Pages

Thursday, December 24, 2009

மேவி .....ஐ லவ் யூ - 3

ஆபீஸ் பிளாக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக்கும் இடையே இடது பக்கமாய் திரும்பினால் கொஞ்சம் தூரத்தில் லேடீஸ் டாய்லேட் இருக்கிறது. பாஸ்கட் பால் கோர்ட்ல இருந்து அதன் முகப்பை பார்க்க முடியும். பயற்சியில் சேர்ந்த நாள் முதல் எனக்கும் அப்பாஸுக்கும் அதனுள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் இருந்தோம்.

இருந்தாலும் பயம் தடை சொன்னது.

அதற்கு நன்கு ஆலோசித்த பிறகு .....முகுர்த்தம் குறித்தோம்.

வியாழன் மாலை.

முகர்த்த நேரம் கடந்தும் எண்ணம் நிறைவேறவில்லை. ஐந்து மணி, வழக்கமாய் இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. இப்பொழுதும் கூட்டமில்லை தான் அங்கங்கே ஓன்று, இரண்டு பேர் இருந்தார்கள்.

நாங்கள் இருவரும் மெல்ல மெல்ல இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தோம். யாரவது வருவது போல் தென்பட்டால், அந்த பக்கம் இருக்கும் கம்ப்யூட்டர் பிளாக்கு போவது போல் பவனை காட்டினோம். இன்னும் ஐந்து ஜன்னல்கள் தான் இருந்தது கடக்க.

ஓன்று ....

இரண்டு ....

மூன்று ......

எனக்கு அப்பொழுது ஓர் சந்தேகம் வந்தது.

"டேய் ...இதை இன்னிக்கே பார்தகனுமா ??"

"பேசமா வா ....."

அப்பாஸ் ரொம்ப டென்ஷனாக இருந்தேன், ஏதோ மணமேடையை நோக்கி போகும் மணமகன் போல். கக்குசுல அப்படி என்ன இருக்கு ..... திருச்சில நடக்கும் கண்காட்சிக்கு கூட நான் இப்படி போனது இல்லை. சற்று மெதுவாக தான் போனோம். ஓர் பெண் அந்த வழியாக வரவும் எங்களின் நடை உரைநடையானது. என் பார்வை அவள் மார்ப்பின் மேல் போனது.

ஆதாமுக்கு ஏவாள் ஒரு பெண் என்ற நினைவு வரவே இல்லை. அவனிடத்தில் இருந்த உறுப்பு அவளுக்கு இல்லாதது, ஆதாம் ஓர் பொருட்டாக கருதவில்லை. ஆனால் ஏவாள் வயதிற்கு வந்த பின் அவளின் உடலில் நடந்த பருவ மாற்றங்களால், வளர்ந்த மார்ப்பங்கள் அவனை ஏன்னோ செய்தது. அதை வரை இல்லாத ஓன்று, அது ஏன்ன என்ற கேள்விகளால் குழம்பிய நாளில் இருந்து ஆண்களுக்கு பெண் என்பவள் அதிசயங்களின் , ரகசியங்களின் இருப்பிடமாக தான் இருக்கிறாள். அதற்கு நான் மட்டுமென்ன விதிவிலக்க ???

அப்படி ஆராய்ந்து கொண்டு இருக்கும் போது யாரோ எங்களை நோக்கி சத்தம் போடுவது போல் ஆழ்கிணற்றின் உவமைகள் போல என் காதுகளில் கேட்டது. திரும்பி பார்த்தேன். அவள் முகம். அவளின் முகம் தாங்கிய அவளது உடல்.

குளிர் காற்று வீசியது. ஜன்னல் பக்கம் நின்ற என்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தேன். காற்றில் வேகமாய் அவளின் முக பிம்பத்தை கண்களில் ஏந்தி...... பறவை போல் பறந்து...மேடு பள்ளங்களை கடந்து கொண்டு இருக்கும் போது......

"டேய் ....என்னடா ஆச்சு ...வந்ததில இருந்து அப்படியே இருக்க ..."

மேகங்களிடையே பறந்து கொண்டு இருக்கும் நேரத்தில், என்னை தவிர என் வேகத்தில் யார் பறப்பது என்று அறியும் நோக்கத்தில் .......

நினைவு திரும்பி வந்து பார்த்த பொழுது விடுதியில் இருந்தேன். அப்பாஸ் ஏதோ ஓர் காரணத்துக்காக என்னை கையை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தான்.

"யார அவ ?"

"யாரு ....."

இந்த நேரத்தில் படித்து கொண்டு இருந்த ராஜேஷ் திரும்பி பார்த்தான்.


ராஜேஷ்.

நான் எப்படி இந்த கல்லூரிக்குள் தள்ளப்பட்டேன்னோ அதே மாதிரி அப்பாசும். ஊடக துறை சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற அவனது ஆசையும் நிராசையானது.



எங்களுக்கு வகுப்புகளில் நடத்தபட்ட பாடங்கள் ஏதும் புரியவில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. ரச சாதத்திற்கு தேங்காய் சட்னி எவ்வளவு பொருத்தமாய் இருக்குமோ அந்த அளவுக்கு நாங்கள் பொருந்தி போய் இருந்தோம். ராஜேஷ் கிளாஸ்ல எங்கள் இருவரிடையே அமர்பவன். அப்பாவி அதனால் எங்களுக்கு அவன் மேல் பிரியம். படிப்பாளி. வகுப்புகளில் தரும் assignment களை முடிக்க அவனுடைய தேவை எங்களுக்குள் இருந்தது. அதனால் அவனை எங்களோடு வைத்து இருந்தோம்.



"அவ நம்ம கிளாஸ் தான்டா...." என்றான் அப்பாஸ்.

காதலின் புனிதம் நிர்வாணத்தில் ஆரமிக்கிறது என்று படித்துள்ளேன். அதனால் தான் அவள் மேல் எனக்கு காதல் வந்ததோ ....... அவளுக்குள் என் மேல் காதல் வர அவளும் என்னை அதே நிலையில் பார்க்க வேண்டுமா ??? என்கிற மாதிரி எல்லாம் கொக்கு மக்காக யோசிக்க ஆரமித்தேன் அவளை வகுப்பகளில் கவனிக்க ஆரமித்த பிறகு, தூக்கம் கூட வருவதில்லை.



பிறகு வந்த நாட்களில் அவள் மேல் ஒரு பிரேமை கலந்த ஆளுமை வந்தது. வசந்தக்காலத்தில் பூக்கும் மலர்களை போல வகுப்பறையில் என்னுள் சந்தோஷங்கள் பூத்து கொண்டே இருந்தது அவளை பார்க்கும் நேரங்களில் எல்லாம். ரோமியோ ஜூலியட்யாய், அம்பிகாபதி அமராவதியாய் கற்பனைகளில் நான். ஸ்கூல்ல அவள் வேற குரூப், நான் வேற குரூப் அதனால் போதிய அறிமுகமில்லை எனக்கு காதலை வளர்க்க.......


தொடரும் ......

8 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

//கொஞ்சம் தூரத்தில் லேடீஸ் டாய்லேட் இருக்கிறது. பாஸ்கட் பால் கோர்ட்ல இருந்து அதன் முகப்பை பார்க்க முடியும். பயற்சியில் சேர்ந்த நாள் முதல் எனக்கும் அப்பாஸுக்கும் அதனுள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் இருந்தோம்.//

என்ன ஒரு லட்சியம்? இதுக்கே உங்கள எல்லாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆண்களுக்கு பெண் என்பவள் அதிசயங்களின் , ரகசியங்கள் இருப்பிடமாக தான் இருக்கிறாள். அதற்கு நான் மட்டுமென்ன விதிவிலக்க ???//

ச்சே ச்சே ச்சே.. என்ன ஒரு தத்துவம்.. நீ கலக்கு ராசா..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரைட்டு...

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜன்னல் பக்கம் நின்ற என்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தேன். காற்றில் வேகமாய் அவளின் முக பிம்பத்தை கண்களில் ஏந்தி...... பறவை போல் பறந்து...மேடு பள்ளங்களை கடந்து கொண்டு இருக்கும் போது......//

நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா. இதுக்குப் பேருதான் பின் நவீனத்துவமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//தொடரும் ......//

சுத்தம்..

மேவி... said...

@ கார்த்திகை பாண்டியன் :

"என்ன ஒரு லட்சியம்? இதுக்கே உங்கள எல்லாம்.."

வரலாறு முக்கியம் அமைச்சரே ......

"ச்சே ச்சே ச்சே.. என்ன ஒரு தத்துவம்.. நீ கலக்கு ராசா.."

சாரிங்க எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லைங்க ....ஹி ஹி ஹி ஹி ஆமா நீங்க எதை சொன்னிங்க


"நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா. இதுக்குப் பேருதான் பின் நவீனத்துவமா?"

ஒரு

மாடே

பின் பக்கம்

சாணி போடுகிறதே

ஆச்சிரிய குறி .....

(இது தான் எனக்கு தெரிந்த பின் நவீனம் ...."

"//தொடரும் ......//

சுத்தம்.."

ஆமாங்க ...இது ஓர் தூய்மையான காதல் கதை தானுங்க ....... சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டது .....(எங்களுக்கு கிளைகள் வேறு எங்கும் இல்லை )

மேவி... said...

@ ஸ்ரீ : பஸ் கிளம்பிருச்சு .........

Related Posts with Thumbnails