Pages

Saturday, May 29, 2010

மணமகள் தேவை - கார்த்திகை பாண்டியனுக்கு

மேல போட்டோல பழம் மாதிரி இருக்காரே அவரு தான் கார்த்திகை பாண்டியன். என்ன தான் பாக்க பழம் மாதிரி இருந்தாலும் அவரு ஒரு பலாபழம். அந்த அளவுக்கு உள்ளுள்ள நிறைய விஷயத்தை வைச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சீன் போடுவாரு. ஒரு டி, இரண்டு பஜ்ஜி வாங்கி தந்த போதும் எங்க வேண்டுமானாலும் நின்னு மத்தவங்க காதுல இருந்து ரத்தம் வருகிற அளவுக்கு இலக்கியம் பேசுவாரு. அந்த அளவுக்கு இவரு ஒரு இலக்கிய பீஸ். (என்னை மாதிரி காமெடி பீஸ் கூட ,.... நல்ல படிங்க காம பீஸ்ன்னு எழுதல)

அடடடா.... பதிவு எழுத வந்த மேட்டரையையே மறந்துட்டேன் பாருங்க. நேத்து இவரோட பிறந்த நாளை இவரு கொண்டாடி இருக்காரு. அது சரி இவரோட பொறந்த நாளை இவரு கொண்டாடாம பக்கத்துக்கு வீட்டுகாரன் ஆ வந்து கொண்டாடுவான். எத்தனை குஜிளிக்கள், எத்தனை இலக்கிய பீஸ்கள் ......... அந்த கொண்டாடத்தில் கலந்து கிட்டாங்கன்னு தெரியாது, ஏன்ன அந்த அளவுக்கு மதுரையில நம்ம உளவு துறை இல்லை என்பது தான் உண்மை. ஹி ஹி ஹி

நேத்து இவருக்கு நான் போன் பண்ணும் போது தான் இந்த விஷயத்த சொன்னாரு. அப்பவே ஒரு பதிவு போட்டு இருப்பேன். ஆனா என்ன ஒன்னு பாருங்க சம்பளம் வாங்குறேன் ன்ற ஒரே காரணத்துக்காக என்னை வேலை பார்க்க சொல்லிட்டாரு முதலாளி. நானெல்லாம் ஆபீஸ் வர்றதே ஒரு பெரிய புண்ணியம்ன்னு அவருக்கு தெரியல. ஓகே அவரை ப்ரீயா விட்டுருவோம்.

இவருக்கும் என்னனாவோ சொல்லி பார்த்துட்டாரு அவங்க வீட்டுல அவரோட கல்யாண பேச்சை யாரும் எடுக்க காணல. சரி ஒரு பொண்ணு ஓட வாழ்க்கை தப்பிச்சுதுன்னு பார்த்த, காபா ரொம்ப பழகிய ஆளா போயிட்டாரு. மனசை கல் ஆக்கிகிட்டு ...... இந்த பதிவோட டைட்டில்யை எழுதினேன் ...... மணமகள் தேவை.

பொண்ணுக்கு எது தெரிஞ்சு இருக்கோ இல்லையோ கட்டாயம் மொக்கை தனமா இலக்கியம் பேச தெரிஞ்சு இருக்க வேண்டும். பொண்ணு பார்க்க வரும் போது காபா பொண்ணுக்கு எஸ்ரா எழுதின துணையெழுத்து ல இருந்து டெஸ்ட் வைப்பாரு. அதுல அவங்க பாஸ் ஆனா தான் கல்யாணம். இல்லாட்டி வெறும் friends .....


முக்கியமாக பொண்ணு கார்த்திகை பண்டியானோட கல்யாணமான பின்னாடி எஸ்ரா ஓட அடியாளாக மாறணும். யாமம், நெடுங்குருதி .... இன்னும் என்னன்னா இருக்கோ அதெல்லாம் தினசரி வாழ்க்கை ல பொண்ணு படிக்கணும்.

டிஸ்கி - இன்னும் நிறைய எழுதிருப்பேன், ஆனால் "i am பாவம்" என்று அவரே சொன்னதினால் இதோடு விட்டுவிட்டேன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் ரொம்ப நல்லவருங்க) . பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவர் தனது துறை சார்ந்த மேற்படிப்பில் முயற்சித்து வருவதினால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.


"எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், அதை விட சந்தோசம் தரும் விஷயம் வேறு எதுவுமில்லை. இயசு சொன்னது போல (அல்லது சொன்னார் என்று நம்ப படுகிற) உன்னை போல் பிறரையும் நேசி" ( இதை எதுக்கு சொல்லுறேன் என்றால் வர வர என்னோட பதிவில் கருத்தே இல்லைன்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அதுக்கு தான். மேலும் இந்த மாதிரி கருத்து சொன்ன ஒரு மொக்கை பதிவு கூட இலக்கிய பதிவு ஆகி விடும் என்று பதிவுலக பெருசுகள் பலர் சொன்னாங்க )7 comments:

அத்திரி said...

//ஒரு டி, இரண்டு பஜ்ஜி வாங்கி தந்த போதும் எங்க வேண்டுமானாலும் நின்னு மத்தவங்க காதுல இருந்து ரத்தம் வருகிற அளவுக்கு இலக்கியம் பேசுவாரு//

:))))))))

அத்திரி said...

புரொபசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..................

இந்த பதிவ பாத்துட்டு மேவி உன்னை மதுரை பொண்ணுங்க தேடுறாங்களாம்..........
ஊர் பக்கம் போயிடாதே...... ரகசியத்தை வெளியில் சொல்லிட்டல்ல அதுக்குத்தான்

அத்திரி said...

//மேல போட்டோல பழம் மாதிரி இருக்காரே அவரு தான் கார்த்திகை பாண்டியன். என்ன தான் பாக்க பழம் மாதிரி இருந்தாலும் அவரு ஒரு பலாபழம்.//

அவரு ஒரு ஞானப்பழம் மேவி

வி.பாலகுமார் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் வாத்தியார்.

//பொண்ணு பார்க்க வரும் போது காபா பொண்ணுக்கு எஸ்ரா எழுதின துணையெழுத்து ல இருந்து டெஸ்ட் வைப்பாரு. //

இதை செஞ்சாலும் செய்வார் ;)

ஹேமா said...

கார்த்திக்கு வாழ்த்துக்கள்.பொண்ணு பார்க்கும் படலம் ஆரம்பம்.
வெள்ளைக்காரி சுவிஸ் பொண்ணு OKya...எப்பிடி ?

மேவீ உங்களுக்கு ?

cheena (சீனா) said...

அன்பின் டம்பி மேவி

உண்மை உண்மை காபா பெண் தேடுகிறார் - உடனடித் தேவை இது - விரைவினில் நிறைவேற நல்வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

மேற்படிப்பு படித்து மேன் மேலும் பத்வி உயர்வு பெற நல்வாழ்த்துகள்

எஸ்ரா துணை எழுத்து நான் இன்னும் படிக்கல

நல்லாருங்கப்பா

நல்வாழ்த்துகள் மேவி
நட்புடன் சீனா

டம்பி மேவீ said...

@ அத்திரி : அவருடைய நண்பர்ன்னு சொன்னதுக்கே பொண்ணு கிட்ட இவ்வளவு response அஹ ...ரைட்டு ஞான பழமோ வாழை பழமோ ....அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லைங்க


@ வி.பாலகுமார் : நன்றிங்க ...உங்களோட சோலை அழகுபுரம் படிச்சேனுங்க நல்ல இருக்கு .... "இல்பொருள் உவமை அணிக்கு உதாரணமாக" பெரிய இலக்கியவாதியாய் இருப்பீங்க போல் இருக்கே


@ ஹேமா : கார்த்திக்கு வெள்ளைக்காரியைஎல்லாம் பிடிக்காதுங்க ......அவருக்கு மாநிற பெண்கள் தான் இஷ்டமாம் .....என்னை ஏற்கனவே அசின் த்ரிஷா தமன்னா ன்னு நிறைய பேர் காதலிச்சிட்டு இருக்கங்களே ஹி ஹி ஹி ஹி (எனக்கும் வீட்டுல பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க )


@ சீனா : ஆமாங்க ..ஒரு வேளை அவரோட ரகசிய சென்னை மற்றும் பெங்களூர் பயணங்களுக்கு இது தான் காரணமோ ....ஹி ஹி ஹி ஹி (ஏதோ என்னால் முடிந்தது)

நன்றிங்க ....இன்னும் பல வெற்றிகள் அவருக்கு வரும் ..பாருங்க

துணையெழுத்து படிக்கலையா ...உடனே படிங்க சார்

Related Posts with Thumbnails