Pages

Monday, July 12, 2010

கலவை - இலக்கிய ஸ்பெஷல்


எனக்கு இன்னும் மதராசபட்டினம் HANGOVER போகல போல் இருக்கு. இன்னைக்கு மவுண்ட் ரோடுல ஒரு CALL முடிச்சிட்டு பஸ் ஏறி சென்ட்ரல் போனேன். அந்த ஏரியா முழுக்க பரிதி ஏமி எங்க எங்க போய் இருப்பாங்கன்னு யோசிச்சிட்டே சுத்திகிட்டு இருந்தேன்...அந்த ஏரி, சென்ட்ரல் ஸ்டேஷன் முகப்பு, கிளோக் ரூம்..... பொன்னியின் செல்வனுக்கு அப்பரும் என்னை இப்படி யோசிக்க வைச்சது இந்த படம் தான். MOST HAPPENING MOVIE OF RECENT TIMES ..... வாய்ப்புக்களே இல்லை.....பரிதி ஏமி காதலை வியக்க துடங்கி விட்டேன்...ஏமி ஐ லவ் யூ. கட்டாயம் இந்த படத்தை இன்னொரு வாட்டி பார்க்க போறேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.(பாவி பய பரிதி ஏமிக்கு ஒரு LIP KISS கூட தரமா விட்டுட்டானே)

= = = = =

என் கூட வேலை பார்க்குற ஆடு ஒன்னு John Grisham எழுதின நாவலை படி படின்னு இம்சை பண்ணிகிட்டே இருக்கு. அவர் அப்படி என்ன தான் எழுதி கிளிச்சி இருக்கார்ன்னு பார்க்க ஆசைய இருக்கு. ஏற்கனவே அரிப்பு எடுத்து DAN BROWN எழுதின THE LOST SYMBOL படிச்சதே இன்னும் ஜீரணம் ஆகல ..இதற்குள்ள இது வேறயையான்னு வெறுப்பா இருக்கு.

அதே மாதிரி என்னோட அண்ணனும் TO KILL A MOCKINGBIRD யை படிக்க சொல்லிகிட்டே இருக்காரு. நானும் அதோ படிக்கிறேன் இதோ படிக்கிறேன்ன்னு டாபசிகிட்டே இருக்கேன். அது வேற புல்லு புடுங்குற Pulitzer Prize வாங்கி இருக்காம். 1960 ல. ..... பார்போம்.

= = = = =
எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த RUSKIN BOND பைய புள்ள மேல ஒரு தனி attachment தான், ஏன்னு தெரியல. ஸ்கூல்ல அவரோட கதைகளை படிச்சது கூட ஒரு காரணமா இருக்கலாம். இவரு குழந்தைகளுக்குன்னு எழுதபடுற கதைகளுல SPECIALIST யாம். இவரோட BOOKS எது முதல படிக்கலாம்ன்னு தெரியல. யாருக்காச்சு தெரிஞ்ச சொல்லுங்க ப்ளீஸ். இன்னைக்கு இவரோட Unforgettable People ங்குற புஸ்தகத்தை பார்த்தேன். கொஞ்சம் புரட்டி பார்த்ததுல. மனுஷன் நல்லாவே எழுதிருக்காரு. WIKI ல இவரை பத்தி இதை எழுதி முடிச்சதும் படிக்கணும்.

= = = = =

இந்த WEEKEND ல நம்ம ராம்கோபால் வர்மா ஓட SARKAR படத்தை YOUTUBE ல DOWNLOAD பண்ணி பார்த்தேன்..... முடிவு மட்டும் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. மத்த நேரம் எல்லாம் தூங்கி தூங்கி தான் பார்த்தேன்....

ஆனா அன்னைக்கே இன்னொரு இந்திய இங்கிலீஷ் குறும்படத்தை பார்த்தேன்...கதை அருமையா இருந்துச்சு..ஆனா MAKING தான் செம சொதப்பல். ...

= = = = =

ரொம்ப நாள் முன்னாடி வாங்கி போட்ட சுஜாதாவோட கொலையுதிர் காலத்தை போன சனிகிழமை தான் படிக்க முடிஞ்சது. சும்மா சொல்ல கூடாது மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இத சின்ன வ்வயசுல பொதிகைல சீரியல்ஆ பார்த்து இருக்கேன்...அதை பார்த்துட்டு கதை மொக்கையா தான் இருக்கும்ன்னு முடிவு பண்ணி படிக்காம இருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு படிச்சு முடிச்ச அப்பரும் தான் தெரிஞ்சுது.
அதே மாதிரி தல எழுதின கரையெல்லாம் செண்பக பூ வாங்கி வைச்சு இருக்கேன் ...அதை படிக்க தான் நல்ல நேரம் பார்த்துகிட்டு இருக்கேன்....

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா சுஜாதாவோட மர்ம கதைகள்ன்னு புக் வாங்கினாரு..படிக்க கேட்டேன் ; ஆனா எனக்கு தர்ம துபாய்க்கு எடுத்துகிட்டு போயிட்டாரு. அதனால் கொஞ்சம் கோவமா இருந்தேன்....இந்த வாரத்துல அதை அனுபுறேன்ன்னு சொல்லி என்னை COOL பண்ணிட்டாரு.

இந்த மாசம் புதுமைபித்தனோட மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பையும் சாகி எழுதின சிறுகதை தொகுப்பையும் எப்படிபட்டாச்சு வாங்கி படிச்சுருனும்ன்னு முடிவு கட்டி இருக்கேன்..பார்க்கலாம். அதற்க்கு முன்னாடி D. H. Lawrence ஓட ஒரு நாவலையாச்சு படிச்சு முடிக்கணும்.

= = = = =


கொஞ்ச நாள் முன்னாடி அத்தை பையனை பார்க்க போன போது ...அவன் ROMAN HOLIDAYS ன்னு ஒரு படத்தை போட்டு காட்டினான். கதைன்னு பெருசா இல்லை.... ஆனா எடுத்து இருக்குற விதம் அருமையா இருக்கு. அதுவும் அந்த கடைசி சீன்ல வர CAMERA ANGLE .....ஒரு அழகிய கவிதை மாதிரி இருக்கும்.

= = = = = =

இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்குங்க ஆனா எழுத தான் முடியல. இலக்கிய ஸ்பெஷல்ன்னு லேபல் வேற போட்டுட்டேன்ல அதான், அதை எல்லாம் எழுதலாமான்னு சந்தேகமா இருக்கு. நீங்க என்னன்னா புஸ்தகம் படிக்கிறீங்கன்னு பின்னோடதுல சொல்லுங்க. நான் நாடகம்ன்னு பார்த்த நம்ம மெரீனா எழுதின மாப்பிளை முறுக்கு தான் படிச்சேன்.

அதே மாதிரி நம்ம பால சந்தர் எழுதின ஒரு நாடகத்தையும் படிச்சேன். சிரிப்பு நாடகம். விகடன் பிரசுரம் தான். ரைட்டு/....

= = = = =

செம்மொழி மாநாட்டை நான் டிவில கொஞ்சம் பார்த்தேனுங்க. அதுவும் பட்டிமன்றம். அதிலையும் நல்ல சொம்பு அடிச்சாங்க. அதுவும் எஸ்வி சேகர் - செம சிரிப்பு போலீஸ் மாதிரி பேசினாரு. அதுக்கு அப்பரும் நான் அதை நான் பார்க்கவே இல்லை.


= = = = =


இந்த குறும்படத்தை பத்தி நான் ஒன்னும் சொல்லல ..நீங்க உங்க கருத்தை சொல்லுங்க

7 comments:

Karthik said...

ஸப்ப்பா மூச்சு வாங்குது. :)

மதராசப்பட்டினம் இனிமேத்தான் பார்க்கணும். எதிர்பார்ப்புகளை எகிர வெக்காதீங்க.

The Associate by John Grisham மட்டும் படிச்சிருக்கேன். பிடிக்கல. வேற என்ன படிக்கலாம்? To kill a mocking bird அமெரிக்கால ஸ்கூல்ல கட்டாயப்படுத்தி படிக்க வக்கற புக்காம். டைம்ல சொல்லிருக்காங்க. பாருங்க.

காட்பாதர கேவலப்படுத்திருப்பார் சர்க்கார்ல. அந்த லூஸுத்தனமான காமிரா ஆங்கிள்ஸ் ஆர்ஜிவியோட ஸ்டாண்டர்ட் ஆயிடுச்சு இப்ப. :(

கொலையுதிர் காலம். என்ன ஒரு செக்ஸியான தலைப்பு. படிக்கலாம் போலிருக்கே.

DH Lawrence ஸா? பெரிய ஆளுதான். க்ளாஸிக் எல்லாம் முடியாதுங்க.

பொன்னியின் செல்வன் எப்போ முடிப்பேன்னு தெரியல. Inheritance of loss வேற போய்ட்டு இருக்கு.

Karthik said...

That was perhaps the longest comment i have ever dropped. :)

வால்பையன் said...

படிப்பவன் இலக்கியவாதியா,
படைப்பவன் இலக்கியவாதியா!?

pinkyrose said...

மேவி அய்யா,
தாங்கள் நலமுடன் உள்ளீர்களா?

எப்டி தான் இவ்லொ எழுதுரீங்களோ?!

பாட்டிய சுத்தி போட சொல்லுங்க

ஆன என் பதிவ மட்டும் படிக்கவே படிக்கதிங்க...
---இப்படிக்கு பிங்கி

டம்பி மேவீ said...

@ கார்த்திக்

"ஸப்ப்பா மூச்சு வாங்குது. :)"


எத்தனை ரூபாய்க்கு தம்பி ??

"மதராசப்பட்டினம் இனிமேத்தான் பார்க்கணும். எதிர்பார்ப்புகளை எகிர வெக்காதீங்க. "


கட்டாயம் பாருங்க. ஆனா உலக சினிமா பார்த்து பழகி விட்ட உங்களுக்கு இது பிடிக்குமான்னு தெரியல தம்பி

"The Associate by John Grisham மட்டும் படிச்சிருக்கேன். பிடிக்கல."


அதை இன்னைக்கு கடைல பார்த்தேனுங்க


"வேற என்ன படிக்கலாம்?"


அது தெரிந்தால் சொல்லமாட்டேனா


"To kill a mocking bird அமெரிக்கால ஸ்கூல்ல கட்டாயப்படுத்தி படிக்க வக்கற புக்காம். டைம்ல சொல்லிருக்காங்க. பாருங்க."


லிங்க் தந்தால் படிப்போம்ல

"காட்பாதர கேவலப்படுத்திருப்பார் சர்க்கார்ல. அந்த லூஸுத்தனமான காமிரா ஆங்கிள்ஸ் ஆர்ஜிவியோட ஸ்டாண்டர்ட் ஆயிடுச்சு இப்ப. :("


பாஸ் இப்பான்னு இல்லை ...சத்யா படத்துல இருந்தே அவருக்கு இதே வழக்கமா போயிருச்சு

"கொலையுதிர் காலம். என்ன ஒரு செக்ஸியான தலைப்பு. படிக்கலாம் போலிருக்கே."


படிக்கலாம் ...படிச்சு பாருங்க பிறகு சுஜாதாவை பற்றி எழுதலாம்

"DH Lawrence ஸா? பெரிய ஆளுதான். க்ளாஸிக் எல்லாம் முடியாதுங்க. "


அதை யார் சொல்லுறது .....

"பொன்னியின் செல்வன் எப்போ முடிப்பேன்னு தெரியல. Inheritance of loss வேற போய்ட்டு இருக்கு."


பொன்னியின் செல்வன் ரசிச்சு படிக்க வேண்டிய நாவல்ப்பா ...அவசரம் இல்ல ...பொறுமையா படிங்க

@ karthik - i know that :)

டம்பி மேவீ said...

@ ஹேமா :


"காணொளி ரொம்பக் கொடுமை."


ஆமாங்க ...
"ஆனாலும் அவங்களுக்குப் பிடிச்சிருக்கு.நாங்க சொல்லக்கூடாது மேவீ."


சரி தானுங்க ...ஆனா அதை அவங்க விரும்பி செய்றங்களா ன்னு நமக்கு தெரியாதே


"ஒரு பொண்ணு தன்னை அலங்காரம் பண்றதை நீங்களும் பாத்து எங்களையும் பாக்கச்சொல்லிப் பதிவாப் போட்டதுக்கு...!"


ஹேமா ...எத இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ...இப்படி எல்லாம் வம்பு பண்ண கூடாது

"சரி...உங்க பொண்ணு பார்க்கும் படலம் எப்பிடிப் போகுது ! "


நீங்க வேற ...ஜாதி மலர் ல மணமகள் தேவை ங்கிற பகுதில என் பெயர் வந்துருச்சுங்க

டம்பி மேவீ said...

@ வால்பையன் : படிப்பவனால் தான் படைப்பவன் ; படைப்பவனால் தான் படிப்பவனும் உருவாகிறார்கள்

@ பிங்கிரோஸ் : தங்களது பதிவை தான் தவறாமல் படித்து விடுவேன்..நேரம் இருப்பின் பின்னோட்டம் அல்லது கும்மி அடிப்பேன். எனக்கு பாட்டி இல்லைங்க ...நான் சின்ன வயசாய் இருக்கும் பொழுதே அவங்க இறந்து போயிட்டார்கள்

Related Posts with Thumbnails