Pages

Friday, February 5, 2010

அசல் - அஜித்

அசல் பட டிக்கெட்டின் விலையை கேட்ட உடனே அப்படியே பம்பி கொண்டு திரும்பி வந்துட்டேன்
அசல் படம் இன்று ரிலீஸ் ஆகபோகுது. கொஞ்சம் சந்தோசம் கொஞ்சம் டென்ஷனாய் இருக்கு. ஏன்ன அஜித், சரண் இரண்டு பேருக்கும் பெரிய தோல்விகளுக்கு பிறகு வருகிற படம். இன்னொரு பயம்(ஆச்சிரியம்) - தல அஜித் இதில கதை, திரைக்கதை இன்னும் பல வேலைகள் செய்து இருக்காரு.

வில்லன் படத்திற்கு பிறகு யூகி சேதுவும் அஜித்தும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க . மற்றப்படி படத்தை பத்தி எனக்கு பெருசா ஒன்னும் தெரியாது. எல்லா பதிவாளர்களை போல் நானும் கேபிள் அண்ணனோட விமர்சனத்தை படிச்சிட்டு தான் பார்க்கனுமா வேண்டாமான்னு முடிவு செய்யணும்.

படத்தில் ஒரு CAPTION போட போடுறாங்க - நல்லதை தியடருக்கு வெளில கொண்டு போங்க, மற்றதை இங்கேயே விட்டுருங்க ....என்னமா யோசிக்கிறாங்க. கட்டாயமான முறையில் இது பதிவாளர்களை குறி வைத்து சொல்லப்பட்டு இருக்க வேண்டும். சோ உஷார் ...

இந்த படத்தில் அஜித் வைத்திற்கும் hair style யை GOTHIC STYLE என்று சொல்வார்கள்.

அஜித்துக்கும் பாவ்னாவிற்க்குமான ON SCREEN IMAGE நல்ல workout ஆகும் என்றே நினைக்கிறேன். சமீரா ரெடியின் ஒரு தெலுகு பட பாட்டை பார்த்ததிலிருந்து காத்து கருப்பு அடிச்ச மாதிரி ஆகிட்டேன்.

வில்லன்களாக சம்பத்(கோவா படத்தில் நன்றாக நடித்து இருப்பதாய் விகடன் ல போட்டு இருக்காங்க, all the best சம்பத்) ...காணாமல் போன சுரேஷ் ......

அதுன்னமோ தெரியல வெளிநாட்டு கதை என்றாலே எல்லோரும் தலைல எச்சி துப்பி வைச்ச மாதிரி கலர் பண்ணிக்கிறாங்க....


என்னை போல் உள்ள அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டமா இல்லை திண்டாட்டமான்னு தெரியல. .....


அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .....

விஜய் ரசிகர்களுக்கு வர போகும் சுறா படத்திற்கு என் வாழ்த்துக்கள் ......(நாங்க எல்லாம் நடுநிலை வியாதிக்காரங்கல )


முக்கிய குறிப்பு - வட்டி கடையில் நகையை வைத்திருப்போர் படம் பார்க்காமல், அசலை மீட்க வேலைக்கு போகுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.



டிஸ்கி - படத்தை பற்றி யூகி சேது .....

What is the one-line story of Aasal?
It is an MGR-meets-Sivaji film, meaning action and sentiments have been woven together. The story is about an international negotiator and middleman, who is betrayed by his kith and kin. How he takes vengeance against those who betrayed him forms the rest of the story.

5 comments:

கார்க்கிபவா said...

அது என்ன உன்னை மாதிரி அஜித் ரசிகர்கள்?

ஓ .. தியேட்டருக்கு போய் தல படம் பார்க்காத ரசிகர்களா? :))

சங்கர் said...

அட்டகாசம் பார்த்துட்டு அஜித் ரசிகராயிட்ட கார்க்கி மாதிரின்னு கூட சொல்லலாம் :))

ARV Loshan said...

நம்பிப் பாருங்க நண்பரே./. அசல் அசத்தல்..

//அட்டகாசம் பார்த்துட்டு அஜித் ரசிகராயிட்ட கார்க்கி மாதிரின்னு கூட சொல்லலாம் :))//
hahahaha

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரைட்டு.

மேவி... said...

@ கார்க்கி : நான்பா எல்லாம் ஸ்பெஷல் சாதா ரசிகர்கள்

@ சங்கர் : ஆமா ஆமா

@ லோஷன் : பார்க்க வேண்டும் சகா ......எவ்வளவோ செய்துட்டோம் இதை செய்ய மாட்டோமா

@ ஸ்ரீ : என்ன இது சின்ன பையன் மாதிரி பின்னோட்டம் ...... இனிமேல் இடது பக்க பின்னோட்டம் வேணும் எனக்கு

Related Posts with Thumbnails