Pages

Monday, January 25, 2010

கலவை

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ........

வருஷாவருஷம் இதே தான் சொல்லிக்கிட்டு இருக்கோம் ......ஆனால் நாட்டின் வளர்ச்சியின் வேகம் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவுக்கில்லை என்பது தான் நிஜம்.

= = = = = =

எனக்கு தெரிந்து நடிகர் , நடிகைகளின் பேட்டி தான் பொது மக்களால் அதிகம் வாசிக்கப் படுகிறது . ஆதனால் அவர்களை பேட்டி எடுக்கும் நிருபர்கள் அவர்கள் படிக்கும் அல்லது படித்த புத்தகங்களை பற்றிக் கேட்டு, அதைப் பேட்டியில் எழுதினார்கள் என்றால் மக்களிடைய வாசிப்பு பழக்கம் பற்றி கொஞ்சமாவது விழிப்புணர்வு வரும் என்றொரு சின்ன நம்பிக்கை எனக்கு.

= = = = = =
26 Days of Dostoevsky's Life என்றொரு படம். தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை கொண்டு எடுக்கப்பட்டது. இதில் எழுத்தாளராக நடித்த நடிகர்.......நடிக்கவில்லை வாழ்ந்து காட்டிருக்கிறார். மெல்லிய உணர்வுகளை கூட விட்டு வைக்கவில்லை ...... ம்ம்ம்ம்

= = = = = =

The Body Snatcher , 1945 யில் வந்த படம் .....முன் காலத்தில் மருத்துவ ஆராய்ச்சிக்காக நடந்த பிண திருட்டை மையமாக கொண்ட 1831 நடப்பதாய் உள்ள கதை. அவசியம் பார்க்க வேண்டிய படம். கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும்.

= = = = = =

அட நானும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தாச்சு...... பெருசா epic movie , adventure movie என்றெல்லாம் சொல்ல முடியாது. நிறைய குறைகளைச் சொல்லலாம். செல்வ ராகவன், செய்த முயற்சியை நல்ல செய்து இருக்கலாம். அவர் சொல்லிகிற மாதிரி research பண்ணி கதையை தயார் பண்ணின மாதிரி தெரியல. GPS எல்லாம் வந்த பிறகும் அந்த காலத்தைப் போல் நடந்து போய் தேடுவது எல்லாம் ரொம்ப ஓவராக தான் இருக்கு.

பிறகு அந்த சோழ ராஜா ஒரு இடத்தில சுத்த தமிழில் ரொம்பவும் மோசமாக பேசுவர்(லிங்க தரிசனம்) . சுத்த தமிழ் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா ......?????

= = = = = =


நானும் "ராஜீவ் காந்தி கொலை வழக்கு" புத்தகத்தை படிச்சாச்சு. படித்த பிறகு இரண்டு விஷயம் தான் எனக்கு தோனுச்சு......


சிவராசன், தணு, ஹரிபாபு ....இவர்கள் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடித்து இருந்தால் ....யாரும் மாட்டி இருக்க மாட்டாங்க......

எல்லாம் இருக்கட்டும் .....கடைசி வரைக்கும் இவர்களுக்கு உதவி செய்த நளினியை அம்போ ன்னு விட்டுடங்களே...... ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்தவர்கள், நளினியை வெளிய கொண்டு வர எந்த முயற்சி எடுக்காதது ஏன் ....???

உதவி செய்தவர்களை மறப்பதா தமிழர்களின் பண்பாடு ????


இரண்டாவது ......நமது அரசியல் முறை ...சட்டம் ...சொல்வதற்கு ஒன்றுமில்லை ......

நாடு முன்னேற வேண்டுமானால் ........ இந்த BOTTLE NECK களை முதலில் கவனிக்க வேண்டும்.


= = = = = =

9 comments:

♠ ராஜு ♠ said...

\\பிறகு அந்த சோழ ராஜா ஒரு இடத்தில சுத்த தமிழில் ரொம்பவும் மோசமாக பேசுவர்(லிங்க தரிசனம்) . சுத்த தமிழ் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா ......????? \\

அப்படியில்லை மேவி..!
நான் இன்று கெட்ட வார்த்தைகள் என்று நினைக்கும் பல சொற்கள், அப்போது வழக்கமான சொற்களாக இருந்துள்ளன.பொதுவாக லிங்கதரிசனம் என்பதின் அர்த்தம்
ஆடையில்லாத உடல் என நினைக்கிறேன்.நம் மக்கள் அதைத் திரித்து வேறொரு அர்த்தம் புகுத்திவிட்டனர்.சில பல புத்தகங்கள் படிப்பதால் வரும் வினை இது..
:-)

இது தவிர, நிறைய இடங்களில் நேரடியாகவே அது போன்ற வார்த்தைகள் சொல்லப்படும்.அவையும் இப்போது திரிக்கப்படாமலிருப்பதால் நமக்கு அவை கெட்ட வார்த்தையாகத் தோன்றூகிறது. அவ்வளவே.

Sangkavi said...

//எனக்கு தெரிந்து நடிகர் , நடிகைகளின் பேட்டி தான் பொது மக்களால் அதிகம் வாசிக்கப் படுகிறது .//

இது தாங்க நமது நாட்டு நிலமை...

பரிசல்காரன் said...

en blog la poi ethachu comment podunga
பணிவான மிரட்டலுடன் //

போட்டாச்சு விஸ்வா!

கார்க்கி said...

ராஜூ,

சரியா கவனி,. அந்த தமிழ் இலங்கை தமிழை ஒத்திருக்கிறது. கேட்டா புனைவுல அவர் வைப்பதுதான் தமிழ்னு சொல்லுவிங்க..

சங்கர் said...

//அவர்கள் படிக்கும் அல்லது படித்த புத்தகங்களை பற்றிக் கேட்டு, அதைப் பேட்டியில் எழுதினார்கள் என்றால் மக்களிடைய வாசிப்பு பழக்கம் பற்றி கொஞ்சமாவது விழிப்புணர்வு வரும்//

இன்னிக்கு கலவைல, ஜோக்கு கொஞ்சம் அதிகமா இருக்கே :))

நட்புடன் ஜமால் said...

அவங்க எல்லாம் ஆங்கில புத்தமாக சொல்வாங்களே மேவீ ...

Karthik said...

ஹிஹி ஆமாங்க. ஆயிரத்தில் ஒருவனை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்...முடியல!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லதொரு கலவை.. ராஜீவ் புத்தகம் நானும் வாங்கி இருக்கேன்.. படிக்கணும் நண்பா

டம்பி மேவீ said...

@ ராஜூ : உங்களுக்கு கார்க்கி பதில் சொல்லிட்டாரு

@ SANGKAVI : ஆமா

@ பரிசல் : ஏன் இந்த கொலை வெறி

@ கார்க்கி : நன்றி

@ சங்கர் : என்ன கொடுமை சார் இது

@ ஜமால் : நாலு பேருக்கு நல்லதுன்னா ...எதுவுமே தப்பில்லை

@ கார்த்திக் : உண்மையைச் சொன்ன இப்படி தானப்பா

@ கார்த்தி : படிச்சிட்டு ...புத்தக விமர்சனம் எழுதுங்க

Related Posts with Thumbnails