Pages

Sunday, August 1, 2010

டிவிட்டரும் நானும் - ஒரு கோங்க தனமான பார்வை



என்னங்க எப்புடி இருக்கீங்க ??? சதோஷமா இருக்கீங்களா ???? நான் நலமுங்க.

வழக்கம் போல நான் என்னோட அண்ணனை பார்த்துட்டு தான் டிவிட்டர் ல அக்கௌன்ட் ஸ்டார்ட் பண்ணினேனுங்க. அப்பரும் இந்த பதிவுக்குள்ளர போறதுக்கு முன்னாடி என்னோட ட்விட்டர் ஐடி இது தானுங்க
http://twitter.com/mayvee . எதுக்கு சொல்லுறேன்ன எல்லமொரு எச்சரிக்கைக்கு தான். பிறகு அங்க வந்து என்னோட டிவிட்களை படிச்சிட்டு கடுப்ப்ஸ் அப் இந்தியாவாக கூடாதுல அதுக்கு தான். இங்குன்ன இருக்குறது போல அங்கன்னையும் ஒன்னும் உருபடிய எழுதுறது இல்லைங்க. அது சரி நானெல்லாம் எக்ஸாம் பேப்பர் லையே ஒன்னும் பெரிய எழுதினதில்லை :).....


JACK DORSEY _EVAN WILLIAMS _BIZ STONE ...... இந்த மூணு பைய புள்ளைங்க தான் இந்த கும்மி தளத்தை கண்டுபிடிச்சு இருக்காங்க. இதுல என்ன விஷயம்ன்ன ஓசில கிடைக்குதேன்னு டிவிட்டர் கணக்கை ஆரம்பிச்சிருக்கும் பல இலக்கியவாதிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. ஏன் இந்த பதிவை எழுதுற வரைக்கும் எனக்கு கூட தெரியாதுங்க ; எல்லாம் நம்ம விக்கி பகவன் அருள் தானுங்க. நான் ஓசிக்கு பினாயில் கிடைக்குதுன்னாலே சும்மாவே ஒரு இரண்டு மூணு கிளாஸ் எக்ஸ்ட்ராவாக வாங்கி குடிப்பேன் ...ஹி ஹி ஹி ..... ஓசி ல ஒரு செர்விஸ்... சும்மா விடுவேனே. நானும் ஒரு சுப முகுர்த்த நாளுல ஒரு அக்கௌன்ட்யை ஒபீன் பண்ணிட்டோம். சரி எவ்வளவோ பொட்டிக்கடை, டீக்கடைன்னு அக்கௌன்ட் இருக்கு அதோட இதுவும் இருந்துட்டு போகட்டும் ங்கிற நல்ல எண்ணம் தான், வேற என்ன ???

டிவிட்டர் : பதிவுலகம் போலில்லாமல் ஒரு நேரடி விவாத மேடைன்னு தான் நினைச்சு வந்தேனுங்க டிவிட்டர் குள்ள. ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படியெல்லாம் இல்லைங்க. சிற்பல இலக்கியவாதிகள் சாரு, ஜெயமோகன் போன்றவர்களின் டவுசரை கிழிக்குறதில்லையே குறியா இருக்காங்க. அப்படி கிழிச்சு என்னத்தை தான் பார்க்க ஆசை படுறாங்கன்னு தெரியல சாமி. ஒரு வேலை அவங்க அவ்வளவு கவர்ச்சியா இருப்பங்களோ ??? ஜெயமோகனை நேரில் பார்த்ததில்லை ; சாருவையும் எஸ்ரவையும் நேருல பார்த்து இருக்கேன். ஆனாலும் அவங்க கிட்டயும் அவ்வளவு ஒன்னும் டவுசரை கிழிச்சு பார்க்குற அளவுக்கு ஒன்னுமில்லையே ????

இல்லாட்டி எனக்கொரு ஐடியா தோணுது .. கொஞ்சம் மொக்கை தான் என்னை மாதிரியே - அவங்க டவுசர் மாத்துற போதோ இல்லன்னா குளிக்கும் போதோ ...அந்த இலக்கியத்தின் ரகசியத்தை தெரிந்துக் கொள்ளலாம். ஹி ஹி ஹி ஹி. ஆத்துக்கும் தைரியம் இல்லாட்டி அவங்க வீட்டுல இருந்து பழசு பட்டி எதாச்சு வாங்கிட்டு வந்து தனிய ரூம்ல உட்கார்ந்துகிட்டு கிழி கிழின்னு கிழிக்கலாம்.

இன்னொரு ஆசாமி இருக்காரு ...ஸ்க்ரீன் ஷாட் எடுத்த : இலக்கண சொற்சிதிரமாகிட்டு இருக்காரு.

உங்களுக்கு எப்பவாச்சு அதித்ய சேனல் பார்த்து ரொம்ப போர் அடிச்சுதுன்ன ...இங்கன்ன வந்து இலக்கிய காமெடியை கொஞ்சம் ரசிக்கலாம்.

நான் பொதுவா சில டிவிட்டர்களின் டிவிட்டுகாக காத்திருப்பேன் ..அதையும் முக்கியமா அதிஷா, யுவகிருஷ்ணா, வினவு தோழர்கள் (அதாங்க ஐய்யர், ஐயங்கார் ஆளுங்க தப்பு செய்தால் பாப்பான் நாய்ன்னு சொல்லிட்டு, மத்த ஜாதி காரங்க செய்ஞ்ச மேட்டுக்குடி சொல்லுவாங்களே அவங்களே தான் ஹி ஹி ஹி ஹி..... நட்டார் நாய்.... தேவர் நாய் ... ன்னெல்லாம் திட்ட மாட்டாங்க போலிருக்கு) இன்னும் சிலபல டிவிடர்களின் டிவிட்களை ரசித்து படிப்பேனுங்க. அதுல கொஞ்சம் இங்கிலீஷ் ல எழுதுற டிவிடர்களும் அடக்கம்.



இந்த இங்கிலீஷ் ல எழுதுற டிவிட்டர்கள் எழுதுவது எனக்கு அப்பப்ப புரியாதுங்க (ஆமா தமிழ் ல எழுதின மட்டும் உனக்கு புரியமான்னெல்லாம் கேட்க கூடாதுங்க...நான் பாவம்).

சரி இவ்வளவும் சொல்லிட்ட ...நீ அதுல என்ன செய்றன்னு நீங்க கேட்குறது எனக்கும் நல்லாவே கேட்குதுங்க .....

பெருசா ஒன்னும் இல்லைங்க SAME MOKKAI THERE ALSO .... ஆனா இந்த சினிமா நடிகர் நடிகைங்க இருக்கங்களே (நம்ம ஊரு ஆளுங்க யாருமில்லைங்க ...எல்லாம் ஹிந்தி கார பைய புள்ளைங்க தான்) ...... பெரும்பாலும் ஆங்கில டிவிடர்களை போல போன் ல இருந்து டிவிட்டுவாங்க..... எதை எதை டிவிட்டுவதுன்னு ஒரு வகை தொகை இல்லாம .......முடியாதுங்க ....கக்கா போன கூட "am in toilet . feeling hot in anal . tight motion . see " ன்னு சொல்லிட்டு கக்காவை எல்லாம் போட்டோ பிடிச்சு போடுற அளவுக்கு WELL CONNECTED ஆ இருப்பாங்க . ஹி ஹி ஹி ஹி ......

சரி சரி ..ஓவர் குஷில ஓவர் மொக்கையாகிருச்சு போல .... இன்னும் ஒன்னு இரண்டு விஷயத்த சொல்லி கடையை கிளோஸ் பண்ணிக்குறேன்.

காலேஜ் படிக்கும் போது தான் எந்த பிகரையும் கரெக்ட் பண்ண முடியல ...சரி டிவிடர்ல எதாச்சு நடிகைகிட்ட முயற்சி பண்ணலாம்ன்னு நினைச்ச போது தான் DEEPKA PADUKONE யை FOLLOW பண்ண ஆரம்பிச்சேன். சரி அவங்க கர்நாடகான்னு தெரிஞ்ச உடனே எங்க அம்மா கிட்ட இருந்து (ஆமாங்க என்னோட அம்மா மைசூர்காரங்க) ஒன்னு இரண்டு கன்னட வார்த்தை பேச கத்துகிட்டு ...டிவிட்டர் ல தீபிகா வை கரெக்ட் பண்ணலாம் வந்த ....... பேச கத்துகிட்ட கன்னட வார்த்தைகளை எப்புடி டைப் பண்ணறதுன்னு தெரியல ...



= = = = =

ஜோக்ஸ் அபார்ட் ...இந்த சேவையை மக்களுக்கு அவங்க இலவசமா தருவதற்கு நிறைய சூது காரணங்கள் இருக்கு. என்னன்னா நீங்க டிவிட்டர் பக்கத்தை ஓபன் பண்ணினா எனக்கு தெரிஞ்சு எந்த விளம்பரமும் வராதுங்க. MARKET RESEARCH ன்னு ஒன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா ???? ஒரு நாளுல இன்னன்ன விஷயம் தான் ரொம்ப நிறைய தடவை விவாதிக்க பட்டிருக்குன்னு கம்பெனி காரங்க ஒரு ரிப்போர்ட் எழுதுவாங்க. அதை தெரிந்து கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.

மிக சமீபத்துல அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது கருத்து கணிப்புகளை டிவிட்டர் விவாதங்களை வைச்சு முடிவு பண்ணி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேனுங்க.

இதைப்பற்றி வேறு விஷயம் எதாச்சு உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்துல சொல்லுங்க.

10 comments:

ஜில்தண்ணி said...

அது என்ன கோங்கத்தனம் ????

பாசு ஒரு தடவ இந்த சின்மயி இருக்காங்கல்ல(பாடகி தான்) அவங்க ட்வீட்டுக்கு ஏதோ ரீப்லை கொடுத்தேன்

அவங்களும் அதற்கு ஏதோ பதில் சொல்லிட்டாங்க,எனக்கு ஒரே குஜாலாயிடுச்சி :)

கும்மி அடிக்க சிறந்த தளம் ட்விட்டர்

தேவன் மாயம் said...

அது சரி நானெல்லாம் எக்ஸாம் பேப்பர் லையே ஒன்னும் பெரிய எழுதினதில்லை :).....///

எல்லாத்தையும் மனசுலேயே வச்சுக்கக்கூடாது மேவி!

கிருஷ்ண மூர்த்தி S said...

ட்விட்டர் தளம் குசுகுசு, அரட்டைக்கு ஏற்ற இடம் சரிதான்! ஆனால், அதில் உங்களைப் பின்தொடர்பவர்கள், கருத்துப் பின்னூட்டம் சொல்வதை வைத்து, உங்களுடைய உண்மையான நிலையை அறிய முடியாது.

ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ ப்ளாகில் இதைப் பற்றி ஒரு அருமையான ப்ளாக் படிச்சிருக்கேன்.

அதெல்லாம் வேணாம், மேவி! இங்கே எனக்குத் தெரிஞ்சு டிவிட்டரில் ஏழு லட்சத்துக்கும் மேலே ஆதரவாளர்களைக் கொண்டிருந்த ஒரே டிவிட்டரர் சசி தரூர் தான்!

அவரைக் கவுத்து விட்டதே அந்த ட்விட்டர் ஆதரவுதான்!

இந்தியச் சூழலுக்கு ஒத்து வருகிற மாதிரி, பதிவோ, மொக்கையோ....ப்ளீஸ்!

:))

Unknown said...

நகைச்சுவையாகச் சொன்னாலும் நச்ன்னு சொல்லிருக்கிங்க

Vijay said...

நான் ஆய் போய்ட்டு அலம்பிக்கறேன்’ன்னு தான் இன்னும் யாரும் ட்வீட் பண்ணலை. ஆனால் இணையதளத்தில் சுவாரஸ்யமான லிங்குகளை பகிர்ந்து கொள்ள ட்விட்டர் ரொம்பவே வசதியா இருக்கு.

வால்பையன் said...

//நான் ஓசிக்கு பினாயில் கிடைக்குதுன்னாலே சும்மாவே ஒரு இரண்டு மூணு கிளாஸ் எக்ஸ்ட்ராவாக வாங்கி குடுப்பேன்.//

மறத்தமிழனுக்குண்டான அனைத்து குணங்களும் இருக்கே, உங்க தாய்மொழி வேறன்னு சொன்னாங்க!

வால்பையன் said...

//இதைப்பற்றி வேறு விஷயம் எதாச்சு உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்துல சொல்லுங்க.//


ஆமா சொல்லுங்க

மேவி... said...

@ ஜில்தண்ணி - யோகேஷ் : கோங்க தனம்ன்னா ஒரு அராத்து ன்னு திருச்சி பக்கம் சொல்லுவாங்க .....

நானும் சின்மயி யை try பண்ணுறேன் ....அவங்க கிட்டயிருந்து பதில் வருதான்னு பார்போம் ஹி ஹி ஹி

டிவிட்டர் ஒரு ஒ போடுங்க

@ தேவன் மாயம் : ஹி ஹி ஹி நன்றி சார்

@ எஸ்.கிருஷ்ணமூர்த்தி : ஆமா சார் ..அதுஎன்னமோ உண்மை தான் ...

என்னது ஹார்வர்ட் அஹ ??? சார் எத இருந்து பேசிக்கலாம் :)

சசி தரூர் ....ஹ்ம்ம் ஓகே ஓகே

அடுத்தது செமையான ஒரு கதை எழுத போறேனுங்க ......

@ கேவிஆர் : ரொம்ப நன்றிங்க

@ விஜய் : facebook ல அதை விட கொடூரமா status message வைக்கிறாங்க..... ஆமா பகிர்வுதன்மைக்கு ஏற்றது தான்

@ வால்பையன் : ஆமாங்க ..தாய்மொழி வேற தந்தைமொழி வேற ...நமக்கு தமிழ் வளர்ப்பு மொழி தான் .......

அப்படியும் நான் வெறும் தமிழன் தானா ? அப்ப எப்ப தான் இலக்கியவியாதி யாவது ??

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

சி.பி.செந்தில்குமார் said...

ட்விட்டர் மேட்டர் ஓக்கெ

Related Posts with Thumbnails