Pages

Saturday, May 29, 2010

மணமகள் தேவை - கார்த்திகை பாண்டியனுக்கு

மேல போட்டோல பழம் மாதிரி இருக்காரே அவரு தான் கார்த்திகை பாண்டியன். என்ன தான் பாக்க பழம் மாதிரி இருந்தாலும் அவரு ஒரு பலாபழம். அந்த அளவுக்கு உள்ளுள்ள நிறைய விஷயத்தை வைச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சீன் போடுவாரு. ஒரு டி, இரண்டு பஜ்ஜி வாங்கி தந்த போதும் எங்க வேண்டுமானாலும் நின்னு மத்தவங்க காதுல இருந்து ரத்தம் வருகிற அளவுக்கு இலக்கியம் பேசுவாரு. அந்த அளவுக்கு இவரு ஒரு இலக்கிய பீஸ். (என்னை மாதிரி காமெடி பீஸ் கூட ,.... நல்ல படிங்க காம பீஸ்ன்னு எழுதல)

அடடடா.... பதிவு எழுத வந்த மேட்டரையையே மறந்துட்டேன் பாருங்க. நேத்து இவரோட பிறந்த நாளை இவரு கொண்டாடி இருக்காரு. அது சரி இவரோட பொறந்த நாளை இவரு கொண்டாடாம பக்கத்துக்கு வீட்டுகாரன் ஆ வந்து கொண்டாடுவான். எத்தனை குஜிளிக்கள், எத்தனை இலக்கிய பீஸ்கள் ......... அந்த கொண்டாடத்தில் கலந்து கிட்டாங்கன்னு தெரியாது, ஏன்ன அந்த அளவுக்கு மதுரையில நம்ம உளவு துறை இல்லை என்பது தான் உண்மை. ஹி ஹி ஹி

நேத்து இவருக்கு நான் போன் பண்ணும் போது தான் இந்த விஷயத்த சொன்னாரு. அப்பவே ஒரு பதிவு போட்டு இருப்பேன். ஆனா என்ன ஒன்னு பாருங்க சம்பளம் வாங்குறேன் ன்ற ஒரே காரணத்துக்காக என்னை வேலை பார்க்க சொல்லிட்டாரு முதலாளி. நானெல்லாம் ஆபீஸ் வர்றதே ஒரு பெரிய புண்ணியம்ன்னு அவருக்கு தெரியல. ஓகே அவரை ப்ரீயா விட்டுருவோம்.

இவருக்கும் என்னனாவோ சொல்லி பார்த்துட்டாரு அவங்க வீட்டுல அவரோட கல்யாண பேச்சை யாரும் எடுக்க காணல. சரி ஒரு பொண்ணு ஓட வாழ்க்கை தப்பிச்சுதுன்னு பார்த்த, காபா ரொம்ப பழகிய ஆளா போயிட்டாரு. மனசை கல் ஆக்கிகிட்டு ...... இந்த பதிவோட டைட்டில்யை எழுதினேன் ...... மணமகள் தேவை.

பொண்ணுக்கு எது தெரிஞ்சு இருக்கோ இல்லையோ கட்டாயம் மொக்கை தனமா இலக்கியம் பேச தெரிஞ்சு இருக்க வேண்டும். பொண்ணு பார்க்க வரும் போது காபா பொண்ணுக்கு எஸ்ரா எழுதின துணையெழுத்து ல இருந்து டெஸ்ட் வைப்பாரு. அதுல அவங்க பாஸ் ஆனா தான் கல்யாணம். இல்லாட்டி வெறும் friends .....


முக்கியமாக பொண்ணு கார்த்திகை பண்டியானோட கல்யாணமான பின்னாடி எஸ்ரா ஓட அடியாளாக மாறணும். யாமம், நெடுங்குருதி .... இன்னும் என்னன்னா இருக்கோ அதெல்லாம் தினசரி வாழ்க்கை ல பொண்ணு படிக்கணும்.

டிஸ்கி - இன்னும் நிறைய எழுதிருப்பேன், ஆனால் "i am பாவம்" என்று அவரே சொன்னதினால் இதோடு விட்டுவிட்டேன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் ரொம்ப நல்லவருங்க) . பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவர் தனது துறை சார்ந்த மேற்படிப்பில் முயற்சித்து வருவதினால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.


"எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், அதை விட சந்தோசம் தரும் விஷயம் வேறு எதுவுமில்லை. இயசு சொன்னது போல (அல்லது சொன்னார் என்று நம்ப படுகிற) உன்னை போல் பிறரையும் நேசி" ( இதை எதுக்கு சொல்லுறேன் என்றால் வர வர என்னோட பதிவில் கருத்தே இல்லைன்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அதுக்கு தான். மேலும் இந்த மாதிரி கருத்து சொன்ன ஒரு மொக்கை பதிவு கூட இலக்கிய பதிவு ஆகி விடும் என்று பதிவுலக பெருசுகள் பலர் சொன்னாங்க )Wednesday, May 19, 2010

ரித்தி/மதுவன்தியும் அண்ணனும் - சில அனுபவங்களும்

"அப்ப்வ்பா ..அப்ப்வ்பா"

"என்னடி ......"

"சச்சிக்குது...சச்சிக்குது"

"போய்..அம்மா கிட்ட பசிக்குதுன்னு சொல்லு ..."

"யும்ம...யும்ம்"

"என்னமா ...."

"நா போகி ..நீ "

" ம்ம்ம் ...சரி. என்ன வோணும்?"

"சச்சிம்பர்...சம்சிம்பர் ...."

"சரி ..இரு,கொண்டு வரேன்"

அண்ணன் ஒரு cup நிறைய சாம்பார் கொண்டு வந்து தந்த உடனே ரித்தி அந்த cup பக்கத்துல பொம்மை எடுத்து வைத்ததை பார்த்த அண்ணன்

"என்னம்மா ...ஏன் பொம்மைய cup பக்கத்துல வைக்குற?"

"நா டளியடினேன் (விளையாடினேன்) சச்சிக்குது .....பொம்மை டிளியடின சச்சிகதா ??" (என்னோட விளையாடின பொம்மைக்கு பசிக்காத?)"ரித்தி ..பே காட்டு ...ரித்தி பே காட்டு ..."

"நா காட்டடேன்....(நான் காட்ட மாட்டேன்)"

"அப்ப்வ்பா பஹா..அப்ப்வ்பா பஹா ...ஈதோ பஹா ... நீ பானத பே காத்தான்(நீ வந்த நான் பே காட்டுகிறேன்)

"இதோ அப்பா பே ...ரித்தி எங்க பே"

"ரித்தி பே ..ரித்தி பே"

(இந்த ஒரு போட்டோ எடுக்க ரித்தியை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு)

டிஸ்கி -மனிதர்கள் பிறக்கும் பொழுது மனிதநேயம் மிக்கவர்களாக தான் பிறக்கிறார்கள்.கல்வி முறையும் சமுதாயமும் தான் அவனை மாற்றுகிறது .....

Saturday, May 8, 2010

போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.

இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.

டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.

நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.

நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)

அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.

ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.


அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.

அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)


கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.

"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."

"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"

"எங்க வேல பார்க்குற"

"...... .... .... கம்பெனி"

"சம்பளம் எவ்வளவு இருக்கும்"

"..... ... .."

"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"

"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"

"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"

"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"

"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."

"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"

"ஏன் ...அதெல்லாம் வராது..."

"அதுஎப்படி சார் ..."

"யோய் நீ ரொம்ப பேசுற ...... "

"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"

"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."

சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.


டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.

Sunday, May 2, 2010

ரோசாப்பூ ரவிக்கைகாரி


நான் UG படித்த காலத்தில் (போயிட்டு வந்த காலத்தில்ன்னு சொன்ன நல்ல இருக்கும்) என்னோடு படித்த அனந்த குமார், இந்த படத்தோட ஒரு பாட்டை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பான்.... அதை கேட்டு கேட்டு தான் இந்த படத்தை பார்த்தே ஆகணும்ன்னு ஆர்வம் வந்துச்சு. பிறகு கொஞ்சம் படிப்பு, நிறைய புத்தகங்கள்ன்னு வாழ்க்கை போனதால இந்த படத்தை பத்தி மறந்தே போயிட்டேன். ஆனா அந்த பாட்டை கேட்க்கும் பொழுதெல்லாம் அந்த படத்தை பார்க்க வேண்டும்ன்னு நினைச்சிப்பேன். பிறகு சிடி வாங்க போகும் போது மறந்து போய்விடுவேன்.


அப்படி இந்த வெள்ளிகிழமை ஆபீஸ்ல இருந்து கிளம்பும் போது, இந்த வாரம் புத்தகம் எதுவும் படிக்க வேண்டாம், எதாச்சு நல்ல படமா பார்போம்ன்னு பெருங்களத்தூர் வந்த உடனே இரண்டாவது கேட் பக்கத்துல இருக்குற சிடி கடைக்கு போனேன். அங்க வைச்சு தான் இந்த படத்தோட சிடியை பார்த்தேன். moser baer super dvd . ஆனா இந்த படத்தோட இன்னும் இரண்டு படம் வேற இருந்துச்சு. சரி அதை பத்தி அப்பரும சொல்லுறேன்.படத்தை பத்தி சொல்லுறதுக்கு முன்னை ஆனந்த் அடிக்கடி பாடின பாட்டு எதுன்னு சொல்லிறேன். "மாமன் ஒரு நாள் மல்லிக பூ" .... செம பாட்டுங்க. இளையராஜா பின்னி பெடல் எடுத்த பாடல்களில் இதுவும் ஒன்னு. அப்பரும் வெத்தல வெத்தலன்னு ஆரம்பத்துல வர பாட்டும் அருமையா இருக்கும். சூப்பர் ரகத்தை சேர்ந்தது (அதை கேட்க இங்க கிளிக் செய்யுங்க). அப்பரும் கடைசில வர "உச்சி......", அந்த பாட்டும் எனக்கு பிடிச்சு இருந்தது. ஆனா இடைல வர "என்னுள்ளே எங்கோ" பாட்டு என்னை ரொம்ப கவரல. இன்னும் இரண்டு மூணு பாட்டு இருக்குன்னு நினைக்கிறேன், ஆனா ஞாபத்துக்கு வரல.


சரி. பாட்டை தவிர இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்ன்னு பார்த்த, படத்தோட கதை தான். ஒரு டிரஸ் விஷயத்தை வைச்சு தமிழ்ல எதாச்சு படம் வந்து இருக்கன்னு தெரியல. மனித சமுதாயத்தையும் மற்றும் வளர்ச்சியையும் பெரிதும் மாற்றிய விஷயம் எதுன்னு பார்த்த இரண்டே இரண்டு விஷயம் தான், ஒன்னு பண்டம் மாற்று முறையும், இன்னொன்னு உடையும் தான்.

பொதுவா உடை, புடவைன்னு வந்தாலே பெண்ணியம் பேசுறதை தான் நான் படிச்சு இருக்கேன், பார்த்து இருக்கேன், ஆனால் இதுல விஷயமே வேற. இந்த கதை ஒரு கிராமத்துல பெண்களுக்கு பாவாடை, ரவிக்கை, பாடி (கதை நடப்பது 1930 களில்) வாங்கி தருகிற ஒரு ஆணுடைய கதை. ரோசாப்பூ ரவிக்கைகாரி. இரண்டு மணி நேர திரைப்படமாய்.கதாநாயகன் செம்பட்டையாக நடிகர் சிவகுமார். செம நடிப்பு, செம body language .......வாழ்ந்திருக்கிறார், அதனால் மற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. எனக்கு அந்த பயில்வான் கதாபாத்திரம் பிடிச்சு இருக்கு. அந்த பண்ணையார் கதாபாத்திரம் ஓகே, பெருசா ஒண்ணுமில்லை. செம்பட்டை அண்ணன் கதாபாத்திரம் இயலாமையின் வெளிப்பாட்டில் என்னை கொஞ்சம் IMPRESS பண்ணினார்.


செம்பட்டைக்கு கல்யாணமாகி, பொண்டாட்டியை ஊருக்கு கூட்டிகிட்டு வரான், அவள் தான் ரோசாப்பூ ரவிக்கைகாரி. சேலத்தில் இருந்து அந்த கிராமத்துக்கு வரும் அவளுக்கு அந்த கிராமம் பிடிக்கவில்லை. அந்த கிராமத்துல பொண்ணுங்க பாவாடை போடுரறதும், ரவிக்கை மற்றும் பாடி போடுவதும் இல்லை, அப்படி போட்ட அந்த கிராமத்துல அது பெரிய குற்றம். அப்படி இருக்கும் பொழுது நகரத்தில் இருந்து வரும் செம்பட்டையின் மனைவி போடும் மேக் கப்யை பார்த்தும், அவள் போடும் ரவிக்கை, பாவாடை, பாடியை பார்த்தும் கிராம பெண்களுக்கு சபலம் தட்டுகிறது.


நகரத்தில் இருந்து பொருட்களை வாங்கி வந்து, கிராமத்தில் விற்கும் செம்பட்டையின் முலம் ரகசியமாக வாங்கி வர சொல்லுறாங்க. அப்பொழுது பிரிட்டிஷ் துரைக்கு வேலை பார்க்கும் ஒருவனை செம்பட்டையுடன் ஒப்பிட்டு பார்த்து, அவன் மேல் ஒருவித மோகம் கொள்கிறாள்செம்பட்டையின் மனைவி . இதனிடைய வர போகும் பாக்டரிக்கு ஆள் எடுப்பதாய் சொல்லி, பர்மா டி-எஸ்டேட்க்கு (எரியும் பனிக்காடு படிச்சு பாருங்க) செம்பட்டையின் முலம் தகவல் பரப்பி ஆள் எடுக்கும் துரை. இந்த பிரச்சனை எல்லாம் நேர் கோட்டில் சந்திக்கும் பொழுது செம்பட்டைக்கு என்னானது என்று சொல்கிறது இந்த படம்.படத்துல சில நொள்ளை நொட்டைகள் இல்லாமல் இல்லை, இருந்தும் இந்த படத்தை சலிக்காமல் பார்க்க முடியும். அதுவும் இளையராஜா பாட்டுக்காகவே ஒரு தடவை பார்க்கலாம். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிருப்பவர் இந்த படத்தில் தான் அறிமுகமானார் என்பதை நம்ப முடியல.

சில சொதபல் காட்சி அமைப்புகளால் இரண்டு இடத்துல டைரக்டர் வாய்ஸ் குடுக்க வேண்டியதா இருக்கு (அப்ப வந்த படத்துல எல்லாம் இது சகஜம்ன்னு கேள்விபட்டேன்) ..... கடைசில வணக்கம் போடும் பொழுது டைட்டில் கார்டு போட்டு இருக்கலாம், அதை விட்டுட்டு வெத்தல வெத்தலயோஒய் ......தாங்க முடியல.அப்பரும் பல காட்சிகளில் intimacy இல்லாததால் .....பல காட்சிகள் பெபெபரபேன்னு இருக்கு.

1979 ல இந்த படம் வந்துச்சாம். உங்க டிவிடி collections ல இருக்க வேண்டிய படம் இது.

Moserbaer SUPER DVD - ரோசாப்பூ ரவிக்கைகாரி + பத்ரகாளி + கண்காட்சி = விலை 30 ரூபாய்

Related Posts with Thumbnails