலிருந்து வந்த புகையை சுவாசித்த சிலருக்கு உடல் நல கேடு. MENTAL TENSION சிலருக்கு, அதனால் அவர்கள் எடுத்த முடிவுகளால் வந்த இழப்பு........ இன்னும் சொல்லி கொண்டு போகலாம். இந்த மாதிரியான DIRECT மற்றும் INDIRECT AFTERMATHS களை பற்றி படிக்கவும், ஆராயவும் மிகவும் உதவியாய் இருப்பது CHAOS THEORY .

இதை தான் கமல்ஹாசன் அவரது படத்தில் சொன்னார்...... அது என்ன எது ன்னு கூட பார்க்காமல் கிண்டல் அடித்து தள்ளிட்டாங்க. சரியாக யாராச்சு ஊடகதில் சொல்லி இருந்தால் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும்.


தொடரும்....


Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் - பட விமர்சனம்


பலர் வேட்டைக்காரன் வழக்கமாய் வரும் விஜய் படமாய் தான் இருக்கும் என்றும்.... ஒரு பொழுது போக்கான படம் தான் என்றும் சொல்லிட்டாங்க. சரின்னு நம்ம மட்டும் எதுக்கு புதுசாய் விமர்சனம் எழுதனும்..... ஏற்கனவே எழுதின வில்லு மற்றும் குருவி பட விமர்சனங்களையே படித்து விடுவது உத்தமம்.

அதுவும் ட்ரைலர் ல "உனக்கு எல்லாம் போலீஸ்காரன் போதாது....வேட்டை வேட்டை..வேட்டைக்காரன் தான் ........" என்று சொல்லும் பொழுதே கொஞ்சம் டரில் ஆனேன். எனக்கு ஆசை தான் ஒரு அம்சமான விஜய் படம் பார்க்க வேண்டும் என்று.

ஆக்ஷன் படங்கள் என்றாலே பொதுவான கதை தான் ஞாபகம் வருகிறது நம்ம தமிழக டைரக்டர்களுக்கு. என்னை கேட்டால் விஜய்க்கு CRIME THRILLER வகைரா படங்கள் மிகவும் பொருந்தும். THE LAST MAN ON EARTH போன்ற கதைகள் அவருக்கு ரொம்ப சூட் ஆகும்.

மற்ற நடிகர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அம்சம் விஜய்க்கு இருக்கிறது. முக பாவனையில் SILENT TERROR காட்டுவதில் கில்லாடி.

MASS HERO ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது திறமையை சற்றும் புரிந்து கொள்ளாமல் தப்புப்பான கதைகளை தேர்ந்தெடுத்து காலத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறார்.

மசாலா படங்களிலையே இவ்வளவு திறமை காட்டும் விஜய் வித்தியாசமான கதைகளில் வெளுத்து வாங்கி விட மாட்டாரா ?????

பிறகு சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜய் ரசிகர்களுக்கு நாளையே பொழுது சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். கட்டாயம் இது ஓர் அருமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, December 13, 2009

தேவதையின் கை - 4

=====================================
நண்பர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களும் கொஞ்சம் ஆச்சிரியமாக பார்த்தனர். ஏன் என்று தெரியவில்லை. ரசனை முதல் எல்லாவற்றிலும் அவளின் ஆளுமையை உணர்ந்தேன். அது என் சுயமாக இல்லாவிட்டாலும், அதை நான் ரசித்தேன்.
(-)
பகலில் விழித்து கொண்டே கனவு கண்டேன். சன் மியூசிக்கில் காதல் பாடல்கள் வரும் பொழுது எல்லாம் என்னை அறியாமல் சிரித்தேன், கொஞ்சம் வெட்க பட்டேன். அப்படியே காற்றில் பறப்பது போல், மேகங்களை தண்டி நச்சத்திர வீதியில் அவளோடு கை கோர்த்து கொண்டு ; மகிழ்ச்சின் உச்சத்தில் இருப்பதாய் மனம் சொல்லியது. ஆனால் நான் பெல்பூர் மூன்றாவது தெருவில், முதல் வீட்டில் தான் இருந்தேன். எதிர் வீட்டில் மாமி துணி காய போட்டு கொண்டு இருப்பதை பார்த்தேன்.

(-)

நான் எப்பொழுதும் இப்படி எல்லாம் உணர்த்து இல்லை. பெண்களை பார்த்ததும் மயங்கி, காதல் கொள்பவனும் அல்ல. ஆனால் ஒரே இரவில் ஒரு பெண் என்னை இந்த அளவுக்கு வசியம் செய்ய முடியுமா என்று எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எது.... எது... எது என்னை மயக்கியது என்று என் மனதை கேள்வி கேட்கும் தருணங்கள் சிலது கிடைத்த பொழுதிலும், அவளின் நினைவுகள் என்னும் வலையில் இருந்து என்னை மீட்க முயற்சிக்கும் முன்னரே, அதே நினைவுகள் அவள் மேல் நான் காதல் கொண்டு, பைத்தியமாகி விட்டேன் என்பதை உணர்த்தி விட்டு, அப்ப அப்ப சென்றது .........வந்த உடனே.
(-)

"ஒரு bhel puri ......" என்று யுவன் ஆர்டர் பண்ணினான்.

அப்பாஸ் உடனே " டேய் மேவி நீ சொல்லுறா...."

"எனக்கு.....ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

அவர்கள் இருவரும் புரியாமல் என்னை பார்த்து கொண்டு இருந்தனர்.

(-)
"டேய் கதையே கூடுகாத ..."

"சொல்லவே இல்ல ..."

"ஆள் எப்புடிரா இருப்பா ...."

என்று அவர்கள் என்னை ஏதோ ஏதோ கேட்டு கொண்டு இருக்க...... நான் அந்த நினைவுகளிலே மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

(-)

வெளிக்கிழமை..... நாளை தீபாவளி.

நங்கள் எல்லோரும் ....... BHEL TOWNSHIP .......கோவில்கள்..... வழக்கமாய் நாங்கள் செய்யும் வேலை தான். ஆனால் ......

யுவன், அப்பாஸ் என்னோடு இல்லை.

"என்ன தம்பி......" என்று கேட்டார் ஸ்ரீராம் அண்ணன். வக்கீல்.சில நேரங்களில் அவருடைய அப்பாவின் கடையை பார்த்து கொள்வார்.

"ஒன்னும் இல்லண்ணே..... லெமன் டி போடுங்கண்ணே ....."

லெமன் டி. சூடாக இருந்தது.

"மலைகோவில் கடை எப்புடி ண்ணே போகுது...." என்று கேட்ட படியே புதுசாக வந்து இருந்த புது பட டிவிடிகளை...... ஒவ்வொரு டிவிடி அட்டையிலும் நாயகன், நாயகியாய் நானும் அவளும்.

"நைட் வரேண்ணே.......'

"தம்பி... நைட் ஜமாவா வந்துருங்க ....."
"நைட்ன்ன மொட்டை மாடில நின்னு வானத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்"
(-)
இரவு உறக்கம் பிடிக்கவில்லை. ரூம்லில் லைட் போட்டு, சுவரில் ஒரு பல்லி அங்கும் இங்கும்.....

FACEBOOK கில் புதிதாய் ரேணுகா தேவி என்ற பெயரில் FRIEND REQUEST வந்து இருந்தது. ஒரு வேளை அவளாக இருக்குமோ .....இல்லை வேறு யாரவது .......

கண்களை முடி யோசித்து பார்த்தேன்...... பள்ளியில் பெங்களூர் பெண்..... நண்பர்கள் வட்டம்.... கல்லூரி.........ரேணுகா ஸ்பரிசம் இல்லை...

தேவி ...ஒரு வேளை அவளாக இருக்கும்மோ.....பிரொபைல் போட்டோ வேறு இல்லை. தூக்க கலக்கம்.
(-)
கோவிலுக்கு போய் கொண்டு இருந்தேன்.... இரண்டாம் தெருவை தண்டி கொண்டு இருக்கும் பொழுது ...

ராஜு அப்பா .....

"எப்புடி இருக்கடா ...."

"நல்ல இருக்கேன் ஆன்டி...."

அப்பொழுது ஏதோ ஒரு புகைப்படத்தை கவரில் இருந்து வெளியே எடுத்த படி ராஜு அப்பா என் அருகே வந்தார்.
(-)
"ஒரு KINGS ....."
" .....DO YOU SMOKE .....??"

முதல் முறையாக இழுத்த பொழுது கொஞ்சம் நெஞ்சுக்குள் எரிச்சல் ..... சூடாக ஏதோ ஓன்று .... கொஞ்சம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன்.
"இல்லை ....எனக்கு அது எல்லாம் பிடிக்காது"
வாயில் புகையை சேமித்து வைத்து..... அடி நாக்கை சற்று அழுத்தி .....பலமாக இழுத்தேன்......
"இதுதானப்பா ராஜூவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு ......"
அடுத்த முறையிலிருந்து menthol புகைக்க வேண்டும் ....... எரிச்சல் கம்மியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
(-)
அவள் மேலிருந்த காதல் ....அது காதல் தானா என்ற சந்தேகம் இப்பொழுது .... மேல் இருந்த காதல் இப்ப காமம் என்ற நிலையில் இறங்கி. எனக்கே என் மேல் எரிச்சலாக இருந்தது. வரும் நாட்களில் எப்புடி அவள் முகத்தை பார்ப்பேன். ராஜூவை அண்ணன் என்ற நிலையில் வைத்தே பார்த்து பழகி உள்ளேன். வருங்காலத்தில் அண்ணி.

இந்த நினைவே என்னை கொன்று விடும் போல் இருந்தது.
எரிச்சல், கோவம், காதல்,காமம் என்று பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வந்த வண்ணம், நிலை தெரியாது அறிவு மங்கி,மயங்கி பேதலித்து .......


சுய-இன்பம் கொண்டேன் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று அழமாக எண்ணியதால். உடல் சோர்வு அடைந்ததே தவிர அவள் நினைவு லேசாக இருந்தது. உடல் வலு பெற பெற, அவளின் நினைவும் பலம் பெற்றது.
(-)
அடுத்த வாரம். வெளிக்கிழமை இரவு.

திருச்சி நோக்கிய பயணத்தில் ஏதோ ஒன்றை தொலைத்து, அதை தேடுவது போல் என் நினைவுகள்.

ராஜூ அண்ணன். குடும்ப நண்பர் என்ற நிலையில் இருந்து நண்பர் என்ற நிலைக்கு போய், அதன் பிறகு தெரிந்தவர் ஆகிருந்தார் இந்த ஒரு வாரத்திற்குள்.

எல்லாம் என் செயல் திறனுக்கு மீறிய வேகத்தில் நடந்து கொண்டு இருந்தது. எல்லாம் சொன்ன அவள் இதை ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாள் என்ற கேள்வியே என்னை மிகவும்...... பெண்களிடம் பிடிக்காத ஓன்று அது தான்.
"MARKETING STRATEGIST OF THE YEAR "
கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.
(-)
"ராஜூ அந்த மோதிரத்தை அவ கைல போடுறா ..."

நான் வெளியே வந்து விட்டேன். இனிமேல் வாழ்வில் ராஜூ அண்ணனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கார் எடுக்க வந்த நான், கடைசியாக அவள் முகத்தை பார்க்க முடியுமா என்ற கேள்விக்குள் மாட்டி கொண்டேன்.
(-)
நிறைவு

ரசிகனின் கிறுக்கல்கள்

(இதை படிக்கும் முன், இதை போய் படிச்சிட்டு வாங்க)


எனக்கான
உன்
படங்களில்
நீ
என் மூலமாக
சம்பாரித்து
கொண்டிருக்கிறாய்..!!
===============


இன்றேனும்
உன்னை ரசிக்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
நடிக்க மறுப்பவனாக
இருக்கிறாய் நீ..!!
===============


எத்தனையோ
மசாலா கதைகளை
சொன்ன டைரக்டர்
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
மொக்கையாக இருக்குமென்பதை..!!

===============


நான் செல்லும்
ஒவ்வொரு படத்திலும்
மொக்கையாய் நடித்து
என் முகத்தில் கரி பூசுவாய்..
நீ பூச வேண்டும் என்பதற்காகவே
படங்களுக்கு
போய் கொண்டிருக்கிறேன்
நான்..!!
===============


நண்பர்களோடு போய் வந்த
படங்களின் போஸ்டர்களில்
என்னை உணர்தவனாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..
எதையுமே கவனிக்காமல்
உன் முகத்தின் அழகை
ரசித்தபடி இருக்கிறேன்..
உனக்கு மிகவும் பிடித்த
இடமெதுவென சட்டென்று நீ கேட்க
யோசிக்காமல் உன் இதயம் தான்
என்று சொன்னேன்..
"ச்சீய்.." என்றவாறே
ஆணவம் கொண்டவனாக
என் காசில்
சொத்துகளை சேர்த்து கொள்கிறாய்..!!

எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு ரசிகன் எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))

Saturday, December 12, 2009

ஆதவன் ஆகாதவன்

அவள் வருவாளா .... அவள் வருவாளா ....

பாடி கொண்டே சூரியா வருகிறார். அப்ப அங்க வந்த வடிவேலு ....

"என்னது இது..... ஏதோ சொரண்டி கிட்டே வருது ... ஐயோ பாவம். யார் பெத்த பிள்ளையோ ....."

இதை பார்த்த சூர்யா "நீங்க பேசினது... என் ஷிப் ல இருக்கு......"

"ஆமா பேசினவன் இங்க இருக்கேன்.. பேசினது மட்டும் ஷிப் ல இருந்து என்ன ஆக போது...."

"நீங்க பேசினதை ரெகார்ட் பண்ணி சிப் ல ஸ்டோர் பண்ணி வைச்சு இருக்கிறேன்....."

"என்னது ஸ்டோர் ஆஅ..... அப்படின்னா எனக்கு கொஞ்சம் உப்பு ,புளி, மிளகாய் எல்லாம் கொஞ்சம் கம்மியான ரேட் க்கு போட்டு தாப்பா"

"அது இல்லை .... நீங்க பேசினதை சிப்ல பதிவு பண்ணி வைச்சு இருக்கிறேன்...."

"ஐயோ போப்பா. பொழைக்க தெரியாத பயல இருக்கியே.... அதை ஏனப்பா ரெகார்ட் பண்ணனும்... என் கிட்ட சொன்ன எங்க வேணும்னாலும் வந்து பேசிட்டு போறேன்"

===================================

"வண்டி ல bomb வைச்சு இருக்கேன்"

"ஆமாப்பா.. நானும் இந்த உருளகிழங்க சாப்பிட்டதில் இருந்து வயறு ஒரு மாதிரியா தான் இருக்கு..."

==================================

கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டிவி ல "சூர்யா...ஆதவன் ல வாழ்ந்து இருக்கார்" ன்னு கே.எஸ். ரவிக்குமார் சொன்னாரு. அதானே பார்த்தேன்...நடிக்க சொல்லி இருந்த நாள் இருந்திற்கும். சூர்யா வாழ்ந்ததால் தான் படம் மொக்கையா போயிருச்சு போல.......

==================================

அதே மாதிரி .... நயன் தாராவை பற்றி சொல்லும் பொழுது அவர் "nayan tara has done an extra ordinary performance " ன்னு சொன்னார். எந்த இடத்தில என்று சொன்னால் நல்ல இருக்கும். படத்தில் நானும் ஒரு காட்சி விடமால் தேடி பார்த்தேன். நயன் தாரா எங்கேயும் நடித்து காட்டவில்லை..... பாடல் காட்சிகளில் கொஞ்சம் காட்டி இருக்கிறார்.

=======================================

படத்தில் ஹீரோ வடிவேலு தான்னு சொன்னாங்க. நயன் தாராவை ஒரு பாட்டில் அவருடன் ஆட(ட்டி) வைச்சு இருந்த, நல்ல இருந்திற்கும்.

==============================================

தில்லாவும் பல்லும்

"டேய்... யாரு டா இங்க தில்லா......."

அங்கே தில்லை நடந்து கொண்டு வருகிறார். பல்லுயை தண்டி போகிறார். பிறகு தாம் வந்தது பல்லை பார்க்க தான் என்று தெளிந்த பின் அவர் பக்கம் வருகிறார்.

"நான் தான். வாங்க மலேஷியா போய் பேசலாம்...."

"ஏனடா?"

"அங்க தானே TWIN TOWER இருக்கு...."

"அங்க எல்லாம் நான் வர முடியாது....."

"????"

"ஏன்னா... வாழ்க்கை ஒரு சக்கரம்டா.... சென்னைக்கு வந்தவன் திருச்சிக்கு போவான், திருச்சி போனவன் சென்னை வருவான்"

"டேய் அதுக்கும் மலேஷியாவுக்கும் என்னடா சமந்தம்...."

"நீ கூலிங் கிளாஸ் போட்டு இருக்கல...."

"முடியல"

"அதான் எனக்கு தெரியுமே ...... அசலுக்கு காசு கூட பைசல் ஆகாதுன்னு"

"ஹலோ...சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங்க ......"

"அதை பார்க்க, அது என்ன பொண்ண...."

"சரி, பொருளாதரத்தையாவது திருப்பி பாருங்க ....."

"அப்படி திரும்பி பார்த்த யாரும் உன் படத்திற்கு வர மாட்டாங்க..."

"உன் படத்திற்கு திரும்பி பார்க்காமலே யாரும் வர மாட்டாங்க ..."

இதனால் கோவப்பட்டு தில்லா நடக்க ஆரமிக்கிறார் ......

பஞ்ச் டயலாக் பேச ஆள் இல்லாமல் ... தனியே பேசிக்கொண்டு போறார். தில்லா கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால் அடையாளம் தெரியாமல் பைத்தியக்கார ஆஸ்பீடல் உள்ளே போய் விடுகிறார்.

டிஸ்கி - எதுக்கு இந்த பதிவை எழுதினேன் என்று எனக்கே தெரியல

ரஜினி - ரஜினி -ரஜினி

இன்று DEC 12 . நடிகர் ரஜினியின் பிறந்த நாள். என்னை மிகவும் entertain பண்ணின நடிகர். சிறுவயதில் ரஜினி படத்திற்கு போக போகிறோம் என்றால் அப்படி ஒரு குஷி தோற்றி கொள்ளும்.


நான் சிவாஜி ராவ் என்ற தனிமனிதனுக்கு ரசிகன் இல்லை. ரஜினி என்ற திரை பிம்பத்திற்கு தான் ரசிகன், அதனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு, ஆன்மீகம், கருத்துக்களை பற்றி எல்லாம் நான் பெரும்பாலும் கவலைப்பட்டது இல்லை. ரஜினி படம் வருகிறதா ???? முதல் நாள், முதல் ஷோ பார்க்க மனம் துடிக்கும்.என்னை பொறுத்த வரைக்கும் ரஜினியின் நடிப்பு திறமையை யாரும் முழுமையாக பயன் படுத்தவில்லை. ரசிகனின் எதிர்பார்புக்கும், டைரக்டர் மற்றும் பட முதலாளிகளின் எதிர்பார்பையும் பூர்த்தி செய்யவே அவரின் இத்தனை ஆண்டு திரைவாழ்க்கை போய்விட்டது. டைரக்டர்கள் எல்லோரும் அவரை பணம் சம்பாதித்து தரும் ஒரு நாயகனாகவே பார்த்தார்களே தவிர ஒரு நடிகனாக அவரை பார்க்க வில்லை. அதில் எனக்கு கொஞ்சம் கஷ்டமே.

ஒரு படத்தில் தான் மகள் தனக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள போகிறாள் என்று தெரிந்ததும் ஒரு அதிர்ச்சி முகத்தில் காட்டுவார் பாருங்க. கிளாஸ் + மாஸ் நடிப்பு அது.
அண்ணாமலை படத்தில் அந்த சவால் விடும் காட்சி, சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த ஓன்று.


எனக்கு விடுமுறைக்கு சென்னை வரும் போது தான் திரையரங்கில் படம் பார்க்க முடியும், திருச்சியில் அப்பா நல்ல MOODல இருந்தருன்ன ஞாயிறு மாலையில் எதாவது இங்கிலீஷ் படத்தை வாங்கிட்டு வந்து விடியோவில் போடுவார். பிறகு அப்பொழுது நங்கள் இருந்த இடத்திலிருந்து திரையரங்குகள் இருந்த இடம் மிகவும் தொலைவு. ஆனால் சென்னையில் சொந்தக்காரங்க யாரவது வாரத்துக்கு ஒரு தடவை சினிமாவுக்கு கூட்டிட்டு போயிருவாங்க. எங்கள் வீட்டில் ரஜினி அல்லது கமல் படங்களுக்கு மட்டும் காரணங்கள் கேட்காமல் அனுமதி தருவார்கள்.
அதுவும் ரஜினி சினிமா என்றால், கார்ல போகும் பொழுதே செம கொண்டாட்டமாக இருக்கும். தீபாவளி சந்தோசம் இருக்கும்.
இன்னும் ஞாபகம் இருக்கும், எஜமான் படத்தில் ரஜினி வரும் முதல் காட்சி, பக்கத்தில் இருந்த அண்ணா (கட்டாயமான முறையில் இப்பொழுது அங்கிள் ஆகி இருப்பார்) செம சத்தமா விசில் அடிச்சாரு. நானும் முயற்சி செய்து பார்த்தேன். இன்று வரைக்கும் அந்த முயற்சியில் தோல்வி தான். இன்னுமும் எனக்கு விரல் வைத்து விசில் அடிபர்களே, அந்த மாதிரி விசில் அடிக்க தெரியாது.

வளர்த்த பிறகு நண்பர்களோடு பார்த்த ரஜினி படம் என்றால் அது பாபா தான். இரண்டாவது ரிலீஸ்,பிளக் தியட்டர். அதனால் அந்த படத்திற்கு ஓர் ஸ்பெஷல்யான மனசில் இடம் உண்டு. படத்தில் தேவை இல்லாமல் ரஜினி தனது அரசியல் கருத்துகளையும், அந்த கதைக்கு சற்றும் பொருந்தாத (தேவை இல்லாத) heroism தை வைத்தால்(சொந்த செலவில் சூனியம்) படம் தோல்வி. இல்லாட்டி அந்த படம் ஒரு சிறந்த fantasy படமாக வந்து இருக்கும். அதே மாதிரி தான் சந்திரமுகியும். ஆன சந்திரமுகியை என்னால் ரசித்து பார்க்க முடியவில்லை, பக்கத்தில் ஒரு அங்கிள் இடுக்கு பண்ணி கொண்டு இருந்தார்.
ரஜினியின் அறிமுக பாடல்கள், செம தன்னம்பிக்கை டானிக். அதிலும் மனிதன் படத்தில் "மனிதன் மனிதன், எவன் தான் மனிதன்" , அண்ணாமலை படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்யம்", படையப்பாவில் "சிங்க நடை போட்டு" .........
ரஜினி நடிப்பை பற்றி சொல்லும் பொழுது, அவரோட "புவனா ஒரு கேள்வி குறி", "தில்லு முள்ளு", "ஆறிலிருந்து ஆறுபது வரை" , "முள்ளும் மலரும்"....... போன்ற சிலது பார்க்க வேண்டிய படங்கள். இதில் தில்லு முள்ளு சிடி மட்டும் தான் என்னிடம் இருக்கும் ஒரே ரஜினி படம். செம காமெடி யான படம் என்பதால் வைத்து இருக்கிறேன்.
இவ்வளவு எழுதின பிறகும் நிறைய தோன்றுகிறது, ம்ம்ம்ம்


எனக்கு இருக்கும் ஒரே ஆசை, ரஜினிக்கு என்று கதை பண்ணாமல், கதைக்குள் ரஜினி கொண்டு ஒரு படம் வர வேண்டும்.... முடியுமா என்று தெரியல.மற்றபடி நானும் எந்திரன் எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் சராசரி ரஜினி ரசிகன் (ரஜினி வெறியன் அல்ல)......என்னை மிகவும் entertain பண்ணின ஒரு நடிகருக்கு இன்று பிறந்த நாள், HAPPY BIRTHDAY THALAIVAAAA ......................

Thursday, December 10, 2009

வெற்றியின் தோல்வி

தோல்வி என்ற வேங்கை
எனது வெற்றியின்
பெண்மையை கற்பழித்து விட்டு
சென்றது இந்த பக்கம்....

அங்கங்கே
தோல்வியின் வெற்றி ஓலம்:
எனது வெற்றி
காயங்களோடு நிற்க முடியாமல்
வேதனையின் நிழலில் .

மடை திறந்த வெள்ளமாய்
வறண்ட பூமியில் காய்ந்த நாற்றாய்
வெற்றி மங்கையின் கண்ணீர் ...

கரைந்து விடுமோ தோல்வியின் உள்ளம்
தோல்வியின் வெற்றியை எண்ணி
வெற்றி மங்கை தற்கொலைக்கு
முயற்சிக்குமோ சிக்காதோ
முடிவும் இருக்குமோ தொடக்கமாய் ??

களையை விட்டு
பயிரை களை எடுத்து விட்டதே
தோல்வியின் நண்பர்களும் தோல்வியும் ....

காணாமல் போன குழந்தையின்
தவிப்பாய் உதவியை நாடி
தவிப்புடன் அங்கும் இங்கும்
வெற்றியின் கண்கள்...

ஈன்று புறந்தருதல் பெற்றோரின் கடனே
கற்பழித்து விட்டு போவது தோல்வின் கடமை என்றாகுமா ?

புலம் பெயர்ந்த உள்ளம் போல்
குன்றியது வெற்றியின் உள்ளம்
குன்றிலிருந்தது குன்றுகிறதே

வந்துவிட்டதோ
இயலாமை என் வெற்றிக்கு
எழ முயற்சித்தாலும்
வருகிறதே தூரத்தில்
அவமானம் ஆண்மையுடன் ......

பிகு - போட்டிக்காக எழுதப்பட்டது ....(நானும் களத்தில் குதிச்சாச்சு... ஏய் பார்த்துக்கோ நாங்களும் ரவுடி தான்)

Wednesday, December 9, 2009

கலவை- இது நின்று கொண்டு யோசித்தது

தமிழ் நாட்டோட முத பெருசு ரிடையர் ஆக போகுதாம். இதை ரொம்ப நாள் முன்னாடி பண்ணி இருந்தால் தமிழ் நாடே கொண்டாடி இருக்கும். இப்ப பாருங்க காஞ்சி போன (கஞ்சி என்று படித்தால் நான் பருப்பு விற்க மாட்டேன்) வழக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிருச்சு. தமிழ் மொழிக்காக கல்லக்குடில படுத்து எழுந்தார்ரு........ எவ்வாளவு வலிசுருக்கும்.
=====================================
சாரு அவரோட புத்தக வெளியிட்டு விழாவுக்கு பிறகு தண்ணி பார்ட்டி வைச்சு இருக்காராம். ஏன்னு தெரியல. அவரோட புக் வெளி வந்துருச்சு என்று கேட்டு அதிர்ச்சியில் மயக்கம் போடாதவங்களை பார்ல தீர்த்தம் வாங்கி தான் மயக்கம் போட வைக்க போறார் போல் இருக்கு.
=====================================
கொஞ்ச நாள சிலர் பெரிய இலக்கியவாதிகளுக்கு அடியாள் சேருக்கும் பனியில் இருக்காங்க. ஏதோ இவங்க பேசி தான் சாருக்கு எக்ஸ்ட்ராவா sales யாக போற மாதிரியும், இவங்களை விட்ட அவருக்கு பேச வாய் இல்லாத மாதிரியும் ல பில்டப்பு தராங்க...... முதல இவங்க பிளாகை தான் காணாம போகனும். சத்யமா நான் சிமென்ட் தரை பதிவாளரை சொல்லல.
=====================================
நானும் உரக்கடை சாரி நுரையடல் அதும் இல்லையா ???? சரி சரி ஞாபகம் வந்துருச்சு உரையாடல் கவிதை போட்டிக்கு கவிதை எழுதலாம்ன்னு இருக்கேன், அனா ஒரு மண்ணாகட்டியும் மண்டைல தோன்ன மாட்டேன்ங்குது. சரி எல்லோரையும் போல எண்டர் தட்டி எதாவது பண்ணிரலாம் ன்னு பார்த்த...... ஒன்னும் முடியல. சரின்னு ஜகா வாங்கிட்டேன்.
=====================================
வே(கோ)ட்டைக்காரன் படத்துல விஜய் ஏதும் புதுசா பண்ணலன்னு பதிவுலக விஜய்யின் PRO தன்னோட பதிவிலும், நேத்து என்கிட்டே செல்போனிலும் சொல்லிடாரு. அதனால் முத நாள் டிக்கெட் கிடைக்காதவங்க நேர போய் விஜயின் பழைய படத்தோட டிவிடி வங்கிகொங்க. டிக்கெட் விலையை விட கம்மியாக தான் இருக்கும். இந்த மாதிரி அஜித்தின் PRO சொல்லிடாருன்ன நல்ல இருக்கும். ஏன்னா நாங்க எல்லாம் நடுநிலை வியாதிகாரங்க ல .
=====================================
இந்த வார அறிமுகம் வால்பையன். இவரோட பதிவுகள் எல்லாம்(வேற வழி)நல்ல இருக்கும். பலது மொக்கையா இருக்கும். சரக்குயை வைத்து இவர் படைக்கும் இலக்கியங்கள் உலக புகழ் பெற்றவை.

(பிரபல பதிவாளர்கள் தான் சிறு பதிவாளர்களை அறிமுகம் செய்ய வேண்டுமா ???? நாங்களும் பிரபலங்களை அறிமுகம் செய்வோம். உலக சினிமாவை உள்ளூர் எச்சுசாமிகள் அறிமுகம் செய்வது போல.... டேய் நாங்களும் பின் நவீன அரிப்புகள் தான் )
=====================================

ஒரு ஏ ஜோக் .....

"நீங்க என்னவா இருக்கீங்க ??"

"நான் cable operator ய இருக்கேன்"

"எத்தனை பேருக்கு ???"

(இது புரியாவிட்டால் நீங்க ஒரு டுப்-லைட் ன்னு confirm பண்ணி கொள்ளலாம்)

=====================================

நேத்து காலையில் திருவண்ணமலைக்கு கிளம்பி கொண்டு இருந்தோம்... அப்ப எனக்கும் சொந்தக்கார பையனுக்கும் இடையே நடந்த டயலாக்

"எதுக்கு அங்க போறோம் ????"

"ஜோதியை பார்க்கடா"

"எத்தனை பிட் இருக்கும் டா "

=====================================

Tuesday, December 8, 2009

தேவதையின் கை - 3

பாகம் - 1

பாகம் - 2

====================================

ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமாய் பஸ்யில் தான் பயணம் செய்வேன். சிறிது தனிமை தேவைப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை.

"திருவெறும்பூர்...."

"திருவெறும்பூர்ல எங்க........"

"சாந்தி தியேட்டர் எதிருல..... கரை மேல ஒரு கிலோ மீட்டர் போகனும்...."

"250 ....."

(-)

மன்னார்புரம், அந்த பழைய RTO ஆபீஸ் கட்டடத்தை பார்த்த உடனே ........

"நானும் திருச்சில கொஞ்ச நாள் இருந்திருக்கேன்..... தெரியுமா?"

"நிஜமாவா ......"

"அப்பா, திருச்சி RTOல கொஞ்ச நாள் இருந்தாரு....."


சிரித்தேன். மேற்கொண்டு நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்ததால்.

(-)

ஜமால் மொகமத் காலேஜ்யை கடக்கும் போது. டூ வீலரில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்து சிரித்தேன், பிறகு குழந்தையின் தாய், தந்தை எல்ல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்த பொழுது ஏன்னோ காணமல் போன சோகம், மனதின் விலாசம் அறிந்து, மனதிற்குள் குடி வந்தது.

(-)

குளித்த பின்பு குளியலறையில் இருந்த கண்ணாடியில் இருந்த நீர் துளிகளை துடைத்த பின் பார்த்தேன். அவள் என் தோள் மேல் சாய்ந்து, நின்று கொண்டு இருந்தாள்.

அவளது மேனியை சற்று வருடி, முகத்தை முடிருந்த முடியை பின் தள்ளி விட்டு, முத்தம் கூடுக்க உதடுகளை குவித்து, முத்தமிட போகும் முன், அவள் வெட்கத்தில் கண்களை முடி கொண்டாள். அதை ரசித்த படியே நின்று கொண்டு இருந்தேன்.


கொஞ்ச நேரம் போன பின், அவள் என் காதுகளை பிடித்து..... கொஞ்சும் குரலில்....

"இன்னும், என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க .....?"


நீ வெட்கப்படும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லும் முன்.

அவள் இன்னும் கோவமாக கண்களை திறந்து,


"இன்னும் என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க....." என்று கத்தினாள்.

நான் திடுக்கிடுது பார்த்த பொழுது, அவள் இல்லை.கற்பனை.

வெளியே கதவை பலமாக தட்டிய படி அப்பாஸ் கத்தி கொண்டு இருந்தான்.

"இன்னும் என்ன செய்சு கிட்டு இருக்க....."

தொடரும்

Sunday, December 6, 2009

உயர்ந்த மனிதன் - பட விமர்சனம்

எனக்கு தெரிந்து சிவாஜி கணேஷின் படங்களில் கிளாச்சிக் வகையை சேர்ந்தது இந்த படம். எப்புடி தில்லான மோகனம்பாள் படத்தில் ஒரு SETTLE யான நடிப்பை வெளி படுத்தி இருப்பாரோ அதே மாதிரி இந்த படத்திலும், சொல்ல போனால் வாழ்ந்து காட்டி இருப்பார். நான் பெரும்பாலும் சில பழைய படங்களை தான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன், அப்படி பார்க்கும் படங்களில் இதுவும் ஓன்று.இந்த படத்தை விமர்சனம் செய்வதும் ஓன்று தான், படத்தில் சிவாஜி கணேஷர் நடிப்பை பற்றி சொல்லவதும் ஓன்று தான். அந்த அளவுக்கு படம் முழுக்க சிவாஜி ராஜ்யம் தான். நான் இந்த படத்தை முதன் முறையாக சன் டிவியில் தான் பார்த்தேன். அப்பொழுது எல்லாம் சன் டிவி மட்டும் தான். சேனல் மாற்றும் வேலையும் விளம்பரங்களின் தொல்லையும் இருந்தது இல்லை.
இந்த படத்தில் முழுக்க ஒரு வித BODY LANGUAGE கையாண்டு இருப்பார், அது வேறு எந்த படத்திலும் அவரிடம் காண முடியாத ஓன்று. ஒரு வேளை இயக்குனர்களுக்கு அது தெரியாமல் போய் இருக்கலாம். அல்லது அத்தகைய நடிப்பை DEMAND செய்யும் கதைகளை உருவாக்க தெரியாமல் இருந்திற்பர்கள். சில படங்களில் சிவாஜி கணேசரின் நடிப்பு ரொம்பவே ஓவர் அக்டிங் செய்வது போல் இருக்கும்..... அந்த மாதிரியான படங்களையெல்லாம் ஓர் முறைக்கு மேல் நான் பார்த்தது இல்லை.பட கதையை பற்றி நான் சொல்ல வேண்டும் என்று இல்லை, தொல்லை கூடுக்கும் தொலைக்காட்சிகளில் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்து இருப்பிங்க. சோ, கதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் படம் பார்த்தபின் எந்த இங்கிலீஷ் படத்திலிருந்து காபி அடிதிற்பர்கள் என்ற யோசனை வருவதை தடுக்க முடியாது. படம் பார்த்த பின் கொஞ்சம் யோசித்து பார்த்தால் இப்படி தான் முடிவுக்கு வர முடியும், ஆங்கில கதை வித் தமிழ் சினிமா கிளைமாக்ஸ்.


எனக்கு இந்த படத்தில் பிடித்த கட்சிகள் என்று சொன்னால் படத்தில் வரும் கொடைக்கானல் காட்சிகளும், பிறகு சிவாஜி தனது மனைவிடம் பொய், சொத்து போன்றவற்றை பற்றி பேசும் காட்சிகள் எல்லாம் செமையான கிளாஸ். இப்படி சொல்வதின் முலம் நான் சிவாஜி கணேஷர் மிக சிறந்த நடிகர் என்று சொல்லவில்லை, இந்த படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும் .இந்த படத்தின் கதை அமசமும் வித்தயசமானது தான், அந்த காலத்தில் வயசான பணக்காரர் என்றால் அந்த கதாபாத்திரம் ஓன்று மிகவும் நல்லவர், இல்லாவிடில் மிகவும் கெட்டவர் என்று தான் வகை படுதிருந்தர்கள். அது அத்தனையும் தண்டி வயசான பணக்கரர்யை முக்கிய பத்திரமாக எடுத்து கொண்டு வெளி வந்த முதல் கதை இதுவாக தான் இருக்கும். மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படமும் இதே மாதிரியான GENRE யில் தான் வந்தது, ஆனால் அதில் கடைசில் தான் சிவாஜி கதாபாத்திரத்துக்கு முக்கியதுவம் கூடுது இருப்பாங்க. மற்றபடி பெருசா DETAILED ACTING இருக்காது.இன்னொரு முக்கியமாக கூறுபிட்டு சொல்ல வேண்டிய காட்சியும் ஓன்று இருக்கிறது, அது கடைசியில் சிவாஜி கணேஷன் சிவகுமாரை போட்டு அடிக்கும் காட்சி. என்னை கேட்டால் படம் அந்த காட்சியோடு முடிந்து விடுகிறது, ஆனால் டைரக்டர்க்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை தமிழ் சினிமா கிளைமாக்ஸ் வைத்து விட்டார். ரசிகனின் ரசனை அன்று ஆட்சி செய்தது; ஆனால் இன்றோ ரசிகர்களின் உணர்வுகளை துண்டி விட்டு காசு பார்க்கிறார்கள்.சிவாஜி நடிப்பிற்க்காக இரண்டு படம் சிடி வாங்கி வைத்து கொள்ளலாம். அதில்தில்லான மோகனம்பாள்
உயர்ந்த மனிதன்


பஞ்ச் டயலாக்

வேட்டைக்காரன்

அந்த வேட்டைக்காரன் போன காட்டுல மிருகம் ஏதும் உயிரோட இருக்காது ..... இந்த வேட்டைக்காரன் போன தியேட்டர்ல எவனும் உயிரோட இருக்க மாட்டங்க.......அசல்

டேய்...... நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அசலை மீட்க வட்டி கட்டி தான் ஆகனும்..... னோது .....டேய் நான் ஆணி புடுங்கிறவன் இல்ல ...ஆணி அடிக்கிறவன்.எந்திரன்

கண்ணா...... பன்னிங்க தான் சில்ற்றையா செலவு வைக்கும்... சிங்கம் மொத்தமாக தான் செலவு வைக்கும்தீராத விளையாட்டு பிள்ளை

டேய்.. டேய்.. நீ உங்க ஊர்ல பிளேயர் ன்ன ,நான் எங்க ஊர்ல பிளேயர் டா. நீ போடுற BOWLING க்கு நான் தானடா BATSMAN

Saturday, December 5, 2009

தனிமை

மோசமானதொரு வானிலை

மழை வெயில் இல்ல சமயத்தில்

எட்டி பார்க்கும் பருவ பெண்ணாய்

ஜன்னல் வெளியே என் பார்வைக்கு கிடைக்கும்

பொழுது நான்கு சுவர் சிறையில் நானும் என் தனிமையும்

ஆணும் பெண்ணுமாய் ஊடல் கொண்ட பேதைமை தனிமை

என்னைவிட்டு மழைச் சாரலில் கரைந்து விடாதோ

என்று அழைப்பை எதிர்பார்த்தபடி அலைப்பேசி

போன் கம்பெனி எனக்கு தந்த முகவரியில் என்னை

தேடி தனிமையின் எதிரி யாரவது வர மாட்டர்களா

என்றபடி மழையை பார்த்தேன் என்னை விட்டு உறவுகள்

பல இருக்கும் பூமியை நோக்கி சென்ற மழையை

வெறுத்தேன்.....

மழையே என்னை பார்த்து ஒரு புன்னகை பூக்க

உனக்கு நான் விலை தர வேண்டுமா ?????

தனிமையின் எதிரிகள் பல

இருப்பதை அன்று கண்டேன் ; கண்ட பொழுது

தனிமையின் தோள் கூடுக்கும் தோழனாய் பயம்

தனது சிறகுகளை விரிந்து மனதிற்குள் பறந்த

நேரத்தில் : தைரியத்தின் முதன் உருவமாய்

எனக்கு தெரிந்த அம்மாவின் முகம் கண் முன்னே

நெட்வொர்க் இல்லை என்று சொன்னது மனச்சாட்சி

அறிவு அவ்வாறு சொன்னாலும் மனம் கேட்காமல்

வெளியே சென்று பொதுதொலைபேசி சாத்தியத்தை

இல்லையென்று ஆக்கியது ஊடகம் ஏற்படுத்திய பயம்

உடல் வேறு நலமில்லை.

மனதிற்கு தேவையான பாசம் கிடைக்க என்ன செய்வேன்

தனிமை இருந்தால் ........

பாசம்
நீ இருக்கும் உலகத்தில்

காற்றுக்கும் வேலை இல்லை ....

நீ மட்டும் போதும்

எனக்கு உலகத்தை

புரிந்து கொள்ள .....

நீ நான்

என்று இல்லாத நிலை

வேண்டும் இந்த வேளையில்.

நீ சுவாசித்த காற்று

எனக்கு மட்டும் தான்

சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம்

வந்ததே உன் நாசியில்

இருந்து வந்த காற்றின்

சுவை அறிந்த பின்பு .
(போட்டோவில் இருப்பது எங்க அம்மாவும் அண்ணன் பொண்ணு ரித்தியும்)

Friday, December 4, 2009

டார்கெட் கவிதை

புது கவிதை தோன்றியது

எண்ணங்களில் மங்கிய

கனவு வருவது போல் ....

நேற்றும் இன்றும் வார்த்தைகளில்

செதுக்க வில்லையென்றால்

நாளையும் இதே தவிப்பு....

தேடிய வார்த்தைகள் தொலைந்து

போவதை கண்டேன் எண்ண சிதறல்கள்

என்னை அழைத்த தொலைபேசி

அளித்த தொல்லை ; டார்கெட்

முடிக்க கடைசி நாள் நாளை....

கல்லூரி நாட்கள்


என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் படித்த கல்லுரி ஞாபகமாவே இருக்கு. கல்லுரி என்றால் அது நான் படித்த UG காலேஜ் தான். மற்றவையில் எல்லாம் போட்டி பொறமை என்று அனுபவிக்காமல் படிப்பு படிப்பு என்றே இருந்தேன். UG ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் ஊர் சுற்றி கொண்டு ..... சினிமா, கிசு கிசு பேசி கொண்டு ....... கிளாஸ் கட் அடித்து கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் காலேஜ் ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன நட்புகளை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் ORKUT FACEBOOK எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்புகளே இல்லை......

Tuesday, December 1, 2009

தேவதையின் கை - 2

பாகம் - 1

================================================

"ஐய்யோ......." என்று அவள் அலறியது என் காதுகளில் கேட்டது. காயம் பட்ட விரலை பிடித்து கொண்டு இருந்தாள். வலியை விட அவள் என் கையை பிடித்து கொண்டுயிருக்கிறாள் என்ற நினைவே வலியை மறக்க செய்தது. அந்த நொடி ஓர் பெண்ணிடமிருந்து முதல் முறை காதல் கடிதம் வாங்கினது போல் உணர்ந்தேன். என் அறிவு மங்கி, மனம் வேலை செய்ய ஆரமித்தது. வார்த்தைகள் தங்களின் ஒலியை மறந்து வெறும் காற்றை மட்டும் வெளியேற்றி கொண்டு இருந்தது. அது என்ன வடிவங்களில் அவள் காதுகளில் கேட்டதோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிரித்த படியே ஏதோ சொன்னாள்.

(-)

விழுப்புரம் நெருங்கி கொண்டு இருந்தது நான் காதலில் விழுந்து ; அந்த நிகழ்வு சரித்திரமாகி கொஞ்ச நேரம் ஆகிருந்தது. அந்த அனுபவம் மீண்டும் கிடைக்க கதவின் வழியே கையை வெளியே நீட்டலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தாய்மை உணர்வு இருக்கிறது என்று என்றோ சதீஷ் சொன்னது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது தேவையில்லாமல் கூடவே சதீஷும் வந்தான். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் பொழுது நண்பன் நினைவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கொடுமை என்று உணர்ந்தேன்.


(-)

பிளாட்பாரத்தை பார்த்தேன். வலது பக்கம் பார்த்துவிட்டு இடது பக்கம் பார்த்தேன். தூரத்தில் டீக்கடை திறந்து இருந்தது.

டி மிகவும் சூடாக இருந்தது. இரண்டு கைகளில் கோப்பைகளை பிடித்து நடந்து கொண்டு இருந்தேன்.

இரண்டாம் விரல் பிறகு மூன்றாம் விரல் அதன் பிறகு நான்காம் விரல் மீண்டும் பழையபடி இரண்டாம் விரல் ; எப்புடி வைத்து பிடித்தாலும் சுடு பொறுக்க முடியவில்லை. கட்டை விரலை தான் மாற்றி வைக்க முடியவில்லை. அதனால் அதில் சுடு அதிகமாக தெரிந்தது.

ரயில் கிளம்பியது.


(-)எதிர் மேல் பெர்த்தில் அவள்.

தூக்கம் வரவில்லை. வரவும் நான் விரும்பவில்லை. நச்சத்திரங்களை கொண்டு இருளில் வண்ணமயமாய் தெரியும் அவள் முகத்தில் வைத்து அழகிற்கு அழகு சேர்க்கலாம் என்று நினைத்த பொழுதில் அவள் அழகை கடன் வாங்கி நச்சத்திரங்கள் அழகாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்துவிட வெறும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருந்தேன். அவை இரண்டும் என்னை பார்ப்பது போல் ஓர் பிரம்மை. பிரம்மை பிரம்மையாக இல்லாமல் நிஜமாக இருக்க கூடாத என்று ஆசை வந்தது.


(-)

எது அவள் மேல் காதல் கொள்ள வைத்தது....???? அவளது குணமா, அறிவா இல்லை என்றால் அவளது அழகா ???

அவள் என்னை பற்றி என்ன நினைக்கிறாள் ????என்று சில எண்ணங்கள் அலை மோதியது தூக்கத்தில் நினைவிழக்கும் முன்பு.

(-)

ரயிலை விட்டு இறங்கி நின்று கொண்டுயிருந்த போதும் அவளை காணவில்லை. இறங்கும் முன்பு அவள் டாய்லட் சென்று இருப்பாள் என்று எண்ணி கொண்டேன் அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து எழுந்தபடியால்.

"பாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.
திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன."


அவள் பரிசாக குடுத்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்தேன். ஸ்ரீரெங்கம் ரயில் நிலையத்தை ரயில் தண்டி கொண்டு இருந்தது. அப்பொழுதிருந்து ரயிலை விட்டு இறங்கும் முன்பு வரை அவளை காணவில்லை.

(-)

அவளோடுயான நட்பை என்னால் ரயில் சிநேகமாக கருத முடியவில்லை. அவள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டுயிருந்தேன்.

நொடிகள் நிமிடங்களானது. ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சி காற்றை சுவாசித்த பிறகும் என் மனதில் அமைதி தோன்றவில்லை.

காத்து இருப்பது வீண் என்று தோன்றவே சப்-வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது

"ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

(-)

என்னை நானே வெறுத்தேன். அஞ்சினேன் வாழ்வில் முதன் முறையாக தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உணர்வுகள் தடுமாறியது.

ஸ்வீட் வாங்கி வா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வரவே.

டிக்கெட் கவுன்ட்டர் எதிரே உள்ள அடையாறு அனந்த பவனுக்கு போய் ஏதோ பெயர்களை சொல்லி, பணத்தை கட்டிய பிறகு தன கவனித்தேன். எப்படி வாங்கினேன் என்று தெரியவில்லை. அத்தனையும் எனக்கு பிடிக்காத ஸ்வீட்கள்; அவளுக்கு பிடித்தவை. அந்த அளவுக்கு மனதில் அவளிருந்தாள்.

தொடரும்....

Sunday, November 29, 2009

புத்திசாலி கூட்டாளிகள் - THE LEAGUE OF GENTLEMENஉலக திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக அறிமுக காட்சியில் சாக்கடையில் இருந்து கதையின் ஓர் நாயகன் வருவது போல் அமைத்திருந்தது இந்த படத்தில் தான் இருக்கும். (எனக்கு தெரிந்த வரைக்கும்). BANK ROBBERY படங்களில் இது ஒரு குறுப்பிட வேண்டிய படம். ஒரு கிளாச்சிக்.
ராணுவத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்ற பட்ட சிலரை ஒருவன் ஒருங்கிணைத்து ராணுவ ரீதியில் திட்டங்களை திட்டி ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது தான் கதை.( வர போகும் எதாவது புது தமிழ் படத்தை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை)
கூட்டாளிகள் அனைவரும் ஒவ்வொரு விதங்களில் திறமை மிக்கவர்கள். அந்த திறமைகளை கொண்டு ஓர் ராணுவ முகாமிலிருந்து ஆயுதங்களை கொள்ளை அடிபதையும், அந்த ஆயுதங்களை கொண்டு வங்கியை கொள்ளை அடிப்பதையும் என்ற இரு முக்கிய சம்பவங்களையும் அதற்கு ஏத்த துணை சம்பவங்களை கொண்டு விறுவிறுப்பான திரைப்படமான இது ஒரு பிரிட்டிஷ் நாட்டு திரைப்படம். ஒரு நாவலை தழுவி எடுக்க பட்டது. அதை எழுதியவரும் இதில் நடித்துள்ளார்.எனக்கு நன்றாக நினைவுயிருக்கிறது நான் சிறு வயதில் இந்த படத்தை பார்க்கும் பொழுது கண் இமைக்காமல் பார்த்தது. அந்த காலத்தில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடந்தால் ஹாலிவுட் மற்றும் பல நாட்டு திரைப்பட துறையினர் இதே போல கதைஅம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்து உள்ளனர். தமிழிலும் பல வந்துள்ளது.
தமிழ் சினிமா போல இல்லாமல் அப்ப அப்ப போலீஸ் கதையில் எட்டி பார்த்து டென்ஷன் ஏற்படுத்தும். ஆனால் தமிழ் படத்தில் கொள்ளை அடிப்பது ஹீரோவாக இருந்தால் போலீஸ் கட்டாயமான முறையில் முட்டாளாக தான் இருப்பார்கள். இந்த படத்தில் அப்படி இல்லாமல் இருபது கொஞ்சம் நிம்மதி தான் என்றாலும் கடைசி காட்சியில் பரிதாபம் ஏற்படுவது டைரக்டர் யின் வெற்றி. படத்தில் டைரக்டர் டச் என்பது கதாபாத்திரங்களின் அறிமுகதில்லையே அவர்களின் நிலையையும் சொல்லி விடுவதில் தெரிகிறது.
ஓன்று மட்டும் நிச்சயம்.... ஞாயிறு மாலையில் பொழுது போக்க ஏற்ற படம்.
Saturday, November 28, 2009

யோகி - பட விமர்சனம்


"இந்த வெள்ளிகிழமை வந்த புது படங்களை பார்த்ததில் இருந்து இப்படி தான் உடம்புல இருக்கிற அத்தனை ஓட்டை ல இருந்தும் இப்படி தான் புகைய வருது..... இதுக்கு பேசாம மேவி எழுதின கவிதையை படிச்சிட்டு உயிரை விட்டு இருக்கலாம்..... எனக்கு வேணும் வேணும்..... தெருண் கோகி , சைரன் இவங்களை பார்த்த பிறகும் நான் போயிருக்க கூடாது... என்ன செய்ய விதி வலியது....."


"நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து பார்த்தேன்..... பட கதையை ஜீரணம் பண்ண முடியல..... இலக்கிய இனிமா தான் வேலைக்கு ஆகும் போல் இருக்கு... இவங்க உலக தரத்துக்கு போறதுக்குள் நம்ம நிலை தகர டப்பா ஆகிரும். ஐயா சாமிகளா ...... பர்மா பஜார் ல நிறைய சாமான் கிடைக்குது. ஏன் சிடி மட்டும் வாங்குறிங்க???"

டிஸ்கி - மேல் படங்களில் உள்ளவர்களும் யோகிகள் தான். மேலும் யோகி படத்திற்கும் இதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. நான் இன்னும் அதை பார்க்கவில்லை. அப்படி இருந்தும் விமர்சனம் வேண்டுவோர் கேபிள்ஜி பதிவிற்கு செல்லவும்.


Friday, November 27, 2009

நான் கடவுள்

என் உலகத்தில்
நானே கடவுள் ......
இங்கு எனக்கு
வாசனை வீசும் மலர்கள்
தான் முள்ளாக
இருக்கிறது......
நான் கடவுள்
வெளி உலகத்தில்
இளமையின் இயலாமைகளோடு
சராசரி மனிதனாய்
வேதனைகளின் களியாட்டத்தில்
சிக்கி தவிக்கும்
பாவப்பட்ட ஜென்மமாய்
இருக்கும் நானே
என் உலகத்தில்
கடவுள் ........


என் உலகத்தில்
நான் கருணை
மிக்கவன் .....
நம்பிக்கையும் தாராமல்
மோட்சமும் தாராமல்
ஏமாற்றும் பூஉலக
கடவுள் இல்லை
நான்.....

என் உலகில்
கடவுள் இல்லை என்று
சொல்ல்வோரும் உண்டு
சொல்லாதவோரும் உண்டு
ஆனால் எல்லாருக்கும்
கருணை உண்டு
என் உலகில் .....

ஏனென்றால்
நான் உண்மையானவன்
நானே கடவுள் ......

வெளி உலகில்
எல்லாவற்றுக்கும் நானே
காரணமானவன் ....
துடக்கமும் முடிவும்
நானே என்று சொல்லி கொண்டு
அவனால் செய்த பாவங்களுக்கு
மக்களை நரகத்திற்கு
அனுப்பும்
கடவுள் போல்
நான் இல்லை .......

என் உலகில்
பயம் இல்லை
சோகம் இல்லை
சந்தோசமே சந்தோசமாய்
வாழ்கிறது ......
எல்லோரும் நண்பர்களாய்
இருப்பார்கள்.....
எனக்காக அவர்கள்
ஏதும் அற்பனிப்பது
இல்லை .....

இருதாலும் அவர்களை
நான் சந்தோசமாக
வைத்துள்ளேன்......

நான் உன்னை மறப்பதும் இல்லை
கைவுடுவதும் இல்லை
என்று கூறும்
கடவுள் இல்லை
நான்.....

இந்த வரிகளை
என் உலக மக்கள்
படிப்பதும் இல்லை
எழுதுவதும் இல்லை ......
ஏனென்றால் அவர்களோடு
தான் நான் இருக்கிறேன்.......

=========================================

போதுமடா உனக்கு
இந்த கடவுள் பதவி....
நீ செய்தது என்ன ???
செய்யாதது என்ன ????
நச்சு பாம்புகளின்
விஷம் தடவிய
எழுத்தாணி கொண்டு
நரக வேதனை வாழ்க்கை
எம் மக்களுக்கு ......

உன் சந்தனம் குளியலுக்கு
நாங்கள் வேர்வையில் குளிக்கிறோம்
வாழும் போது இல்லாத சொர்க்கம்
இறந்த பின் அளிக்கும் பித்தன் தானடா நீ
நீ உறங்க நாங்கள் தூக்கம் இழக்கிறோம்
உண்மையில் மக்கள் ஆகிய
நாங்கள் தான் கடவுள் ......

நீ பாட வேண்டும்
"பித்தம் எல்லாம் எனக்கு மக்கள் மயமே ".....
==========================================

மதியிழந்த முடனே
என் கடவுளே !!!!
யார் தந்தார்கள்
உனக்கு உரிமை
என் விதியை எழுதிட.....
எழுதிய விதி
வீதியில் சேறுக்கு சமமாய் ;


அவமனபடுத்தினால் நரகம்
உன் சட்டம் ;
நீ வா என்னோடு ......

ஏனென்றால் அதில் நீ தான் முதல்வன்
விதி என்ற பெயரில்
செய்து கொண்டு இருப்பதால் ;
போதும் உன் விதியின் விளையாட்டு ;
யார் தந்தார்கள் உரிமை உனக்கு
விதி என்ற பெயரில்
என்னை அவமான படுத்த ???
நஞ்சு தேய்ந்த மறுபக்கத்தில் இருந்து
என்னை நான் காப்பற்றி
என்னக்கு நானே எழுதி கொள்கிறேன்
என் விதியை.......
===========================================


டிஸ்கி - ரொம்ப நாள் முன்னாடி எழுதின கவிதை ... அதனால் எழுத்து பிழைகள் கொஞ்சம் இருக்கும்

செய்திகள் வாசிப்பது மேவி

" 200 நகரங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு "

லண்டன் போன்ற நகரங்களில் பல வருஷம் முன்னாடியே இதை சத்தியம் ஆக்கி காட்டி இருக்காங்க. ஆன நாம இந்தியாவில் தான் இது இன்னும் திட்ட அளவில் இருக்கிறது. பிறகு இந்த திட்டமானது பல இடற்பாடுகளை உண்டாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இன்னும் அரசு சப்பளை செய்யும் LPG GAS யில் பல பிரச்சனை இருக்கிறது. அதை சரி செய்யாமல் இவர்கள் எப்புடி அடுத்த நிலைக்கு போவர்கள் என்று ஆச்சிரியமா இருக்கு.


"பஸ்களில் விளம்பரத்துக்கு தடை ஆண்டுக்கு ரூ.10 கோடி இழப்பு"

என்ன கொடுமை சார் இது. நேற்று வரையில் உயர் கட்டணங்கள் வசூலிக்கும் A / C பஸ்களில் மட்டுமே விளம்பரங்கள் பார்க்கும் படி இருக்கிறது. மற்ற சாதாரண பஸ்களில் விளம்பரம் மாட்டப்பட்டு இருந்தாலும் அது பெரும்பாலும் பார்க்கும் படி இருப்பதில்லை. குறைவான பராமரிப்பு அதனால் அழுக்கு படிந்து TARGET AUDIENCE போய் சேரவில்லை. இதை மோப்பம் பிடித்த கம்பெனிகள் கணக்கு போட்டு பார்த்ததில் அவர்களின் EXPECTED RETURN ON INVESTMENT குறைவாக இருந்ததால் விழித்து கொண்டனர். இந்த விளம்பரங்கள் தரும் வருமானத்தை நம்பி தானே அரசு போஸ்டர், பேனர்களை தடை செய்தது. ஐயோ பாவம் அரசு.
"மக்களை கேட்டு பாருங்கள். விமர்சனம் எழுதியவர்களின் முகத்தில் தான் கரி - கமல்"


இவர் ஏதோ சமுக சேவை செய்து அதை சிலர் கிண்டலடித்தது போல் பேசுறார். சந்தைக்கு விற்பனைக்கு வந்த பொருளை பற்றி நாலு பேர் நாலு விதமாக பேச தான் செய்வார்கள். இதற்க்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா ?????
"மும்பையில் சீன பொருட்கள் கண்காட்சி"


ஆமா உள் ஊர் பொருட்களை நன்றாக முன்னேற்றிட்டாங்க இப்ப சீனா நாட்டு பொருட்களுக்கு போய்ட்டாங்க. சும்மா சொல்ல கூடாது நம்ம நாட்டு ஆரசாங்கம் நன்றாகவே நாம் நாட்டு சந்தைக்கு முக்கியத்துவம் தருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நம்ம நாட்டு வணிகர்கள் கூட தான் தர கட்டுபாடு என்று ஓன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு வழியில் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

Thursday, November 26, 2009

கலவை

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அனந்த விகடன் விளம்பரம் ஒன்றை பார்த்தேன் அதுல ஒரு குரங்கு வந்து "படிக்காட்டி கடிச்சுருவேன்" ன்னு சொல்லி மிரட்டுது. ஐயோ பவம் விகடன் நிலைமை இப்படி ஆகிருச்சு. ஒரு குரங்கை விட்டு வாசகர்களை மிரட்டி வாங்க வைக்கிறார்கள்.
----------
இனிமேல் யாரும் தமிழக முதல்வரை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்று சொல்ல வேண்டாம். அவர் நிறையவே தமிழ் மக்களுக்காக செய்து உள்ளார். அவரது குடும்பத்தினர் எல்லோரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தானே, அவர்களும் தமிழ் மக்கள் தானே.
----------
இப்பொழுதெல்லாம் BINGO CHIPS விளம்பரம் ஓன்று வருகிறது. மிகவும் ரசித்து பார்க்கிறேன். வசனம் இல்லாமல் அந்த பெண் காட்டும் முக பவனை அருமையாய் இருக்கிறது.
----------
தற்சமயம் வரும் படங்களை பார்த்தால் அமெரிக்காவில் ஏதோ ஒரு கலாச்சார மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருப்பதை உணர முடிகிறது. LETTERS TO JULIET ன்னு ஒரு படம் அடுத்த வருடம் வர போகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன் எழுத பட்ட காதல் கடிதம் ஒருத்தி கைக்கு கிடைக்கிறது. அந்த கடிதத்தின் கதையை அறிய போகும் பொழுது அவள் காதலனை சந்திக்கிறாள். படம் நல்ல இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை சேரனுடைய பட சிடி அங்கேயும் போயிருச்சா ????
----------
இனிமேல் சென்னையில் கலாச்சார சின்னங்கள் என்று ஓன்று கூட இல்லாமல் போக போகுது. இருக்கிற ஓன்று இரண்டு கட்டடங்களை இடித்து புதுசு புதுசா ஏதோ கட்டுரங்க. இப்படியே போனால் கோவில்கள் மட்டுமே வரும்காலத்தில் சென்னையின் சின்னங்களாய் இருக்கும்.
----------
மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம். கேட்கவே சந்தோஷமா இருக்குல. திருசெல்வதுக்கு ரொம்ப பெரிய மனசு இவ்வளவு சிக்கிரம் முடிசுட்டாறு. எனக்கு என்னமோ அவர் பைத்தியக்காரன் அவர்களின் பதிவை ரொம்ப படிப்பார் போல் இருக்கு, அபி பேசும் வசனங்கள் அப்படி தான் இருக்கு.
----------

கொட்டாவி விட்டு கொண்டே வாழ்த்தலாம் வாங்க


நிஜப்பெயர்: மேவி

புனைப்பெயர்: மொக்க ராசா (வழங்கியவர் - "இலக்கிய பிரியாணி" தாபா)


வயது:
எதிரில் வரும் பெண்ணை பொருது

தொழில்: கொட்டாவி விடுவது

உபதொழில்: இலக்கியம் பேசுவது (பல தடவை காயபட்ட பொழுதிலும்)
நண்பர்கள்: டி, காப்பி வாங்கி தருபவர்கள்

எதிரிகள்: சாப்பிட்டதற்கு காசு கேட்பவர்கள்
பிடித்தது: குமுதம் நடுப்பக்கம்


பிடிக்காதது: குங்குமம் கடைசி பக்கம்
சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு நியூஸ் பேப்பர் படிப்பது

நீண்டகால சாதனை: உருபடாமல் இருபது
நீண்டநாள் ஆசை: அனுஜன்யாவை தனது கவிதையை படிக்க வைக்க வீண்டும் என்பது .

சமீபத்திய ஆசை: கார்க்கியை கவிதை எழுத வைக்க வேண்டும் என்பது

இப்படிக்கு

பிறந்த நாள் பதிவுகளுக்கு காபி பேஸ்ட் பின்னோட்டம் போடுவோர் சங்கம்

Wednesday, November 25, 2009

கண்டேன் இன்பத்தை

நினைவுகளில் அவளுடனான உறவில்

இன்பம் முன்னாள் காதலியின் இந்நாள்

கணவனுக்கு ; நான் அவனில்லை என்ற

விளக்கத்தோடு அறிவு விளங்கினாலும்

பிறழ்வு நிலையில் காமம்.....
முன்னாள் காதலியான பிறகும்

பசுமையாய் காதலி என்ற போர்வையில்

நினைவுகளில் வலம் வந்து கொண்டுயிருந்த

நேரத்தில் காமம் மேலோங்க

நினைவுகளில் கற்பழித்தேன்

திநகரில் இருந்து தாம்பரம் வரும்

ரயிலில் அனாவசிய நினைவுகளுடன்

இறங்கையில் முகமறியா பெண்ணின்

முன்-பின் அறிமுகம்

வளம் சேர்த்தது எனது காமத்திற்கு

குறையாய் நிறைந்த காமம்

நெறியுடன் அவள் மேல் மட்டும்

நிறைந்தது காமம் மேலும்.....
மேகங்கள் இடையில் சூரியன்

ஒளிந்து கொண்டு இரவு என்னும்

தோழியுடன் அழைப்பின் விளையாட்டில்

மாலை வந்த நேரமது ....


நிறை குடமாய் நடந்து

காமத்தை அடக்க முயன்று

வெகுதுரம் நடந்து களைப்பு வந்த

வேளையிலும் காமம் அடங்காமல்

அறை வந்து சேர்ந்தேன்....அமர்ந்த பிறகு குமுதம் நடுப்பக்கம்

என் இயலாமையை துண்டி விட

என்னுள் இருக்கும் நல்லவன்

இறந்த நேரமிது....கழிவறை பொழுதின்

நேரத்தில் கண்டேன் சுயமாய்

இன்பம் அவளோடு நினைவுகளில் ...குளித்து முடித்த வேளையில்

இறந்த நல்லவன் மீண்டு

வந்தான் பழைய நினைவுகள் அன்று...

நிலவு என்றொரு பெண்


முத்தாய் வந்து

இரவில் கடந்து

என்னில் கலந்து .....

சுகத்தின் மிச்ச சொச்சங்களை தந்துவிட்டு

ஓசை படாமல் சென்றுவிட்டாயே

உன் சுகத்திற்கு மறுநாள் இரவு வரை

காத்திருக்க வேண்டுமா

சொல்லு நிலவே
துன்பமாய் சூரியன் வர


சுகத்தில் மட்டும் இல்லை

வேதனையிலும் வேர்வை...

நாற்றங்கள் சுயமாய் என் வேர்வையில்

ஆறுதலாய் துணை வேர்வை நாற்றங்கள்

இல்ல பொழுதில் போஸ்டர் நாயகிகள்

உன் நினைவை துண்ட

வளர்பிறை இன்பங்களின் தேய்பிறையாய்

ஆடி மாசம்
=
=
டிஸ்கி : தொடர்கதை செவ்வாய்கிழமை போஸ்ட் செய்கிறேன். கதையை பற்றி தனிப்பட்ட முறையில் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி

Sunday, November 22, 2009

தேவதையின் கை

தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.
(-)

இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.
(-)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.
(-)

கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.

(-)
அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.
(-)

அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.


"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.

"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"

"அப்படியா??"
"ஆமா"

"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"

"எப்புடி தெரிஞ்ச்சு"

"ரொம்ப சீரியஸ் ஆ"

"ம்ம்ம்"

(-)

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.

"காபி சாப்பிடலாமா"

"டைம் ஆகிருச்சு"

"அதனால என்ன"

"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"

"இல்லை வேண்டாமே"

(-)

ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........

(-)

ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.

(-)

ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.

"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"

"ஓ அப்படியா"

"ஆமா அப்படி தான்"

"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"

(-)

அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.

அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....
தொடரும்.......
Related Posts with Thumbnails