Pages

Saturday, February 13, 2010

கலவை - காதலர் தின ஸ்பெஷல்

முதலில் எல்லோருக்கும் வயிற்று எரிச்சலுடன் காதலர் தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்
= = = = =
நானும் வயசுக்கு வந்த நாளில் இருந்து (அந்த அகோர சம்பவம் எப்ப நடந்துச்சுன்னு கேட்க கூடாது..) பார்க்குறேன் பாரதிராஜா படத்தில வர மாதிரி "மாமா நான் உனக்கு தான்"ன்னு சொல்லிட்டு ஓடி வருகிற மயிலு மாதிரி எந்த பொன்னும் நம்ம லைப் ல இன்னும் கிராஸ் ஆகல. நானா எந்த தேவதையையும் தேடிப் போக மாட்டேன் (போனாலும் ஒன்னும் கிடைக்காது என்பது வேற விஷயம்). ஸ்கூல், காலேஜ் படிக்கிற காலத்தில நமக்கு படிப்பே பெரிய போராட்டமாக இருந்துச்சு. அதனால லவ், சைட்டுக்கு எல்லாம் நேரமே இருந்தது இல்லை.

இன்னொரு விஷயம் நான் போடுற மொக்கைக்கு "C" கிளாஸ் பொண்ணுகளே திரும்பி பார்க்காது. அப்படி இருந்தும் ஒரு "A" கிளாஸ் பொண்ணு என்னை திரும்பி பார்த்துச்சு. பின போகும் போது பெயரை சொல்லி கூப்பிட்ட, திரும்பி பார்த்து தானே அகனும்.

= = = = =

காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது...... பொண்ணு கால கைல விழுந்து அவளை ஐஸ் கிரீம் சாப்பிட கூட்டிட்டு போனேன். பிறகு நான் பேசலாம்ன்னு பார்த்தா...... அவ பேசின பேசின பேசினா .........(ஆனால் என்ன பேசினாள்ன்னு எனக்கு இது வரைக்கும் தெரியாது). பின் சுடு கண்ட பூனையாய் போர் கால தேவைக்கு கூட எந்த பெண்ணையும் ஐஸ் சாப்பிடவோ, ஹோட்டலுக்கோ கூட்டிட்டு போனது இல்லை.

= = = = =

ஆளுக்கு ஆள் ஒரு பொண்ணு கூட சினிமா பார்த்ததையே பெருசா பேசிட்டு இருக்காங்க. நான் பதினோரு பொண்ணுங்க கூட சினிமா பார்த்து இருக்கேன். ஆனா எல்லோரும் நினைக்க கூடிய மாதிரி அது ஒரு சந்தோஷமான அனுபவமாக இல்லை. செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாள், சும்மா தானே இருக்கோம் படத்துக்கு போவோம்ன்னு முடிவு பண்ணி தியேட்டருக்கும் போயாச்சு. அங்க பார்த்தா எங்க UG காலேஜ் பியுட்டி.....(அப்ப நிறைய அவளை பார்த்து ஜொள் விட்டுகிட்டு இருந்தாங்க, சில வாத்தியார்களும் அதில் அடங்கும்). அழகுன்ன அழகு அப்படி ஒரு அழகு. சரி டிக்கெட் எடுத்துட்டு, தனியாக தான் வந்து இருப்பா ன்னு நம்பி அவகிட்ட பேச போனேன்.... அதன் பிறகு ஒரு ஒரு ஆள் வந்து சேர்ந்தாங்க .....அப்பவே உஷார் ஆகிருக்கனும், விதி யாரைவிட்டது. உள்ள போன பிறகு .....சுறாவளி அடிச்சு வெளுத்து வாங்கிருச்சு. போனது சிம்பு படத்திற்கு ......அப்ப என் நிலைமை எப்புடி இருந்திற்கும்ன்னு நினைச்சு பாருங்க.

= = = = =

சின்ன வயசிலிருந்தே சினமாக்களில் ஹீரோ லவ் லெட்டர் கூடுக்கிரத்தை பார்த்து வளர்த்ததினால்...எனக்கும் ஒரு பொண்ணு கிட்ட ( நான் HOMO SEX இல்லைங்க....அதனால் தான் பொண்ணு கிட்ட போனேன். அப்படி இருந்தா எங்க கிளாஸ் ல நல்ல கலரா ஒரு பையன் இருந்தான், அவன் கிட்ட பொய் இருப்பேன்) லவ் லெட்டர் குடுக்கனும்ன்னு ஆசை இருந்துச்சு ஆனா மனசுல தைரியம் இல்லை. அப்படி மனசுல தைரியம் வந்து எழுதலாம்ன்னு நினைச்ச போது....லவ் லெட்டர் எல்லாம் மலை ஏறி போயிருச்சு .....SMS , EMAIL ன்னு தொழில்நுட்பம் வளந்துருச்சு.

= = = = =

5 comments:

Karthik said...

ஒரு கவிதை இல்லையா தல? :)

டம்பி மேவீ said...

@ கார்த்திக் : இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது ????

அத்திரி said...

//நானும் வயசுக்கு வந்த நாளில் இருந்து //

))))))))))))))

டம்பி மேவீ said...

@ அத்திரி : ரைட்டு சகா

வெற்றி said...

//(அந்த அகோர சம்பவம் எப்ப நடந்துச்சுன்னு கேட்க கூடாது..) //

விழுந்து விழுந்து சிரித்தேன் :))

Related Posts with Thumbnails