Pages

Sunday, June 20, 2010

மலைக்கள்ளன் - பட விமர்சனம்

நம்ம நாமக்கல் கவிஞர் எழுதின கதை இது ... நாவல முதல வந்துச்சு அப்பரும் படமா எடுத்தாங்க. நாவலை நான் படிச்சதில்லை. நாமக்கல் கவிஞர் பத்தி எனக்கு ஜாஸ்தியா தெரியாது. ஆனா அந்த காலத்துல இந்த கதை ஒரு பெரிய action கதையாக வந்துருக்கும். சரி படத்தை பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி நாமக்கல் கவிஞர் எழுதினன இந்த நாவலை online ல வாங்க இங்கே கிளிக் பண்ணுங்க.


இந்த படத்தை விட இதுல வர ஒரு பாட்டு தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதினது. இவரோட பாட்டு ல எப்பவுமே ஒரு social view இருக்கும். "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....." ங்கிற பாட்டை ஒரு வாட்டி கேட்டு பாருங்க . இன்னைக்கு கூட அது பொருத்தும். ஒரு வேளை அவரு சோஷலிஸ்ட் யாக கூட இருக்கலாம். அதுல ஒரு line வரும் பாருங்க ...."தெரு எங்கும் பள்ளிகள் கட்டுவோம்....." நம்மகுள்ள இருக்குற மனிஷநேயத்தை கொஞ்சம் தட்டி எழுப்பி விட்டுட்டு போகும்.இந்த ஒரு பாட்டை தவிர வேற எந்த பாட்டும் என்னை கவரல.


கதைல கிராமத்துல பணகார வீடு பெண் பூங்கோதை யை சுத்தி தான் நடக்குது. பூங்கோதை மேல ஆசை வைச்சு இருக்குற கிரமத்து மைனர் தன்னோட அடியாள் காத்தவராயன் கிட்ட சொல்லி, பூங்கோதையை கடத்த சொல்லுறேன். அப்படி கடத்தி கொண்டு போற போது, ஒரு மலைவாசி பெரியவர் அவங்களை அடிச்சு போட்டுட்டு பூங்கோதையை காப்பாத்தி கொண்டுகிட்டு போறார்.

இதுக்குள்ள பூங்கோதையோட அப்பா என்ன பண்ணுறார்ன்ன, போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் தந்துரர். அங்க இருக்குற போலீஸ் ஓட நிலைமையோ ரொம்ப ஒடிசல். அந்த கிராமத்துல நடக்குற திருட்டு, கொலைகளை கண்டுபிடிக்க முடியாம தவிச்சுகிட்டு இருக்காங்க. இதுல வேற அவங்களுக்கு இன்னொரு குழப்பம் .... நடக்குறதுக்கு எல்லாம் யார் காரணம்ன்னு. காத்தவராயனா இல்ல மலைக்கள்ளனா .... இல்ல இரண்டு பேரும் ஒருத்தர் தானா ????


இதற்க்கிடைய (இனிமேல் சுத்த தமிழ் ) பூங்கோதியை அந்த பெரியவரு ஒரு மலை குகைக்கு கூட்டிகிட்டு போறாரு ....அங்க பூங்கோதைக்கு ஒரு ஆச்சிரியம் காத்துக்கிட்டு இருந்தது ???

நிலைமை இப்படி இருக்குற போது அந்த கிராமத்துல திடீர் பணக்காரர் ரஹீம் போலீஸ்க்கு அறிமுகம் ஆகுறாரு.அவருடைய நடவடிக்கை எல்லாம் மர்மமாக இருப்பதினால் அவர் மேல் ஒரு கண் வைக்கிறது போலீஸ். அவர் அடிக்கடி மலை பக்கம் போயிட்டு வருவதை பார்த்து ..போலீஸ் அவர் கிட்ட விசாரிக்கும் பொழுது, மலைக்கள்ளன் தானோட நண்பருன்னு சொல்லுறார்....அதே சமயத்துல கிராமத்துக்கும் போலீஸ்க்கும் நிறைய உதவிகளும் செய்யுறார் ......


அது வரைக்கும் வெளி உலகத்துக்கு தன்னை காட்டிக்காத மலைக்கள்ளன், பூங்கோதையை கட்டாயம் கல்யாணம் பண்ணி கொள்வதாய் கடிதம் அனுப்புகிறான் ( இந்த சீன் ல வசனம் சரியா கேட்கல ....)..ஏன் ???

இதற்க்கிடைய பூங்கோதை ஓட அத்தை 12 வருஷங்களுக்கு முன்னாடி காணாமல் போன தனது மகனை பற்றி வருத்தம் கொள்கிறாள். அவன் என்ன ஆனான் ???

கொஞ்ச நாள் கழித்து பூங்கோதை வீட்டுக்கு திரும்பி வருகிறாள் ... நகை எதுவும் திருடபடாமல் . ஆனால் அவள் திரும்பி வந்த சந்தோசம் நிலைப்பதற்குள் பூங்கோதையின் அப்பா காணாமல் போகிறார் .. அவரை கடத்தியது மலைக்கள்ளன் தான் குற்றம் சாட்டுகிறது போலீஸ். அப்படி இருந்தும் பூங்கோதைக்கு மலைக்கள்ளன் மேல பிரியம் வருகிறது. பிரியம் ஒரு கட்டத்தில் ரஹீம் சொல்லும் ஒரு விஷயத்தை கேட்டு அவளுக்கு காதல் ஆகுது.


இதுக்கு எல்லாத்துக்கும் விடை சொல்லுவது மீதி கதை ....


இந்த படத்தை பத்தி நம்ம பாராயோட எண்ணத்தை படிக்க இங்க கிளிக் பண்ணுங்க.....

இன்னைக்கு காலைல டி கடைல பார்த்த ஒரு பெரியவர் கிட்ட இந்த படத்தை பற்றி பேசும் பொழுது, அவரு படத்தை விட நாவல் நல்ல இருக்கும்ன்னு சொன்னாரு. கொஞ்ச நாள் முன்னாடி நிறைய பேர் படிக்குற சாண்டில்யன் எழுதின ஒரு நாவல் வாங்குவதற்கே எனக்கு முச்சு தள்ளி போயிருச்சு ....இதுல நான் நாமக்கல் கவிஞர் (நாமக்கல் ல இவரு ஒருத்தர் தான் கவிஞர் போல ) க்கு எங்க தேடுவேன்....

படத்துக்கு வசனம் எழுதிருப்பது ..... கருணாநிதி (இப்படி தானுங்க டைட்டில் கார்டு ல வருது .....ஹலோ திமுக BROTHERS AND SISTERS டென்ஷன் வேண்டாம்....நான் இலக்கியவாதி இல்லை ). பொதுவா இவரு வசனம் எழுதின்ன படத்தையெல்லாம் பார்த்தால், ஹீரோ ஒரு நேரம் வரைக்கும் ரொம்ப சாதாரணமா பேசிகிட்டு இருப்பாங்க, ஆனா என்ன ஆகும்ன்னு தெரியல திடிர்ன்னு பேதி கண்ட மாதிரி சுத்த தமிழ் ல பேச ஆரம்பிச்சுடுவாங்க, பிறகு இரண்டு நிமிஷம் கழிச்சு சாதாரண தமிழுக்கு u turn அடிச்சு வந்துருவாங்க. அது ஏன்ன்னு எனக்கு புரியல.


இந்த படத்துல எம்ஜியாரை விட எனக்கு பானுமதி அவர்களை தான் ரொம்ப பிடிச்சுருக்கு. வெட்கம், கோவம், சந்தோசம் ன்னு கலந்து கட்டி அடிச்சு விளையாடி இருப்பாங்க. இந்த மாதிரியான திறமை உள்ள நடிகைகள் இனிமேல் வருவாங்களா என்பது சந்தேகம் தான். முதல் காட்சியிலையே குதுரை மேல அமர்ந்தபடி வருவாங்க பாருங்க ....செம கிளாஸ் தான்.

சின்ன மச்சம், மீசை, தாடி ....இதையெல்லாம் வைச்ச மாறுவேஷம் ஆகிடும்ன்னு இந்த படத்துல தான் கண்டுபிடிச்சு இருப்பாங்க போல. இதை நான் ஏன் சொல்லுறேன்ன்னு நீங்க நாவல் படிச்சுட்டு பிறகு இந்த படத்தை பாருங்க...உங்களுக்கே தெரியும்.

இவ்வளவு பாட்டு உள்ள படத்தை அந்த காலத்துல எப்படி தான் பொறுமையா பார்த்தாங்களோ தெரியல சாமி. ஒரு வேளை அந்த காலத்துல அடிக்கடி தம் அடிபவர்கள் நிறைய பேர் இருந்திற்ப்பாங்க போல . ஆஹ ஊன்ன பானுமதியை பாட்டு பாடி டான்ஸ் அட விடுறாங்க.

இந்த படத்தை பார்க்கும் போது, திருச்சி ல அந்த காலத்துல குரங்கு ரோடு ன்னு ஒரு இடத்துல (இப்பொழுது அந்த ரோடு மிகவும் பிரபலமானது.) வழிப்பறி நிறைய நடக்குமாம். அங்க நிறைய மரம் இருக்குமாம் (அந்த காலத்துல ..அந்த காலத்துல ) . அதில் தொங்கிய பாடி போற வர வண்டியில் இருந்து அரிசி மூட்டைகளை கொள்ளை அடிப்பாங்க. அதெல்லாம் ஞாபகம் வந்துருச்சு
.

முக்கியமா ஒன்னை சொல்லிட்டு நான் முடிச்சுக்கிறேன் . இந்த படத்துல வர விஞ்சு சண்டைக்கு சின்ன வயசுல நான் மிக பெரிய ரசிகன். என்னை பெரிதும் ஆச்சிரிய பட விஷயங்களில் இதும் ஓன்று. ஆனா இன்னைக்கு காலைல படத்துல அந்த சீன்யை பார்க்கும் பொழுது கொஞ்சம் ஏமாற்றமே வந்துச்சு. நான் அந்த விஞ்சு படத்துல ரொம்ப பெருசா USE பண்ணிருப்பாங்கன்னு இவ்வளவு நாள் நினைசுகிட்டு இருந்தேன்...ம்ம்ம்ம் ஒரு வேளை பட்ஜெட் PROBLEM யாக கூட இருக்கலாம். நாவலை படிச்சு பார்க்கணும்.

நான் சரித்திரம் படிச்ச வரைக்கும் இந்த மாதிரியான மலைக்கள்ளன் ஆட்கள் நிறைய இருந்திருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ராஜ்யத்தை எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்வதே வேலையாக இருந்திருக்காங்க. அவர்களை தவிர்த்து பல திருட்டு கோஷ்டிகளும் இருந்திருக்காங்க. பைக் ன்னு ஒன்னு இருந்த கார் ன்னு ஒன்னு இருக்க தானே செய்யுது. (பழமொழி சொன்ன அனுபவிக்கணும் ஆராய கூடாது.)

5 comments:

shortfilmindia.com said...

புதிய படம் விமர்சனம் தூள்.. டிக்கெட் கிடைக்காமல் அல்லாடுகிறேன் உடனே ஏற்பாடு செய்யவும்..

கேபிள் சங்கர்

Anonymous said...

"படத்துக்கு வசனம் எழுதிருப்பது ..... கருணாநிதி (இப்படி தானுங்க டைட்டில் கார்டு ல வருது .....ஹலோ திமுக BROTHERS AND SISTERS டென்ஷன் வேண்டாம்....நான் இலக்கியவாதி இல்லை ). பொதுவா இவரு வசனம் எழுதின்ன படத்தையெல்லாம் பார்த்தால், ஹீரோ ஒரு நேரம் வரைக்கும் ரொம்ப சாதாரணமா பேசிகிட்டு இருப்பாங்க, ஆனா என்ன ஆகும்ன்னு தெரியல திடிர்ன்னு பேதி கண்ட மாதிரி சுத்த தமிழ் ல பேச ஆரம்பிச்சுடுவாங்க, பிறகு இரண்டு நிமிஷம் கழிச்சு சாதாரண தமிழுக்கு u turn அடிச்சு வந்துருவாங்க. அது ஏன்ன்னு எனக்கு புரியல."

ரைட்டு.... திமுக ஆபீஸ் ல இருந்து ஆட்டோ வரும் சத்தம் கேட்குதுங்க ...

வால்பையன் said...

பாகவதர் நடித்த ஹரிதாஸ் பட விமர்சனம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

Karthik said...

நல்ல விமர்சனம். :))

ஹேமா said...

ரொம்பப் பழைய படம் போல இருக்கு மேவி.பார்க்கிற ஆர்வம் வரல.இந்தப் படங்கள் பார்க்க நிறைய நேரம் ஒதுக்கணும்.அதுவும் கஸ்டம்.

Related Posts with Thumbnails