Pages

Tuesday, August 25, 2009

மூன்று பிஸ்கட் இரண்டு நாய்

அன்று ஞாயிறு ....


சிக்கிரம் போய் நியூஸ் பேப்பர் வாங்கிட்டு வரலாம் ன்னு ஐடியா பண்ணி கிளம்பினேன். என்னன்ன வெயில் வந்துட்டா ரொம்ப கஷ்டமாய் போய் விடும்.

காலை நேரம். ஒரு ஐந்து மணி இருக்கும். சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடப்பேன் தினம்தோறும்.


நியூஸ் பேப்பர் கடைக்கு சென்று பின் ஏனோ தெரியவில்லை செம பசி. உடம்பு எல்லாம் சோர்ந்து போயிருச்சு. பக்கத்து கடையில் இருந்து டைகர் கிரீம் பிஸ்கட் வாங்கினேன். ஐந்து ரூபாய்.

கொண்டு வந்த காசும் காலி. தண்ணி பாட்டில் அல்லது தண்ணி பக்கெட் வாங்க கூட எக்ஸ்ட்ரா காசு இல்லை. அக்கம் பக்கம் பார்த்தேன் வேற கடை ஏதும் ஓபன் பண்ணல.


சரின்னு பிஸ்கட்யை சாப்பிட்ட படி இருப்பிடத்தை நோக்கி நடந்தேன்.
ஒரு மூன்று பிஸ்கட் மேல் என்னால் சாப்பிட முடியல. என்ன பண்ணுவது என்று தெரியமால் கையில் வைத்த படி நடந்து கொண்டு இருந்தேன். அப்ப தெருவில் ஒரு நாயை பார்த்தேன். ரொம்ப ஒல்லியாக இருந்தது. எனக்கு ரொம்ப பாவமாய் போயிருச்சு அதை பார்த்த பின்.

சரின்னு ஒரு பிஸ்கட்யை எடுத்து .....
"பா..... பா ச்சு.... பிஸ்கட் . பிஸ்கட் ..."
என்று தென் தடவிய அழைப்பு ஒன்றை விடுத்தேன்.

அப்படி அழைத்த உடன் அது என் அருகில் வந்துச்சு. சரி நம்ம பேச்சை புரிச்சு போயிருச்சு போல் இருக்கு என்று எண்ணி ஒரு பிஸ்கட்யை எடுத்து நாயை நோக்கி விசினேன்.


கிட்ட வந்து சப்பிடும் என்று பார்த்தால் ; விசயா பிஸ்கட்யை பார்த்து அது பயந்து போய் .... வேறு பக்கம் ஓடி போச்சு.


பிறகு சிறிது நேரம் கழித்து ; என்னை பார்த்து பயந்த படி பிஸ்கட் அருகே வந்து பிஸ்கட்யை வாசனை பார்த்த பின் சாப்பிட்டது.


எங்கு இருந்து கிளம்பி இரண்டு திருப்பங்கள் பிறகு வேறு ஒரு நாய் பார்த்தேன். இங்கேயும் போன வாட்டி மாதிரியே நடந்து. ஆனால் திரும்பி வந்த நாயால் அந்த பிஸ்கட்யை எடுக்க முடியவில்லை. எடுக்கும் முயற்சியில் மண்ணோடு புதைந்து விட்டது. சரின்னு மூன்றாவது பிஸ்கட்யையும் போட்டேன். அதற்க்கு அந்த நாய் மீண்டும் பயந்தது. ஆனால் இம்முறையும் சாப்பிட வில்லை.


தன் மேல் எது வீச பட்டாலும் அது தம்மை காய படுத்தவே இருக்கும் என்ற நிலையில் தான் தெரு நாய்கள் இருக்கின்றன. மனித சமுகம் தன்மேல் எந்த வித பரியும் பாசமும் கொள்ளாது என்று எண்ணத்துடன் தான் தெரு நாய்கள் உலா வருகின்றன.

வீட்டில் அடிமையாய் வளரும் நாயக்களை விட்டுவிடுங்கள்; அவை மேல் கவனம் செலுத்த ஒரு மனுஷ ஜெனனம் இருக்கும். அவை கூட பயந்தோடு தான் இருக்கும்.


தெரு நாயக்களின் நிலைமை இன்னும் மோசம். புணர்வதற்கு கூட நாலு நாய் உடன் சண்டை போட வேண்டும்.

மனித இனம் வளர்வதற்கு பல இனங்களை அழித்து ; அடிமை படுத்தி தான் இன்றையே நிலையை அடைந்து இருக்கிறான். பல இனங்களின் பயத்தின் மீது வளர்வது எல்லாம் ஒரு வளர்ச்சியா ????????
அப்படி இன்று மனித இனத்தோடு பயந்து வாழும் ஒரு இனம் தான் நாய்

"அரிது அரிது மானிடராய் பிறத்தால் அரிது " ........ பிற இனங்களை அழிந்து வளரும் மனித இனத்தில் பிறப்பது அரிது தான் ..... அப்படி ஒரு கேடு கெட்ட இனம்.

13 comments:

நட்புடன் ஜமால் said...

என்னாச்சி பாஸ் ...

வால்பையன் said...

தனி ஒரு நாய்க்கு பிஸ்கெட் இல்லையெனில் ஜெகத்தினை அழித்துடுவோம்!

Karthik said...

தல, பெங்களூரில் தெருநாய்கள் கடிச்சு ஸ்கூல் பசங்க சாவுறாங்க. நீங்க மேனகா காந்தி மாதிரி போஸ்ட் போடுறீங்களே!!

ஆனால் எழுதியிருக்கிற விதம் உண்மையில் நல்லாருக்கு. :)))

-- mt -- said...

ennamo poda madhava

ஹேமா said...

//காலை நேரம். ஒரு ஐந்து மணி இருக்கும். சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடப்பேன் தினம்தோறும்.//

மேவீ உண்மையாவா ?நம்பவே முடியல.எப்பிடி.கடவுளே.
தூங்கிட்டே நடப்பீங்களா !

//தன் மேல் எது வீச பட்டாலும் அது தம்மை காய படுத்தவே இருக்கும் என்ற நிலையில் தான் தெரு நாய்கள் இருக்கின்றன.மனித சமுகம் தன்மேல் எந்த வித பரியும் பாசமும் கொள்ளாது என்று எண்ணத்துடன் தான் தெரு நாய்கள் உலா வருகின்றன.//

மேவீ உண்மையில் எல்லோராலும் சிந்திக்கப்படமுடியாத விஷயம்.
சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட.

Ravee (இரவீ ) said...

உங்களுக்கு ஒரு விருது
வாழ்த்துக்கள்.
.http://blogravee.blogspot.com/2009/08/blog-post_26.html.

கார்த்திகைப் பாண்டியன் said...

எழுதியிருக்கிற விதம் நல்லாருக்கு... but.. :-((((

டம்பி மேவீ said...

@ நட்புடன் ஜமால் :

"என்னாச்சி பாஸ் ..."


ஒன்னும் ஆகவில்லை அது தான் பிரச்சனை......


@ வால்பையன் : ஹி ஹி ஹி ஹி


@ கார்த்திக் :

மனுஷங்களில் கூட தான் ஹிட்லர் இருந்தாரு ......


@ -- mt -- : நன்றி ன்னா

@ ஹேமா :

"தூங்கிட்டே நடப்பீங்களா !"

பல சமயம் அப்படி தானுங்க ....


"மேவீ உண்மையில் எல்லோராலும் சிந்திக்கப்படமுடியாத விஷயம்.
சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட."

ஆமாங்க .......

@ Ravee (இரவீ ):

தொ வரேன்


@ கார்த்திகை பாண்டியன் :

ப்ரீ யா வுடுங்க

Anonymous said...

nalla pathivu mayvee

Ravee (இரவீ ) said...

பாஸ் நீங்க தான் பாஸ் உண்மையான நாயகன்.

Ravee (இரவீ ) said...

உண்மையா உங்க கருத்துல எனக்கு முழு உடன்பாடு ...
அதான் 2-3 முறை படிச்சு பார்த்தேன்.

தொடருங்க...

Karthik said...

//மனுஷங்களில் கூட தான் ஹிட்லர் இருந்தாரு ......

எனக்கு இந்த அளவு ஹிஸ்டரி தெரியுங்க. ஆனா இதுக்கும் தெருநாய் பிரச்சனைக்கும் என்ன தொடர்புன்னுதான் புரியல! ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

தண்ணி பக்கெட் வாங்க கூட எக்ஸ்ட்ரா காசு இல்லை//

பக்கெட்ல வாங்கி எதுக்கு? குளிக்கிறதுக்கா? ஹிஹி.. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். பதிவேற்றும் முன்னாடி ரெண்டாவது வாட்டி வாசியுங்க பாஸ்.!

ஜோக்ஸ் அபார்ட்..

பதிவின் நோக்கம் சிறப்பானது.

Related Posts with Thumbnails