Pages

Friday, April 23, 2010

சத்திரம் பஸ் ஸ்டாண்ட் - திருச்சி நினைவுகள்


சத்திரம் பஸ் ஸ்டாண்ட்.......... என்னால் மறக்க முடியாத ஓரிடம். என் வாழ்வில் பல இனிமையான பக்கங்களை இங்கு தான் கடந்து வந்திருக்கிறேன். இனிமை என்று ஓன்று இருந்தால் கசப்பு என்று ஓன்று இருக்குமில்லையா ????? அதே போல் என் வாழ்வில் நான் மிகவும் வெறுமையாக உணர்ந்த சமயங்களில் இங்கு தான் சுற்றிருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் ரொம்பவும் அப்பாவியாக இருந்தேன். ஆனால் சென்னை வந்து அந்த அப்பாவி தனத்தையெல்லாம் தொலைத்துவிட்டேன். இப்பவும் அடிக்கடி ஒரு ஆசை வரும்...... இறந்த நாட்களை இறப்பு கணக்கில் சேர்த்துவிட்டு மீண்டும் புதிதாய் அப்பாவியாய் பிறந்து திருச்சியில் வாழ வேண்டும்.

என் வாழ்க்கையில் இந்த இடம் எப்பொழுதும் ஸ்பெஷல் தான். இந்த பதிவு எழுதும் போது கூட நாகநாதர் டி கடையின் மிளகு தூள் தூவிய பஜ்ஜி இன்றும் நினைவில் இனிக்கிறது.

ஒரு தேவதையை பார்த்து, காதல் கொண்டு, பைத்தியாமாகி சுற்றியதும் இங்கு தான். இப்பொழுதும் தில்லை நகர் பஸ் என்றால் என்னிடத்தில் ஸ்பெஷல் தான்.

அதே போல் அரசன் பேக்கரி டி, KRISHNA CORNER பெல் புரி, .......

இந்த படத்தில் இருக்கும் st joseph complex முதல் மாடியில் நின்று கொண்டு இந்திரா காந்தி காலேஜ் பெண்களை சைட் அடிப்போம். SRC மற்றும் HOLLYCROSS காலேஜ் பெண்களை பெரும்பாலும் சைட் அடிக்க மாட்டோம்.......ஏன்னு தெரியாது.

மாரிஸ் தியேடருக்கு இங்கு இருந்தே நடந்து போவோம் (hollycross பஸ் ஸ்டாப் ல இறங்க மாட்டோம்) .......

அதே போல் RAINBOW ஐஸ் கிரீம் கடை.......black forest ஐஸ் கிரீம் தான் சாப்பிடுவேன் எப்பொழுதும் போனாலும்.

ஒவ்வொரு ஏரியா ஸ்டாப்க்கும் போய், அந்த அந்த ஊர் பெண்களை சைட் அடிப்போம். பெரும்பாலும் சமயபுரம் பக்கம் போகும் பெண்களை சைட் அடிக்க மாட்டோம்.

அதே போல் சென்னை சில்க்ஸ் முதல் முறையாக திருச்சியில் திறந்த பொழுது எதிர் ஜூஸ் கடையில் நின்று வாய் பிளந்து பார்த்தும் இருக்கிறேன்.

இன்னும் பல இருக்கிறது, ஆனால் மனசு முழுக்க சந்தோசம் இருப்பதால்.... இன்னொரு சமயம் முடிந்தால் இன்னும் விலாவரியாக எழுதுகிறேன்.

12 comments:

Karthik said...

தல நாம ஒருவாட்டி திருச்சில மீட் பண்ணுவோம். :)

வால்பையன் said...

ஏன்யா உனக்கு வேற போட்டோவே கிடைக்கலையா!, கிழவிபுருஷா!

நளன் | Nalan said...

ஒன்றறை ஆண்டு சோசப் கல்லூரி நினைவுகள் எல்லாம் ஒரு படமா ஓட்டிப்பாத்துக்கிட்டேன் :) பகிர்வுக்கு நன்றி!!

Sangkavi said...

திருச்சிய நல்லா அனுபவிச்சு இருப்பீங்க போல...

ராம்ஜி_யாஹூ said...

திருச்சி சத்த்ரம் பேருந்து நிலையம், தமிழகத்தின் மிக முக்கியமான, சுவாரஸ்யமான பகுதி.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

டம்பி மேவீ said...

@ கார்த்திக் : ரைட்டு பன்னுவோமே

@ வால்பையன் : குமரி கிடைக்கல ...கிழவின்ன ஓகே தான்

@ நளன் : சந்தோஷமா இருக்குங்க

@ சங்கவி : aamanga

ஹேமா said...

மேவீ....எனக்கு இன்னும் இந்தியா தெரியாது.அதனால திருச்சி - சென்னை வித்தியாசம் தெரில.
ஆனாலும் திருச்சில படிக்கிற நேரத்தில ரொம்ப ஜாலியா இருந்திருக்கீங்க.இப்போ வளர்ந்து பொறுப்புள்ள பையானா இருப்பீங்க.
நினைவுகள் மட்டும்தான் இனி எங்களோட இருக்கும்.இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

அது சரி மேவீ...கிழவிபுருஷான்னா ?

-- mt -- said...

apdiye camerava thirupi or malaikotai, illa st.joseph church, paravalla.. idhuvum oru photo dhan..

PPattian : புபட்டியன் said...

ஹோலிகிராஸ் பெண்களை சைட் அடிக்காததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

அப்புறம் இந்த படம் டிசம்பர் / ஜனவரி மாதத்தில் எடுத்தது என்று கண்டு பிடித்து விட்டேன் :)

அஹமது இர்ஷாத் said...

நான் படிச்சது திருச்சியில்தான்.. அருமையான நினைவுகள்... பகிர்வுக்கு நன்றி...

//வால்பையன் said...
ஏன்யா உனக்கு வேற போட்டோவே கிடைக்கலையா!, கிழவிபுருஷா!//

NO COMMENTS.....!

சந்தனமுல்லை said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே நானும் திருச்சில படிச்சிருக்கேண்ணே, எனக்கும் திருச்சின்னா ரொம்பப் பிடிக்கும், உங்க பதிவும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, ஏன்னா திருச்சிலதான் நானும் ஒரு தேவதையப்பாத்து கிறுக்குப் பிடிச்சித் திரிஞ்சேன்!

Related Posts with Thumbnails