Pages

Thursday, August 6, 2009

தெருக்குறள் அஹ திருக்குறள் அஹ

எனக்கு தெரிந்து பல வருஷம் முன்னாடி திருவள்ளுவர் என்னை மாதிரியே மொக்கை போட்டு இருக்கார். அதனால் தான் என்னவோ யாரும் தெருக்குரல் சாரி திருக்குறளை படிக்கறது இல்லைன்னு நினைக்கிறேன்.திருக்குறள் என்பது ரொம்ப பெரிய மொக்கைங்க. அவ்வளவு பெருசா எழுதினதுக்கு பதிலாக "மனிதனாய் நீ வாழ வேண்டும்" என்று அவர் சொல்லி இருந்தால் மேட்டர் ஓவர். அதை விட்டுவிட்டு எதற்கு இவ்வளவு பெருசா எழுதி சின்ன பசங்களை கொடுமை செய்யுறார்ன்னு தெரியல.சரி. திருக்குறள் என்பது பெரிய மேட்டர் கொண்ட சப்ஜெக்ட். அதுக்குரிய மரியாதையை நாம தந்து இருக்கோமா என்றால் இல்லைன்னு தான் சொல்லுவேன்.அதை கட்டாய மனப்பாட பகுதியாக்கி பசங்க மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஒரு பொருளாக திருக்குறளை ஆக்கி உள்ளோம்.

என் சொந்தக்கார குழந்தைகள் தமிழ்யை இரண்டாம் விருப்ப பாடமாக கொண்டு படிக்குறாங்க. கொஞ்ச நாள் முன்னாடி அவங்களை பார்க்க போய் இருந்தேன். அப்பொழுது அவர்கள் தமிழ் படித்து கொண்டு இருந்தார்கள். அதுவும் திருக்குறள்.
சரின்னு அவங்களுக்கு திருக்குறளை பற்றி எனக்கு தெரிந்தது எதாவது சொல்லலாம் என்று எண்ணி ; பேச்சு கூடுத்தேன். அவர்களின் பதிலில் செமயா வெறுப்பு தான் இருந்தது. இதே எண்ணத்தோடு இவங்க வளர்ந்தால் ; எப்படி திருக்குறளை நாளை உணர்த்து கொள்வார்கள் ???
வேண்டுமானால் சும்மா ஒரு பேச்சுக்கு திருக்குறளை புகழ்வார்களே தவிர ..... ஒரு நாளும் விரும்பி படிக்க மாட்டார்கள். நாமது சமுகத்தில் எல்லாமே இப்படி தான் ; வாழ்க்கைக்கு தேவையானதை எல்லாம் இப்படி கட்டாயமாக்கி சிறு வயது முதலே ஒரு வித வெறுப்பு உணர்ச்சியை தெரிந்தோ தெரியலமலோ விதைத்து விடுகிறார்கள்.
வளர்ந்த பிறகு மிகவும் சிலர் தான் திருக்குறளை விரும்பி படிக்குறாங்க.இன்னும் நாம் என்ன செய்கிறோம் என்றால் திருக்குறளை ஒரு தகுதி பாடமாக தான் வைத்து வளர்த்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுது இருக்கும் பல தமிழ் ஆவலர்களை கேட்டு பாருங்க அவர்களுக்கு திருக்குறளின் அறிமுகம் ஒரு கட்டாயத்தின் முலமாக தான் இருக்கும்.
சரி இதை எல்லாம் விடுங்க. பள்ளி செல்லும் பசங்க கிட்ட போய் "திருக்குறள்ன்ன என்ன??" அப்படின்னு கேட்டு பாருங்க. "அது செய்யுள் பகுதி" இல்லாட்டி "மனப்பாட பகுதி" அதுவும் இல்லாட்டி "திருவள்ளுவர் எழுதினது" என்று தான் பதில் வரும். பள்ளி முடிக்கும் வரை யாருக்கும் அதன் சுவை தெரிவதில்லை. பிறகு அவர்களுக்கு திருக்குறள் பற்றிய ஆர்வமும் இருப்பதில்லை.
நல்ல இருக்குப்பா நாம திருக்குறளை வளர்க்கும் விதம்......

16 comments:

நட்புடன் ஜமால் said...

அதென்னவோ உண்மைதாங்க

வெறுப்பா இருக்கும் மணனம் செய்ய சொல்லும்போது

ஆனாலும் சில குறள்களாவது இப்போது நினைவில் இருப்பதன் காரணம் அந்த பச்சைமர ஆணி தானோ ...

கார்க்கி said...

வேற என்ன செய்யலாம்ப்பா?

வால்பையன் said...

ஐந்தாவது படிக்கும் வரைக்கும் எல்லா சப்ஜெக்டையும் வேண்டா வெறுப்பாக தான் படித்தேன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

கட்டாயப்படுத்தினா எதுவுமே கசக்கத்தான் செய்யும்..

My days(Gops) said...

sir eppadi? thirukural na sinna vayasula irundhey ishtamah? virumbi padicheengala? :)

நிகழ்காலத்தில்... said...

நடப்பதை அனைவரும் அறிவோம், தீர்வு என்ன?????

அத சொல்லாம நீங்க மொக்க போட
திருக்குறள பயன்படுத்தீட்டீங்களே தல

Karthik said...

எனக்கு டைட்டில் மட்டும்தான் புரியல தல. ;)

ஜோக்ஸ் அபார்ட், நல்ல பதிவு. எனக்கு இப்போது முழுதாய் மூன்று திருக்குறள் கூட நினைவில் இல்லை என்று நினைக்கிறேன். :(

ஹேமா said...

//சரி. திருக்குறள் என்பது பெரிய மேட்டர் கொண்ட சப்ஜெக்ட். அதுக்குரிய மரியாதையை நாம தந்து இருக்கோமா என்றால் இல்லைன்னு தான் சொல்லுவேன்.

அதை கட்டாய மனப்பாட பகுதியாக்கி பசங்க மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஒரு பொருளாக திருக்குறளை ஆக்கி உள்ளோம்.//

மேவி.உங்கள் பதிவில் நான் ஒத்துக்கொள்ளக்கூடிய மாதிரி எதுவும் இல்லை.சொல்லப்போனால் இன்றைய தவறான வழி காட்டலில் வளரும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.திருக்குறளில் நிறையவே வாழ்வைச் சரியாக்கிச் செல்ல முன்னேற்பாடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

மேவி...ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சிந்தனை?ஏன் இப்படி ஒரு தலையங்கம்.எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கு.

வால்பையன் said...

//இன்றைய தவறான வழி காட்டலில் வளரும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.திருக்குறளில் நிறையவே வாழ்வைச் சரியாக்கிச் செல்ல முன்னேற்பாடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.//

ஹேமா!
உங்கள் கருத்தில் முரண்படுகிறேன்!

இன்றைய சூழலில் பெரியவர்களுக்கே திருக்குறள் படிக்க விளக்கவுரை தேவைப்படுகிறது!

ஆக திருக்குறளில் இருக்கும் கருத்தை அறிய மற்றொன்றை படிப்பதற்கு அந்த மற்றொன்றை எளிதாக படித்து விடலாமே!

உங்களுக்கு தலையை சுற்றி மூக்கை தொடத்தான் பிடிக்குமா!?

ஹேமா said...

வால்பையன், இன்றைய காலகட்டத்தில் வாழ்வின் முழுப்பகுதியையும் தெளிவாக எளிதாக எங்கு
சொல்லியிருக்கிறார்கள்.
திருக்குறளின் விளக்கவுரையில் புரியும்படியான தமிழில்தானே சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்காரனே திருக்குறள் படிக்கிறான்.யாருக்காவது ஆட்டோகிராப் போடும்போது ஒரு திருக்குறளைச் சேர்த்துக்கொள்கிறான்.
எங்களவர்கள்தானே வேணாம் விரயம் என்கிறார்கள்.குழந்தைகளைத் திருக்குறள் படிக்க ஊக்கம் கொடுத்தால் விரும்பிப் படித்துக்கொள்வார்கள்.

வால்பையன் said...

//குழந்தைகளைத் திருக்குறள் படிக்க ஊக்கம் கொடுத்தால் விரும்பிப் படித்துக்கொள்வார்கள்.//

திருகுறளை போல மார்க்ஸ், சாக்ரடிஸ் கருத்துகளும் வாழ்வியல் சிந்தனைகள் தான்! ஆனால் குழந்தைகளுக்கு தலையில் பாறாங்கல்லை வைப்பதில் ஏன் இப்படி ஆசை உங்களுக்கு!

சரி நிலபிரபுத்துவ காலத்தில் பெண்ணடிமை சிந்தனைகளை எழுதிய திருவள்ளுவர் மேல் உங்களுக்கு ஏன் இம்புட்டு பாசம்!

கற்புள்ள பெண் விட்டு சென்றால் கிணற்றில் வாளி அப்படியே நிற்குமா!?
வாழைமட்டை எரியுமா!?
அப்படி வாளி நிற்கவில்லையென்றால், வாழைமட்டை எரியவில்லை என்றால் அந்த பெண் கற்பில்லாதவளா!?

வாங்க 21ம் நூற்றாண்டுக்கு!

ஹேமா said...

//சரி நிலபிரபுத்துவ காலத்தில் பெண்ணடிமை சிந்தனைகளை எழுதிய திருவள்ளுவர் மேல் உங்களுக்கு ஏன் இம்புட்டு பாசம்!

கற்புள்ள பெண் விட்டு சென்றால் கிணற்றில் வாளி அப்படியே நிற்குமா!?
வாழைமட்டை எரியுமா!?
அப்படி வாளி நிற்கவில்லையென்றால், வாழைமட்டை எரியவில்லை என்றால் அந்த பெண் கற்பில்லாதவளா!?

வாங்க 21ம் நூற்றாண்டுக்கு!//

சரி சரி வால்பையா.எனக்கும் இந்தப் பெண்ணடிமை,தேவையற்ற நம்பிக்கைகளில் உடன்பாடில்லை.
என்றாலும் திருக்குறளில் நல்ல விடயம் இருப்பதாக உணர்கிறேன்.
அவ்வளவுதான்.

நான் இண்ணைக்கு முழிச்ச நேரம் சரில்ல.உங்க கிட்ட பாருங்க எத்தனை திட்டு வாங்கியாச்சு.உங்களுக்கு (மர)மண்டையில திருக்குறள் ஏறல.
அதால எல்லரையுமே படிக்காதீங்கன்னு
சொல்லலாமா பையா !

மேவி மாட்டிக்கிட்டேன் வாலுகிட்ட. காப்பாத்துங்க ப்ளீஸ்.

வால்பையன் said...

தவறாக நினைக்க வேண்டாம் தோழி!

நமது கல்வி திட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை! அனைத்தும் ஒரு சுமையாகவே இருக்கிறது!

திருகுறள் முழுக்க முழுக்க தத்துவ படிப்பு, அதை தெரிந்து அல்லது புரிந்து கொள்ள குறைந்த பட்சம் பத்து வயதாவது ஆக வேண்டும் என்பது எனது எண்ணம்.

நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் எடுத்து கொள்ளலாமே!

:)

be cool!

ஹேமா said...

//வால்பையன் ...
தவறாக நினைக்க வேண்டாம் தோழி!//

தவறோ வருத்தமோ எனக்கு எதுவுமில்லை பையா.உங்களோடு கலந்து பகிர்ந்து குழப்பங்கள் தீர்ந்ததில் சந்தோஷமே.அடுத்தவர்களுக்கும் உதவும் வகையில்.

//நமது கல்வி திட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை! அனைத்தும் ஒரு சுமையாகவே இருக்கிறது!

திருகுறள் முழுக்க முழுக்க தத்துவ படிப்பு, அதை தெரிந்து அல்லது புரிந்து கொள்ள குறைந்த பட்சம் பத்து வயதாவது ஆக வேண்டும் என்பது எனது எண்ணம்.//

உண்மைதான் நமது படிப்பில் விளக்கவுரையும் பொழிப்புரையும் பாடமாக்குதலிலேயே காலம் கழிந்துவிடும்.25 வயதோ 30 வயதோ படிப்புக் காலம் முடியும்வரை அப்பா அம்மாவுக்குப் பாராமாக.

ஆனால் ஒன்று...திருக்குறளை மடடுமல்ல எதையுமே தெளிவாகப் புரிந்து மனதில் படியவைத்துக்கொள்ள குறைந்தது 10 வயதாகவேண்டும்.
நன்றி உங்களுக்கு.

வால்பையன் said...

உங்கள் புரிதலுக்கும் நன்றி சொல்லனும்!
இப்பவெல்லாம் வாதம் பன்ணினால் சண்டைக்கு நிக்கிறோம்னு நினைச்சிகிறாங்க!

டம்பி மேவி எங்கடாப்பா போயிட்டா!
இங்க ஒரு நீயா!? நானாவே!? நடந்து முடிஞ்சிருச்சுடா!

சி.கருணாகரசு said...

திரு, மேவீ அவர்களே... வணக்கம்.
திருகுறள் பற்றிய உங்களின் எண்ணம் அறிந்தேன்.
எதில் எதில் விளையாடணும் என்று ஒரு நியதி உண்டு. திருக்குறள் ஒன்றுதான் உலக அளவில் தமிழனின் அடையாளமாக உள்ளது. அதோடு அதில் தான் இலக்கணம், அறிவியல்,அரசியல் ,மனிதகுலத்தின் மொத்த வாழ்வியலும் வகுக்கப்பட்டு உள்ளது. நல்லதை எழுதுங்கள்... நல்லப்படி எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம். நன்றி.

Related Posts with Thumbnails