Pages

Monday, November 2, 2009

கடவுள் ...... கேள்விகளுக்கான எனது பதில்

ஆன்மீகம் எப்பொழுது தோற்கிறது ???

அதனை நம்புகிறவர்களின் நம்பிக்கையை அது காப்பாற்றாத பொழுது.


நாத்திகம் ஏன் தோற்கிறது ???

மக்களிடம் அது எந்த வித நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லை. அதனால் தான் அது தோற்கிறது.


ஆன்மீக நூல்கள் அவசியமா???

அதை படிபவர்களுக்கு நிம்மதியையும் ; எழுதுபவர்களுக்கு லாபத்தையும் தருவதால்... அது பாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டுமே.

கடவுள் நம்பிக்கை அவசியமா ???

நம்பிக்கை இல்லாத வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கடவுளை நம்புகிறவர்களுக்கு அவசியம் தான். ஆனால் எனக்கு அது அவசியம் இல்லை. ஏனென்றால் எனக்கு உலகில் உள்ள எல்லா மனிதர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.


ஆன்மீகத்தின் ஆயுள் ????

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்று மக்கள் தெரிந்து கொள்ளும் வரை.

உங்களை பொறுத்த வரையில் கடவுள் யார் ???

கடவுள் யார் என்று எனக்கு தெரியாது. சிறுவயதில் நானும் கோவிலுக்கு போய் இருக்கிறேன்; காரணம் கடவுள் எனது வேண்டுதல்களை கேட்பார் என்று. ஆனால் கேட்டாரா இல்லையோ என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அப்பொழுது எல்லாம் யார் கடவுள் (ஏசுவா, அல்லாஹ்வா, இல்லை சிவனா) என்ற குழப்பம் தான் அதிகம் இருந்தது. பிறகு கொஞ்சம் வளர்ந்த பின் எந்த கடவுளை வழிபட்டால் அதிகம் பலன் உண்டு என்று யோசிக்க ஆரமித்தேன். அதற்கு பல்வேறு ஆட்களும் ஊடங்கள் காரணம். பிறகு வளர வளர கடவுளுக்கான தேவை என்னிடத்தில் குறைந்து கொண்டே வந்தது. இப்பொழுது கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை.


என்னை பொறுத்த வரைக்கும் கடவுள் என்பவர் நன்றாக DEMAND CREATE செய்யப்பட ஓர் விற்பனை பொருள்.

எப்படி கடவுளை நீங்கள் விற்பனை பொருள் என்று சொல்லுரிங்க ????

காசு வராவிட்டால் யாரும் மத ஆலயங்கள் நடத்த மாட்டர்கள். கடவுள் இல்லாமல் யாரும் மத ஆலயங்களை நடத்துவது இல்லை.


மக்கள் காசுக்காக மத ஆலயங்களுக்கு போவது இல்லையே ???

ஆமாம். கட்டாயம். ஆனால் மத ஆலயங்களை இன்றைய உலகில் யாரும் ஓசிக்கு நடத்துவது இல்லை.


நீங்கள் சொல்வது இன்றைய உலகில் தானே. அந்த காலத்தில் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடன் தான் மத ஆலயங்களை கட்டினார்கள் ???

உண்மை தான். காசுக்காக அவர்கள் கோவிலை கட்டவில்லை. ஆனால் எல்லோரும் மரணத்திற்கு பிறகு சொர்கத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கோவிலை கட்டினார்கள். மத ஆலயங்கள் ஏற்பட மரண பயமும் ஓர் காரணம். இதற்க்கு சாட்சியாக கடவுளை துதித்து பாடினவர்கள் எல்லோரும் சொர்க்கத்தில் ஓர் இடம் வேண்டும்; இனி பிறவி இல்லாத வரம் வேண்டும் என்றெல்லாம் தான் படி உள்ளார்கள். ஏதோ ஒரு விதத்தில் பலனை எதிர்பார்த்தார்கள் கடவுளிடம் இருந்து.

(கேள்வி- பதில்கள் தொடரும்)

11 comments:

வால்பையன் said...

நல்லாயிருக்குதுபா!

ஹேமா said...

முதலாவது கேள்வியும் பதிலுமே போதும் மேவீ.தொடரட்டும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆன்மீகம் எப்பொழுது தோற்கிறது ???

அதனை நம்புகிறவர்களின் நம்பிக்கையை அது காப்பாற்றாத பொழுது.//

அது..

சூப்பர்ப்..

நச்சுன்னு சொல்லிட்டீங்க

இங்கேயே முடிஞ்சுடுச்சு..ஆன்மீகம்..

ஸ்ரீராம். said...

//"ஆன்மீகத்தின் ஆயுள் ????

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்று மக்கள் தெரிந்து கொள்ளும் வரை"//

100% உண்மை.

Karthik said...

நல்லாருக்குதுங்க..

கிருஷ்ண மூர்த்தி S said...

கேள்வியும் நானே பதிலும் நானே என்பது கலைஞருக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கும் கூடவா?

முதல் இரண்டு கேள்விகள் அதற்கான விடைகளையுமே பாருங்கள், சரிதானா?

நம்பிக்கை தோற்கும் போது ஆன்மிகம் தோற்றுவிடுகிறதா? ஆன்மிகம் என்பது வெற்றி, தோல்வி இரண்டையுமே சம நிலையில் பார்க்கப் பழகிக் கொள்வது என்னும் போது உங்களுடைய கேள்வியும்-விடையுமே அர்த்தமில்லாமல் போகிறதே!

இரண்டாவது கேள்வி, நாத்திகம் ஏன் தோற்கிறது என்றால், அது எந்த நம்பிக்கையையுமே ஏற்படுத்தவில்லை அதனால் தோற்கிறது என்று சொல்கிறீர்கள்.
இங்கேயும் கூட நாத்திகம் என்பது, நான் எதை நம்புகிறேன் என்பதைச் சொல்வதல்ல, அடுத்தவர் நம்புவதைக் கேள்விக்குள்ளாக்குவதே நாத்திகம் எனும்போது இந்தக் கேள்வி-பதிலுமே அர்த்தமில்லாமல் போகிறது!

இரண்டு கேள்விகள்-அதற்கான இரண்டு பதில்கள், இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையைச் சுட்டுகிறதே தவிர, தீர்மானமான எந்தவொரு நிலையுமே தெரியவில்லையே!

அந்தரத்தில் தொங்காமல் ஏதாவது ஒரு கரையில் சேருங்கள்!

தாரணி பிரியா said...

கடவுள் இருந்தார்னா நல்லாதான் இருக்கும் :)

Divyapriya said...

நல்ல கேள்வி, அதை விட அருமையான பதில்கள்

Vijay said...

ஆன்மீகத்துக்கு வெற்றி தோல்வியெல்லாம் கிடையாது. ஆன்மீகம் என்றால் என்னன்ன்னே தெரியாம சும்மா கத்துக்குட்டியா சில சீப் புத்தகங்களைப் படித்து விட்டு, இப்படி தத்துப் பித்துன்னு உளறக்கூடாது. I am sorry Mayvee for being so being critical of you. Anmeekam is a realisation. And that realisation has to come from inwards. Not from forces that are outside your body and soul. If you think that praying god and visiting temples and always chanting mantras is anmeekam, then you are ridiculously wrong.

\\ஆன்மீக நூல்கள் அவசியமா???\\
Yes they are important. May be for not for immortal men like you. But for lesser mortal people like me, it is absolutely necessary. உங்கள் ஊரில் தேரோட்டம் பார்த்திருக்கீறீர்களா? தேர் ஓடும் போது சரக்கு என்று ஒன்று அதற்குப் போட்டுக் கொண்டே வருவார்கள். அது பாட்டு தறிகெட்டு ஓடாதிருக்க, அதற்கான பாதையிலேயே பவனிவரத்தான் இந்த சரக்கு. ஆன்மீகம்ப் புத்தகங்களும் அது மாதிரி தான். மனம் என்னும் தேர் தறிகெட்டு ஓடாமலிருக்க ஒரு மாதிரியன் ஒரு கண்ட்ரோல் மெகானிஸம்.

\\கடவுள் நம்பிக்கை அவசியமா ???\\
That depends on the individual. For a person who has realised that the God resides within the body and who believes in himself and does good deeds without any expectation, he doesn't have to believe in God, as He Himself is God. Again for normal people, who require motivation and to keep thinking of right things, faith in God is a must as that will atleast give him a positive notion that there is somebody to take care of himself. I haven't seen God but I have realised him in so many instances.

\\ஆன்மீகத்தின் ஆயுள் ????\\
Again you don't seem to know what aanmeekam is. Get your basics straightened out. There is no beginning neither there is an end. It is a continuous process.

Visu, there are a lot of books that preach good things. Books that were written to disbelieve God were born out of hate, because God didn't heed to those guys' prayers and expectations.

Vijay said...

It is not such a bad idea to have an alternative thought. But coming to a conclusion without knowing what the REAL TRUTH is really silly. Sorry for being very critical. I am critical to the best of my friends :)

jeevakaniamudhu said...

Religion is not born out of fear of death. It is a quest result of many souls who wanted to reach beyond this mundane life.For a BLISS that is everlasting and eternal. similarly what VIJAY a blogger commented " books that were written to disbelieve GOD were born out of hate because God didn't heed to those guy's prayers and expectations." Atheism is not born of frustration of dejected souls. It is only the result of scientific approach to theism.ATHEISTS are PANTHEISTS. THEISTS are SELF HUNTERS struggling to realize the ULTIMATE.

Related Posts with Thumbnails