Pages

Thursday, January 7, 2010

திருச்சிக்கு போக போறேன்

திருச்சி, என்னை பொறுத்த வரைக்கும் சொர்க்கம். அதில் எனக்கு மற்று கருது ஒன்றுமில்லை.வழக்கமாய் நான் திருச்சிக்கு போவது என்றால் டிக்கெட்யை முன் பதிவு எல்லாம் செய்ய மாட்டேன். எப்பொழுதெல்லாம் சந்தோஷம் மனதிற்கு தேவை படுகிறதோ அப்பொழுதெல்லாம் திருச்சிக்கு கிளம்பி விடுவேன். தாம்பரத்தில் இருந்து தான் துடங்கும் எனது பயணம்.

இன்றும் அப்படி தான் தாம்பரத்தில் நின்று கொண்டிருந்தேன். காலை நேரம்.

சென்னை நோக்கி செல்லும் நகர பேருந்துகளில் அமர்ந்து இருப்பவர்களை கண்டாலே ஏதோ விஜய், அஜித் படங்களுக்கு போகிறவர்கள் போல் பார்க்கவே பாவமாய் இருந்தது.

அதே போல் கோவை, மதுரை போன்ற ஊர்களின் போருந்துகளை பார்க்கும் போது ஏதோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்தது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டேன்.


இன்று காலை, இந்த வழக்கமான காரியங்களை சரிவர செய்த பிறகு திருச்சி பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஏறி அமர்ந்த பின் எனக்கு தெரிந்த முகங்கள் எதாவது தென்படுகிறதா என்று நோட்டம் விட்டேன்.

இவர் கேகே நகராக இருப்பாரோ....

அந்த பக்கம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர் காட்டூர் வாசியாக இருப்பாரோ .......

பின் இருக்கையில் சீட்யை அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு இருப்பவர் ராம்ஜி நகராக இருப்பாரோ ...... அப்படி இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அப்பாஸ் சொல்லிருக்கான். ஏரியா அப்படி.

கருமண்டபம் ஏரியா ஆளுங்க யாராச்சு இருந்தால் காந்திகண்ணன் அண்ணாவை பற்றி கேட்க வேண்டும்..... இப்படி பல எண்ண அலைகள்.


கொஞ்ச நேரத்துக்கு முன்பு நகர விதியில் நரக வேதனையுடன் தனியாய் உணர்ந்தவன் இப்பொழுது திருச்சி பஸில் அமர்ந்த உடன் ஏதோ உறவுகள் மத்தியில் இருப்பது போல்........ திருச்சி ......மனசெல்லாம் மகிழ்ச்சி.

இந்த உணர்வுகளை உணர்ந்த படியே ஜன்னல் வழியே பார்த்தேன்.

திருச்சி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்த நேரத்தில்....இயற்க்கை கூட ஏதோ ஒரு விழாவுக்கு தயாராகி கொண்டு இருந்தது. காற்றில் கூட குளுமை அதிகரித்து கொண்டு இருந்தது. அப்படியே தூங்கி போனேன்.


விழுப்புரம், சற்று விழிப்பு வந்தது. தேவை இல்லை என்று கண்களை முடி கொண்டேன்.


"யாரப்பா பால்பண்ணை கேட்டது .......?"

குரல் கேட்டு விழிப்பு வந்தது. வேகமாய்
இறங்கினேன்.

இறங்கிய பின் பஸ் என்னை கடந்து சென்றது. அது வெளியேற்றிய புகையினால் இருமினேன் கூடவே கொஞ்சம் கோவமும் வந்தது.

21 comments:

கோணங்கி said...

பஸ்ல நானும் போன மாதிரி இருக்குது

வாழ்த்துக்கள்

ஜெட்லி said...

//எப்பொழுதெல்லாம் சந்தோஷம் மனதிற்கு தேவை படுகிறதோ அப்பொழுதெல்லாம் திருச்சிக்கு கிளம்பி விடுவேன். //


???உங்க சொந்த ஊரா??

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு.

வால்பையன் said...

//சீட்யை அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு இருப்பவர் ராம்ஜி நகராக இருப்பாரோ ...... அப்படி இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அப்பாஸ் சொல்லிருக்கான். ஏரியா அப்படி.//

எனக்கு மட்டும் தனியா அந்த ரகசியத்தை சொல்லிருங்க ப்ளீஸ், இல்லைனா தலை வெடிச்சிரும்!

வால்பையன் said...

//திருச்சி ......மனசெல்லாம் மகிழ்ச்சி.//

கவித கவித!

(அது ”தா” இல்ல)

வால்பையன் said...

//"யாரப்பா பால்பண்ணை கேட்டது .......?"//

பஸ்சுல பால்பண்னையிலங்கூட விக்கிறாங்களா!?
எனக்கு ரெண்டு வாங்கி கொடுங்களேன்!

வால்பையன் said...

//இரும்பினேன்//

நீங்க இரும்பு மனிதரா!?

அது இருமினேன்!

சங்கர் said...

//"யாரப்பா பால்பண்ணை கேட்டது .......?"//

மாதவரம் பால் பண்ணையா?

ஹேமா said...

மேவீ...தம்பி...பயணமா.
அம்மா சமையலா !

ஆண்டவா ஒல்லி உடம்பில கொஞ்சம் சதை கொடு !

இரும்பினேன் இல்லப்பா இருமினேன்.

நட்புடன் ஜமால் said...

பி.நவீ கட்டுரையா (ஏதோ நம்மால முடிந்தது)

பேச்சு வழக்கில் சொல்லியிருப்பது நல்லாயிருக்கு

நானும் பிரயாணித்தது போலவே உணர்ந்தேன்

pukalini said...

உறவுகள் மத்தியில் இருப்பது போல்.,,,,,,,,,,,,

தாரணி பிரியா said...

//அதே போல் கோவை, மதுரை போன்ற ஊர்களின் போருந்துகளை பார்க்கும் போது ஏதோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்தது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டேன். //

இனிமேல நோ கமெண்ட்ஸ் :)

Srinivas said...

Attakaasam:)

Trichy kku Thirushti Patra pogudhu...

Trichy : Sorga Boomi:)

MAHA said...

//அதே போல் கோவை, மதுரை போன்ற ஊர்களின் போருந்துகளை பார்க்கும் போது ஏதோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்தது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டேன். //

இனிமேல நோ கமெண்ட்ஸ் :)

repeattttttttttttttttttt...........................................

ஜீவன்பென்னி said...

"அந்த பக்கம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர் காட்டூர் வாசியாக இருப்பாரோ ......."

எங்க ஏரியா உள்ள வராத.

அப்புறம் ஒரு சின்ன டவுட்டு பால்பண்ணை மேம்பாலத்த கட்டிமுடிச்சுட்டாங்களா.

ஜீவன்பென்னி said...

"அந்த பக்கம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர் காட்டூர் வாசியாக இருப்பாரோ ......."

எங்க ஏரியா உள்ள வராத.

அப்புறம் ஒரு சின்ன டவுட்டு பால்பண்ணை மேம்பாலத்த கட்டிமுடிச்சுட்டாங்களா.

Karthik said...

தாரணி பிரியா said...

இனிமேல நோ கமெண்ட்ஸ் :)//

ரிப்பீட்டேய்ய்.. நானும் நோ கமெண்ட்ஸ். :)

-- mt -- said...

I am not sure when I am going to be back to experience all these...

எம்.எம்.அப்துல்லா said...

trichy is my 2nd home town.

:)

டம்பி மேவீ said...

@ கோணங்கி : அப்படியா ரொம்ப நன்றிங்க

@ ஜெட்லி : ஆமாங்க ...நான் திருச்சிக்காரன்

@ சந்தனமுல்லை : தேங்க்ஸ்

@ வால்ஸ் : அந்த ஏரியா திருடர்களுக்கு பெயர் போனது இந்தியா அளவில்

@ வால்ஸ் : அந்த தா கூட இருந்த நல்ல இருக்குமே

@ வால்ஸ் : கட்டாயம் ...எங்கு வந்து தருவது

@ வால்ஸ் : மாத்தியாச்சு

@ சங்கர் : திருச்சி பால் பண்ணை ...தஞ்சாவூர் ரோடு ல இருக்கு

@ ஹேமா : ஆமா ஆமா

@ ஜமால் : ஏன் இந்த கொலை வெறி

@ புக்லனி : சந்தோசம்

@ தாரணி பிரியா : ஏனுங்க

@ ஸ்ரீநிவாஸ் : உங்க ப்ளாக் பார்த்தேன். நல்ல இருக்கு. நிறைய எழுதுங்க தல

@ மஹா : ஏனுங்க

@ ஜீவன்பென்னி : இன்னும் கட்டி முடிக்கலங்க .....செம டிராபிக் ஜாம்

@ கார்த்திக் : அடாடா

@ mt - hope it will be soon

@ எம். எம். அப்துல்லா : அப்படியா ...எந்த ஏரியா

அ.சலீம் பாஷா said...

திருச்சி ம்ம்... நல்ல ஊருதான். ஏன்னா கூடிய சீகிரம் நானும் அங்கேதான் குடியேற போறேனாக்கும்!

Related Posts with Thumbnails