Pages

Sunday, May 2, 2010

ரோசாப்பூ ரவிக்கைகாரி


நான் UG படித்த காலத்தில் (போயிட்டு வந்த காலத்தில்ன்னு சொன்ன நல்ல இருக்கும்) என்னோடு படித்த அனந்த குமார், இந்த படத்தோட ஒரு பாட்டை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பான்.... அதை கேட்டு கேட்டு தான் இந்த படத்தை பார்த்தே ஆகணும்ன்னு ஆர்வம் வந்துச்சு. பிறகு கொஞ்சம் படிப்பு, நிறைய புத்தகங்கள்ன்னு வாழ்க்கை போனதால இந்த படத்தை பத்தி மறந்தே போயிட்டேன். ஆனா அந்த பாட்டை கேட்க்கும் பொழுதெல்லாம் அந்த படத்தை பார்க்க வேண்டும்ன்னு நினைச்சிப்பேன். பிறகு சிடி வாங்க போகும் போது மறந்து போய்விடுவேன்.


அப்படி இந்த வெள்ளிகிழமை ஆபீஸ்ல இருந்து கிளம்பும் போது, இந்த வாரம் புத்தகம் எதுவும் படிக்க வேண்டாம், எதாச்சு நல்ல படமா பார்போம்ன்னு பெருங்களத்தூர் வந்த உடனே இரண்டாவது கேட் பக்கத்துல இருக்குற சிடி கடைக்கு போனேன். அங்க வைச்சு தான் இந்த படத்தோட சிடியை பார்த்தேன். moser baer super dvd . ஆனா இந்த படத்தோட இன்னும் இரண்டு படம் வேற இருந்துச்சு. சரி அதை பத்தி அப்பரும சொல்லுறேன்.படத்தை பத்தி சொல்லுறதுக்கு முன்னை ஆனந்த் அடிக்கடி பாடின பாட்டு எதுன்னு சொல்லிறேன். "மாமன் ஒரு நாள் மல்லிக பூ" .... செம பாட்டுங்க. இளையராஜா பின்னி பெடல் எடுத்த பாடல்களில் இதுவும் ஒன்னு. அப்பரும் வெத்தல வெத்தலன்னு ஆரம்பத்துல வர பாட்டும் அருமையா இருக்கும். சூப்பர் ரகத்தை சேர்ந்தது (அதை கேட்க இங்க கிளிக் செய்யுங்க). அப்பரும் கடைசில வர "உச்சி......", அந்த பாட்டும் எனக்கு பிடிச்சு இருந்தது. ஆனா இடைல வர "என்னுள்ளே எங்கோ" பாட்டு என்னை ரொம்ப கவரல. இன்னும் இரண்டு மூணு பாட்டு இருக்குன்னு நினைக்கிறேன், ஆனா ஞாபத்துக்கு வரல.


சரி. பாட்டை தவிர இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்ன்னு பார்த்த, படத்தோட கதை தான். ஒரு டிரஸ் விஷயத்தை வைச்சு தமிழ்ல எதாச்சு படம் வந்து இருக்கன்னு தெரியல. மனித சமுதாயத்தையும் மற்றும் வளர்ச்சியையும் பெரிதும் மாற்றிய விஷயம் எதுன்னு பார்த்த இரண்டே இரண்டு விஷயம் தான், ஒன்னு பண்டம் மாற்று முறையும், இன்னொன்னு உடையும் தான்.

பொதுவா உடை, புடவைன்னு வந்தாலே பெண்ணியம் பேசுறதை தான் நான் படிச்சு இருக்கேன், பார்த்து இருக்கேன், ஆனால் இதுல விஷயமே வேற. இந்த கதை ஒரு கிராமத்துல பெண்களுக்கு பாவாடை, ரவிக்கை, பாடி (கதை நடப்பது 1930 களில்) வாங்கி தருகிற ஒரு ஆணுடைய கதை. ரோசாப்பூ ரவிக்கைகாரி. இரண்டு மணி நேர திரைப்படமாய்.கதாநாயகன் செம்பட்டையாக நடிகர் சிவகுமார். செம நடிப்பு, செம body language .......வாழ்ந்திருக்கிறார், அதனால் மற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. எனக்கு அந்த பயில்வான் கதாபாத்திரம் பிடிச்சு இருக்கு. அந்த பண்ணையார் கதாபாத்திரம் ஓகே, பெருசா ஒண்ணுமில்லை. செம்பட்டை அண்ணன் கதாபாத்திரம் இயலாமையின் வெளிப்பாட்டில் என்னை கொஞ்சம் IMPRESS பண்ணினார்.


செம்பட்டைக்கு கல்யாணமாகி, பொண்டாட்டியை ஊருக்கு கூட்டிகிட்டு வரான், அவள் தான் ரோசாப்பூ ரவிக்கைகாரி. சேலத்தில் இருந்து அந்த கிராமத்துக்கு வரும் அவளுக்கு அந்த கிராமம் பிடிக்கவில்லை. அந்த கிராமத்துல பொண்ணுங்க பாவாடை போடுரறதும், ரவிக்கை மற்றும் பாடி போடுவதும் இல்லை, அப்படி போட்ட அந்த கிராமத்துல அது பெரிய குற்றம். அப்படி இருக்கும் பொழுது நகரத்தில் இருந்து வரும் செம்பட்டையின் மனைவி போடும் மேக் கப்யை பார்த்தும், அவள் போடும் ரவிக்கை, பாவாடை, பாடியை பார்த்தும் கிராம பெண்களுக்கு சபலம் தட்டுகிறது.


நகரத்தில் இருந்து பொருட்களை வாங்கி வந்து, கிராமத்தில் விற்கும் செம்பட்டையின் முலம் ரகசியமாக வாங்கி வர சொல்லுறாங்க. அப்பொழுது பிரிட்டிஷ் துரைக்கு வேலை பார்க்கும் ஒருவனை செம்பட்டையுடன் ஒப்பிட்டு பார்த்து, அவன் மேல் ஒருவித மோகம் கொள்கிறாள்செம்பட்டையின் மனைவி . இதனிடைய வர போகும் பாக்டரிக்கு ஆள் எடுப்பதாய் சொல்லி, பர்மா டி-எஸ்டேட்க்கு (எரியும் பனிக்காடு படிச்சு பாருங்க) செம்பட்டையின் முலம் தகவல் பரப்பி ஆள் எடுக்கும் துரை. இந்த பிரச்சனை எல்லாம் நேர் கோட்டில் சந்திக்கும் பொழுது செம்பட்டைக்கு என்னானது என்று சொல்கிறது இந்த படம்.படத்துல சில நொள்ளை நொட்டைகள் இல்லாமல் இல்லை, இருந்தும் இந்த படத்தை சலிக்காமல் பார்க்க முடியும். அதுவும் இளையராஜா பாட்டுக்காகவே ஒரு தடவை பார்க்கலாம். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிருப்பவர் இந்த படத்தில் தான் அறிமுகமானார் என்பதை நம்ப முடியல.

சில சொதபல் காட்சி அமைப்புகளால் இரண்டு இடத்துல டைரக்டர் வாய்ஸ் குடுக்க வேண்டியதா இருக்கு (அப்ப வந்த படத்துல எல்லாம் இது சகஜம்ன்னு கேள்விபட்டேன்) ..... கடைசில வணக்கம் போடும் பொழுது டைட்டில் கார்டு போட்டு இருக்கலாம், அதை விட்டுட்டு வெத்தல வெத்தலயோஒய் ......தாங்க முடியல.அப்பரும் பல காட்சிகளில் intimacy இல்லாததால் .....பல காட்சிகள் பெபெபரபேன்னு இருக்கு.

1979 ல இந்த படம் வந்துச்சாம். உங்க டிவிடி collections ல இருக்க வேண்டிய படம் இது.

Moserbaer SUPER DVD - ரோசாப்பூ ரவிக்கைகாரி + பத்ரகாளி + கண்காட்சி = விலை 30 ரூபாய்

12 comments:

தமிழ் பிரியன் said...

70's top post-modernisam film.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இன்றும் கூட பார்ப்ப்பவர் வயிற்றில் புளியைக் கரைக்கும் கதை

ஹேமா said...

மேவீ நீங்க எந்தக் காலம் ?
சும்மா சும்மாக்குக் கேட்டேன் !

உண்மையில் சிவகுமாரின் வெற்றிப்பட வரிசையில் அருமையான படம்.நானும் 7-8 வருசத்துக்கு முன்னம் பார்த்திருக்கிறேன்.
"உச்சி வகுந்தெடுத்து"ங்கிற ஒரு பாட்டு ஞாபகம் இருக்கு.நீங்க அப்பிடியே கதையைச் சொல்லியிருக்கீங்க.திரும்பவும்
மீட்டுப் பார்த்தேன்.முழுதான
ஞாபகம் வருது.அழகா வாசிக்கிறவங்க பாக்கவேணும்ன்னு நினைக்கிறதுபோல விமர்சனம் பண்ணியிருக்கீங்க.
நடிகை "தீபா"ன்னு நினைக்கிறேன் கதாநாயகி.

உண்மை சொல்லுங்க.அழகா திருத்தமா தமிழ் எழுதுறது நீங்களா இல்ல வேற யாராச்சும் எழுதித் தாறாங்களா !

டம்பி மேவீ said...

@ தமிழ் பிரியன் : ஆமாங்க ...கட்டாயம்

@ சுரேஷ் : : நிச்சயம்...செம கதைங்க

@ ஹேமா : இதை எழுதும் போது நிகழ் காலம்..எழுதி முடித்த பின் இறந்த காலம் ..... இல்லைங்க நானே தான் எழுதினேன், நேரம் இருந்ததால் எழுத்து பிழைகளை சரி பண்ண முடிந்தது

தமிழ் பிரியன் said...

http://www.keetru.com/literature/essays/pravin.php

காரணம் ஆயிரம்™ said...

சிவகுமாருக்கு இது 100-வது படம் என்று ஞாபகம். நூறாவது படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும். கமலின் 100-வது படமான ’ராஜப்பார்வை’யில், முழுக்குருடராக நடித்தார். சொந்தப்படம் வேறு! அதற்கும் வேண்டும் ஒரு தைரியம்!

இப்பொழுதெல்லாம், 50-வது படத்திற்கே பஞ்ச் டயலாக்கோடுதான் இறங்குகிறார்கள்.

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

டம்பி மேவீ said...

@ தமிழ் பிரியன் : நீங்க எழுதினதா ???? ஒரு படத்தை வைச்சு என்னென்னமோ சொல்லிருக்காங்க ....ஆனால் கடந்த காலத்துல இப்படி இருந்துச்சுன்னு இப்ப கூச்சல் போடுறதுல என்ன பயன் இருக்கும்ன்னு தெரியல. நான் முழுசா இன்னும் படிக்கல


@ காரணம் ஆயிரம் : நல்ல இருக்குங்க பெயரு .......இப்பெல்லாம் 50 வது படத்துக்கு எல்லாம் வெயிட் பண்ணறதில்லை. முதல் படத்திலையே அரிப்பு வந்து பஞ்சு டயலாக் பேசுறாங்க ஏதோ படம் பார்க்க வரவங்க எல்லாம் பஞ்ச் டயலாக்யை கேட்க தான் வராங்கன்னு இவங்களுக்கு நினைப்பு

அப்பாவி தங்கமணி said...

சில மாசத்துக்கு முன்னாடி ஏதோ டிவில இந்த படம் பாத்தேன்... அந்த காலத்துக்கு அந்த கதை ஒகே தான், இப்ப பாக்கறதுக்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.பாட்டு எல்லாம் ரெம்ப நல்ல இருந்தது, அதிலும் "உச்சி வகிடு எடுத்து பிச்சிபூ" க்ளாஸ்

வால்பையன் said...

http://pinkurippukal.blogspot.com/2007/09/blog-post_28.html

வால்பையன் said...

அந்த விமர்சனத்தின் மாற்று கண்னோட்டத்தையும் கொஞ்சம் பாருங்களேன்!

ரம்மி said...

என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராமின் குரலும், தீபாவின் உடல் மொழிகளும், இளையராசாவின் இசையும், கேமரா கோணங்களும், நினைத்தாலே இனிக்கும்! என் அரும்பு மீசை பருவத்தில் வந்த பாடல்! இந்த பாட்டை கண் மூடி ரசிக்க வேண்டும்!

நாஞ்சில் பிரதாப் said...

//என்னுள்ளே எங்கோ" //

இந்தப்பாட்டுதான் படத்தின் ஹைலைட்... அவளின் மனதில் சபலம் தட்டும்போது வரும்பாட்டாக இருக்கும்....
அப்போதைய காலகட்டத்தில் வந்த சர்ச்சைக்குரிய கதைக்களத்தை கொண்ட படம். அதற்காகவே இயக்குனரை பாராட்டவேண்டும்.:

Related Posts with Thumbnails