Pages

Friday, April 2, 2010

பையா பட விமர்சனம் : கார்த்திகை பாண்டியன் அடிய டான்ஸ்

back with bang .....

இப்படி தான் சொல்லி ஆரம்பிக்க வேண்டும் இந்த பதிவை, ஏனென்றால் புது வேலையில் நான் கொஞ்சம் பிஸி பள பாத்யாக இருந்து விட்டேன். எல்லோரும் எப்புடி இருக்கீங்க ??? சௌக்கியம் தானே ??? அமெரிக்காவில் இருப்பவர்கள் யாரவது இந்த பதிவை படித்தால், ஒபாமாவை கேட்டதாக சொல்லவும்.


= = = =

முக்கியமாக இந்த பதிவுக்கு ஏற்ற படங்களை கூகுளில் தேட நேரம் இல்லாததால், பதிவில் எந்த படங்களையும் போட முடியவில்லை (இதில் எந்த அரசியலும் இல்லை). அதனால் இதை நீங்கள் ஒரு பின்னாடி அரிப்பு வந்த பின்நவீன பதிவாக பார்த்தாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பதிவை படித்துவிட்டு மேவீக்கு என்ன தண்டனை தரலாம்ன்னு சாரு எழுதினாலும் பிரச்சனை இல்லை (அவரது பதிவுகளை படிப்பதே ஒரு பெரிய தண்டனை தான் என்பது அவருக்கு தெரியவில்லை.) பிறகு சாரு போலாந்து நாட்டின் இலக்கியங்களை மேற்கோள் காட்டினாலும் பிரச்சனை இல்லை, ஏனென்றால் எனக்கு நம்ம நாட்டு இலக்கியங்களை பற்றியே ஒன்றும் தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவர் தனது இடது காதில் போட்டிருக்கும் தோடை வலது காதிற்கு மாற்றினால் தான் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றம் வரும்.

= = = =

நேத்து ரயில் நிலையத்தில் கார்த்திகை பாண்டியனுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது பேச்சு பையா பாடல்களை பற்றி போனது. அப்பொழுது நான் சற்றும் எதிர்பாக்காத கொடுரம் நடந்தது. "என் காதலை சொல்ல நேரமில்லை" பாட்டை பாடியபடி கார்த்திகை பாண்டியன் டான்ஸ் அட ஆரம்பிச்சுட்டார். ஒரு இரண்டு நிமிஷம் அடி இருப்பார். கடைசியில் அவரது இடுப்பை அடியப்படி ஒரு movement தந்தார் பாருங்க, ரஷிய நாட்டு இலக்கியங்களே தோத்து போயிரும். (அந்த movement பார்த்த பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை என்பது வேற விஷயம்.)


அடிய பிறகு இன்னொரு விஷயமும் சொன்னார் : அதாவது எஸ்ராவை பற்றி யாராச்சு தப்பா பேசினால் அவர்கள் இந்த டான்ஸ்யை பார்க்க நேரிடுமாம், அதுவும் தனியாக. அப்படிப்பட்ட டான்ஸ்யை பார்த்த பிறகும் நான் இந்த படத்தை பார்க்க போயிருக்கிறேன் என்றால் எனது தைரியத்தை நீங்கள் பாராட்ட வேண்டும். (அந்த பாட்டில் ஹீரோ கார்த்திகை பாண்டியன் அளவுக்கு அடவில்லை என்பது இன்னொரு விஷயம்). சரி படத்தை பத்தி எனக்கு ஞாபகம் இருக்கிற கொஞ்ச விஷயத்தை இப்ப சொல்லுறேன்.

= = = =

முதலில் TAG LINE யை பார்த்துவிடுவோம்

பையா - டோய்யா (இதற்க்கு என்ன அர்த்தம்ன்னு கேட்காதிங்க )


இது அடிப்படையில் ஒரு road movie . பெரும்பாலும் இயக்குனர்களுக்கு இந்த மாதிரியான கதைகள் கிடைத்தால் அடித்து விளையாடி விடுவார்கள். ஆனால் லிங்குசாமி கோட்டை உடன் முட்டையும் விட்டுட்டார். ஐயோ பாவம் (மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்). பொதுவா road movie படங்களில் பெரியதாக கதை சொல்ல முடியாது, சிறு சிறு குறியீடுகளிலும், காட்சிகளிலும், வசனங்களிலும் தான் டைரக்டர் படத்தை துக்கி நிறுத்த முடியும். வித்த்யசமான கதை தளத்தை யோசித்த டைரக்டர், திரைகதையை பற்றி யோசிக்கவே இல்லை. டொட்டொடய்ங்!!!


ஒரு பயணம், ஒரு காதல், ஒரு பிரிவு, ஒரு சண்டை பிறகு சுபம். இவ்வளவு தாங்க மொத்த கதை (விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையை சொல்ல நான் ஒன்னும் பிரபலமுமில்லை, இலக்கியவாதியும் இல்லை) பிறகு பின்னணி இசை, கேமரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா பற்றியெல்லாம் பேச எனக்கு நேரமும் இல்லை, அதற்க்கு நெட்வொர்க் உதவி புரிவதாய் இல்லை. மேலும் அதை பற்றி எல்லாம் வேறு யாராச்சு எழுதுவாங்க, அங்க போய் படிச்சுகோங்க.


மொத்தத்தில் படம் வித்த்யசமான படம் தான், ஒரு முறை பார்க்கலாம். கொண்டாட படும் அளவுக்கு சிறப்பானதாய் இல்லை. மசாலா பட ரசிகர்களுக்கு பிடிக்காது. படம் கொஞ்சம் நீளம். ரொம்ப போர் அடிக்காது.

வில்லன் மொக்கையாய் இருப்பதால், thrill missing. பொதுவாய் லிங்குசாமி படம் என்றால் இண்டர்வலுக்கு முன் வரும் சண்டை தான் பட்டைய கிளப்பும் , ஆனால் அந்த effect இதில் மிஸ்ஸிங்.

தியேட்டர் நொறுக்ஸ் (உபயம் - ஜெட்டி ,பேண்ட், பனியன், ஷர்ட் போட்ட ஜெட்லி ) -

இதில் என்ன எழுதுவதுன்னு தெரியல. அடுத்த விமர்சனத்திலிருந்து pick up பண்ணி கொள்கிறேன். வேண்டுமானால் ஒரேஒரு விஷயம் சொல்லுகிறேன். என்னோடு சினிமாவுக்கு வந்த புது ஆபீஸ் நண்பர் என்னோட மொக்கை பக்கத்தை பார்த்து....அதிர்ச்சி அடைந்து விட்டார், ஏனென்றால் ஆபீஸ்ல நான் ரொம்ப ஷார்ப்.


படம் பார்த்த பிறகு தாரணி பிரிய அக்காவுக்கு போன் பண்ணி தமன்னாவை காதலிப்பாதாய் சொன்னேன், உடனே அக்கா "அப்ப த்ரிஷாவின் கதி?? "ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லாமல் மேகத்தை பார்த்தப்படி கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.


(சரிங்க கிடைத்த நேரத்தில் இவ்வளவு தான் எழுத முடிந்தது)


டிஸ்கி 1- சுஜாதாவை படித்தவர்கள் கார்த்திகை பாண்டியனுக்கு இடுப்பு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

டிஸ்கி 2 - தமன்னாவின் இடுப்பை close up ல காட்டி இருப்பாங்க, அதில் இருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் இந்த படம் ஒரு இலக்கிய படைப்பு என்று.

13 comments:

ஸ்ரீ said...

//கடைசியில் அவரது இடுப்பை அடியப்படி ஒரு movement தந்தார் பாருங்க,//

நான் எப்பவுமே அதிர்ஷ்டசாலி.

Karthik said...

தாறுமாறு போஸ்ட் தல. சிலர் மொக்கை போடணும்னு கஷ்டப்பட்டு எழுதுவாங்க. படிக்கவே முடியாது. ஆனா உங்களுக்கு அது இயல்பா வருது. செம!

(டேய் நீ என்ன பாராட்டறியா? இல்ல திட்டுறியானு கேக்காதீங்க. :P)

Karthik said...

கார்த்திகை பாண்டியன் அண்ணா சென்னைலயா இருக்காரு?

வானம்பாடிகள் said...

கார்த்திக்கு இடுப்பு இருக்கு. அத ஆட்ட வேற செஞ்சாரு. அத நாங்க நம்பணும். நல்லாருக்கா டாம்பீ:))

நேசமித்ரன் said...

ஆஹா டான்ஸா ?

ரைட்டு கா.பா

தாரணி பிரியா said...

திரிஷா மட்டுமா நமீதா அசின் எல்லாம் என்னாச்சு மேவி :)

தாரணி பிரியா said...

மொக்கை போட்டே பேர் வாங்கும் ராசா நீ வாழ்க உன் குலம் வாழ்க

வால்பையன் said...

//அவர் தனது இடது காதில் போட்டிருக்கும் தோடை வலது காதிற்கு மாற்றினால் தான் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றம் வரும்.//


அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா!?

கார்க்கி said...

//திரைகதையை பற்றி யோசிக்கவே இல்லை. டொட்டொடய்ங்!!//

இதில் எனி உள்குத்து?

// Karthik said...
தாறுமாறு போஸ்ட் தல. சிலர் மொக்கை போடணும்னு கஷ்டப்பட்டு எழுதுவாங்க//

சரி சரி.பேசித் தீர்த்துக்கலாம் கார்த்திக்

முகிலன் said...

//அமெரிக்காவில் இருப்பவர்கள் யாரவது இந்த பதிவை படித்தால், ஒபாமாவை கேட்டதாக சொல்லவும்.
//

கேட்டோம் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

யோவ்.. டான்ஸ் ஆடுனா பார்த்துட்டு ஓடிப் போயிடணும்.. அத விட்டுட்டு எதுக்குய்யா பதிவுல எழுதி மானத்த வாங்குற?

Karthik said...

>சரி சரி.பேசித் தீர்த்துக்கலாம் கார்த்திக்<

:))

நாங்கள்லாம் தீர்த்துட்டுதான் பேசுவோம் கார்க்கி.

இரசிகை said...

:)))

Related Posts with Thumbnails