Pages

Friday, September 25, 2009

காலை நேர கவிதை

மின்மினியாய் alarm
சீனா நாட்டு தொழில் நுட்பம்
நுட்பமாய் ஆராய்ந்து புரிந்து
கொள்ள முடியாத நிலையில் நான்
சத்தத்தை நிறுத்த வலது கையின்
ஜோடி இடது கை கொண்டு
மேல் பட்டனை அறைய போன்னேன்
ஐந்நூறு ரூபாய் அதன் விலை தெரிந்து
ஊமை ஆனது எனது கைகள்
பொருளாதார பின்னடைவு நாட்டில்
யாசிக்கும் பிச்சைக்காரனாய் நான்


===================================


காலை கடனை கடமையாய்
வயிற்றுக்குள் களையெடுக்க
கழிவறைக்குள் நுழைந்த பொழுது
மனதிற்க்குள் நாய்களும் பேய்களும்
சாத்தானும் கடவுளும் நாட்டியம்
ஆடுகிறதே என்மேல்: கழிவறை தனிமை
ஏளன பார்வை
மறக்க முடியவில்லை பழைய நினைவுகளை
முடியாமல் வெளி வந்தேன்


==================================

பேருந்து நிறுத்தம்
காணாத கனவுகளுக்கான தேடல்களுடன் மனிதர்கள்
அதில் நான் ஒருவன்
பொருள்கள் வாங்க உதவும் பொருளாதார தேடல்
தந்து விடுமோ என் மகிழ்ச்சிக்கான பொருளை.....


==============================================


டிஸ்கி - மூன்று கவிதைகளையும் இன்னும் நான் முழுமையாய் எழுதி முடிக்கவில்லை .......

Wednesday, September 16, 2009

A to Z அ முதல் ஃ1. A – Avatar (Blogger) Name / Original Name : ம்ம்ம்ம் .... ஒபாமா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது ; சொல்லிபுட்டேன்
2 . B – Best friend? : அப்பாஸ், யுவா ; 25 வருட நட்பு
3. C – Cake or Pie? : Lisa Loeb தானே .... ரொம்ப பிடிக்கும்
4. D – Drink of choice? apple or water melon
5. E – Essential item you use every day? கட்டாயமாய் என் அறிவு இல்லை
6. F – Favorite color? blue7. G – Gummy Bears Or Worm? :?????!!!!!
8. H – Hometown? திருச்சி ....... ஒரு காலத்தில் சோழர் தலைநகரம்


9. I – Indulgence? தெரியல

10. J – January or February? இரண்டாவது11. K – Kids & their names? அண்ணன் பொண்ணு ரிதி12. L – Life is incomplete without? பிறப்பு , இறப்பு


13. M – Marriage date? - பார்போம்

14. N – Number of siblings? ஓன்று15. O – Oranges or Apples? ஓசியில் கிடைத்தால் எது வேண்டுமானாலும் ஓகே


16. P – Phobias/Fears? தெரியாதுங்க


17. Q – Quote for today? . positive affect increases ones own perceptions of expectancy

18. R – Reason to smile? தேவை இல்லை


19. S – Season? - எந்த காலமாய் இருந்தாலும் அனுபவிக்க மனசு வேண்டும்


20. T – Tag 4 People?-
எஸ்ரா
ஜெயமோகன்
சாருநிவேதிதா
மனுஷ்ய புத்திரன்


21. U – Unknown fact about me? ; எனக்கு கவிதை எழுத தெரியாதுங்க (இன்னும் நிறைய இருக்கு)


22. V – Vegetable you don't like? அப்படி ஒன்றும் சிறப்பாய் இல்லை....... எதை போட்டாலும் சாப்பிட்டு விடுவேன்


23. W – Worst habit? (சில நேரங்களில் உண்மை கசக்கும்)


24. X – X-rays you've had? ஞாபகம் இல்லை


25. Y – Your favorite food? பிசி பாள பாத்


26. Z – Zodiac sign? மீனம்
********************************************************************************


1. அன்புக்குரியவர்கள் : எல்லோருமேதான்


2. ஆசைக்குரியவர் : அம்மா, அப்பா


3. இலவசமாய் கிடைப்பது : வாழ்க்கை


4. ஈதலில் சிறந்தது : நம்மால் முடிகிற எல்லாமே


5. உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான்


6. ஊமை கண்ட கனவு : அது எனக்கு எப்படி தெரியும் ( நான் ஊமை இல்லையே)


7. எப்போதும் உடனிருப்பது : தைரியம்

8. ஏன் இந்த பதிவு : சமுதாய நலனுக்காக


9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கட்டாயம் ஐஸ்வர்யா இல்லை

10.ஒரு ரகசியம் : ஒன்றுக்கு பிறகு இரண்டு வருகிறது

11.ஓசையில் பிடித்தது : உன்னால் முடியும்

12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்.

13.(அ)ஃறிணையில் பிடித்தது: புக்ஸ்


(என்னை யாரும் கூப்பிடவில்லை ..... அதனால் சுயம்புவாய் எழுதுகிறேன் இந்த பதிவை)

Tuesday, September 15, 2009

ரிதி / மதுவன்தி
நித்தமும் விடிகிறது
பூ ஒன்றின் முத்ததோடு
நித்தமும் கவிழ்கிறது இரவு
வானிறங்கி வந்துவிட்ட
நிலவோடு
பஞ்சுப் பாதம்
நெஞ்சைத் தட்டுகையில்
என் பிறப்பையும்
உணர்த்தியபடி!!!(கவிதையை எழுதியவர் ஹேமா. பல வேலைகளுக்கிடைய எனக்காக நான் கேட்டதற்காக எழுதி தந்துள்ளார்.)

Monday, September 7, 2009

கடவுளாகிய சாத்தான் - 2


எதிரே எதிர் இனம்
அவள் அழகு ஐந்து அடி துரத்தில்
கடவுள் மனதில் இச்சைகளின் சீம்பால்
நான் கடவுள் உருவத்தில் சாத்தானின்
உணர்வுகள் கொண்ட கலவை நான்
பிறழ்வு நினைவுகளின் பிதறல் ......

நாங்கள் இருவர் தனி அறையில்
உணர்வுகளில் இன்னும் இரண்டு
அவர்கள் என் கடவுளும் என்
சாத்தானின் பார்வை அவளின்
வளைவுகள் கடவுளின் கண்களில்
என் சாத்தானை அடக்கி கொண்டு
ஓர் உணர்வு தீவிரவாதம் நடக்கிறது

கடவுளின் காதலுக்கும் சாத்தானின் காமத்திற்கும்
காதலின் முடிவு காமம் கடவுளுக்கு
சாத்தானின் காமம் காதலின் சாட்சி
இரண்டுக்கும் அழைப்பிதழ்
அவளின் வெட்கம் ; சிரிப்பு
===
புதிது எனக்கு இந்த மாதிரியான களம்
காலத்தின் விருப்பம் என்னவோ
எனக்கு தெரியவில்லை ....
கடவுளாய் இருப்பதா இல்லை சத்தனாய் இருப்பதா ???
கேள்விகள் என் மனதில் ....
பதில்கள் கிடைக்கவில்லை .....
காலத்தின் களம் கடந்து போனது
உணர்வுகளில் சாத்தானுக்கு வெற்றி
வெளி உலகில் கடவுள் வேடமிட்ட சாத்தான்
முகம் காட்ட காத்து இருப்பான்
இன்னொரு வாய்ப்புக்கு....

Thursday, September 3, 2009

வாங்க .... வாழ்த்துவோம்


சரித்திரத்தில் மிகவும் முக்கியமான நாள் இது; நகைச்சுவை பதிவுகளால் நம்மை சிரிக்க வைத்த தாரணி ப்ரியாவின் பிறந்த நாள் இன்று .
இவருடைய இலக்கிய பணி மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்(ஹி ஹி ஹி ஹி)
வாழ்க்கையில் எல்லா வித சந்தோசத்தையும் இவர் பெற்று வாழ்த்திட என் வாழ்த்துக்கள் .......
keep smiling :)
.

Tuesday, September 1, 2009

கடவுளாகிய சாத்தான்
சாத்தான் குளம் மனதில்
குலத்தின் வாசம் வீசும்
கடவுளை கொன்ற சாத்தான்
சிரிப்பான் இச்சைகள்
துவக்கத்தில்
நடக்கையிலே எதிரே வரும்
எதிர்பாலினர் பார்க்கும் போது.....
சாத்தான் தாண்டவம் அவர்களை
கடக்கும் வரை ....
கடந்த பின் வலிக்கும்
மனது ஆறுதலாய்
சினிமா போஸ்டர் நாயகிகளை பார்க்கும்
பசு தோல் போர்த்திய புலியாய்
நிலை அறிந்த சுழ்நிலை தெரிந்த
கடவுள் வேடமிட்ட சாத்தான்
முகம் காட்ட காத்து இருப்பான்
Related Posts with Thumbnails