Pages

Friday, February 5, 2010

தாம்பரம் வித்யா திரையரங்கு - விமர்சனம்

முக்கிய (முக்காத) குறிப்பு - இந்த தியேட்டருக்கு யாரோ சூனியம் வைச்சுட்டாங்க போல் இருக்கு (ஒரு வேளை MR தியேட்டர் காரங்களாய் இருப்பங்களோ) . இங்கே ரிலீஸ் செய்யப்படும் படங்கள் முக்காவாசி மொக்கையா தான் இருக்கு (கால்வாசி என்னவாக இருக்குன்னு கேட்காதிங்க).... அன்று ஏகன் ; இன்று அசலுக்கே ஆபத்து... தல உஷாராக இருக்குங்க அடுத்த படத்திற்கு ...நல்ல வேளை நான் இன்னும் படத்தை பார்க்கல. டிவி ல போட்ட பார்த்துக்கொள்ளலாம்

படமெடுக்கப்பட்டது ரொம்ப நாள் முன்னாடி.இப்ப கால மாற்றத்துக்கு ஏற்றார் போல் தியேட்டரும் கொஞ்சம் மாறி தான் இருக்கு. ஆனால் முகப்பு இப்படியே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு தான் சினிமா விமர்சனத்தையே எழுதிக் கிட்டு இருப்பது. பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் கடமை எனக்கும் இருக்கு என்றே நினைக்கிறேன். உலக சரித்திரத்தில் முதல் முறையாக, முற்றிலும் புதுமையாக சினிமா திரையிட படும் திரையரங்கு பற்றின விமர்சனத்தை நான் எழுதுகிறேன்.

எனக்கும் இந்த திரையரங்குக்கும் பெரிய தொடர்பு, பாந்தம், சொந்தம் என்று ஏதும் இல்லை. இதில் அஜித் நடித்த வரலாறு படத்தை தான் முதல் முறையா பார்த்தேன்(அதனால் தான் இப்படி மொக்கைய இருக்கியா என்று யாரும் கேட்க வேண்டாம் ). பெருங்களத்தூர் க்கு பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அடிக்கடி போக சௌரியமாக இருக்கு.

கிரோம்பேட்டை வெற்றி தியட்டர் போல் இல்லாமல் இங்கே வெளி ஆட்கள் தான் கள்ள டிக்கெட்களை விற்க்கிறார்கள். ஆனால் விலை தான் ஜாஸ்தி. மேலாளர்ன்னு ஒருத்தர் இருக்கிறாரு. கண்ணாடி போட்டு இருப்பாரு, கூட்டம் ஜாஸ்தியாக இருந்தால் வெளியே வந்து சவுண்ட் விடுவாரு. ஆனா யாரும் மதிக்க மாட்டங்க. இவரும் கத்துவதை விட மாட்டாரு.

கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்வாங்க (அது அசுத்தமா இருப்பதால்), அதனால் அதெல்லாம் கொஞ்சம் சுத்தமாக இருக்கும்.
பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்காங்க, அதனால் பெண்கள் தைரியமாக வரலாம். நாற்காலிகள் உட்க்கார சுகமாகவும், வசதியாகவும் இல்லாவிட்டாலும் கூட, தொல்லை தராமல் இருக்கும்.

எல்லா திரையரங்கை போல் இங்கும் சிறப்பல சட்டங்கள் உண்டு.

பால்கனி - இந்த தியேட்டர் ல அவ்வளவு வசதியாக இருக்காது. என்ன ஒரு கொடுமைன்ன காதல் ஜோடிகள் கம்மியாக தான் வருவாங்க. அப்படியே வந்தாலும் ......சீன் எதுவும் பார்க்க முடியாது.

A / C .......எல்லா தியடர்களை போல் தில்லாங்கிடி வேலை தான் செய்வாங்க.

வெளி உணவு பொருட்களுக்கு இங்கே அனுமதி இல்லை ......ஆனால் இங்கு விற்கப் படும் SNACKS அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிறப்பாக இல்லாவிட்டாலும் ஏதோ பெரிய TASTE இருப்பது போல அதிக விலை வைத்து விப்பாங்க......

நைட் ஷோ - இந்த தியட்டரில் கூட்டம் கம்மியாக தான் இருக்கும்..... பஸ்க்களை நம்பி நைட் ஷோவுக்கு இங்கே வராதிங்க ....

இங்கே இருக்கும் GENERATOR அப்பப்ப மக்கர் பண்ணும்.....

MOVIE PROJECTION நன்றாக இருந்தாலும் ..... SCREEN சரி இல்லாததால் ...படம் கொஞ்சம் CLARITY கம்மியாக தான் தெரியும்.

CAR , BIKE பார்க்கிங் க்கு தனியாக இடம் இருக்கு...... ஆனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும்....

ஆகமொத்தம் ...நல்ல படங்களை பார்க்க ஏற்ற இடம் வித்யா தியேட்டர் ...
டிஸ்கி - யாருகாச்சு மலரும் நினைவுகள் இருந்தால் ...பின்னூட்டத்தில் சொல்லவும்

22 comments:

Vels said...

நல்ல முயற்சி. அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிறலாம்.நம்ம தமிழ் படங்கள் மாதிரி, எல்லா ஊர்லயும் தியேட்டர்களும் ஒரே மாதிரிதான் இருக்கு. எங்க ஊர்லயும் இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நிறைய இருக்கு.

சங்கர் said...

நேர்ல வந்து பாக்கிறேன்னு நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி சொல்லியிருந்தேன், அப்பவே பண்ணியிருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோன்றி இருக்காது :)

Cable Sankar said...

நிச்சயம் அடுத்த கட்ட முயற்சி தான். நான் மூன்று வருடஙக்ள் 84-87 அந்த தியேட்டரில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அப்பவே அது மொக்கை தியேட்ட்ர் தான்.

ஜீவன் said...

///பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் கடமை எனக்கும் இருக்கு என்றே நினைக்கிறேன்.///


நல்ல முயற்சி...!;;)))

ஸ்ரீ said...

//பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் கடமை எனக்கும் இருக்கு என்றே நினைக்கிறேன். //

இல்லையா பின்னே?

Karthik said...

அட்டகாசம்.. அதகளம்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு.. ட்விட்டர்ல ஷேர் பண்ணிக்கறேன்..:))

கார்க்கி அடிக்கடி இப்படி ஆச்சர்யப்படுத்துவார்.. நீங்க ஆரம்பிச்சிருக்கீங்க.. வே டு கோ!!

pappu said...

தாம்ப்ரம் வித்யா தியேட்டரா? இவ்வளவு மொக்கயா இருக்கு?

பரிசல்காரன் said...

மேவி..

நெஜமாவே அட்டகாசமான பதிவுங்க. அசத்தீட்டீங்க! சும்மா ஜால்ராக்கு சொல்லல... செம ஐடியா!

மைக் முனுசாமி said...

தியேட்டர் விளம்பரத்துக்கு தியேட்டர்காரங்க கிட்ட எவ்வளவு கமிஷன் வாங்கினீங்க...??

டம்பி மேவீ said...

@ வேல்ஸ் : அப்படியா .....அப்ப நாம் எல்லாம் சரிதா நாயகர்கள்ன்னு சொல்லுங்க

@ சங்கர் : கட்டாயம் ஒரு நாள் சந்திக்கலாம்

@ கேபிள்ஜி : அப்படியா .....அப்ப கிளிஞ்சல்கள் இங்கே தான் பார்த்திங்களா ...அது நீங்க காலேஜ் படித்த டைம் அஹ ??

@ ஜீவன் : ஆமா ஆமா ராசா

@ ஸ்ரீ : அப்ப இது பின் நவீனமா

@ கார்த்திக் : ரொம்ப தேங்க்ஸ் ..அப்ப நான் வளர்கிறேனா

@ பப்பு : எஸ் பாஸ் ...அதே வித்யா தான்

@ பரிசல் : நன்றி ஜி ......

@ மைக் முனுசாமி : அடடா ...இது தெரியாம போயிருச்சே ..... இனிமேல் காசை வசூல் பண்ண முடியுமா பாஸ்

குப்பன்.யாஹூ said...

nice post, sometimes we feel it is better to review about the thetre rather than the cinema.

But to my knowledge already few bloggers have written about thetres, examples: Dubukku about Singai Thaiseenis, ambai abiraami,aadhi thaamira about kadayam aruna, keelappaavoor mani, lakkylook about keelkattalai taanalaksmi, ullagaram (madippakaam) kumaran

ஜெயக்குமார் said...

அண்ணாமலை ரிலீஸன்னிக்கு இங்கதான் பாத்தேன். அட்டகாசமா இருந்தது. சைக்கிள வேற நிறுத்தியிருந்தாங்க.. என்னமோ கோவில் சிலையை கும்பிட்டுப்போற மாதிரி நம்ம மக்கள் அதைப் பாத்துட்டுப் போனாங்க. எனக்குத் தெரிஞ்சு நல்ல தியேட்டர்தான். அது பக்கத்துல ஒரு பார்க் ஒன்னு இருந்துச்சே, இன்னும் இருக்கா?

ஜெயக்குமார் said...

நெசமாவே அடுத்த கட்டத்துக்கு நகத்திடீங்க, ”மொக்கை”ங்கிற தலைப்பில் எழுதப்படும் இலக்கியத்தை...

:-)

டம்பி மேவீ said...

@ குப்பன்.யாஹூ : ஆமாங்க .....அவங்க எல்லாம் அவங்க அனுபவம் இல்லாட்டி நினைவுகளை தான் எழுதி இருப்பாங்க. நான் முதல் முறையாக திரையரங்கை பற்றி விமர்சனம் எழுதிருக்கேன்


@ ஜெயகுமார் : அண்ணே ..இப்ப பார்க் இருக்கிற மாதிரி தெரியல .....புள்ள கட்டடங்கள் தான் நிறைய இருக்கு ....

ரொம்ப நன்றிண்ணே

கார்த்திகைப் பாண்டியன் said...

கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான்ப்பா.. இதுக்கும் தல படம் அந்தரத்துல தொங்குரதுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ? யாரும் சூனியம் வச்சு இருப்பாங்களோ?

R.Gopi said...

நிஜமாவே வித்தியாசமான முயற்சி தான்...

சிவாஜியின் “திரிசூலம்” பட ரிலீஸின் போது, டிக்கெட்டிற்காக, பெரிய அளவில் கலாட்டா நடந்ததாக ஒரு செய்தி உண்டு...

நிறைய ரஜினி படங்கள் நன்றாக ஓடிய ஒரு சில தியேட்டர்களில் தாம்பரம் வித்யா குறிப்பிடத்தக்கது..

அண்ணாமலை ரிலீஸின் போது, மேலே ஒரு சைக்கிளை நிறுத்தி வைத்தது நினைவுக்கு வருகிறது...

நானும் அந்த ஏரியாதான்... ஆனால், தற்போது வேலை வெளிநாட்டில்.. ஸோ, வித்யா தியேட்டர் போய், நிறைய வருடங்களாகிறது...

குறும்ப‌ன் said...

ந‌ல்ல‌ ப‌திவுங்க‌, ப‌டிச்ச‌வுட‌னே சே இந்த‌ மாதிரி ந‌ம‌க்கு தோண‌லையேன்னு நினைச்சேன்

Jawahar said...

எங்க ஊர் தியேட்டர் பற்றி தப்பா எழுதினதுக்கு முதற்கண் என் ஆட்சேபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.(ஆமாங்க, நான் குரோம்பேட்டை லக்ஷ்மிபுரத்திலதான் இருக்கேன்!)

மலரும் நினைவு கேட்டிருந்தீங்க.

எண்பத்தி ரெண்டாம் வருஷம்ன்னு ஞாபகம். முந்தானை முடிச்சு படம் போட்டிருந்தாங்க. கவுண்ட்டர்ல டிக்கெட் குடுத்துகிட்டே இருக்காங்க. உள்ளே போனா உட்கார மட்டுமில்லை, நிக்கக் கூட இடமில்லை. டிக்கெட் வாங்கினவங்க எல்லாம் போய் கவுன்ட்டர்லே கலாட்டா பண்ணப்புரம்தான் டிக்கெட் தர்ரதையே நிறுத்தினாங்க. பாதிப்படம் தரையில உட்கார்ந்தும், மீதியை ஒரு கருணைக் குடும்பத்தோட தயவிலே சீட்ல உக்காந்தும்(குழந்தைகளை மடியிலே எடுத்து வச்சிக்கிட்டு இடம் தந்தாங்க) பார்த்தோம்.

சும்மா சொல்லக் கூடாது. படம் இத்தனை கஷ்டத்துக்கும் ஒர்த்!!

http://kgjawarlal.wordpress.com

ஹேமா said...

ம்ம்ம்...தம்பி,
உருப்படியான பதிவு
உருப்படியான சிந்தனை !

kanagu said...

indha theatre ku naan ponadhe illanga.. aana vetriya vida nalla theatre nu kelvi pattu irukken.... :) :)

கே.ரவிஷங்கர் said...

//யாருகாச்சு மலரும் நினைவுகள் இருந்தால் ...பின்னூட்டத்தில் சொல்லவும்//

ஆகா! என்னுடைய மால்குடி டேஸ்ஸெல்லாம் அங்கதான்.
போட்டோவுல் பார்க்கும்போது தொண்டை அடைக்குது.

கலயாணமாம் கல்யாணம்,
அடிமைப்பெண்,கங்கா,தவப்புதல்வன்,
முகம்மது பின் துக்ளக் பார்த்தேன்.
அப்ப தியேட்டர்லயே தம் அடிப்போம்.

//கிரோம்பேட்டை வெற்றி தியட்டர் போல் இல்லாமல்//
ஆகா இது வாழ்ந்த ஊரு.30 வருஷம்.
ஒரு நாளைக்கு என் பையன “எக்ஸ்கர்ஷன்” கூட்டிட்டுப் போய் விதயா,வெற்றி,எம் ஆர்,ஜனதா,
ஜோதி,மதி,நேஷனல் இதெல்லாம் காட்டனும்.

நன்றி.

டம்பி மேவீ said...

@ கார்த்திகை : ஆமாங்க இருந்தாலும் இருக்கும் ...

@ கோபி : திரிசூலம் படம் தான் அந்த காலத்தில் அந்த தியேட்டரில் அதிகமாக ஒட்டின படம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்

@ குறும்பன் : நன்றி ...எப்புடி

@ ஜவஹர் : அண்ணா ....நான் சொன்னது ரொம்ப நிஜமுங்க

@ ஹேமா : நன்றிங்க

@ kanagu : ஆமாங்க

@ ரவிஷங்கர் : ரைட்டு ....சின்ன வயசுல பெரிய ஆள் போல

Related Posts with Thumbnails