Pages

Friday, August 28, 2009

கலவை

நேற்று இரவு ஒரு பிரபல பதிவாளர் தொலைபேசினார்; அவருடைய புரட்சிகாரமான பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பேசி கொண்டே இருக்கும் பொழுது அவர் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு சோகத்தை சொன்னார் எனக்கு ரொம்ப வருத்தமாய் போயிருச்சு. பதிலுக்கு நான் என் வாழ்க்கையில் நடந்த விபத்தையும் அதன் விளைவையும் சொன்னேன். ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை; வழக்கமாய் அதை பற்றி யாரிடமும் பேச மாட்டேன்.

பேச்சின் முடிவில் அந்த பிரபலம் சொன்னார் "நடந்தது எல்லாம் நன்மைக்கே" .......

பிறகு நகைச்சுவை மன்னன், மதுரை சூப்பர் ஸ்டார், தென்னகத்து சுனாமி, இலக்கிய புயல் திரு. கார்த்திகை பாண்டியன் தொலைபேசினார். பிறகு மகிழ்ச்சியாய் உறங்கினேன்.

==================================================================

"v for vendetta" என்ற படத்தின் dvd பல தமிழ் டைரக்டர்கள் வாங்கி இருப்பதால் ; தமிழ்யில் இன்னும் பல சூப்பர்-ஹீரோ படங்களை எதிர்பார்க்கலாம்.

=================================================================

Uncle Tom's Cabin என்ற நாவல் அமெரிக்க அடிமைகளின் வாழ்க்கையை பற்றி எழுதப்பட்டது. மனித உணர்ச்சிகளை முதன்மை படுத்தி எழுதிருக்கிறார் Harriet Beecher Stowe. இந்த நாவல் ஆபிரகாம் லிங்கன் ஆட்சி காலத்தில் வெளி வந்தது; வந்த பிறகு ஒரு மாபெரும் எழுச்சியை உண்டாக்கியது அரசியல் களத்தில். இது குறித்து Harriet யை ஆபிரகாம் சந்தித்த பொழுது சொன்ன "So this is the little old lady who started this new great war!" மிகவும் பிரபலம்.

===============================================================

ஆங்கில நாவல் படிக்க ஆரம்பிக்க Sherlock Holmes ல இருந்து ஸ்டார்ட் பண்ணின ஈஸியாக இருக்கும்.
================================================================

சமீப காலமாய் RHINNA பாடிய UNFAITHFUL அடிக்கடி கேட்கிறேன் ; வாய்ப்புகளே இல்லை, அவ்வளவு அருமையான குரல். அதை விஜய் அந்தோனி "காதலில் விழுந்தேன்" படத்தில் டூயட்யாக்கி கொலை செய்து இருப்பார்.
==============================================================

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முன்னாடி ஒரு பிரிட்டிஷ் ராஜாவின் சிலை ஓன்று இருக்கிறது. அது யார் என்னன்னு ஒரு பெயர் கூட இல்லை. அப்படியே இருந்தாலம் படிக்க முடியவில்லை. சிலை வைத்தவர்கள் மக்களுக்கு சரித்திர அறிவு தேவை இல்லை என்று எண்ணி விட்டார்களோ ??????

==============================================================

ஸ்பேன்சர் பிளாசாவில் சரவண பவன் அருகே இருக்கும் கான்டீன் ஒன்றில் பொங்கல் நல்ல தரமாகவும் சுவையாகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. நேற்று தான் சுவைத்தேன்.
==============================================================

எழுத்தாளர் மருதனின் பிளாக்யை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க.

=============================================================

அடுத்த பதிவில் Recession ல கையாளப்படும் மார்க்கெட்டிங் முறைகளை பற்றி எனக்கு தெரிந்ததை எழுதலாம்ன்னு இருக்கிறேன்.

================================================================

Tuesday, August 25, 2009

மூன்று பிஸ்கட் இரண்டு நாய்

அன்று ஞாயிறு ....


சிக்கிரம் போய் நியூஸ் பேப்பர் வாங்கிட்டு வரலாம் ன்னு ஐடியா பண்ணி கிளம்பினேன். என்னன்ன வெயில் வந்துட்டா ரொம்ப கஷ்டமாய் போய் விடும்.

காலை நேரம். ஒரு ஐந்து மணி இருக்கும். சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடப்பேன் தினம்தோறும்.


நியூஸ் பேப்பர் கடைக்கு சென்று பின் ஏனோ தெரியவில்லை செம பசி. உடம்பு எல்லாம் சோர்ந்து போயிருச்சு. பக்கத்து கடையில் இருந்து டைகர் கிரீம் பிஸ்கட் வாங்கினேன். ஐந்து ரூபாய்.

கொண்டு வந்த காசும் காலி. தண்ணி பாட்டில் அல்லது தண்ணி பக்கெட் வாங்க கூட எக்ஸ்ட்ரா காசு இல்லை. அக்கம் பக்கம் பார்த்தேன் வேற கடை ஏதும் ஓபன் பண்ணல.


சரின்னு பிஸ்கட்யை சாப்பிட்ட படி இருப்பிடத்தை நோக்கி நடந்தேன்.
ஒரு மூன்று பிஸ்கட் மேல் என்னால் சாப்பிட முடியல. என்ன பண்ணுவது என்று தெரியமால் கையில் வைத்த படி நடந்து கொண்டு இருந்தேன். அப்ப தெருவில் ஒரு நாயை பார்த்தேன். ரொம்ப ஒல்லியாக இருந்தது. எனக்கு ரொம்ப பாவமாய் போயிருச்சு அதை பார்த்த பின்.

சரின்னு ஒரு பிஸ்கட்யை எடுத்து .....
"பா..... பா ச்சு.... பிஸ்கட் . பிஸ்கட் ..."
என்று தென் தடவிய அழைப்பு ஒன்றை விடுத்தேன்.

அப்படி அழைத்த உடன் அது என் அருகில் வந்துச்சு. சரி நம்ம பேச்சை புரிச்சு போயிருச்சு போல் இருக்கு என்று எண்ணி ஒரு பிஸ்கட்யை எடுத்து நாயை நோக்கி விசினேன்.


கிட்ட வந்து சப்பிடும் என்று பார்த்தால் ; விசயா பிஸ்கட்யை பார்த்து அது பயந்து போய் .... வேறு பக்கம் ஓடி போச்சு.


பிறகு சிறிது நேரம் கழித்து ; என்னை பார்த்து பயந்த படி பிஸ்கட் அருகே வந்து பிஸ்கட்யை வாசனை பார்த்த பின் சாப்பிட்டது.


எங்கு இருந்து கிளம்பி இரண்டு திருப்பங்கள் பிறகு வேறு ஒரு நாய் பார்த்தேன். இங்கேயும் போன வாட்டி மாதிரியே நடந்து. ஆனால் திரும்பி வந்த நாயால் அந்த பிஸ்கட்யை எடுக்க முடியவில்லை. எடுக்கும் முயற்சியில் மண்ணோடு புதைந்து விட்டது. சரின்னு மூன்றாவது பிஸ்கட்யையும் போட்டேன். அதற்க்கு அந்த நாய் மீண்டும் பயந்தது. ஆனால் இம்முறையும் சாப்பிட வில்லை.


தன் மேல் எது வீச பட்டாலும் அது தம்மை காய படுத்தவே இருக்கும் என்ற நிலையில் தான் தெரு நாய்கள் இருக்கின்றன. மனித சமுகம் தன்மேல் எந்த வித பரியும் பாசமும் கொள்ளாது என்று எண்ணத்துடன் தான் தெரு நாய்கள் உலா வருகின்றன.

வீட்டில் அடிமையாய் வளரும் நாயக்களை விட்டுவிடுங்கள்; அவை மேல் கவனம் செலுத்த ஒரு மனுஷ ஜெனனம் இருக்கும். அவை கூட பயந்தோடு தான் இருக்கும்.


தெரு நாயக்களின் நிலைமை இன்னும் மோசம். புணர்வதற்கு கூட நாலு நாய் உடன் சண்டை போட வேண்டும்.

மனித இனம் வளர்வதற்கு பல இனங்களை அழித்து ; அடிமை படுத்தி தான் இன்றையே நிலையை அடைந்து இருக்கிறான். பல இனங்களின் பயத்தின் மீது வளர்வது எல்லாம் ஒரு வளர்ச்சியா ????????
அப்படி இன்று மனித இனத்தோடு பயந்து வாழும் ஒரு இனம் தான் நாய்

"அரிது அரிது மானிடராய் பிறத்தால் அரிது " ........ பிற இனங்களை அழிந்து வளரும் மனித இனத்தில் பிறப்பது அரிது தான் ..... அப்படி ஒரு கேடு கெட்ட இனம்.

Friday, August 21, 2009

அழகு... காதல்...பணம்...கடவுள் ?

ஹேமா போன்ற வாழ்வியல் சிந்தனையாளர் என்னை போன்ற மொக்கை சாமியை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து : ரொம்ப சந்தோஷமாய் இருக்கு


1)அழகு என்பது என்ன ?நிரந்தரமானதா ?
அழகு என்ற சொல்லை நாம் தவறாக புரிந்து வைத்து இருக்கிறோம். புற அழகு எல்லாம் அழகு அல்ல ; அகம் சார்ந்த அழகே அழகாகும், அது நிரந்தரமானது தான்.


அழகு என்பது மனிதர்களின் தோற்றம் மட்டும் இருப்பதில்லை. அது உலகத்தில் உள்ள அனைத்திலும் இருப்பது. மனிதர்களின் அழகு தான் அழகு என்று எண்ணம் கொண்டவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சுய-நலம் கொண்டுவர்களே.


2)காதல் மனிதனுக்கு அவசியமா ?

wikipedia வில் காதல் என்ற சொல்லுக்கு அவர்கள் தந்துள்ள் அர்த்தம் "காதல் என்பது மனிதர்களுக்கிடையே பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை.

பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டலும், அவற்றின் பொருள் வேறுபட்டது."

ஆண்-பெண் இடைய தோன்றும் காதல் மட்டும் காதல் இல்லை. காதலுக்கு இன்னும் பல்வேறு முகங்கள் இருக்கிறது ; ஆனால் மனிதனுக்கு அவை தேவை இல்லாததால் அவன் அதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.
காதல் என்பது மனிதனுக்கு அவசியமானது தான். ஆனால் விஷயம் என்வென்றால் நிறைய பேருக்கு காதல் என்றால் என்ன என்று தெரிவதில்லை.


காமம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்வோரும் உண்டு ;என்னை கேட்டால் காதலின் ஓர் பகுதி தான் காமம். (வெறும் உடல் உறவு மட்டும் காமம் இல்லை என்பது பல Sexologist களின் கருது).


உணர்களை மதித்தல் என்று இருந்த காதல் இன்று உணர்வுகளை மீதித்தல் என்று ஆகிவிட்டது.......

இப்பொழுதைய தேவை காதல் என்பதின் பொருள் தான். அதன் அர்த்தம் தெரியாமல் தான் காதல் அவசியமானதா என்ற விவாதம் வந்து இருக்கிறது........


3)கடவுள் உண்டா ?

கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை ; ஏனென்றால் கடவுள், பக்தி என்ற விஷயம் எல்லாம் என் மேல் திணிக்க பட்ட ஒன்றாக தான் இருந்துள்ளது. ஆதனால் கடவுளை பற்றி பெருசா எந்த ஒரு எண்ணமும் என்னிடத்தில் இல்லை.ஆனால் நிறைய படித்து இருக்கிறேன்.

எனக்கு சிறு வயது முதலே எது கடவுள் என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு தெரிந்து எல்லா மதங்களும் கடவுளை தான் எல்லாவற்றுக்கும் முலம் என்று கூறுகிறது. ஆனால் அந்த கடவுளின் முலம் எது என்ற என் கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

ஹிந்து மதத்தை எடுத்து கொண்டால் முருகனுக்கு தந்தை சிவன், சிவன் ஆதி சக்தியில் இருந்து வந்தாக நான் கேள்வி பட்டு இருக்கிறேன்; ஆனால் அந்த ஆதி சக்தியின் முலம் எது ????

சரி. கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறார் என்று கொக்க்மக்கு பதில் சொல்வார்கள் கடவுளின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியாத கடவுள் நம்பிக்கை கொண்டவார்கள்.

எனக்கு தெரிந்து எது கடவுள் என்று இன்னும் மக்களிடையே ஓர் தெளிவு வரவில்லை என்றே நினைக்கிறேன். எல்லா மதங்களும் கடவுள் ஒருவரே என்று கூறுகின்றன ஆனாலும் எல்லா மதங்களுக்கும் தனி தனியே கடவுள்களை வைத்து வியாபாரம் செய்த படி தான் இருக்கின்றன.

போய் சேரும் இடம் கடவுள் தான் என்று தெரிந்து விட்ட பின் மதங்களும் ஜாதிகளும் முக்கியமா ???? கடாவுளை சேரும் வழி என்று கூறும் மதங்கள் முக்கியமா ????

எனக்கு தெரிந்து யாருடைய நம்பிக்கைகளும் அவர்களுக்கு அடையாளமாகி போகாது. ஆனால் இந்த கடவுள் நம்பிக்கை மட்டும் எப்படி ஒருவரின் அடையாளமாகி போனது என்று எனக்கு தெரியவில்லை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எப்படியும் இறந்த பின் எல்லோருக்கும் தெறிந்து விட போகிறது; பிறகு ஏன் மாற்று கருது உடையவார்களை இப்படி இம்சை பண்ணுறாங்க ன்னு தான் தெரியல ....... பலரின் நம்பிக்கை படி பார்த்தால் எப்படி இருந்தாலும் கடவுள் மன்னித்து விடுவர்; பிறகு என்ன கவலை .....

தெளிவு பெறவும் மக்களை நம்பிக்கை தரவும் சமுதாயத்தை மென் படுத்தவும் கடவுள் என்ற ஒரு விஷயத்தை கொண்டு வந்தார்கள் என்றால் ; அது அனைத்தும் இன்று கடவுள் இல்லாமலே நடக்கிறது. இன்றைய உலகத்தில் கடவுளுக்கு அருளிப்பதை தவிர வேறு எந்த வேலையும் இல்லை.

சரி மேட்டர் க்கு வருகிறேன்
சீனா நாட்டு பழமொழி "கடவுளை நீ உணரும் பொழுது ; நீயும் அவனில் ஒருவனாய் இருப்பாய்." என்று கூறுகிறது ......... அதனால் கடவுள் என் முன் தோன்றினால் ; கடவுள் இருக்கிறார் என்று ஒத்து கொள்வேன் ; அப்பொழுதும் அவர் மேல் எனக்கு நம்பிக்கை வராது.

நம்பிக்கையற்ற இந்த உலகத்தில் சிலருக்கு கடவுள் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்றால் ; கட்டாயம் கடவுள் நம்பிக்கை தேவை அந்த மாதிரி ஆளுகளுக்கு.

4)பணம் அவசியமா ?

பணம் பற்றி தெரிய வேண்டுமானால் பொருளாதரத்தை பற்றி நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளுக்கு தேவை அதிகரிக்கும் பொது தான் அதனை அடைய ஒருவன் பெரும் கஷ்ட பட்டு முயற்சிகளை எடுக்கிறான். அந்த முயற்சிகளை பலன் அளித்தாலும் சில காயங்களை விட்டு செல்கிறது.

பணம் தேடல்களின் ஒரே குறிக்கோள் வாழ்வின் சந்தோசம் தான். ஆனால் வாழ்க்கை முழுவதும் பண தேடலுக்கு தான் நம்முடைய நேரத்தை செலவு செய்து விட்டு வாழ்வின் கடைசி நாட்களில் வருத்த பட்டு கொண்டு இருக்கிறோம். பண தேடல்கள் எல்லாம் வாழ்வின் சதோஷங்களின் அழிவில் தான் இருக்கிறது.

பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஆனால் அது நம்முடைய சந்தோஷங்களை பதிக்காமல் பார்த்து கொள்வோம். பணத்தின் தேவையை தீர்மானிக்கும் உரிமை நம்ம கிட்ட தான் இருக்கு.

================================================

நான் இந்த கேள்வி-பதில் தொடருக்கு அழைப்பது...

வால்பையன்

கார்த்திக்

கார்த்திகை பாண்டியன்

Tuesday, August 18, 2009

பயோடேட்டா – டம்பி மேவீ

பெயர் : டம்பி மேவீ

Original பெயர் : மேவி

வயது : இறக்க இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில் : வேலை பார்ப்பது

நண்பர்கள் : எல்லா முட்டாள்களும்

எதிரிகள் : எல்லா அறிவாளிகளும்

பிடித்த வேலை : தூங்குவது

பிடிக்காத வேலை : புத்தகம் படிப்பது

பிடித்த உணவு :தோசை

பிடிக்காத உணவு : அப்படி ஓன்று இருக்கிறதா ??

விரும்புவது : சந்தோஷமாய் இருப்பது

விரும்பாதது : சோகமாய் இருப்பது

புரிந்தது : வாழ்க்கையை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை

புரியாதது : முழுமையான முட்டாள் ஆகும் வழிகளை

சமீபத்திய எரிச்சல் : ஒபாமா

நீண்டகால எரிச்சல் : திருபாய் அம்பானி

சமீபத்திய சாதனை : ஒரே முச்சில் முன்று மசால் தோசை சாப்பிட்டது

நீண்டகால சாதனை : ஞாபக மறதி

Monday, August 17, 2009

நான்



நேத்து கடற்க்கரைக்கு சென்று இருந்தேன். கூட்டம் அதிகம் இல்லை அங்கு. அதனால் நல்ல கொண்டாட்டம் தான். வழக்கமாய் கடற்கரையில் விளையாடுவதை நான் நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டது. என்னோ தெரியவில்லை நேற்று செம விளையாட்டு தான் தண்ணீர்யில் ...

Thursday, August 13, 2009

மன்னிப்பு

சமீபத்தில் வலைபூ நண்பர்களுக்காக ஒரு கூகிள் குரூப் ஒன்றை ஆரமித்தேன். அதில் சிலர் வேண்டாத விஷயங்களை போஸ்ட் பண்ணினதால் .... அந்த குரூப் யை எடுத்து விட்டேன். அந்த மாதிரி வேண்டாத சில ஈமெயில் நண்பர்களுக்கு வந்து இருக்கும். அதற்க்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .......

Wednesday, August 12, 2009

வெளியே போன கவிதைகள்

(படிக்கும் முன் இதை போய் படிச்சிட்டு வாங்க)

இந்த இடுக்கையை பார்க்காதவங்க ....


என்னை சுற்றி
ஆயிரமாயிரம் இம்சைகள்
என் உடலோடு ஒட்டியிருந்த அழுக்கு
மனதை தின்று கொண்டிருந்தது!
காரணம் என்னை விட்டு
தப்பித்து ஓடியது
நினைவு வந்து
மொக்கை ஆனேன்!


=======================================

கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தவளை தொடையருகில்
படுத்து சிரித்தது
வயிற்றின் அருகில்
ரெண்டு சொட்டு ஜொள்ளு
மார்போடு இருக்க நினைத்து
தொல்லையில் உருண்டு கொண்டு இருந்தது ......

Monday, August 10, 2009

சர்வக்ஞர் - சமுதாய புரட்சியாளர்

சர்வஜன (கன்னட உச்சரிப்பு). அவர் சிவன் போக்கு சித்தன் போக்கு என்று இருந்து கொண்டு ஏதோ அவருக்கு தோன்றியதை பாடியுள்ளார்.

அவரது பாடல்கள் அந்த அளவுக்கு இலக்கிய தரமாக இருந்தத என்று எனக்கு தெரியவில்லை ; ஆனால் எல்லாம் தினசரி வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை கொண்டதாக இருக்கும்.

இவருக்கும் திருவள்ளுவருக்கும் ஓர் ஒற்றுமை ; இருவரது வாழ்க்கை பற்றியும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருசா ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு பாட்டில் சர்வஜன
"அரியோ பன்றியாக திரிந்தார்,அரனோ பிச்சையெடுத்து திரிந்தார்,
பிரமன் தலையோ கிள்ளப்பட்டது;
இவர்கள் விதியை விதித்தவர் யார்."



விதி எழுவது இறைவன் என்றால் ; அவன் பிச்சை எடுக்கும் படி ஆனதற்கு யார் காரணம் என்று விதியை குறித்து பாமர மக்கள் இடைய கேள்விகளை எழுப்பி ; ஒரு சமுதாய மறுமலர்ச்சிக்கு வழிவகை செய்தவர் என்று கூறினால் மிகை ஆகாது. இந்த பாடலை சற்று கவனமாக வாசித்தால் கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்டதாக இருக்கும். ஒரு வேளை இதற்க்கு தான் திமுக அரசு இவரது சிலையை திறக்க உள்ளார்களோ?????


இன்னொரு பாடல .......
"நாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்
ஒரே நீரை குடிக்கிறோம்,அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை;
எங்கிருந்து சாதி வந்தது கடவுளே."
பெரியார் சொன்ன கருத்துக்களை தான் இவர் பல நூற்றாண்டு முன்பே சொல்லி இருக்கிறார். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது திருக்குறள் ; பல மனிதர்களை கொண்ட சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது சர்வஜன பதம்.


இன்னொரு பாடலின் கருது .....
"குடிக்காரனோ, மது விற்பவனோ ஓர் பன்றியை விட கேவலமானவன்" என்று பொருள் வருகிறது. தமிழ் நாட்டில் அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மக்கள் மத்தியில் குடியை பரப்பி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க ; தமிழ் நாட்டில் தனது சிலையை வைக்க சர்வஜன உயிருடன் இருந்தால் ஏற்று கொள்வாரா????


ஒரு விஷயம் எனக்கும் இவருக்கும் பொருத்தும். இருவரது அப்பாக்களும் காசி விஸ்வநாதனை பிள்ளை நன்றாக பிறக்க வேண்டி உள்ளார்கள்.

விஜய சாம்ராஜியம் புகழ் பெற்று இருந்தாலும் ; அதான் பிறகு பல முற்போக்கான அரசர்கள் ஆட்சி செய்து இருந்தாலும் சாதி பிரச்னை இருந்து கொண்டே வந்து உள்ளது.

இதற்க்கு சாட்சி என்று பார்த்தால் லிங்கயது என்று ஒரு வகுப்பினரிடம் தான் அந்த காலத்தில் தின்பண்டம் வாங்குவார்கள். மற்ற ஜாதி மக்கள் கடை விரித்தால் போணி ஆகாது. அந்த மாதிரியான நிலை இருக்கும் போது தான் ...
"தீண்டத்தகாதவர் வீட்டில் விழும் ஒளியும் தீண்டத்தகாததா?
மேலோர்,கீழோர் எனப்பேசாதீர்;
கடவுள் அருள் பெற்றவனே மேன்மையானவன்."
என்று ஜாதி மதங்கள் எதிர்த்து தனது கவிதையால் பதிவு செய்து உள்ளார்.


இவர் கடைசி வரைக்கும் நாடோடி கவியாக தான் இருந்துள்ளார் ; சமுதாய புரட்சிக்கு பாடுபட்டவர். சமுதாய ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து குரல் கூடுதவர். இவரை அந்த காலத்தில் வாழ்ந்த "ஆன்மீக பெரியார்" என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு பெயர் இவருக்கு பொருத்தும்.

பெரியார் வாழ்ந்த தமிழ் நாட்டில் இந்த மாதிரியான கவியின் சிலை திறப்பதற்கு மொழி என்ற பாகுபாடுகளை கடந்து நமது அரசை பாராட்ட வேண்டும் (பல அரசியல் காரணங்கள் இருந்த போதிலும்).......

(சர்வஜன பற்றி நிறைய சொல்லாம் ; அனா எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்)

(எல்லா கவிதைகளும் விக்கி யில் இருந்து தான் எடுத்தேன்)

Saturday, August 8, 2009

அன்பான குடும்பம்

கவிதையாய் அம்மா இருக்க
அதற்க்கு விளக்க உரை தந்தை
தெளிவுரையாய் அவர்களின் காதல்
பொருளுரை நாங்கள்
முன்னுரை எங்களது குடும்பம்
அன்பின் தொகுப்பாய் ரிதிம்மா
கடவுளுக்கும் அமைந்து இருக்காது
எனக்கு அமைந்த மாதிரியான குடும்பம்

Thursday, August 6, 2009

தெருக்குறள் அஹ திருக்குறள் அஹ

எனக்கு தெரிந்து பல வருஷம் முன்னாடி திருவள்ளுவர் என்னை மாதிரியே மொக்கை போட்டு இருக்கார். அதனால் தான் என்னவோ யாரும் தெருக்குரல் சாரி திருக்குறளை படிக்கறது இல்லைன்னு நினைக்கிறேன்.



திருக்குறள் என்பது ரொம்ப பெரிய மொக்கைங்க. அவ்வளவு பெருசா எழுதினதுக்கு பதிலாக "மனிதனாய் நீ வாழ வேண்டும்" என்று அவர் சொல்லி இருந்தால் மேட்டர் ஓவர். அதை விட்டுவிட்டு எதற்கு இவ்வளவு பெருசா எழுதி சின்ன பசங்களை கொடுமை செய்யுறார்ன்னு தெரியல.



சரி. திருக்குறள் என்பது பெரிய மேட்டர் கொண்ட சப்ஜெக்ட். அதுக்குரிய மரியாதையை நாம தந்து இருக்கோமா என்றால் இல்லைன்னு தான் சொல்லுவேன்.



அதை கட்டாய மனப்பாட பகுதியாக்கி பசங்க மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஒரு பொருளாக திருக்குறளை ஆக்கி உள்ளோம்.

என் சொந்தக்கார குழந்தைகள் தமிழ்யை இரண்டாம் விருப்ப பாடமாக கொண்டு படிக்குறாங்க. கொஞ்ச நாள் முன்னாடி அவங்களை பார்க்க போய் இருந்தேன். அப்பொழுது அவர்கள் தமிழ் படித்து கொண்டு இருந்தார்கள். அதுவும் திருக்குறள்.




சரின்னு அவங்களுக்கு திருக்குறளை பற்றி எனக்கு தெரிந்தது எதாவது சொல்லலாம் என்று எண்ணி ; பேச்சு கூடுத்தேன். அவர்களின் பதிலில் செமயா வெறுப்பு தான் இருந்தது. இதே எண்ணத்தோடு இவங்க வளர்ந்தால் ; எப்படி திருக்குறளை நாளை உணர்த்து கொள்வார்கள் ???




வேண்டுமானால் சும்மா ஒரு பேச்சுக்கு திருக்குறளை புகழ்வார்களே தவிர ..... ஒரு நாளும் விரும்பி படிக்க மாட்டார்கள். நாமது சமுகத்தில் எல்லாமே இப்படி தான் ; வாழ்க்கைக்கு தேவையானதை எல்லாம் இப்படி கட்டாயமாக்கி சிறு வயது முதலே ஒரு வித வெறுப்பு உணர்ச்சியை தெரிந்தோ தெரியலமலோ விதைத்து விடுகிறார்கள்.




வளர்ந்த பிறகு மிகவும் சிலர் தான் திருக்குறளை விரும்பி படிக்குறாங்க.இன்னும் நாம் என்ன செய்கிறோம் என்றால் திருக்குறளை ஒரு தகுதி பாடமாக தான் வைத்து வளர்த்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுது இருக்கும் பல தமிழ் ஆவலர்களை கேட்டு பாருங்க அவர்களுக்கு திருக்குறளின் அறிமுகம் ஒரு கட்டாயத்தின் முலமாக தான் இருக்கும்.




சரி இதை எல்லாம் விடுங்க. பள்ளி செல்லும் பசங்க கிட்ட போய் "திருக்குறள்ன்ன என்ன??" அப்படின்னு கேட்டு பாருங்க. "அது செய்யுள் பகுதி" இல்லாட்டி "மனப்பாட பகுதி" அதுவும் இல்லாட்டி "திருவள்ளுவர் எழுதினது" என்று தான் பதில் வரும். பள்ளி முடிக்கும் வரை யாருக்கும் அதன் சுவை தெரிவதில்லை. பிறகு அவர்களுக்கு திருக்குறள் பற்றிய ஆர்வமும் இருப்பதில்லை.




நல்ல இருக்குப்பா நாம திருக்குறளை வளர்க்கும் விதம்......

Wednesday, August 5, 2009

நூறாவது பதிவு கண்ட கார்த்திக்காக

SUBRAMANIAPURAM

Ajay is waiting for Sheela in the third table of the coffee shop. But he is bit tensed as Sheela didn’t come on time as fixed. Ajay have already sent many text messages to her; alas there was no reply to any of his messages.

He sensed someone was watching him from somewhere; so he looked around. He was not able to find any clue. He thought that it might be Sheela but she don’t like to do like this.He looked @ his watch; the big needle seemed to be tired after finishing a round in his brand new OMEGA watch. He started watching videos in which Sheela was talking to him; which was taken during his birthday party……

“Hi dear ….. Love you so much……, what do you want sir?”

Ajay was taken back, he have watched this video so many times; such that he know all words that Sheela spoke during that night. But “what do you want sir?” is new to him. He got tensed and he couldn’t believe his ears.

How can this happen????

He was totally confused.

That too how can Sheela speak in male voice?


He pinched himself. It was true only.


Immediately he tired calling Sheela.

But then only he realized; it was the waiter who asked that question.By this time waiter was confused by the reactions that Ajay exhibited.

After few minutes he heard:“One Chinese truffle pastry and cappuccino”

“Ok”

By this time; his thoughts went back to time when he first meet Sheela at college.

“Hey; hello…..”

“What”

“Can you give me the notes that you took in the third hour?”

“Fluid mechanics?”

“Ya”

“Will you be able to understand my hand-writing? Because it will look horrible like my fate?"

“That and all I will mange”

“By the way what’s your name?”

“My name is Ajay Anand. Then…”

“Then”

“Coffee”

“Ok”

The barer now served the order items. After having a bite of truffle; Ajay started to stir cappuccino to mix the chocolate and milk. As he stirred the face of Sheela appeared in that and vanished within seconds; suddenly he felt somewhat guilty for no reason.

Now he again tried calling her mobile. This time network allowed him to hear the hello tune of Sheela. Some singer sang one song which Ajay didn’t like.After few seconds the singer stopped singing. Ajay thought of posting his successful love story in his blog.

Six years.

From college first year to till this date; to him it was journey of two hearts in the path laid by Adam and Eve.Technology helped them to stay connected.


From “ADD-ON” scheme to “CUG” scheme all had a role in the love story. Also YAHOO messenger, GOOGLE talk etc.Now there are economically independent and they are able to pay bills of various credit cards.

They worked at different companies.

Ajay lived with friends @ Tnagar in a rented house; while Sheela lived in relative’s home.Their families have accepted their love; so they waiting for their elder ones to get married.

Now Ajay is looking his watch. The time is 1947 hours.


Ajay have lost his patience after his 0ne and half hour wait for Sheela.

By this time his friend who accompanied him to coffee shop have left him and have went to movie in a near by theatre. This was not new to Ajay; he has been used to it.Today he got tired after three phone calls and two coffees.

Room keys were with him; his friend also had one. Then he got a call from his boss.

“Ajay”

“Ya”

“How s the weekend man”

“Not interesting”

“No girls…..”

“Somewhat. Anyways what’s the matter?”

"Client meeting"


“Ya ya…. I do remember.”

“Have you prepared for it”

“Yes sir.”

“Then ok. The meeting is being scheduled at 1100 hours. So be on time.”

“Done”

“How are the preparations going on for the presentation?”

“Don’t worry. Everything is fine”

After speaking to the boss only Ajay realized that he has not completed the Windows PowerPoint works.

He scratched his nose.

He was feeling little feverish.

He then dialed Sheela’s friend who is residing @ outskirts of the city.

That was SUBRAMANIAPURAM.

A extension area which seemed to have no growth. The area will give a resemblance of forest.

Full of tress

“Nivee”

“Yup”

“Meeting has being scheduled @ 1100 hours. I have done my work. What about you?”

“Is the client is from Japan?”

“Ya; I think so. Why do you worry about that?”

“They more concentrate on quality, not on papers. So it’s you who have to worry; not me.”

“Ok. Did Sheela come there?”

“Ya. But she left three hours ago.”

“Ok. But she is not yet reached here”

“I have no clue”

“Ok. Let’s see tomorrow in office. Have a sweet night.”

“Ok. Good night.”

Then Ajay looked into his Omega for knowing the position of the needles. It was getting late. Then he searched for his BLACKBERRY; he decided to call Sheela but instead of calling he typed a text message to her:

“….. tutty cuttie. waited hre 4 u 4 a lng time. Am leaving. U go to ur room. Tke care. Gd nght….”

Then he started towards to his room by starting the ignition process of his PULSAR 180cc. The rhythmic flow of the engine made his drive smooth and lonely road at that time also added value to the rhythmic flow.

He only had three more installments to make PULSAR as his own bike. He didn’t worry about the blackberry since it was his official mobile and his personal mobile was sleeping in his room.

Now he is thinking about his white cherry Sheela.

He reached his place.

He parked his bike in its lot.

He opened his room in the fourth floor.

He felt somewhat tired; he had some hot water and started doing report work for the tomorrow’s meeting. He sensed something unusual in the room.

He looked in the watch; it has stopped its function @ 2100 hours itself.

He was confused, how can it happen. He had bought the watch only weeks ago. He checked carefully and he was not able find out the fault. He decided to check it out with the service centre .


His body temperature was increasing and so he closed the system. He went to sleep after taking CROCIN.

Suddenly a dark creature was chasing him in a brown horse, he didn’t know where he was?

The place seemed to be like a desert.

“How I came here??”

“Why is that creature chasing me?”

He asked himself.

The creature was nearing him.He was sweating badly.His breathes were fast.

Heart started too bound fast...Everything was odd.

Something made him fall in the sand.

His nerves were tending to burst.His heart seemed to stop its function.

From the horse the creature jumped on him.

Suddenly he got up; he was in his room only. He saw his friend lying in his coat by his side. He saw his watch it showed o645 hours.

He looked around his room; everything seemed to be neatly arranged.

Then he slowly went to lavatory. He was tired.He came out and opened the door; took the Newspaper which was lying abandoned in the floor.He slowly came in and locked the room.

He sat in the sofa to take a quick look into the day’s headlines and so called headlines.He kept the paper in the table as usual without reading and went to prepare coffee with the kettles which he had .

When he was in kitchen he heard a beep sound; a message was waiting for his view in his mobile.

He went and took the mobile.

He read the message.

He smiled.

In right corner of the newspaper “…. a young woman was found dead in the bushes of Subramaniapuram. It seems that murderer rapped her before killing. The medical report says that murder may be occurred around 2100 hours last night. Her identity cannot be found……..”

Which he did not read that day .

(இது நான் ஏற்கனவே எழுதின கதை தான். நாம "வானவில் வீதி" கார்த்திக் நூறு பதிவு போட்டுட்டார். அவருக்கு ரொம்ப பிடித்த கதை இது என்று நேத்து கூறினார். அதனால் மீள் பதிவாக போட்டு இருக்கிறேன். கதை பல டைமென்ஷன் ல போகுமுங்க)

Sunday, August 2, 2009

நண்பனே ஒ நண்பனே ....

உணர்வுகளால் உறவாய் போன
நண்பனே நீ எங்கே ??
நம்பிக்கை இழந்த அனாதையாய்
உணர்வுகளுடன் நான்
நாம் பகிர்ந்த 1/2 டி நினைவுகளுடன்
வாழ்க்கையை சந்தித்தப்படி ........

நினைவு இருக்கிறதா ....
கிசு கிசு படித்து நாம் வளர்த்த
தமிழை .....
திருவள்ளுவர் காணாத
சந்தோஷ தமிழ் ;
நாமது முதல் கவிதையை
தமிழ்யில் எழுதி ; அதை
தமிழ் கவிதை என்று நம்பி
போட்டி குழுவினர் கிட்ட தந்து
அவமானப்பட்ட தினத்தை .....
அதையையும் சந்தோஷமாக
கொண்டடினோமே ; டி கடையில்
நூறு ரூபாய் கடன்பட்டு ...

ஊரில் இருந்து கசந்த அனுபவமும்
உடலுமாய் வந்து ; விடுதியில்
அவசரம் அவசரமாய் HOD தந்த
assignment யை காப்பி
அடித்த திங்கள் கிழமை
காலை பொழுதுகளை
மறக்க முடியுமா ???

உன் காதலியை : நான் காதலித்து
அதை அறிந்து ; சண்டையிட்ட
நேரத்தில் அவள் வேறொருவனை
காதலிப்பதை தெரிந்து
ஒருவரொருவர் ஆறுதல்
கூறி கொண்டோமே : சிரிப்பு என்
இதழ்களில் இப்பொழுது .....
சிரித்துவிட்டேன் : நீ இல்லை
என் அருகில் என்ற வருத்தத்துடன்....

எங்கெங்கோ பிறந்தோம் நாம்
மாமா ; சகல ; பங்கு ; மாப்பிள்ளை ; மச்சி
உறவுகளாய் வாழ்ந்து : எதிர்க்கால
குழந்தைகளுக்கு வரன் பேசியே நாட்கள்
மறக்க முடியுமா ....?

=============================

நட்புகள் தந்த அனுபவங்களை
நான் மறந்தாலும் ; அவை
உலக வரலாற்றிலும் என் வரலாற்றிலும்
ஒரு சுவையான பகுதி ; நண்பர்களும் அனுபவங்களும் பற்பல
இருக்க ; சில கஷ்ட காலத்தில்
காய்ந்த மன பிளவுகளுக்கு ; இந்த
நினைவுகள் தான் மருந்து

===========================================================

என்னை வளர்த்த நட்புக்கு என்றும் என் வாழ்த்துக்கள்.

============================================================

முகம்நக நட்பது நட்பன்று: நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு....

============================================================

சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே

நட்டார் எனப் படு வார்

===========================================================

நண்பர்களே .... இன்று போல் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாய் வாழ்த்திட என் வாழ்த்துக்கள்.

===========================================================

விக்கி , பிரபு மற்றும் நட்பை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

==============================

A real friend is one who walks in when the rest of the world walks out.

The most beautiful discovery true friends make is that they can grow separately without growing apart.

வாழ்க வளமுடன்

Related Posts with Thumbnails