Pages

Monday, July 19, 2010

கலவை - நன்றி ஸ்பெஷல்


ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, இந்த பிளாக் ஆரம்பிக்கும் போது கூட இதுல நான் என்ன எழுத போறேன்ன்னு தெரியாம தான் ஆரம்பிச்சேன். முதல இங்கிலீஷ் ல தான் ஆரம்பிச்சேன்...கொஞ்சம் கதை நிறைய மொக்கைன்னு அது பாட்டுக்கு நல்ல தான் போயிட்டு இருந்துச்சு. நம்ம வானவில் வீதி கார்த்தியோட பிளாக், வெட்டிவம்பு விஜயோட பிளாக் ன்னு படிச்சிட்டு நானும் தமிழ் ல எழுத ஆரம்பிச்சேன்.

ஏதோ தானோன்னு எழுதினேன், அப்பருமா கொஞ்சம் கொஞ்சம் எழுத்து பிழையை குறைச்சிகிட்டு.... ம்ம்ம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்ப பார்த்த தினசரி வாழ்க்கைக்கு 100 followers + google reader ல 135 பேரு. அப்பரும் மேவியின் பகிர்வு பிளாக்கு ஒரு 20 followers + google reader ல 25 பேரு ...... நான் எழுதுறதை / மொக்கை போடுறதை படிக்குறாங்க ....சந்தோஷமா இருக்கு (நான் கணக்குல கொஞ்சம் weak ங்க....சரியாய் சொல்லி இருக்கேனான்னு தெரியல)

பொதுவா எனக்கு மொக்கை போடுறது ஒன்னும் புதுசு இல்ல. ஏன்ன நம்ம பொழப்பே அது தானே. மார்க்கெட்டிங் ....

சரி சரி ..... கடைசியா ஒன்னு சொல்லிக்குறேன் .... பிரபலங்கள் மாதிரி நான் சேர்த்த கூட்டம் இல்ல ..அதுவா சேர்ந்த கூட்டம். இவங்க எவ்வளவு பேருக்கு பின்னோட்டம் போட்டு இருப்பேன்னு தெரியல.

யாராச்சு நான் பின்னோட்டம் போடுறது இல்லைன்னு வருத்த பட்டீங்கன்ன சொல்லுங்க .....ப்ளீஸ்.

(அட google ல search options ல கூட நம்ம பிளாக் வருதுன்னு கேள்விபட்டேன் பாஸ்....)
= = = = =

பிங்கிரோஸ்ன்னு ஒரு பதிவாளர் புதுசா பூக்களின் நந்தவனம் ங்கிற பெயர்ல பதிவெழுதிட்டு வராங்க....சின்ன பொண்ணுன்னு நினைக்கிறேன்....நல்ல எழுதுறாங்க, அதுவும் ரிசல்ட் வந்தவுடன் ன்னு கவிதை எழுதி இருக்காங்க...அருமையா இருக்கும். நல்ல யோசிக்குறாங்க. வாழ்க்கைல அவங்க பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துங்க


= = = = =


VIKAS SWARUP எழுதின SIX SUSPECTS ன்னு நாவல் செம கிரைம். அந்த நாவல் இப்ப expiry date தாண்டி போயிருச்சு, அதனால அந்த கதையை பத்தி நான் ஒன்னும் சொல்லல. அந்த நாவலோட தமிழ் மொழிபெயர்ப்பு இப்ப ஜூனியர் விகடன் ல தொடர வாரம் இருமுறை வருது. இதுல என்ன விஷயம்ன்ன இந்த நாவலோட ஆங்கில வடிவத்துல நிறைய கெட்ட வார்த்தை வரும். அதையெல்லாம் எப்புடி தமிழ்ல மொழிபெயர்க்க போறாங்களோ ???? (செம்மொழியான தமிழ்மொழி ல வார்த்தைகள் இல்லாமலா இருக்கும்)

= = = = =

நேத்து தினகரன் நியூஸ்பேப்பர் சைட் ல உலாவிட்டு இருக்குற போது அங்க புத்தகம்ன்னு option இருந்துச்சு. அட பரவால்லையே இவங்க கூட இலக்கிய சேவை செய்றாங்களேன்னு அதிர்ச்சியாகி கிளிக் பண்ணி உள்ளே போய் பார்த்த...அந்த கொடுமையை நீங்களே இங்கே போய் பாருங்க .....

= = = = =

CHETAN BHAGAT ...இவரோட நாவல்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் 5 poinT someone ங்கிற அவரோட ....close to my heart ன்னு சொல்லலாம். இவரு வந்து times of india ல columns எழுதிகிட்டு இருக்காரு. பொதுவா நான் அதையெல்லாம் அவ்வளவா படிக்கிறதில்ல. இருந்தாலும் விதி வலியதுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி இவரோட column ஒன்னை படிச்சேன்.... சிறு பிள்ள தனமா இருந்துச்சு.சரி நமக்கு தான் அப்படி தோணுதன்னு சந்தேகமா நண்பன்கிட்ட படிக்க சொன்னேன். அவனுக்கும் அதே தோனுச்சு.

ஒரு வேளை நான் அவ்வளவு பெரிய அறிவாளியா ; இல்லை அவரு அவ்வளவு முட்டாளான்னு தெரியல.= = = = =

MERE BAAP PEHLE AAP ன்னு ஒரு ஹிந்தி படத்தை இந்த சனிகிழமை பார்த்தேன். படத்தை பார்க்க முக்கிய காரணமே பிரியதர்ஷன் direction ன்னு போட்டு இருந்ததால் தான். பிள்ளைங்க சேர்ந்து பெரியவங்க காதலை சேர்த்து வைப்பது தான் கதை. படத்தை பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்ல. ஒரு வாட்டி பார்க்கலாம்.

அதே பிரியதர்ஷன் ங்குற பெயருக்காக இன்னொரு படத்தையும் இந்த weekend பார்த்தேன். கோபுர வாசலிலே. சின்ன வயசுல பார்த்தப்போ எனக்கு பிடிச்சு போயிருச்சு. அதே நினைப்புல தெரிய தனமா சிடி வாங்கிட்டேன். editing ...continuity ன்னு பலது மொக்கைய தானிருக்கு. ஆனா ஒன்னு இளையராஜா பின்னி பெடல் எடுத்த படங்களில் இதுவும் ஒன்னு அதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.

அதே மாதிரி இதற்கு எல்லாம் சிகரம் வைச்சது போல 99 ன்னு ஒரு ஹிந்தி படத்தை பார்த்தேன். 1999 ல நடந்த கிரிகெட் சூதாட்டத்தை வைச்சு கஹை பண்ணி இருக்காங்க. சும்மா விறு விறுன்னு படம் போரறதே தெரியல. அதுவும் காமெடி ஒட்டியே வரும். ஒன்னும் பெரிய இலக்கிய படம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவசியம் பார்க்க வேண்டிய படம்.


= = = = =

இப்பெல்லாம் தினசரி வாழ்க்கைல ஒரு நாளுல பொலபுக்கே நேரம் சரியாய் போறதால இப்ப எல்லாம் முன்ன மாதிரி புஸ்தகம் ஜாஸ்தியா படிக்க முடியல. அதுவும் நாவல்ன்ன சுத்தம். சிறுகதைகளாச்சு கொஞ்சம் படிக்க முடியுது.

அப்படியும் நண்பர்கள் சமீபம ஒரு புஸ்தகத்தை படி படின்னு சொல்லிகிட்டே இருக்காங்க. அது INDIA ON TELEVISION .....ஒரு தலைமுறையோட யோசிக்கும் விதத்தை எப்புடி டிவி மாத்தி இருக்குன்னு சொல்லுதாம் இந்த புஸ்தகம். மேலும் இன்னும் பிற விஷயங்களையும் சேர்த்தே சொல்லி இருக்காங்க.

நான் ரொம்பவும் சுவாரசியமா படிக்குற நாவல் வகைரவையே படிக்க நேரமில்லை. இப்ப போய் இந்த புஸ்தகத்தை எல்லாம் படிக்க முடியுமா ??? யாராச்சு இதை படிச்சவங்க கிட்ட இதை பத்தி கேட்கலாம்ன்னு இருக்கேன். பிறகு பட்ஜெட் இந்த மாசம் கொஞ்சம் டைட்.


= = = = =

தேவை இல்லாத இடங்களில் எல்லாம் உங்க போன் நம்பரை எல்லாம் தராதீங்க. அது சொந்த செலவில் சூனியம் வைச்சுக்குற மாதிரி தான். அது அப்படியே telecallers கைக்கு போயிரும். ஏன் நீங்க உங்க bank ல உங்க details யை எல்லாம் தந்து இருப்பீங்கல அதையையே உங்களுக்கு தெரியாமல் அவங்களோடு tie up வைச்சுக்குற company கிட்ட தந்துருவாங்க. அவங்க அவங்க products யை sell பண்ணுறதுக்கு உங்களை இம்சை பண்ணுவாங்க.

= = = = =

பிறகு நிறைய விஷயம் இருக்கு, ஆனா ஞாபகம் தான் வர மாட்டேனுங்குது. பிறகு நம்ம நாட்டுல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் பொருளாதாரம் ஒரு முக்கிய காரணம். அதனால நம்ம தல ADAM SMITH எழுதின WEALTH OF NATIONS படிங்க. கொஞ்சம் மொக்கைய தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு நிறைய learn பண்ணி குடுக்கும்.

= = = = =

பிறகு பார்போம்

KEEP SMILING

14 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வுகள். 100க்கும் தொடர்ந்து பயணிக்கவும் வாழ்த்துகள்.

(ஆமா, குங்குமம், சிமிழ் எல்லாம் புத்தகமா தெரியலையா உமக்கு? :-)

பரிசல்காரன் said...

நல்லா இருந்துச்சு நண்பா.. புத்தகம் படிக்கறத விட்டுடாத!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்ன இத்தன புத்தகம் படிக்கிறீகளா பெரிய ஆளுதான் :)

கலக்கல் :)

நிலாவும் அம்மாவும் said...

நானும் நூத்தில ஒருத்தியா? சந்தோசம் தான்...
ரிசல்ட் வந்தவுடன் கவிதை படிச்சேன்...என்னோட புது வருஷ சபதம் மாதிரி இருக்கு.....
எனக்கு இப்போ எல்லாம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா ஒஆடுரதுநால இந்த பக்கம் எல்லாம் வர்றதுக்கு நேரம் இல்ல....உங்கள எல்லாம் மறந்துட்டேன்னு மட்டும் நினச்சுப்புடாதீக

நிலாவும் அம்மாவும் said...

அதெல்லாம் இருக்கட்டும்...எதுக்கு நடு நடுல ஆங்கிலம்?

ஹேமா said...

வாழ்த்துகள் மேவீ.எவ்ளோ வாசிச்சு வைக்கிறீங்க.யார் சொன்ன உங்க பதிவு எல்லாம் மொக்கைன்னு !என்னா நடுவில ஆங்கிலம் கலக்குது.கார்த்தி..இதையெல்லாம் கவனிக்கிறதில்லையா !

Cable Sankar said...

தம்பி. கலக்குறியேடா.. என்னா படிப்பு..என்னா படிப்பூஊஊஊஊஉஊ:)

Tamilparks said...

வாழ்த்துகள்

டம்பி மேவீ said...

@ ஆதிமூலகிருஷ்ணன் : நன்றிங்க ....அப்ப வார பத்திரிகைன்னு எதை சொல்லுவாங்க பாஸ்

@ பரிசல்காரன் : நன்றிங்க .....கட்டாயம் படிக்குரத்தை வுட மாட்டேனுங்க

@ ஜில்தண்ணி - யோகேஷ் : அப்படியெல்லாம் ஒரு தப்பான முடிவுக்கு நீங்க வந்துற கூடாது .... நான் ரொம்ப சின்ன பையனுங்க

@ நிலாவும் அம்மாவும் : அப்ப வாங்க வாங்க ..ரொம்ப கழிச்சு பார்க்குறேன் உங்கள ..நல்ல இருக்கீங்களா ??? அவங்க பிளாக் (பிங்கி ரோஸ் ) போய் நல்ல இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லுருங்க

@ நிலாவும் அம்மாவும் :
"அதெல்லாம் இருக்கட்டும்...எதுக்கு நடு நடுல ஆங்கிலம்?"

தமிழ் மொழியை நம்ம இங்கிலீஷ் மொழி கிட்ட அடகு வைச்சுடோம்ன்னு சொல்லாம சொல்லுறேனுங்க (மேவி, ஏன்னே உன்னோட தமிழ் பொங்கல் ......நீ நல்ல இருப்பே டா )

@ ஹேமா : அப்பட நீகலசு சொன்னீங்களே நல்ல எழுதுறேன்ன்னு, சந்தோஷமுங்க. பிளாகொட பெயர் தினசரி வாழ்க்கைங்க so ENGLISH WILL BE THERE >>>ஹீ ஹி ஹி ஹி

@ கேபிள்ஜி : நன்றி தல ...புத்தக வேட்டைக்கு ஒரு நாள்ல சைதை பக்கம் வரேனுங்க

@ Tamilparks : thanks

Karthik said...

ஆஹா இப்பவே ஆட்டோ சத்தம் கேக்குதே. அநேகமா விஜய் வீட்டுக்கும் போயிருக்கும்னு நினைக்கிறேன். ஏன் தல? :)

வாழ்த்துக்கள் தல. ரொம்ப சந்தோஷம். :)

வால்பையன் said...

கலக்கல் கலவை

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பா..:-)))

Vijay said...

\\வெட்டிவம்பு விஜயோட பிளாக் ன்னு படிச்சிட்டு நானும் தமிழ் ல எழுத ஆரம்பிச்சேன்.\\
இவனெல்லாம் என்னவோ எழுதறான், நாம எழுதக்கூடாதா’ன்னு தோணியிருக்குமே?? :)

டம்பி மேவீ said...

@ கார்த்திக் : உண்மையை தானே சொன்னேன் தம்பி ..

@ வால்பையன் : நன்றிங்க

@ கார்த்திகை பாண்டியன் : நன்றி தோழரே

@ விஜய் : அப்படில்லை ..... உங்க எழுத்தக்களை நான் ரொம்ப ரசிப்பேன் விஜய் ..... ஏறக்குறைய உங்களது நிறைய பதிவுகளை படிச்சிருக்கேன்

Related Posts with Thumbnails