Pages

Wednesday, July 15, 2009

பேச்சு ஆளுமை ...






ஹிட்லரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பலர் கூறுவது அவருடைய பேச்சு ஆளுமை தான். அப்படி ஒரு வசிகரமானது. சரியான விதத்தில் ஏற்ற இறக்கம் கொண்டு ; உணர்ச்சிகளை சரியான வார்த்தைகளுக்கு அழுத்தம் தந்து பேசுவதில் அவர் கில்லாடி தான்.

இன்று பல மேலாண்மை வகுப்புகளில் தலைவனின் பேச்சு எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஹிட்லரின் பேச்சை தான் மேற்கோளாக காட்டுவார்கள். நாட்டு மக்கள் அணைவரையும் தான் செய்வது சரியே என்று நம்ப வைத்தது அவரின் பேச்சு என்று கூறினால் அது மிகையாகது. ஒரு தலை சிறந்த cult culture தலைவனின் பேச்சு என்றே கூறலாம்.


பிறகு அவரது உடல் மொழி. மிக உன்னிப்பாக பார்த்தோமானால் அவரது உடலே பாதி அவர் சொல்ல வந்ததை சொல்லி விடும். இவை இரண்டும் சேர்ந்தால் பார்பவர்களுக்கு செமையான போதை தான்.

இந்த பேச்சு தான் 1940 வரைக்கும் அவர் செய்த சாதனைகளின் அடித்தளம் என்று கூட கூறலாம். அதன் பிறகு தலைகனம் வந்த பிறகு அவரின் பேச்சின் ஆணவம் சிறுது கலந்து இருந்தது ; இந்த ஆணவம் தான் விழ்ச்சிக்கு காரணம்.


ஆனால் சிலர் ஒபாமாவின் பேச்சை ஹிட்லரின் பேச்சுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது சரியானது இல்லை என்பது என் கருது. ஒபாமா நியாயங்களை தான் முன்னிறுத்தி பேசினார். அது மக்களை இவர் கூறுவது சரியாக கூட இருக்கலாம் என்ற தோற்றத்தை தான் உருவாக்கினது ; ஒரு காந்த அலையை உருவாக்க வில்லை.

ஆனால் ஹிட்லரின் பேச்சு ; அவரது இயல்ப்பு. ஒபாமா மாதிரி ரொம்ப கஷ்ட படவில்லை ஹிட்லர் அவரது பேச்சை செதுக்க.

5 comments:

வால்பையன் said...

ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர் ஹீரோ!

உங்களுக்கு ஏன்?

ஓபாமா கூட என்னான்னானு ஒப்பிட்டாங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

வீடியோ தெரியலப்பா..

நாஞ்சில் நாதம் said...

ஹிட்லர் பதவி ஏற்ற முதல் நான்கு வருடமும் ஜெர்மனியை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். ஹிட்லரின் ஆரம்ப ஆட்சியின் போது தான் உலகிற்கே முதல் முதலாக நாட்டில் வாழும் அனைவருக்கும் ஓய்வூதியம் அறிமுகமானதாம்.

எப்படியிருந்தாலும் யூதஇனத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி அவரிடம் வந்ததும் அவர் ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார்

ஹேமா said...

மேவி,சுகமா?ஹிட்லர் பத்தின குறிப்பு அருமை.அவரும் ஒரு சரித்திரப் படைப்பாளர்தான்.

abdul ali said...

நல்ல பல செய்திகள் நண்றி

Related Posts with Thumbnails