Pages

Thursday, July 16, 2009

மேவியின் சுயபுராணம்

குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.
****************************************
மெகா சீரியல்கள் இல்லாத வெள்ளிக்கிழமை இரவு அது..

சென்னை கடற்கரையோரம் இருந்த நாகமணி மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது மொக்கை தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் சந்தோசத்தை மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து யுங்கங்கள் பல அருள் புரிந்து தனது பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். காசியில் இருக்கும் கடவுள் அவர்.உலக பிரசித்தி பெற்ற அன்னபூரணி தேவியை மணந்தவர். அவரின் பெயரை அந்த குழந்தைக்கு சூட்டுவதில் அவருக்கு அப்படி ஒரு எரிச்சல். ஆனால் பள்ளி சான்றிதழில் மேவி, மாயாவி கொட்டாவி என்று ஆகி போனது வேறு விஷயம்.
மேவிக்கு முன்பு பிறந்த மற்ற இருவர் போல் இல்லை அவன். சற்று கருப்பான நோஞ்சான் அவன். சுருள் முடி. திருட்டு கண்கள். மொக்கை போடா குழந்தையின் வாய் என்றாரே வைரமுத்து, அப்படியில்லை அவன்.
பிறந்த குழந்தையின் இடை பார்க்கப்பட்டது (கவர்ச்சி பகுதி). சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. எல்லாம் சரி, ஆனால் குழந்தை முழிக்கவில்லை, துங்கி கொண்டு இருந்தது. உடனே நர்ஸ் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே "___ __" பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த நர்ஸ்யை தீக்குச்சி என்று சொல்வாரக்ள்.வலது கையும் , இடது கையும் அவருக்கு இரு கைகள். அவர் சொல்லி எல்லாமே மொக்கை என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.
18 அரியர் என்று காட்டிய அவரது டிகிரி சான்றிதள் மறைக்க பட்டது . அறைக்குள் நர்ஸ் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. நர்ஸ் குழந்தையை என்ற கோட்டானை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.


அய்யோ ...... மொக்கை வந்துருச்சு

10 comments:

ஆபிரகாம் said...

மொக்கை...மொக்கை....
ஓ அவருதான் நீங்களா!

வால்பையன் said...

//பள்ளி சான்றிதழில் மேவி, மாயாவி கொட்டாவி என்று ஆகி போனது வேறு விஷயம். //

//வலது கையும் , இடது கையும் அவருக்கு இரு கைகள்.//

நக்கலின் உச்சக்கட்டம்!

வாழ்த்துக்கள், மொக்கை தொடர!

ஹேமா said...

//சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது மொக்கை தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார்.//

மேவி,சுகம்தானே!

Karthik said...

போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க தல! :))))

நிலாவும் அம்மாவும் said...

நங்கு நங்குன்னு தலைல நாலு கொட்டு

வேலை வெட்டியா உட்டு போட்டு வந்தா ஒரே மொக்கை

நட்புடன் ஜமால் said...

மெகா சீரியல்கள் இல்லாத வெள்ளிக்கிழமை இரவு அது..]]இது டாப்பு ராஸா

kanagu said...

/*குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.*/

செம காமெடி :)

தாரணி பிரியா said...

//Blogger நிலாவும் அம்மாவும் said...

நங்கு நங்குன்னு தலைல நாலு கொட்டு

வேலை வெட்டியா உட்டு போட்டு வந்தா ஒரே மொக்கை //

ரிப்பீட்டு:)

தாரணி பிரியா said...

ஒரு மொக்கையே
மொக்கயாய்
எழுதுதுதே !

தாரணி பிரியா said...

நான் கூட இப்பதான் இப்படித்தான் நினைச்சேன். பொறக்கும்போதே இப்படித்தானா அப்ப சரி :)

Related Posts with Thumbnails