Pages

Thursday, July 29, 2010

கலவை - பொதுவாழ்க்கை /பொது கழிப்பிடம்

ஹாய் மக்கள்ஸ் எப்புடிருக்கீங்க .... நல்ல இருக்கீங்க தானே. நமக்கு என்ன எப்பவும் போல ராஜா மாதிரி இருக்கேன். எவ்வளவு நாளைக்கு தான் வார்த்தைகளால் ஹாய் சொல்லிக்கிட்டு இருப்பதுன்னு : இந்த பதிவுல முதன் முறையாக, வேறு யாரும் சொல்லாத முறையில் ஹாய் சொல்லிருக்கேன். வேற யாரும் கையை காட்டி ஹாய் சொன்னதில்லை. .... எப்புடி நாங்களும் இலக்கியவாதி ஆகிட்டோம் ல
= = = = =
வர வர இந்த கொசு தொல்லை தாங்க முடியல. நினைச்ச பொதுவாழ்க்கைக்கு வரேன்ன்னு சொல்லுறாங்க. ஏதோ பொது வாழ்க்கைக்கு வரறது பொது கழிப்பிடம் போற மாதிரி ஆகிருச்சு.

நம்ம வைரமுத்து சார் அரசியலுக்கு வர போவதா கேள்விபட்டேன். கட்டாயம் அவரு திமுக பக்கம் தான் போவாருன்னு நினைக்கிறேன், ஏன்ன்ன அந்த அளவுக்கு சமீப காலமா கலைஞர் ஐயாவுக்கு சொம்பு அடிச்சு இருக்கார்ல. எனக்கென்னவோ இவரை விட அந்த சின்ன வயசு கவிஞர் தான் நல்ல சொம்பு அடிச்சு இருக்குறத தோணுது. பைய புள்ள செம உஷார் போலிருக்கு.

இதை விட காமெடி ....நம்ம கலைஞர் ஐயா சொல்லுறது தான் ..."தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போடுங்கள்". இவர் லெட்டர் எழுதுற வேகத்துக்கு இவரை தூக்கி வேற எங்கயாச்சு தான் போடணும். அப்படியே தூக்கி போட்டாலும், போட்டவன் கொலை கேஸ் ல மாட்டிபான், அதனால யாரும் அப்படி செய்ய மாட்டாங்க ங்குற தைரியத்துல சொல்லிக்கிட்டு இருக்காரு. ஐயா மக்கள்ஸ் ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டாங்க. அதனால எதை பேசுரதுனாலும் அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க. பதவிக்காக திமுக மக்கள்ஸ் யே அப்படி செய்தாலும் செய்வாங்க. be carefull ....நான் உங்களை சொன்னேன்.
(இதை எதிர்த்து பின்னோட்டம் போடுறவங்களுக்கு பெண் சிங்கம் பட திருட்டு சிடி அனுப்பி வைக்க படும்)
= = = = =
தமிழ் நாட்டுல திரும்பவும் மதுவிலக்கு கொண்டு வர்றதை பத்தி யோசிசுகிட்டு இருக்காங்க ( செய்தி - இன்றைய தினகரன்).... அப்படியே கொண்டு வந்துட்டாலும் அந்த காலம் மாதிரி சரக்கு அடிக்குறதுக்கு லைசென்ஸ்ன்னு அதிக காசு பிடிங்கினாலும் பிடுங்குவாங்க. என்ன ஒன்னு அப்ப பாண்டிச்சேரி பஸ் டிக்கெட் விலை ஜாஸ்தி ஆகிடும்.
= = = = =
அனந்தபுரத்து வீடு படத்தை போன வாரம் பார்த்தேனுங்க. படம் செம கிளாச்சிக். வழக்கமா பேய் படம் என்றாலே ஒரு பேய் இருக்கும் அத சுத்தி கதை இருக்கும். ஆனா இதுல அப்படி இல்ல ..... படத்துல பேயையும் ஒரு கதாபாத்திரமாக காட்டி இருக்காங்க. அதுவும் எல்லோரையும் விட அந்த சின்ன பையன் சூப்பரா நடிச்சு இருக்கான். ஒரு காட்சி ல ஆச்சரியத்தை கண்ணுல காட்டுறான் பாருங்க... படத்தை நல்ல என்ஜாய் பண்ணினேனுங்க. ஆனா இந்த கதைக்கு பாட்டே தேவை இல்லைங்க.... பாட்டெல்லாம் இல்லாம இருந்திருந்த நல்ல இருந்திருக்கும்.
= = = = =
Bhopal Gas Tragedy - நினைச்சு பார்க்கவே முடியாத அளவுக்கு இந்தியாவுல நடந்த கொடுரம். ஆனா என்ன விஷயமுன்ன பொதுமக்கள் நிறைய பேர் போற போக்குல பாதிக்கபட்ட மக்கள்ஸ் க்கு அதரவு சொல்லிட்டு போறாங்க. யாருமே தீவிரமான குரல் குடுக்குறதில்ல. அப்பட்டியே போன கொஞ்ச நாள் ல எல்லோரும் இதை மறந்து போயிருவாங்க..... "மறதி நம்ம தேசத்தோட மிக பெரிய வியாதி"....

இன்னொரு விஷயம் நம்ம மக்கள்ஸ் க்கு எப்பவுமே பாதிப்பு வந்த தான் அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க .... யாருக்கும் precautionary activities பத்தி யோசிக்குறதே இல்ல. இன்றைய நாளுல இந்த சம்பவம் மாதிரியே பல இடங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு இயற்க்கை விழிப்புணர்வு அறிக்கை சொல்லுது.

(ஆப்பு ங்குறது மக்களுக்கு யாரும் தேடி வந்து வைக்குறது இல்ல ...அவன் அவன் அவனே தேடி போய் அது மேல உட்கார்ந்துக்குறான்)
= = = = =
நாவல் ங்குற வகை ல மகாபாரதுல வர விராட பருவம் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க. அந்த ராஜா அரண்மனை ல எல்லோரும் மறுவேஷதுல இருந்துகிட்டு .....பிறகு ஆர்ஜுன், பீமன் ன்னு சாகசம் காட்டுறதுன்னு : செம விறுவிறுப்பா போகும். இந்த CONCEPT யை உருவி தான் பல படங்கள் வந்திருக்கு ....குறிப்பா கமல் நடிச்ச காக்கிசட்டை....
= = = = =
கார்த்திகை பண்டியானோட நான் பொருளாதாரம், கல்வி, உலக அரசியல்ன்னு நிறைய பேசுவேன்....அவரும் பொறுமையா கேட்கிட்டு இருப்பாரு. எல்லாம் பேசி முடிச்ச உடனே இதையெல்லாம் ஒரு பதிவு போடுங்கண்ணேன்னு அடிக்கடி சொல்லுவாரு. நானும் சரிண்ணே போடுறேன்னே ன்னு சொல்லிகிட்டே இருப்பேன்.

அப்படியே நான் அதை பத்தி எழுதினாலும் .... கொஞ்சம் பின்னோட்டம் , நிறைய ஹிட்ஸ் , கொஞ்சம் VOTE தான் கிடைக்கும், பிறகு அதை பத்தி இந்த சமுதாயம் மறந்துரும். அதனால என்ன உபயோகம்ன்னு நிறைய யோசிச்சு இருக்கேன். பிறகு அதை எல்லாம் எழுதுவதற்கும் நமக்கு டைம் இல்லைங்க ......
"இல்லண்ணே நீங்களே எழுதுங்க ..நிறைய படிப்பாங்க"ன்னு சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்த...

உடனே அவரு ...."நீங்க எழுதுங்க அப்ப தான் நல்ல இருக்கும்" அப்படின்னு சொல்லுறாரு. (இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்புது ??)

= = = = =

பிராத்தனை கூட்டத்துக்கு வரேன்னு சொன்ன ஆளு வரல ங்கிறதுக்காக ஒரு ஆடு என்னை கூட்டிகிட்டு அங்க போய் உட்கார வைச்சுருச்சு. சரின்னு நான் பொறுமையா கேட்கிட்டு இருந்தேன். ஒரு சமயத்துல அந்த மத போதகர் ஒரு பொய் சொன்னாரு .... உடனே நான் உண்மைய சொல்லலாம்ன்னு ஆரம்பித்த போது ...உடனே அந்த ஆடு இரண்டு வெங்காய ரவா தோசை வாங்கி தரேன் பேசாம இருக்குன்னு சொல்லிருச்சு ...நானும் ஒன்னும் பேசல. நமக்கு கொள்கையை விட ரவா தோசை தானே முக்கியம்......

= = = = =

8 comments:

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

வெங்காயரவா தோசை கிடைத்ததா இல்லையா?

கார்க்கி said...

//பொருளாதாரம், கல்வி, உலக அரசியல்ன்னு //

என்ன கொடுமை சார் இது??

அப்புறம் ஆனந்தபுரத்து வீடு கிளாசிக்கா? சாமீ...

//ராஜா மாதிரி இருக்கேன்/

23ம் புலிகேசி என்ர ராஜா ஒருவன் வாழ்ந்து வந்தான்

//வர வர இந்த கொசு தொல்லை தாங்க முடியல. நினைச்ச பொதுவாழ்க்கைக்கு வரேன்ன்னு சொல்லுறாங்க. ஏதோ பொது வாழ்க்கைக்கு வரறது பொது கழிப்பிடம் போற மாதிரி ஆகிருச்சு./

1..2..3.. அந்த மூணாவது அவ்ரிஅல் ஒரு ரெண்டு ஆக 5.. அப்புறம் கடைசி வரில...

ஆவ்வ்வ்வ்வ்

ஹேமா said...

கடைசியா சொல்லி முடிச்சீங்களே மேவீ.அதுதான் சரி !

வால்பையன் said...

//நமக்கு கொள்கையை விட ரவா தோசை தானே முக்கியம்..//


யாரந்த ஆடு?

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நல்லவருண்ணே நீங்க... எவ்ளோ பெரிய விஷயத்த எல்லாம் சாதாரணமா சொல்றீங்க.. ஒழுங்கா அதை எல்லாம் எழுதுங்கப்பு..

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் கொத்து செய்திகள்...

டம்பி மேவீ said...

@ எஸ்.கிருஷ்ணமூர்த்தி : கிடைச்சுது கிடைச்சுது ....படுபாவி பைய ஒன்னே ஒன்னு தான் வாங்கி தந்தான் சார்

@ கார்க்கி :

"//பொருளாதாரம், கல்வி, உலக அரசியல்ன்னு //

என்ன கொடுமை சார் இது??"
அதுதானே எனக்கு புரியல ...இன்னும் இந்த சமுதாயம் நம்மகிட்டயிருந்து எதையோ எதிர்பார்க்குது போல ...... அன்றொரு கம்பர் தமிழுக்கு ..இன்றொரு மேவி

"அப்புறம் ஆனந்தபுரத்து வீடு கிளாசிக்கா? சாமீ..."

சாமிபட சிடி அன்னைக்கு கிடைக்கலன்னு தானே சார் இந்த சினிமாவுக்கு போனேன்

"//ராஜா மாதிரி இருக்கேன்/

23ம் புலிகேசி என்ர ராஜா ஒருவன் வாழ்ந்து வந்தான்"

பாஸ் நாங்களும் சரித்திரத்தை நக்கி பார்த்திருக்கோம்

"//வர வர இந்த கொசு தொல்லை தாங்க முடியல. நினைச்ச பொதுவாழ்க்கைக்கு வரேன்ன்னு சொல்லுறாங்க. ஏதோ பொது வாழ்க்கைக்கு வரறது பொது கழிப்பிடம் போற மாதிரி ஆகிருச்சு./

1..2..3.. அந்த மூணாவது அவ்ரிஅல் ஒரு ரெண்டு ஆக 5.. அப்புறம் கடைசி வரில...

ஆவ்வ்வ்வ்வ்"

same ஆவ்வ்வ்வவ் here

டம்பி மேவீ said...

@ ஹேமா : ஆமாங்க ...... நீங்க எனக்கு இரண்டு மசால் தோசை வாங்கி தாங்க ..காந்தியை சுட்டது திருவள்ளுவர்ன்னு கூட நான் சொல்லுவேனுங்க

@ வால்பையன் : அந்த ஆடா...அது நம்ம கூட படிச்சது ..ரொம்ப பக்திமான் ..

@ கார்த்திகை பாண்டியன் : சரி சரி எழுதுறோம் ..... நோ டைப் அடிக்கிறோம் ..நான் இலக்கியவியாதி ல எதை சொன்னாலும் சரியாக தப்பா சொல்லுவோம்

@ அப்பாவி தங்கமணி : ரொம்ப நன்றிங்க ...என்னொன்னு செய்திகள் வசிப்பது மேவின்னு தான் போடல

Related Posts with Thumbnails