Pages

Wednesday, December 30, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர் பேட்டி அல்ல

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூறமுடியுமா?அப்படி ஒன்றும் பெரியதாக இல்லை. ஏற்கனவே எனக்கு மறதி அதிகம்...... இதில் மனசில் வாடகை தராமல் தங்கிய புத்தகங்கள் எதுவும் இல்லை. அதற்குன்னு புத்தகங்கள் படிப்பதை குறைத்து இல்லை. அது பட்டு போயிட்டே இருக்கும். சில நேரங்களில் படித்தே புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படித்த அனுபவம் எல்லாம் இருக்கு.

என்னை சோறு தண்ணி இல்லாமல் வெறி பிடிச்ச மாதிரி படிக்க வைத்த ஒரு புத்தகம்
உண்டென்றால் அது பொன்னியின் செல்வன் தான். ஓர் வாரத்துக்குள் படித்து முடித்தேன். அதே மாதிரி படிக்க முடியாமல் தவித்த ஒரு நாவல் உண்டென்றால் "வீர பாண்டியனின் மனைவி ".......அப்பரும் அமெரிக்க நாட்டில் நடந்த அடிமை வார்தகதை பற்றிய ஓர் புத்தகம்......பிறகு ஓர் ஆய்வு கட்டுரை உலக நகரங்களின் வளர்ச்சியை பற்றியது. இப்போதைக்கு இவ்வளவு தான் நியாபகம் வந்துச்சு.2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

திட்டம் போட்டு செய்யும் வழக்கம் என்னிடம் என்றுமே இருந்தது இல்லை. திட்டம் போட வேண்டுமென்றால் நல்ல ஞாபக சக்தி வேண்டும், அது தான் நம்ம கிட்ட இல்லையே. நண்பர்களின் பரிந்துரையின் பெயரில் தான் அதிகமாக புத்தகங்களை வாங்குவேன். இல்லாட்டி புரட்டி பார்த்து ...பிடித்து இருந்தால் வாங்குவேன்.


3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா சாரை ரொம்பவும் பிடிக்கும். அவரை நான் பார்த்தது இல்லை.

மற்றபடி தமிழில் நான் விரும்பிய சில எழுத்தாளர்களை பார்த்து பேசி இருக்கிறேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என்றால் சார்லஸ் டிக்கன்ஸ் தான். ஸ்கூல்ல இவரது கதைகள் தான் பாடமாக வரும். SO சிறுவயது முதலே என்னை மிகவும் கவர்ந்தவர் அவர் தான்.4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கல்லூரி நாட்களில் என்னிடம் அதிகமாக காசு இருக்காது. இருக்கும் கொஞ்சம் காசில் எதாவது புத்தகம் வங்கி படிப்பேன்.

மறக்க முடியாத அனுபவம் என்றால் .......... கல்லூரி சேர்ந்த புதுசுல CLASS கட் அடித்து விட்டு பயத்தோடு கல்லூரி நூலகத்தில் படித்த மேலாண்மை புத்தகங்கள் தான்.டிஸ்கி : நேற்று ஆதி அவர்களின் பதிவை படித்த பின் எனக்கும் அந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசை வந்தது...அதனால் தான்

8 comments:

கார்க்கி said...

கட் அடிச்சிட்டு லைப்ரரியா? இனிமேல உனக்கு எனக்கு எந்த ஒட்டும் உறவும் கிடையாது சொல்லிபுட்டேன்

டம்பி மேவீ said...

@ karki : first sem la romba strict yaga irunthuchu college.... piragu enge povathu entru theriyala...athan lib. kku ponen....

and also college first three months kku thaan lib pakkam ponen. piragu ponathe illai

வால்பையன் said...

//கல்லூரி சேர்ந்த புதுசுல CLASS கட் அடித்து விட்டு பயத்தோடு கல்லூரி நூலகத்தில் படித்த மேலாண்மை புத்தகங்கள் தான்.//

இத நாங்க நம்பனுமாக்கும்!

சங்கர் said...

//அதே மாதிரி படிக்க முடியாமல் தவித்த ஒரு நாவல் உண்டென்றால் "வீர பாண்டியனின் மனைவி "....//

நான் கூட வந்தியதேவன பேரைப் பாத்து நம்பி, 'நந்திபுரத்து நாயகி'ன்னு ஒண்ணு படிக்க ஆரம்பிச்சேன், முடியல

ஸ்ரீ said...

இது நல்லாருக்கே.நம்மள நாமே பேட்டி எடுக்கறது.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//மறக்க முடியாத அனுபவம் என்றால் .......... கல்லூரி சேர்ந்த புதுசுல CLASS கட் அடித்து விட்டு பயத்தோடு கல்லூரி நூலகத்தில் படித்த மேலாண்மை புத்தகங்கள் தான்.//

You too?????????

டம்பி மேவீ said...

@ sri : amanga

@ karisal : ya ya ya

கார்த்திகைப் பாண்டியன் said...

இதுக்குப் பேர்தான் நமக்கு நாமே திட்டமா? ஒரு இடுகை எழுத எவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கு.. அவ்வ்வ்வ்..

Related Posts with Thumbnails