Pages

Monday, December 21, 2009

தற்கால அடிமைகள் -3

உலகமயமாக்க பட்ட ஒரு பொருளாதார நாட்டில் அதன் அரசு, தனது நாட்டில் இருக்கும் NATIVE BRANDS என்று சொல்ல படும் சொந்த நாட்டின் தயாரிப்புகளை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் வெளிநாட்டு BRAND களுடன் அவை போட்டி போட முடியாது, அந்த அளவுக்கு அவர்களிடம் காசும் இருக்காது.

ஆனால் இந்தியாவில் பார்த்தால் பெரிய கம்பெனிகளுக்கு தான் அரசு சலுகை அதிகம் தருகிறது. அத்தனை வைத்து அவர்கள் மேலும் மேலும் காசு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு உழைக்கும் மக்கள் இந்தியர்கள் தானே ??? என்று யாராச்சு கேட்டால் அவர்களுக்கு நான் தரும் ஒரே பதில் வெளிநாட்டு கம்பெனிகளில் உழைக்கும் இந்திய மக்களின் குடுமி அவர்கள் கையில்.

உதாரணம் -: இந்தியாவில் இருக்கும் அணைத்து பெரும் கம்பெனிகளில் உழைக்கும் மக்களும் தொழிற்சங்கம் அமைத்து கொள்ள உரிமை உண்டு. சமீபத்தில் ஓர் கார் கம்பெனி தனது கம்பெனில உழைக்கும் தொலளிகளை சங்கம் அமைக்க விடவில்லை. நிறைய தொழிலாளிகள் அத்தனை ஆதரித்த பொழுதிலும். மாநில அரசும் தனது கையை கட்டி கொண்டது. இதே போல் ஒரு நிலைமை எதாவது இந்திய கம்பெனிகளில் நடந்து இருந்தால் அரசு இதே நிலைப்பாடு உடன் இருந்திற்க்குமா????


BRAND என்றால் என்ன ???

நான் பெரிய பெரிய புத்தகங்களை படித்ததில் இருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால்...... BRANDING என்பது அடையாள படுத்துவது. BRANDING க்கு ஓர் கம்பெனில எப்பொழுது முக்கியத்துவம் தர படுகிறது ??

சின்ன உதாரணம் :- நாராயண மூர்த்தி இன்போசிஸ்யை ஆரமித்த சமயத்தில் எல்லோரும் அதை நாராயண மூர்த்தி கம்பெனியாக தான் பார்த்து இருப்பாங்க. அதே கம்பெனி தனது வியாபார எல்லைகளை விரிவு படுத்திய சமயத்தில் எல்லோரும் அதை இன்போசிஸ்யாக தான் பார்த்தாங்க, நாராயண மூர்த்தி அவர்கள் அந்த கம்பெனியின் ஒரு அங்கமாக மாறி போயிருந்தார்.


ஆதி காலத்தில் மனிதன் நாடோடியாக மாறின சமயத்தில் அவன் புது புது விஷயங்களை பார்க்க ஆரமித்தான். அவை அனைத்தும் அவன் புரிந்து கொள்ளவும், ஞாபகத்தில் வைத்து கொள்ளவும் அதற்க்கு எல்லாம் பெயர் வைக்க துடங்கினான். அது படி படியாக வளர்த்து ....... இது தான் BRANDING பிறந்த கதை. ஆமாம் நமது பெயர்கள் எல்லாம் ஓர் வகையில் ஓர் BRAND தான். ஏனென்றால் அவை நம்மை அடையாள படுத்துவதால்.


ஏன் மக்கள் BRAND யை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ????

ஏனென்றால் பெரிய பெரிய கம்பெனிகள் DEMAND CREATE பண்ணும் பொழுது அவர்களின் BRAND யை வைத்தே பண்ணுகிறார்கள்.

நீங்களே யோசித்து பாருங்கள்..... ஒரு PEPSI குடிக்க வேண்டும் என்று தான் போவிர்கள். குளிர் பானம் குடிக்க வேண்டும் என்று யாரும் போவது இல்லைஇன்றைய காலத்தில் குளிர் பானம் என்றாலே பெப்சி அல்லது கோக் என்று ஆகி விட்டது. மாப்பிளை விநாயகர் (இருக்கிறதா ??) யாருக்கும் ஞாபகம் வருவதில்லை. அவர்களுக்கு கோக் அளவுக்கு விளம்பரம் செய்ய வசதி இல்லை. பெரிய கம்பெனிகளே ஓர் விளம்பரத்துக்கான SLOT யோட விலையை ஏற்றி, சிறு உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்ய முடியாத அளவுக்கு ஒரு நிலையை உருவாக்கி விடுகிறார்கள். அரசு ஊடகத்திலும் இதே நிலைமை தான். .

தொடரும்

6 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

பிராண்ட் பத்தி அ'நாவில் இருந்து ஆரம்பிக்கிறீங்க போல!

அப்புறம் ஏன் மறுபடி அ'நாவுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொட்டுச் சொல்கிறீர்கள் என்று தான் புரியவில்லை!

முதல் மூன்று பத்திகளுமே வெவ்வேறு விஷயங்கள்! முதலில் போட்டி, இரண்டாவது யார் கையில் அதிகாரம் அல்லது ஆதிக்கம் என்பது, மூன்றாவது, உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசுவது! இங்கே உரிமைகளைப் பேசும் பொது, கடமைகளும் சேர்ந்தே வருகின்றன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பேசினால், அது வெறும் சோஷலிசமாக உடோபியன் கனவாக மட்டுமே நின்று பொய் விடும்.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்படும், அடிப்படைக் கேள்விக்குத் தொடர்பில்லாத விஷயங்களை வைத்து பிராண்ட் என்றால் என்ன என்று ஆரம்பிக்கிறீர்கள் இல்லையா?

பிராண்ட் என்பது தனித்துக் காட்ட உதவும் அடையாளம் என்பது உண்மை தான்! அது மட்டுமே ஒரு பிராண்ட் ஆகிவிடாது.

" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."

பிராண்ட் என்றால் என்னவென்று இப்படித் தன்னுடைய கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!

இந்த விஷயத்தை மிக சமீபத்தில் தான் என்னுடைய பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தேன்! வலைப் பதிவுகள், பதிவர்களுக்குமே இப்படி இந்த brand concept ஐ வைத்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்று கற்பனையை சிறகடித்துப் பறக்க விட்ட பதிவு இங்கே

http://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_16.html

டம்பி மேவீ said...

@ கிருஷ்ணா மூர்த்தி :

சார் எப்புடி இருக்கீங்க ??? சுகமா ???

நான் BRAND யை பற்றி எப்புடி புரிந்து வைத்து இருக்கிறேன் என்பதை தான் சொல்லி இருக்கேன். மேலும் நான் அதிகம் படித்தவன் இல்லை. உங்களை மாதிரியான ஆட்களில் பதிவு படித்தே பயன் பெற்று இருக்கிறேன்.


" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another"

expectations, memories & relationship etc etc..... altogether only help the consumer to identify the product whh will fulfill his needs...
so the main matter is tht brand is basicially used and created for ideny. purposes...

பிறகு நான் இங்கு வணிகவியல் வகுப்பு எடுக்க வில்லை....

மக்களை பற்றியே எழுத போகிறேன் .... அதனால் சோஷலிசம் இருக்கும்

டம்பி மேவீ said...

"அப்புறம் ஏன் மறுபடி அ'நாவுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொட்டுச் சொல்கிறீர்கள் என்று தான் புரியவில்லை!"


thala.... naan rombave tube light. konjam appadi ippudi thaan irukkum... adjust pannikonga

டம்பி மேவீ said...

link kku nantri

Karthik said...

:))

ஸ்ரீ said...

//பிறகு நான் இங்கு வணிகவியல் வகுப்பு எடுக்க வில்லை....

மக்களை பற்றியே எழுத போகிறேன் .... அதனால் சோஷலிசம் இருக்கும்//
//naan rombave tube light. konjam appadi ippudi thaan irukkum... adjust pannikonga//

ரைட்டு விடுங்க.தெளிவாப் புரிஞ்சு போச்சு.

Related Posts with Thumbnails