Pages

Wednesday, July 29, 2009

நம்முடைய பஜாஜ்

இந்த விளம்பரம் தான் இந்தியாவின் முதல் மாபெரும் சந்தையிடுதாளுக்கான முயற்சி என்று கூட சொல்லலாம். ஒரு தலைமுறையையே பஜாஜ் வாங்குவதற்கு பெருமை பட வைத்த விளம்பரம் இது. இதன் முலம் வந்த அடித்தளம் தான் பஜாஜ்யின் நிரந்தர சந்தைக்கு வழிவகை செய்தது என்று சொன்னால் அது மிகை அல்ல .


இதன் சிறப்பு அம்சம் என்று பார்த்தால் ; எந்த கலாச்சாரத்துக்கும் பொருந்தி போகும். பஜாஜ்யை பல குடும்பங்களில் ஓர் அங்கமாக ஆக்கியது இந்த விளம்பரம் முலமாக தான்.

branding என்ற தத்துவம் வேருன்றியது இந்த விளம்பரத்தால் தான் ; பிற கம்பெனிகளும் இதே போன்று முயற்சி செய்து தோல்வி அடைந்தது. பிறகு வருடங்கள் பல கழிந்த பின் TVS 50 யும் இதே போன்று முயற்சித்து பார்த்து ; ஆனால் ஒரு அப்பீல் இல்லை ; அது வெறும் அந்த வாகனத்தின் பெருமையே பேசியது.

அப்பொழுது லைசென்ஸ் ராஜ்யம் நடந்து கொண்டு இருந்த நேரம் ; ஒரு வண்டி வாங்க பல நாட்கள் காத்து கொண்டு இருக்க வேண்டும் ; மக்களின் வருமானமும் பஜாஜ் ஸ்கூட்டர்யை ஒரு ஆடம்பர பொருளாக தான் வைத்து இருந்தது. இத்தனை இடர்பாடுகளையும் தண்டி மக்களை ஏதோ ஒரு வகையில் வசியம் செய்தது இந்த விளம்பரம். இந்திய மொழிகளில் எல்லாவற்றியும் பெரும் வெற்றி. ஏன் இந்திய விளம்பரத்துறையின் முதல் மாபெரும் வெற்றி என்று கூட கூறலாம். அதற்க்கு சாட்சி இன்னும் இந்த விளம்பரம் கொண்டாட படுவது தான்.


இன்னுமும் ஞாபகம் இருக்கிறது பசுமையாய் சிறு வயதில் அப்பாவை நான் பஜாஜ் வாங்க சொல்லி நான் அழுதது. ஆமாம் குழந்தைகள் தான் இதற்க்கு டார்கெட். இன்றைய காலக்கட்டத்தில் இதன் மதிப்பு என்று பார்த்தால் இந்த விளம்பரம் ஏற்படுத்திய தாக்கம் வேறு யாரும் ஏற்படுத்தவில்லை இன்று வரையில்.

சரிந்த மார்க்கெட்யை மீண்டும் உயிர்பிக்க இந்த விளம்பரத்தையே ரீமிக்ஸ் செய்து வெளியிட்டது ; வெற்றி. ஆனால் அதில் இளைய தலைமுறையின் கலாச்சார நம்பிக்கைகள் பற்றி கூறியது. அந்த விளம்பரம் இதோ

இது கையாண்ட சித்தாந்தம் ; நான் இந்தியன் அதனால் நான் பஜாஜ்யின் உரிமையாளன்.

Tuesday, July 28, 2009

கலவை

இந்த பிரபு தருகிற இம்சை தங்க முடியல ; அவனுடைய காதல் கதையை சொல்லி சொல்லியே வெறுப்பு ஏத்துறான்......

====================================================================

================================================================
திருநங்கைகளின் திருமணம் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் ; அவர்களும் மனிதர்கள் தானே , அதனால் இது மனித உரிமை கழகத்தின் முக்கிய பொறுப்பாகும்.
================================================================
சென்னை வந்து இத்தனை வருடத்தில் நேற்று தான் கன்னிமாரா நுலகம் பக்கம் போனேன். பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி சுற்றினேன். நுலகத்தில் பலர் புத்தகம் படிக்காமல் தூங்கி கொண்டு இருந்தனர்.
================================================================
பிரபல பதிவாளர் ஒருத்தர் காதல் வலையில் விழுந்து பல காலம் ஆகிவிட்டது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
=================================================================
இன்று காலையில் வாக்கிங் போகும் போது ; குளிர்ந்த காற்று விசியது..... சொர்கத்தை அனுபவித்தேன் அந்த சில நொடிகளில்.
=================================================================

Sunday, July 26, 2009

ரிதி / மதுவன்தி


பகலினில் ஆட்டம்
இரவினில் தூக்கம்

Friday, July 24, 2009

வால்பையன்யின் முதல் பதிவு மற்றும் அதன் பின்னோட்டங்கள்


அறிமுகம்


இந்த இடுகையை பார்வையிட்டோர்
என் பெயர் அருண், வசிப்பது ஈரோடில்,தொழில் கமாடிடி மார்க்கெட் அனல்ய்செர்இனி நானும் உங்களுடன் சேர்ந்து வலை பக்கங்களில் கலாய்க்கலாம் என்று இருக்கிறேன்.புதிது என்பதால் ரேக்கிங் செய்யாமல் வலை எழுதுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவும்

கிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம் 9:33 PM
பகுதிவாரியாக:

7 வாங்கிகட்டி கொண்டது:
தருமி said...
ஓ! கலாய்க்கிற கேசா நீங்கள். துணைக்கு இங்கே நிறையபேர் இருக்கிறார்கள்.வாருங்கள்.
November 21, 2007 11:28 PM


மங்களூர் சிவா said...
வாங்க அருண், கலக்குங்க!!கமாடிடி மார்கெட் அனலைசரா? அப்டின்னா?
December 8, 2007 9:13 AM


வால்பையன் said...
நன்றி //கமாடிடி மார்கெட் அனலைசரா? அப்டின்னா?//கடைசியாக உங்கள் பதிவில் ஷேர் மார்க்கெட் பற்றி எழுதிருந்திர்கள் அல்லவா!அது போல தான் கமாடிட்டியும், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட்டில் ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்கலாம், இங்கே விலை பொருள்களை வாங்கலாம்,எனக்கு அது பற்றிய ஒரு வலையும் உண்டு,பார்க்க வால்பையன்
January 10, 2008 2:50 PM


மங்களூர் சிவா said...
அண்ணாத்தே கமாடிடி பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆனா முழுசா தெரியாம இறங்க பயமா இருக்கு அதுதான். ஈக்விடி புரியற மாதிரி இது புரிய மாட்டிக்கிது.நம்மளோடது இன்னொரு வலை பூ உண்டு Think Big
January 10, 2008 3:22 PM


scssundar said...
வருக வருகவே.....பங்குமார்கேட் இருவர் உள்ளனர்.தங்கள் வருகை நல்வரவு ஆகுக..கலாய்ப்பது மட்டுமில்லாமல் கமாடிட்டி மார்க்கெட் பற்றி நல்ல ஒரு அறிமுகத்தை எற்படுத்தி கொடுக்க வேண்டுகிறேன்.நன்றி
January 11, 2008 7:00 PM


cheena (சீனா) said...
9 திங்கள் ஆயிற்று - அட்டகாசமாக இருக்கிறது. மனைதனின் இரு பக்கங்கள் இரு வலைப்பூவாக இருக்கின்றன. அறிவிற்கு விருந்து - மனம் மகிழவும் விருந்து.நல்வாழ்த்துகள்.முதல் பதிவில் முதல் மறுமொழி நல்ல உள்ளத்திடமிருந்து வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது
August 15, 2008 7:41 PM


வால்பையன் said...
நன்றி சீனா அண்ணா,தேடி பிடித்து என்னுடைய முதல் பதிவில் உங்களின் வாழ்த்தை தெரிவித்திருக்கிறீர்கள்
August 22, 2008 10:22 PM

Tuesday, July 21, 2009

ரிதி / மதுவன்தி

சொல்வதற்கு ஒன்றும் இல்லை ........

கவிதையை தேடி

Saturday, July 18, 2009

நூறாவது பதிவும் பதிவாளர்கள் சந்திப்பும் - தொகுப்பு

மயிலாப்பூர் யில் நான் சென்ற வாகனம் பழுது ஆகிவிட்டது; ஆதனால் கடற்க்கரைக்கு செல்ல அதிக நேரம் ஆகிவிட்டது. இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் ; என்வென்றால் எனக்கு இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாது.
காந்தி சிலை பின்னாடி போய் பார்த்தேன் பிளாக்கர் மீட் நடக்கிற மாதிரியே எனக்குதெரியல. நானும் நவகிரகத்தை சுத்தற மாதிரி காந்தியை சுத்தி வந்தேன். அந்தபக்கமும் இந்த பக்கமாய் சுற்றி பதிவாளர்களை தேடுகிறேன் என்ற பெயரில்அங்கே இருந்த பெண் பிள்ளைகளை பார்த்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் போன பின் உடல் வலிக்க ஆரமித்து விட்டது. அந்த நேரத்தில் பிரபு தான் என் நினைவுகளில் நிறைந்து இருந்தான். அவன் இந்த சமயத்தில் இங்குஇருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

மாமா
"நீ இல்லாமல் எது நிம்மதி"

அந்த நேரத்தில் சோகமாய் உணர்ந்தேன். சரின்னு வானவில் வீதி கார்த்திக் கிட்டமெசேஜ் பண்ணி கார்கி நம்பர் வாங்கினேன். அந்த numberkku நான் டயல் செய்த போது.

ஆவலுடன் காத்து இருந்தேன் கார்கி குரல் கேட்க. எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை எனக்கு நானே பேசி பார்த்து கொண்டேன். ஏனென்றால் "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" ல.

எதோ ஓர் புரியாத ஹிந்தி பாடல் ஓன்று எனது செவியை சவுல்ஆகிக்கொண்டு இருந்தது. பார்வையை சுழல விட்டேன்.
காதலர்கள்.
இளம் ஜோடி.
அவன் மடியில் அவள்.
இடது தோள்பட்டை இருந்த அவன் கையை சற்றே இறக்கினான்.
மனம் பொறுக்கவில்லை.
கண்கள் நேர் கோட்டில் வந்தது.

சிறுது நேரம் கழித்து.
ஹிந்தி பாடல் நின்றது.
தேவதை குரல் ஓன்று கேட்டேன்.
கார்கி ஒரு பெண்பாலா....????
அதை கூட யோசிக்கவில்லை என் அறிவு.
"ஹலோ"
உடனே என் மனம் உடல் வலி எல்லாம் மறந்தது.
ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் .........

" ஹாய். I am mayvee. ........"
உடனே உள்ளே இருக்கும் சாத்தான் சொன்னது....." டேய் ஏன்டா இந்த கொலை வெறி "
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் முழக்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வான்நிலை
பெண்ணே நீ வைசுயிருக்கிறது புளியோதரை"

என்ன திடிர்ன்னு மனசுக்குள்ள இருக்கிற மன்மதன் சாப்பட்டு ராமனா மாறுகிறானே என்று கண்ணை தெறந்து பார்த்தேன் ; பக்கத்தில மாயாண்டி குடும்பத்தார் மாதிரி ஒரு குடும்பம் கட்டம் கட்டி புளியோதரை காலி பண்ணிட்டு இருந்தாங்க. அதானே பார்த்தேன்.

இப்போ தேவதை
"ஆப் கௌன் ஹாய் ???"

அவளின் குரலை கேட்ட உடன் எனக்கு திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களை விட அவளது குரல் சிறந்ததாக தோன்றியது. குரல்ன்ன குரல், அப்படி ஒரு குரலுங்க. 45% லத மங்கேஷ்கர், 25% ஆஷா ப்ஹொஸ்லெ, மீதி 30% ஜானகி என ஒரு அருமையான கலவையான குரல். அப்படியே உருகி போயிட்டேன்.

"ஒன்ற இரண்டாய்
உயிர் தின்ன பார்க்குதே
உணர்வுகள்......"

திடிர்ன்னு ஒரு பொண்ணு ஹிந்தி ல பேசவும் எனக்கு என்ன பேசுவதுன்னே தெரியல. சரின்னு நாம தான் "Hum Aapke Hain Kaun" படத்தை பல தடவை DVD யில் பார்த்து இருக்கோமே அதை வைச்சு சமாளிக்கலாம் என்று பார்த்தால் ஒரு ஹிந்தி வார்த்தை கூட தோன்றவில்லை அந்த சமயத்தில்.

ஹிந்தி எதிர்ப்பு பண்ணின எல்லா ஆளுகளையும் நல்ல திட்டினேன் மனதார. என்ன தான் ஹிந்தி படித்திருந்தாலும் பத்தாவது பிறகு அந்த மொழியை நான் அவ்வளவா பயன்படுத்த வில்லை.

திடிர்ன்னு ஒரு குயில் என் காதுல குவுச்சு. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். என்னன்னு பார்த்த நாம தேவதை.
"ஹரே..... போல்லுன"

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஆனால் ஹிந்தி மொழி எவ்வளவு அழகான மொழி என்று அன்று தான் தெரிந்து கொண்டேன். ஆனா எனக்கு Aradhana பட ஹீரோ ராஜேஷ் கண்ணா மாதிரி "மேனே சப்னோகி ராணி" ன்னு பாட்டு பாட தோனுச்சு.

ஐயோ.... என்ன செய்ய.
இவள் ஹிந்தி பேசுற. பிறகு எப்படி தமிழ்யில் பதிவு எழுதுகிறாள்ன்னு ஒரே குழப்பம். சரி எது எப்படி இருந்தாலும் ; இவளை ஓகே பண்ணி விடவேண்டும் என்று முடிவு கட்டினேன். அப்பன்னு பார்த்து வழக்கம் போல் networrk பிஸி ஆகி கால் கட் ஆகிருச்சு.

"தென்பாண்டி சீமையில
மான் போல் வந்த உன்னை
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ ......"

மனசுக்குள்ள நாம் ராஜா சார் BGM ஏதும் இல்லாமல் சோலோவாக sympathy create பண்ணிட்டு இருந்தார். இப்போ வனம் முழுமையாக இருட்டின் அணைப்பில் வந்துருச்சு.

சுத்தி நிறைய மக்கள் இருந்தாலும் மனசில் வெறுமையாக உணர்ந்தேன். சற்று தள்ளி ஒரு சின்ன பொண்ணு ஐஸ்கிரீம் வாங்கிட்டு இருந்ததை பார்த்தேன். நீல நிற டிரஸ்யில் அழகாக இருந்தாள். ஒரு குச்சி ஐஸ்யை சாப்பிட்டு, அவள் கை எங்கும் ஐஸ் உருகி வழிந்து கொண்டு இருந்தது. எனக்கு மீண்டும் அந்த குழந்தை பருவத்துக்கே போய்விட ஆசை வந்தது.

"முத்தான முத்து அல்லவோ
முடிந்து வைத்த முத்து அல்லவோ"

என்ன செய்ய "The Curious Case of Benjamin Button" கதை போல் சாத்தியம் இல்லாத நிலை. என் பார்வையை சுழல விட்டேன்.
ஐஸ் கிரீம் கடை, பஜ்ஜி கடை, yellow கலர் சுடிதார்........

yellow கலர் சுடிதார்யில் இருந்த பெண்யின் முகம் எனக்கு தெரிந்த முகமாய்இருந்தது. சற்று உற்று நோக்கினேன்.
அப்போ பின்னாடி ஒரு குரல் கேட்டுச்சு,
" டேய் பச்ச சட்டை. உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டா......"


என் சட்டையை பார்த்தேன். அது பச்சை நிறத்தில் இருந்தது.
எனக்கு ஒரே பயமாக போகிவிட்டது. என்னடா இது சென்னை வந்து இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு பிரச்னை. ரொம்ப weiredயாக உணர்ந்தேன் .

பின்னாடி ஒரு குரல் ; பல குரல் ஆனது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவைகள் என் அருகே வந்து கொண்டு இருந்தது. ஒன்றும் தோன்றவில்லை அதனால் அப்படியே அங்கேயே நின்றேன்.

நின்றேன்...
மஞ்சள் நிற சுடிதாரை தேடினேன். அங்கும் இங்கும் கண்கள் அவளின் பின்பத்தை முத்தமிட அலையாய் தேடின.
கண்களுக்கு சுகம் கிடைக்கவில்லை.
நின்றேன்.....
நோடிகள்.... வினாடிகள்.....


அடி ஏதும் விழ வில்லையே என்று திரும்பி பார்த்தேன். அச்சம் கொண்ட திரையாய் கண்கள் பார்த்து. இரண்டு கும்பல் கலைந்து கொண்டு இருந்தது. ஆக்ஸிஜன் எடுத்து கொண்ட நுரையிரல் நிம்மதியாய் ஆக்ஸிஜன் இல்லாத காற்றை வெளியிட்டது.

விட்ட இடத்தை பார்த்தான். சுடிதாரில் மஞ்சள் இல்லை நீல நிறம் குடி கொண்டு இருந்தது. அந்த மஞ்சள் சுடிதாரை எங்கே பார்த்து உள்ளோம் என்று யோசித்தவரே அங்க இருந்த ஒரு பஜ்ஜி கடையை பக்கத்தில் ஒரு plate பஜ்ஜி உடன் அமர்ந்தேன்.
கை கழுவிட்டு. சற்று நகர்தேன்.எதிரே அவள்.

அவள் இடுப்பில் கை வைத்த படி ஒருவன் நின்று கொண்டு இருந்தான். என் நண்பன் முகமத்தை எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி. முகம் என் நண்பனுடையது இல்லை.
" இவனோடு தான் என் வாழ்க்கை. இவன் இல்லாமல் நான் இல்லை." சில வருடகள் முன்பு யாரோ சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

வேறு பக்கம் போய் அமர்தேன்.
எனது கைப்பேசி சத்தம் போட்டது.
எடுத்து டிஸ்ப்ளேவில் நம்பர் பார்த்தேன். அந்த ஹிந்தி பொண்ணு கிட்ட இருந்து மெசேஜ் வந்து இருந்தது.

தகவலை அறிய பட்டனை அழுத்தினேன்......
அழுத்திய பின் மெசேஜ்யை பார்த்தேன் " who is this" என்று அவள் கேட்டு இருந்தாள். அதற்க்கான பதிலை அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து "sorry. i dont know anyone by this name".
சில நிமிடம் பூமி சுழல்வது நின்று போனது.

இடது கை மற்றும் வலது கைகளில் என் இரண்டு மொபைல் போன் வைத்து பார்த்தேன். தவறான நம்பர்க்கு டயல் செய்து இருந்தேன். மீண்டும் ஒரு முறை என் அம்மாவுக்கு ஒரு அழகான மருமகளை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

சரியான numberக்கு இப்பொழுது முயற்சித்தேன் ....
டயல் டோன் வந்தது .....
வந்து கொண்டு இருந்தது.
சற்று நேரம் கழித்து டயல் டோன் தனது உயிரை விட்டது.
யாரை பார்க்க கூடாது என்று நினைத்து இந்த பக்கம் வந்து அமர்தேனோ அவள் அவனோடு என்னை கடந்து போனாள்.

அவளை எவ்வளவு உயிருக்கு உயிராக என் நண்பன் காதலித்தான் என்று எனக்கு தெரியும். அவர்கள் பார்த்த பிறகு தான் எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
ஆனால் இப்பொழுது நான் காதலித்து இருந்தால் என் காதலி கூட இப்படி தான் அந்நியனோடு சுற்றி கொண்டு இருப்பாளோ என்ற எண்ணம் ஒரு மின்னல் மாதிரி என் மனசில் வந்து போனது.

ச்சே ச்சே .....
அப்படி எல்லாம் இருக்காது.
இதில் வேற எதோ ஒரு விஷயம் இருக்கு என்று தோன்றியது.
அப்ப பார்த்து காற்று சற்று பலமாக விசியது.
அந்த மாலை பொழுதில் அந்த குளிர்ந்த காற்று விசிய போது ; எனக்கு நான் வாழ்ந்த அழகான நாட்கள் நினைவுக்கு வந்தது.
சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன்.

அவள்
அவன்
அவர்கள் காதலை எனக்கு உணர்த்தியே சமயம்
அவர்களின் காதலினால் வந்த பிரச்சனைகள் எல்லாம் எதிர் கொண்ட சமயம்....
எல்லாம் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு போன் செய்தேன்.
பேசினான்.
பேசினேன்.
அழுதான்.
அழுகையாய் வந்தது.
போன் பேசி முடித்த பின்பு .......


" உறவுகள் தொடர்கதை ..
உணர்வுகள் சிறுகதை ...
ஒரு கதை இன்று முடியலாம்...
முடிவிலே ஒரு கதை தொடங்கலாம்....."

மனம் வெறுமை என்னும் ஆடை அணிந்து கொண்டது.
இருப்பிடத்தில் இருந்து கிளம்பிய போது இருந்த சந்தோஷம் அப்ப இல்லை. சரி வந்து விட்டோம் பதிவாளர்களை பார்த்துவிட்டு போகலாமே என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றைய இந்தியாவில் பாவமாய் நிற்கும் காந்தி சிலை நோக்கி நடக்க துவகினேன். அங்கே சென்ற பின் கார்கிக்கு போன் செய்தேன்.
"ஹலோ நான் மேவி பேசுறேன்"
"ஹாய். சொல்லுங்க. "
"நீங்க எங்கே இருக்கீங்க ; நான் காந்தி சிலை கிட்ட இருக்கேன்"
"நாங்க இப்போ பீச் நோக்கி வந்துட்டோம்"
"அப்படியா. இப்ப என்ன செய்யருது"
"சரி. நீங்க அங்கேயே வெயிட் பன்னுரிங்கள. நாங்க வந்துறோம்"
"சரி. நான் வெயிட் பண்ணுறேன்"
"சரி"
போன் பாக்கெட் உள்ளே வைத்தேன்.
கார்கிக்கு வெயிட் பண்ண ஆரமித்தேன்.......

Friday, July 17, 2009

நான்நாங்க எல்லாம் சின்ன வயசிலையே மகாவீரின் நிர்வண கொள்கையை கடைபிடித்தவர்கள். என்னை பார்த்து தான் புத்தரே அப்படி நின்றார். ரொம்ப கம்மியான பட்ஜெட் ல எடுக்க பட்ட படம் இது ; செம கவர்ச்சியா இருக்கு. அளவந்தான் கமல்ஹாசன் க்கு எல்லாம் நாங்க முன்னோடி........நாங்க எல்லாம் சின்ன வயசிலையே பெரிய ரவுடி ல !!!!!!
சிங்கமே என்னை கண்டால் சிதறி ஓடும் !!!!!!
நாங்களும் சிகப்பா தானே இருக்கோம் ???
ஒரு பெண்ணும் பர்ர்க்க மாட்டேன்ங்குது
(சசிகுமார் மாதிரி படிக்கவும்)


Thursday, July 16, 2009

மேவியின் சுயபுராணம்

குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.
****************************************
மெகா சீரியல்கள் இல்லாத வெள்ளிக்கிழமை இரவு அது..

சென்னை கடற்கரையோரம் இருந்த நாகமணி மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது மொக்கை தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் சந்தோசத்தை மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து யுங்கங்கள் பல அருள் புரிந்து தனது பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். காசியில் இருக்கும் கடவுள் அவர்.உலக பிரசித்தி பெற்ற அன்னபூரணி தேவியை மணந்தவர். அவரின் பெயரை அந்த குழந்தைக்கு சூட்டுவதில் அவருக்கு அப்படி ஒரு எரிச்சல். ஆனால் பள்ளி சான்றிதழில் மேவி, மாயாவி கொட்டாவி என்று ஆகி போனது வேறு விஷயம்.
மேவிக்கு முன்பு பிறந்த மற்ற இருவர் போல் இல்லை அவன். சற்று கருப்பான நோஞ்சான் அவன். சுருள் முடி. திருட்டு கண்கள். மொக்கை போடா குழந்தையின் வாய் என்றாரே வைரமுத்து, அப்படியில்லை அவன்.
பிறந்த குழந்தையின் இடை பார்க்கப்பட்டது (கவர்ச்சி பகுதி). சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. எல்லாம் சரி, ஆனால் குழந்தை முழிக்கவில்லை, துங்கி கொண்டு இருந்தது. உடனே நர்ஸ் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே "___ __" பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த நர்ஸ்யை தீக்குச்சி என்று சொல்வாரக்ள்.வலது கையும் , இடது கையும் அவருக்கு இரு கைகள். அவர் சொல்லி எல்லாமே மொக்கை என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.
18 அரியர் என்று காட்டிய அவரது டிகிரி சான்றிதள் மறைக்க பட்டது . அறைக்குள் நர்ஸ் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. நர்ஸ் குழந்தையை என்ற கோட்டானை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.


அய்யோ ...... மொக்கை வந்துருச்சு

Wednesday, July 15, 2009

தற்கொலை

ஊனம் ஆகிவிட்டேன்
ஊனமோ
சமுதாயத்தின் வார்த்தைகளில்
வாழ்கிறேன் சாவை
நோக்கி......
மடை திறந்த முயற்சி
நிற்கிறது ஒரு
சிறு தோல்விக்கு பின்னால்.....
பிணம் நடக்கிறது
பிணகளை பார்த்தபடி.....
எதுகையும் மோனையும்
இல்லை
என் வார்த்தைகளில்.......
என் இதயத்தின்
மேளமும் இங்கு இல்லை!!!
செயற்கையான இயற்க்கை
கண்டு
இயற்கையான என் மனம்
செயற்கை ஆனது
என் சுயம் ;
போகிறேன்
நீதி கேட்க
தேவனிடம் .....
நைலான் கைறு
விலை பத்து ரூபாய்....
தேவனின் அழைப்பிதழ்

பேச்சு ஆளுமை ...


ஹிட்லரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பலர் கூறுவது அவருடைய பேச்சு ஆளுமை தான். அப்படி ஒரு வசிகரமானது. சரியான விதத்தில் ஏற்ற இறக்கம் கொண்டு ; உணர்ச்சிகளை சரியான வார்த்தைகளுக்கு அழுத்தம் தந்து பேசுவதில் அவர் கில்லாடி தான்.

இன்று பல மேலாண்மை வகுப்புகளில் தலைவனின் பேச்சு எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஹிட்லரின் பேச்சை தான் மேற்கோளாக காட்டுவார்கள். நாட்டு மக்கள் அணைவரையும் தான் செய்வது சரியே என்று நம்ப வைத்தது அவரின் பேச்சு என்று கூறினால் அது மிகையாகது. ஒரு தலை சிறந்த cult culture தலைவனின் பேச்சு என்றே கூறலாம்.


பிறகு அவரது உடல் மொழி. மிக உன்னிப்பாக பார்த்தோமானால் அவரது உடலே பாதி அவர் சொல்ல வந்ததை சொல்லி விடும். இவை இரண்டும் சேர்ந்தால் பார்பவர்களுக்கு செமையான போதை தான்.

இந்த பேச்சு தான் 1940 வரைக்கும் அவர் செய்த சாதனைகளின் அடித்தளம் என்று கூட கூறலாம். அதன் பிறகு தலைகனம் வந்த பிறகு அவரின் பேச்சின் ஆணவம் சிறுது கலந்து இருந்தது ; இந்த ஆணவம் தான் விழ்ச்சிக்கு காரணம்.


ஆனால் சிலர் ஒபாமாவின் பேச்சை ஹிட்லரின் பேச்சுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது சரியானது இல்லை என்பது என் கருது. ஒபாமா நியாயங்களை தான் முன்னிறுத்தி பேசினார். அது மக்களை இவர் கூறுவது சரியாக கூட இருக்கலாம் என்ற தோற்றத்தை தான் உருவாக்கினது ; ஒரு காந்த அலையை உருவாக்க வில்லை.

ஆனால் ஹிட்லரின் பேச்சு ; அவரது இயல்ப்பு. ஒபாமா மாதிரி ரொம்ப கஷ்ட படவில்லை ஹிட்லர் அவரது பேச்சை செதுக்க.

கலவை

கலவை
கால களத்தின் எண்ணங்கள்
தொடர்புடன் .... தொடர்பு இல்லாமலும்
(கலவை பற்றி ஏதோ என்னால் முடிந்த வரை ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்)

===================================================================

கிறிஸ்துவம் கென்யா, ஆப்ரிக்கா போன்ற கறுப்பு தோல் கொண்ட மனிதர்கள் இருக்கும் நாடுகளில் பரப்புவதற்கு இயேசு ஒரு கறுப்பர் என்று அந்த காலத்தில் சித்தரிக்க பட்டார்.

===================================================================

The Raven என்ற படம் தான் உலகத்தில் உள்ள அணைத்து மாயஜால படங்களுக்கும் முன்னோடி மாதிரி.
==================================================================

Tata McGraw-Hill "CEO 80/20" என்ற பெயரில் பல்வேறு வியாபார பெரும் தலைகள் பற்றியும் அவர்களின் case study போன்றவற்றை வெளிட்டு வருகிறது. எல்லோருக்கும் பயன் தருப்பவை.

=================================================================

எனக்கு நன்றாக எழுதும் திறமை இருக்கு என்று பாராட்டிய அந்த பிரபல வலைப்பூ பதிவாளர் வாழ்க ....... நல்ல இருக்கனும் அவங்க.
(இன்னுமா என்னை இந்த உலகம் நம்புது)

=================================================================

நான் நேற்று காலையில் அழித்த பதிவுகளின் எண்ணிக்கை 160
=================================================================

முதன் முதலில் நானும் பிரபுவும் ஒரு கம்பெனியில் சில காலம் trainee இருந்தோம். இப்பொழுது அந்த கம்பெனி திவால் ஆகிவிட்டது என்று கேள்விபட்டேன். அதற்கும் எங்களுக்கும் எதாவது சமந்தம் இருக்குமோ ????

================================================================

உண்மையில் குழந்தை இயேசு என்று வணங்க படுவது இயேசு இல்லை என்றும் அது இயேசுவின் குழந்தை தான் என்றும் கூறபடுகிறது.
================================================================

உலக அளவில் பலரை கவர்ந்த Arthur Conan Doyle யின் Sherlock Holmes கதையை மாற்றம் செய்து படமாக்கப்பட்டு இந்த வருட கடைசியில் வெளி வருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் Sherlock Holmes க்கு சண்டை போட வரும் என்பது போல் வருகிறதாம். இதற்க்கு அந்த நாவலின் ரசிகர்கள் இடைய பெரும் எதிர்ப்பு. ஏற்கனவே செய்தது போல் இந்த கிளாச்சிக் நாவலையும் கெடுத்து விடுவார்களோ என்ற பயம் தான்.
==================================================================

உலகில் பிரபலமான் விலாசம் எது வென்றால் அது " 221b Baker Street London NW1 6XE England" தான். Sherlock Holmes அங்கு தான் வசிப்பதாய் நாவலில் வருகிறது.
=================================================================

Tuesday, July 14, 2009

புதிய முகம் - சில உண்மைகள்

என்மேல் அன்பு கொண்டு விசாரித்த அணைத்து வலை உலக நண்பர்களுக்கும் நன்றி. கொஞ்சம் சந்தோசம் ; கொஞ்சம் குழப்பம் என்று இருக்கிறது என் நிலை. என்ன செய்வது .......
பாரதி கூறியது போல் "இன்று புதிதாய் பிறந்தேன்" என்று நினைத்து கொண்டு தான் அணைத்து பதிவுகளையும் அழித்து விட்டேன். புதிய நம்பிக்கைகள் உடன் இன்று முதல் வாழ வழி தேட போகிறேன்.
ஓர் முடிவில் ஒரு துடக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். முடிவு பார்த்து விட்டேன். இனி துடக்கம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
நேற்று இரவு ..... குழம்பிய நிலை
காலை சற்று தெளிந்த நிலை .....
ஆனால் தொடர ; அந்த மனநிலையில் இருக்க
சற்று கஷ்டமாக இருக்கிறது ........
புதிய ஒற்றை பெற வேண்டுமானால் ; பழையதை ஒற்றை இழக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது இந்த உலகின் வீதிகளில். அனுபவங்களில் நான் நிறைய இழந்து விட்டேன் ...... நான் இழப்பதற்கு என்னிடம் என் பதிவுகளே இருந்தது ; ஆனாலும் அவை எனக்கு சொந்தமானது இல்லை ..... வாசிப்பவார்களுக்கே அது சொந்தம் என்று எனக்கு தெரியும்.

இருந்தாலும் அழிந்து விட்டேன். இதை பற்றி நான் சற்று யோசித்தாலும் ; அவை ஓர் விசித்திர மன நிலையை குறிக்கிறது. தமிழ்யில் இது எல்லாம் சகஜம் தானே. ஒருவர் வாழ்வில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை வைத்து அவை கூற பட்டவை என்றாலும் ; பெரும்பாலும் பழமொழிகள் பலர் வாழ்வுக்கு பொருந்துவது இல்லை ; ஏதோ ஒரு சிலருக்கு தான் ஒற்று போகிறது. இருந்தாலும் சமுதாய மேம்பாட்டுக்கு என்று கூறி தனிப்பட்ட முறையில் மனிதர்களின் உணர்வுகளை மதிக்காமல் பின்பற்றுவது தான் இந்த பழமொழிகள்.

எனக்கும் இந்த பழமொழிகளுக்கும் ஒத்து போவாது. ஹ்ம்ம் . நேற்று வரையில் துங்கினால் காலையில் இறந்து தான் போய் இருப்பேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் இன்று முதல் உயிருடன் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது என்ற நம்பிக்கை என்னிடம் பிறக்க வில்லை ; பெரும் மன பிரளயத்திற்கு பிறகு மனதை ஒரு பக்குவ பட்ட நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

என்ன செய்ய ; பிறந்து விட்டேன் ; வாழ்ந்தாக வேண்டும் ...... அதனால் தான் இந்த மாற்றம். இன்னும் அந்த குழந்தை தனம் அப்படியே தான் இருக்கு .... மொக்கை தனமும் .

ரிதி / மதுவன்தி
பூவுலகதிலும் பதிவுலகத்திலும்
இன்று நான் மீண்டும் புதிதாய்
பிறக்கிறேன் ........
பழைய நம்பிக்கைகளை
உடைத்து ....
ஆன்னை கருவில் இருந்து புதிய
நம்பிக்கைகள் உடன்
இன்று நான் மீண்டும்
பிறந்து வாழ போகிறேன் ......
வேண்டும் உங்கள் வாழ்த்துக்கள் .....

(பழைய பதிவுகள் பல என் சோகத்தையே எனக்கு நியாபக படுத்துவதால் அதை delete செய்து விட்டேன். புதிய நம்பிக்கைகள் உடன் வாழ போகிறேன்)


Related Posts with Thumbnails