Pages

Friday, October 30, 2009

ஊடல் பொழுதுகள்..!!!


படங்கள் ஏதுமற்ற திரையங்கில்
சுற்றித்திரியும் வெட்டி ரசிகனாய்
குழம்பி கிடக்கிறது மனது
தீராத ஆசையின் விளிம்பில்
நிரம்பி வழிகிறது
ரசிகனுக்கும் நடிகனுக்குமான இடைவெளி
எத்தனை முயற்சித்தும்
தூரத்தின் பள்ளத்தாக்குகளை
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறான் ரசிகன்
நெஞ்சை ஆற்றிச்செல்லும்
ஒற்றைப் பார்வைக்காய்
நடிகனை ரசிகன் எதிர்நோக்க -
அமிலம் தோய்ந்த பார்வைகளால்
நடிகனுக்கான ரசிகனின் மொத்த அன்பும்
சுக்கு நூறாக
எதிர்ப்பார்ப்பு மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
புது படம் என்னும் கேடயம் ஏந்தி
ரசிகனின் மடி சாய்கிறான்
மனதின் வலியை மறைதவனாய்
முகத்தில் புன்னகை தேக்கி
நடிகனை அரவணைத்துக் கொள்கிறான் ரசிகன்
ஆனால் - அந்த
நொடிப்பொழுதில் திரையில்
ரசிகன் கிட்ட இருந்தும்
நடிகன் இல்லாதவனாகவே இருக்கிறான்..!!!

Wednesday, October 28, 2009

கலவை

விளிம்பு நிலை மனிதர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் உடல் உறவு தான் என்று ஜெயகாந்தன் ஏதோ நாவலில் கூறிருக்கிறார். நான் ஒற்று கொள்கிறேன் ஆனால் என்னை பொறுத்த வரை பிள்ளை பெற்று கொண்டால் அவர்களுக்கு குறைந்த பட்சம் வாழ்வியல் நிலை தர வேண்டும். இல்லையென்றால் பிள்ளை பெற்று கொள்ளாமல் இருப்பதே மேல்.

விளிம்பு நிலை மனிதர்களின் சில நிமிஷ சந்தோசத்திற்காக அவர்களின் பிள்ளைகள் ஏன் வாழ்க்கை முழுவதம் கஷ்ட பட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்து குடுக்க முடியாத விளிம்பு நிலை மனிதர்கள் உடல் உறவு உடன் மட்டும் நிறுத்தி கொண்டால் நல்லது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நேற்று ஒருத்தர் என்னிடம் "ஏன்தான் கடவுள் எனக்கு இவ்வளவு குழந்தைகளை தந்து கஷ்ட பட வைக்கிறாரோ" என்று வருத்தப்பட்டார். அரசாங்கம் கூடுகின்ற குடும்ப கட்டுபாடு சாதனங்களை உபயோக படுத்தி இருந்தால் ஏன் கடவுள் இவ்வளவு குழந்தைகளை அவருக்கு தர போகிறார்.

இதை பற்றி ஜெயகாந்தன் ஐயா எதாவது சொல்லி இருக்காரா???
=============================================================
கொஞ்ச நாள் முன்னாடி HIGGINBOTHAMS சென்று இருந்தேன். ஓசில எதாவது சின்ன புக் படிக்கலாம் ன்னு தான். அப்ப யாரோ ஒரு ஆளு வந்து சும்மா அப்படியே 10000 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிட்டு போனாரு. என் கேள்வி என்னவென்றால்..... அவ்வளவு புக்ஸ் எல்லாத்தையும் எப்போ படிச்சு முடிப்பாருன்னு தான்.
==============================================================
மர்ம தேசம்ன்னு ஒரு தொடர் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சன் டிவி ல புதன்கிழமை புதன்கிழமை போடுவாங்க. சூப்பர் சீரியல் அது. அந்த மாதிரி சீரியல் எல்லாம் ஏன் இப்போ சன் டிவி ல வருவதில்லை???? சீரியஸ் பார்க்கும் மக்கள் அழுதால் போதும் என்று முடிவு செய்து விட்டார்களோ???
===============================================================
உலக சினிமா பார்க்கும் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் "THE SEVENTH SEAL " . மரண தேவனுடன் ஒருவன் CHESS ஆடி கொண்டே தனது மரணத்தை தள்ளி போடுவது தான் கதை. SUB TITLE உடன் CD கிடைக்குது.
=================================================================
ஒரு கவிதை -

நவீனமாய் வாழ்வுக்கு

ஆசைப்பட்டு

விளிம்பு நிலை உலகத்தில்

பின்நவீன துன்பங்களுடன் நான்.
===============================================================

Tuesday, October 27, 2009

அகதி முகாம்

நண்பா....

நீ அங்கு

நான் இங்கு

ஆனால் நிலைமையோ

ஓன்று .....


ராமர் தேசத்தில்

ராமர் ஆட்சி

நடக்கிறது என்று சொன்னார்கள் ....

விபிஷணனாய்

நான் தேடிய அடைக்களம்

தருகிற ராமன்கள்

எல்லாம் ராவணனாய்

இருக்கிறார்கள்.........


ஸ்ரீ படாவில்

நாம் கண்ட மகிழ்ச்சி

இங்கு நான் காண

பாடாய் படுகிறேன்.......


ராவணன தேசத்து

சீதைகள் எல்லாம்

இங்கு இருக்கும்

காவல் தெய்வத்திற்கு

படையலாய் ..........


கதவுயை திற காற்று வரட்டும்

சொன்னார்கள் ;

கதவு இல்லை

கழிவு அறையில்;

காற்று வருகிறது,

அனுபவிக்கிறேன்

ஆண்மையின் அடையாளத்தை

மறைத்தும் மறந்தும் .......


இவர்கள் என்ன

மனனரில் இருந்த

நம்மை

மானம் இல்லாதவர்கள்

என்று

நினைத்து விட்டார்களோ ??


வசதியானவர்கள்

வளர்ந்த நாட்டில்

கணிப்பொறி தட்டி

கொண்டு இருக்க;

நானோ இங்கு

உயிரை வாழவைக்க

எலிக்கறி கூட

அமிர்தம் தான்

இங்கு

சில நேரங்களில்......


நான்காம் தரம்

வாழ்வுக்கு பயந்து

இங்கு

இரண்டாம் தரம்

அரசுடன்

மூன்றாம் தரம்

வாழ்க்கை வாழ்ந்து

கொண்டு இருக்கின்றோம்.........


நண்பா

சில சமயத்தில்

கொடிய நரகத்தை விட

கொடிய இருப்பிடம் மேல் ....

என்னவே நீ

அங்கேயே இருக்கு ;

கொடிய நரகத்தை அனுபவிக்க

விலை தராதே.....

கண்ணீருடன் உன்

நண்பன் ;

தொலைந்து போன

சொர்க்கத்தில் இருக்கும்

உனக்கு ....


(இது தான் தமிழகத்தில் இருக்கும் சில அகதி முகாம்களின் நிலைமை....முடிந்தால் அவர்களுக்கு மனிதனாய் வாழ வழி செய்வோம்)
டிஸ்கி - பல நாள் முன்பு எழுதினது அதனால் சில எழுது பிழைகள் இருக்கும்.

Friday, October 23, 2009

நான்கு விஷயங்கள்

கேபிடலிசம், சோஷலிசம் போன்ற கோட்பாடுகள் எல்லாம் ஒரு தனிமனிதனின் நம்பிக்கையை காப்பாற்ற வில்லை என்றால் அது இருந்தும் எந்த பயனும் இல்லை. அப்படி பார்த்தால் இந்தியாவில் ஜனநாயகம் இறந்து கொண்டு இருக்கிறது. அதை யாரவது காப்பாற்றினால் நல்ல இருக்கும். மக்கள் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு கோட்பாடுயை நம்பி அது தங்களின் நம்பிக்கையை காப்பாற்றும் என்று நம்பியே ஏமாறுகிறார்கள். என்னை பொறுத்த வரையில் எந்த கோட்பாடும் நிலையானது இல்லை. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு குறை இருக்கிறது.
===================================================================
இந்தியாவில் தனியார் துறை முதலாளிகள் பொலி காளைகள் மாதிரி ஆகிடாங்க. காசும் அவங்களுக்கு சுகமும் அவங்களுக்கு ; சுமை மட்டும் தொழிலாளிகளுக்கு. தொழிலாளிகள் உழைத்தால் அவர்களுக்கு வளம் வந்து கொண்டே இருக்கும் என்று 1930 (GREAT DEPRESSION ) முதல் முதலாளிகள் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்...... ஆனால் இன்றும் "RICHER GET RICHER : POOR GET POORER " என்ற விதி தான் பெருமளவுக்கு நடைமுறையில் இருக்கிறது.
==================================================================
தீபாவளிக்கு அப்பாஸ் எனக்கு "Rule The World - The Way I Did " என்ற புத்தகத்தை பரிசாக தந்தான். அதில் இருக்கும் சமஸ்கிரத வார்த்தைகளை படிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
அன்றே சாணக்கியர் ராஜாக்கள் DISASTER MANAGEMENT என்று ஒரு துறை அமைக்க வேண்டும் என்று சொல்லிருக்கார். ஆனால் நமது அரசாங்கம் பல விபத்துக்கள் பிரவாகம் எடுத்து ஓடினாலும் இதை பற்றி பெரிய அளவுக்கு கவலை பட்ட மாதிரி தெரியல. உதரணத்துக்கு மும்பை தகுதலின் போது NSG பிரிவினரை சரியான நேரத்துக்கு கொண்டு வர முடியாமல் போனது.
=================================================================
பழைய ஜகன் மோகினி ல அந்த வெள்ளை பேய்கள் தான் செம மிரட்டலாக இருக்கும். ஆனால் இப்பொழுது வந்துள்ள படத்தில் அந்த பேய்கள் செம மொக்கையா காட்டி இருக்காங்க. போஸ்டர் ல பார்க்கவே தாங்க முடியல. சின்ன வயசில நான் ஜகன் மோகினி பார்க்கும் போது அந்த வெள்ளை பேய்களுக்கு தான் ரொம்ப பயந்து இருக்கிறேன்.
=================================================================

Tuesday, October 13, 2009

காமம் - SEXUALLY STARVED -3

கொஞ்ச நாள் முன்னாடி லேண்ட்மார்க் போய் இருந்தேன். புத்தங்களை பார்த்து கொண்டு இருக்கும் போது ; பக்கத்து ல காமசூத்ரா புத்தகம் இருந்துச்சு, சரின்னு அதில் என்ன தான் இருக்கு பார்ப்போம்ன்னு எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன். ஏதோ ஏதோ எழுதி இருந்தாங்க. அதெல்லாம் எல்லாம் என்னை சுவாரசிய படுத்த வில்லை ; அதில் இருந்த படங்களும் எனக்கு ஒன்னும் பெருசா கவர்ச்சியா தோன்றவில்லை.

எது கால் ; எது கைன்னு கண்டு பிடிக்க முடியாத அளவில் இருந்துச்சு எல்லா படங்களும். ஒரு ஆர்வம் ரொம்ப நேரம் ஒரு படத்தை பார்த்து கொண்டு இருந்தேன்; அப்படி பார்த்து கொண்டு இருந்ததால் கழுத்து வலி.

நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தேன் ; எனக்கு பக்கத்தில் ஒரு பெரியவர் (பெருசு) என்னையும் என் கையில் இருந்த புத்தகத்தையும் மாறி மாறி முறைத்த படி பார்த்து கொண்டு இருந்தார். வழக்கம் போல மனசுக்குள் நம்ம அறிவை பார்த்து பிரமிப்பு அடைஞ்சு பார்க்கிறார்ன்னு ஒரு சின்ன சபலம் தோனுச்சு. சரின்னு இன்னும் கொஞ்சம் சீன் காட்டலாம்ன்னு இன்னும் உன்னிப்பாக படிப்பது போல் நடித்தேன். ஒரு ஐஞ்சு நிமிஷம் போய் இருக்கும். அவர் என்னை பார்க்கிறாரா இல்லையான்னு பார்க்கலாம் என்று நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவர் முகத்தில் ஒரு மாதிரியான அருவெறுப்பான பார்வை என்னை நோக்கி.

நான் வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு நிர்வணமான பெண்ணின் படம் சிலை வடிவில். அந்த படத்தை அவர் பார்த்துவிட்டார் போலும். அவருடைய பார்வையை தவிர்க்க புத்தகத்தை வைத்து விட்டு அப்படியே சுற்றி அந்த பக்கம் போய் இன்னொரு புக் பார்த்து கொண்டு இருந்தேன் (ஆன்மீக புத்தகம்). கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பெரியவரை தேடிய பொழுது ; அப்படியே ஷாக் ஆகிட்டேன் காரணம் அவர் கையில் அதே புத்தகம் ; அதே படம் , இன்னும் உற்று பார்த்து கொண்டு இருந்தார். அதை நான் பக்கத்தில் இருந்த பொழுதே வந்து பார்த்து இருக்கலாமே...... பிறகு எனக்குள் பல கேள்விகள் எனக்கு நானே கேட்டு கொண்டு இருந்தேன் இருப்பிடம் வரும் வரை.

================================

நானும் பல தடவை யோசித்து இருக்கிறேன் ஆண் / பெண் இருவருக்கும் எதிர்பாலினரின் உடல் அமைப்பு பற்றி நன்றாக தெரியும், இப்படி தான் இருக்கும் என்று பல யூகம் இருக்கும். இவ்வளவு விஷயம் இருக்கையில் எப்படி ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மட்டும் எப்புடி கவர்ச்சி பொருளாக ஆகிபோனது என்று தெரியவில்லை.

கொஞ்ச நாள் முன்னாடி திரு. வேலு பிரபாகரன் அவர்கள் சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு ஆண்களுக்கு இருக்கும் பெண்களின் உடல் அமைப்பு பற்றிய மர்மமே காரணம் என்று கூறி இருந்தார். அதற்க்கு தீர்வாக பெண்களின் மார்பங்களை ஆண்களுக்கு காட்ட வேண்டும் என்று சொன்னார். அப்படி காட்டி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா ????

கொஞ்ச வருடங்கள் முன்னாடி ஒரு இளம் பெண் நான்கு நடுத்தர வயதுக்கார ஆண்களால் கற்பழிக்க பட்டர். அந்த ஆண்கள் எல்லோரும் இரண்டு / மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தான். அத்தனை பெரும் தங்களின் மனைவி முலம் பெண்மையின் ரகசியம் என்று சொல்ல படுகிற விஷயங்கள் அறிந்தவர்கள் தான். இரண்டு குழந்தைகளை பெறுவதற்குள் எத்தனையோ முறை அந்த ரகசியத்தை "படித்து" இருப்பார்கள் ; பிறகு ஏன் ஓர் இளம் பெண்ணை கெடுத்தார்கள்????

புதிய ரகசியத்தை தெரிந்து கொள்ளவா ??????

எந்த பெண்ணாவது இந்த மாதிரி பேசி இருக்காங்கல???? இல்லையே. ஆண்கள் மட்டும் தான் இப்படி பேசுறாங்க ; இது எந்த மாதிரி இருக்கு தெரியுமா " எனக்கு காம வெறி வந்துருச்சு ; வெறியை அடக்க பெண்ணை நிர்வண படுத்தி பார்க்க வேண்டும்" என்பது போல் இருக்கு வேலு பிரபாகரன் சொல்லுவது. எல்லாம் ஆண் ஆதிக்கம்.....தொடரும் .......

Thursday, October 8, 2009

காமம் - SEXUALLY STARVED -2

"கார்க்கி said...
// பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.//
இது அனைவருகும் பொருந்தாது மேவீ.."

ஆமாங்க. அனைவருக்கும் பொருந்தாது தான். படித்து பிறகு பெரிய அளவுக்கு வந்த பிறகு சிலருக்கு மனது ஒரு நிலைக்கு வந்து விடும் ; அதற்க்கு புத்தங்களில் படித்தவை கூட காரணமாய் இருக்கும். ஆனால் இந்தியாவில் பலர் மனது ஒரு நிலையில் இல்லாமல் தானே இருக்கிறார்கள்.===========================உடல் உறவில் ஆண்கள் சிக்கிரம் உச்ச நிலையை அடைந்து விடுகிறார்கள் ; ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைய இன்னும் கொஞ்ச நேரம் எடுக்கும். இதை நான் படித்த சில காப்பியங்களில் நல்ல சொல்லி இருக்காங்க. அதை விட "வேதம் புதிது" படத்தில் ஒரு பாடல வரி
"ஆணின் தவிப்பு அடங்கி விடும் ; பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்."இதை விட யாரும் உச்ச நிலையை பற்றி இயல்பாக சொல்லி விட முடியாது. ஆனால் பெண் ஆண் இரண்டு பெரும் ஒரு நேரத்தில் உச்ச நிலையை அடைய SEDUCTION & FOREPLAY வழிமுறைகளில் சாத்தியமாகிறது.


===================================================காமம் ஒரு மனிதனை ஆள முடியுமா ????நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான். ஆனால் சந்தேகம் இல்லாமல் காமம் தான் மனிதனை பல நேரங்களில் ஆள்கிறது என்பது தான் உண்மை ; மனிதன் என்னதான் அதற்க்கு அடிமையாக இருந்தாலும் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளவே நடிக்கிறான் என்பது தான் உண்மை. மனிதனின் அந்த ரகசிய அடிமைத்தனத்தை வைத்து தான் சில ஊடகங்கள் காசு பார்க்கிறது.


MARKETING ல DEMAND CREATION ன்னு ஒரு CONCEPT இருக்கு. அதாவது ஒரு மனிதனுக்குள் ஒரு குறுபிட்ட பொருளின் தேவையை உற்பத்தி பண்ணுவது தான் DEMAND CREATION.நுட்பங்கள் பல இருந்தாலும் இன்றைய சுழ்நிலையில் ஒரு மனிதனுக்குள் பொருளின் தேவையை உற்பத்தி செய்ய அவனுடைய காம இச்சைகளுக்கு ஏற்றவாறு ஒரு விளம்பரம் தேவை படுகிறது ; அந்த மாதிரியான விளம்பரம் இருந்தால் தான் அவன் அந்த குறுப்பிட்ட பொருளை நினைவில் வைத்து கொள்வான். ஏனென்றால் அது தான் அவனது கவனத்தை பெருமளவு கவர்கிறது.

இதில் யார் மேல் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. விளம்பரத்தால் மக்கள் கெடுகிறார்கள் என்று சொல்வதா ??? இல்லை மக்களின் மனநிலைமை அப்படி இருப்பதினால் தான் இப்படி பட்ட விளம்பரங்கள் எல்லாம் வருகிறதா ????

இந்த மாதிரியான பெரியவர்களுக்கான விளம்பரங்களை வீட்டில் இருக்கும் சிறுவர்களும் பார்க்கிறார்கள். இதை தெரிந்தே தான் விளம்பரங்கள் தயாரிக்க படுகிறது. அமெரிக்காவில் சில சிறுவர்களுக்கான சாக்லேட்களின் விளம்பரங்களில் பால் உணர்ச்சியை துண்டுவது போல் இருக்கும்.... அந்த மாதிரியான விளம்பரங்கள் கூடிய விரைவில் இந்தியாவிலும் வந்தாலும் வரலாம்.

=============================================

சில நாட்கள் முன்னர் டிவியில் கந்தசாமி பட பாடல ஓன்று வந்தது. அதில் ஸ்ரேயாவின் மார்புகளில் ஏதோ ராஜா ராஜா சோழன் காலத்து புதையல் இருபது போல் அவ்வளவு CLOSE யாக காட்டினார்கள். இந்த மாதிரி காட்சிகள் கொண்ட படத்தை தான் குழந்தைகள் படம் என்று கூறி படத்தை PROMOTE செய்கிறார்கள்.

இந்த மாதிரியான காட்சிகள் முலம் இவர்கள் கூறுவது தான் என்னா????


ஸ்ரேயாவின் மார்பு எப்படி இருக்கும் என்று குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதா????

தொடரும் .......

Monday, October 5, 2009

காமம் - SEXUALLY STARVED -1

காமம் என்றால் என்ன ????


நான் சின்ன பையன் என்னால் ஒரு முழுமையான பதிலை தர முடியுமா என்பது சந்தேகம் தான் அதனால் எனக்கு தெரிந்த வரைக்கும் காமம் என்பது உணர்வு + உடல் இரண்டும் சேர்ந்து உறவு கொள்வது. பொதுவாக காமம் என்பது உணர்வின் வெளிபாடு தான் ஆனால் இன்றைய காலத்தில் காமம் என்பது உணர்வின் வெளிபாடாக இல்லாமல் வெறும் இச்சைகளின் வெளிபாடாக தான் இருக்கிறது.
இச்சைகள். ஒரு ஆண் அல்லது பெண் காமம் பற்றிய விழிப்புணர்வு பெறுவது 12 - 15 வயதில் தான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ; "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION".அந்த மாதிரி ஒருவன் அல்லது ஒருத்திக்கு "அந்த விஷயம்" பற்றி எந்த மாதிரி அறிமுகம் கிடைக்கிறோதோ அது தான் வாழ்நாள் முழுவதும் காமம் பற்றியே அவனது/ அவளது பார்வையாக இருக்கும். பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.
அந்த வயதில் அவனுக்கு காமம் பற்றிய அறிமுகம் கிடைப்பது எல்லாம் ஒரு மூன்றாம் தர ஊடகம் முலமாக தான். அந்த ஊடகமும் வியாபார நோக்கத்திற்க்காக வன் புணர்வை மையமாக கொண்டு தான் எழுத பட்டு இருக்கும். அதில் எழுத பட்டு இருக்கும் விஷயங்கள் பெரும்பாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவை தான். இந்த விஷயங்களை படிக்கும் அவனும் "சரி இது தான் மேட்டர் போல் இருக்கு" என்று எண்ணி கொண்டு அந்த எண்ணத்தோடு வளர்வான். அவனோடு சேர்ந்து அவன் மனதில் இருக்கும் எண்ணங்களும் மிருக தனமாய் வளரும்.அப்படி வளரும் பொழுது சாத்தியம் இல்லாத சில உடல் உறவு முறைகளை பற்றியே யோசித்து ; ஒரு வெறி தனமான மிருகமாய் மாற்றி விடும். பல ஆண்கள் முதல் இரவின் பொழுது அசுரத்தனமாய் இயங்க இது தான் காரணம்.
அந்த காலத்தில் கிராமங்களில் . ஒரு நம்பிக்கை உண்டு ; முதல் இரவு முடிந்து மறுநாள் காலையில் மணப்பெண்ணுக்கு இரவு கொண்ட உடல் உறவால் இடுப்பு வலி வந்தால் தான் மணமகன் முழுமையான ஆண் என்று நம்பினார்களாம். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டில் முதல் இரவு முடிந்து கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் வந்த பெண்ணை ஏதோ குற்றவாளியை போல் வீட்டு பெண்கள் விசாரித்த கதையும் உண்டு. காரணம் என்வென்றால் நன்றாக புரிந்து கொண்ட பின் அந்த விஷயத்தை வைத்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள்.

மூன்றாம் தர ஊடங்களில் இருந்து கதைகளை படித்து வளரும் ஒருவன் படுக்கையில் தன்னை ஒரு சகலகலா வல்லவனாய் நினைத்து கொண்டு வளர்கிறான். அப்படி வளரும் பொழுது பொதுவாக ஒரு எண்ணமும் அவன் மனதிற்குள் வந்து விடும் ; படுக்கையில் அவனது மனைவியோ காதலியோ அந்த நேரத்தில் அவனுக்கு அடிமை. உறவு கொள்ளும் நேரத்தில் பெரும்பாலும் ஆண்களின் ஆளுமையே இருக்கும். சரி தமது மனைவிமார்களும் நம்மை அனுபவித்து கொள்ளட்டுமே என்று "அந்த நேரத்தில்" எந்த ஆணும் நினைப்பது இல்லை.
இதே மாதிரியான எண்ணங்களோடு ஒருவன் வளரும் போது அவன் மனதிற்குள் இருக்கும் சில மெல்லிய உணர்வுகள் அடிப்பட்டு போகும்.

இந்த மாதிரியான மெல்லிய உணர்வுகள் பற்றிய விவாதங்கள் வரும் போது எல்லாம் சிலர் xx yy chromosomes களின் வேலை தான் காதல் என்பார்கள்.
சரி அப்படியே வைத்து கொள்வோம். ஒரு ஆண் பெண் இடையே தோன்றுவது காதல் இல்லை எல்லாம் xx yy chromosomes வேலை தான். இவர் கூற்று படி காதல் என்ற உணர்வே பொய் :
காதல் பொய் . அன்பு பொய் .... ரைட்டு ஓகே.


காதலர்களிடம் தோன்றுவது xx yy chromosomes என்றால் அப்ப


தாய் - மகள்

அப்பா - மகன்

மாமியார் - மருமகன்

அண்ணன் - தம்பி - சகோதரி

போன்ற உறவுகளிடையே தோன்றுவதும் xx yy chromosomes வேலை தானா????(தொடரும்......)
(நண்பர்கள் கேட்டதற்காக தலைப்பை மாற்றி விட்டேன்)

Friday, October 2, 2009

சென்னை பதிவாளர்களின் சந்திப்பு

மொக்கை போடாம சுருக்கமா எழுதுறேன் இல்லாட்டி கார்த்திகை பாண்டியன் வந்து இலக்கிய வகுப்பு எடுதுவிடுவரோ என்ற பயம் தான்.


================================================================


எனக்கு மறதி ஜாஸ்தி என்பதால் அங்கே யார் யார் என்ன பேசினார்கள் என்பதை மறந்து விட்டேன். ஆனால் இந்த தடவை யாரும் எனக்கு டி வாங்கி தரவில்லை என்பது மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு.


=================================================================


"பதிவுலக அஜித்குமார்" கேபிள் சங்கர் அவர்களை சந்தித்தேன். குறைவாக தான் பேச முடிந்தது. உண்மையிலே அவர் யூத் தானுங்க.

===============================================================


அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினேன்.


===============================================================

கார்கி வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார். காரணம் மழை என்று சொன்னார். அதே மாதிரி வால்பையன் அருண் அவர்களும் வரவில்லை. கார்கி அவர் வந்தாலும் வருவர் என்று அவர் பதிவில் கூறி இருந்ததே காரணம்.


===============================================================


நிறைய அறிவாளிகள் இருந்தார்கள் அதனால் அது எனக்கான இடம் இல்லை என்று தெரிந்து அமைதியாக இருந்தேன். எல்லோரும் பெரிய பெரிய விஷயமாக பேசினார்கள். கொஞ்சம் மேர்சு ஆகிட்டேன்.

================================================================

பலருக்கு என்னை தெரிந்து இருக்கு ஆனா எனக்கு தான் யாரையும் தெரியவில்லை.

===============================================================


எனக்கு புதிதாய் மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள்.

===============================================================


நான் என் அறிமுக பேச்சின் பொழுது எனது பதிவுகளை திரட்டியில் சேர்ப்பது இல்லை என்று கூறினேன். அதற்க்கு முரளிகண்ணன் பிரபலம் அடைய திரட்டிகள் முக்கியம் என்று கூறினார். ஆனால் திரட்டியில் சேர்க்கும் அளவுக்கு நான் எழுதுகிறேனா என்று எனக்கு ரொம்ப நாளாய் சந்தேகம். பிரபு தான் எனது பதிவுகளை திரட்டியில் சேர்ப்பதாய் சொன்னான்.

==============================================================

இலங்கை தமிழர் ஒருவர் வந்து இருந்தார். எனக்கு இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினேன் ஆனால் முடியவில்லை.

==============================================================

தண்டோராவின் முகம் தெரியாமல் ; நான் அவரை தேடி கொண்டு இருந்தேன். வால்பையன் கிட்ட ஒரு தடவை பேசும் பொழுது அவரிடம் பேசி இருக்கிறேன். பிறகு கேபிள்ஜியின் பதிவு பார்த்து தான் அவரை தெரிந்து கொண்டேன்.

=============================================================

வெங்கிராஜா அவர்கள் பல இங்கிலீஷ் திரட்டிகளை பரிந்துரை செய்தார். நான் கொஞ்சம் மெர்ஸு ஆகிட்டேன். பெரிய ஆட்டக்காராய் இருபார் போல.

==============================================================

மழை எனக்கு ஒன்னும் பெரிய விஷயமாய் தெரியவில்லை.

==============================================================

நர்சிம் ரொம்ப நாளாய் கீற்று காற்று வாங்குவதாய் யாரிடமோ சொன்னார். சரி ஏதோ பதிவுலக அரசியல் போல் இருக்கு என்று நான் அங்கு காது கூடுக்கவில்லை.

=============================================================

காவேரி கணேஷ் பேசும் பொழுது பேச்சில் கொஞ்சம் butter சேர்த்து பேசியதாய் எனக்கு தோன்றியது. ஒரு வேளை அவர் கலந்து கொல்ளும் முதல் சந்திப்பாய் இருக்கலாம் அதனால் தான் இப்படி பேசி இருப்பார் என்று பின்னர் ஒரு எண்ணம் வந்தது.

=============================================================

வழக்கம் போல் அன்றும் நான் தியானத்தில் இருந்தால் யாரிடமும் சரியாக பேசவில்லை. டோண்டு அவர்கள் நான் கிளம்பும் போது வந்தார்.

=============================================================
Related Posts with Thumbnails