Pages

Wednesday, August 18, 2010

கலவை - சரக்கு ஸ்பெஷல் (ஊறுகாய் இல்லை)


நம்ம கலைஞர் ஐயாயோட கருணை மனசை நினைச்சாலே அப்படியே முடி எல்லாம் நேட்டுகிட்டு நிக்குது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வாம். கொஞ்ச நாள் முன்னாடி பெருங்களத்தூர் முத ரயில் கேட் கிட்ட ஒரு சொந்தகாரருகாக காத்துகிட்டு இருந்தேன்.அந்த பக்கம் இருந்த டாஸ்மாக் கடைய அப்ப தான் திறந்தாங்க. எங்க இருந்து தான் மக்கள் வருவாங்களோ தெரியல. மசால் வடையை மோப்பம் பிடிச்ச எலி மாதிரி ஒரு கூட்டம் ஓடி வந்தாங்க. சரி நானும் ஏதோ சாக்கடை சுத்தம் செய்றவங்க போல இருக்கு, அதான் காலையில சரக்கு அடிக்குரங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க எல்லாம் அந்த கடையோட ROYAL CUSTOMERS ன்னு பக்கத்து கடையில ஒரு ஆளுக்கு மிச்சர் பாக்கெட் இரண்டு ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் பொழுது தான் தெரிஞ்சுது. இது இப்படி இருக்க ...

ஒரு வாட்டி பக்கத்து வீடுகாரங்களுக்காக புது பெருங்களத்தூர் ரேஷன் கடைக்கு போனேன். அங்க நான் சக்கரைக்கான விலைக்காக மொத்தமா ஒரு நூறு ரூபாய் தந்தேன். கொஞ்சம் நேரம் பில் அமௌன்ட்யை எல்லாம் எழுதின பிறகு, அந்த ஆபீசர் "சார் எதாச்சு வாங்கிகோங்க..சோப்பு தரட்டுமா"ன்னு சொல்லிகிட்டே இரண்டு துணி துவைக்குற சோப் எடுத்து வைச்சு, அதையும் பில்ல சேர்க்க போனாரு. பிறகு கொஞ்சம் அதட்டி, தாஜா பண்ணி கேட்டதில், ஒவ்வொரு மாசத்துக்கும் இவ்வளவு மளிகை பொருள்களை வித்தாக வேண்டுமாம். டார்கெட்.

அதனால பொதுவாய் ரேஷன் கடைல இருக்கிறவங்க என்ன பண்ணுறாங்கன்ன , வர மக்கள்கிட்ட இந்த சோப், சின்ன கடுகு பாக்கெட் இன்னும் பிற சமஜரங்களை எல்லாம் தள்ளி விடுறாங்க. பெரும்பாலும் பெண்கள் தான் இந்த நேரத்துல வருவதல.... ரேஷன் கடைகாரங்களுக்கு வேலை ரொம்ப சுலபமா போய்விடுகிறது. அவங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லாட்டியும், வாங்கிட்டு போறாங்க ரேஷன் கடை ல இருக்கிறவங்க இம்சை தாங்க முடியாம. அப்படி போறவங்க ஒன்னும் பெரிய அளவுல வசதி படைச்சவங்க இல்லை. ஒவ்வொரு பத்து ரூபாயும் அவங்களுக்கு முக்கியம். அவங்க கிட்ட போய், கொள்முதல் செய்ஞ்ச குளிக்கிற சோப், துவைக்கிற சோப் யைஎல்லாம் ஏன் தள்ளி விடுறாங்கன்னு தெரியல.

சரி முதல் மேட்டருக்கே வருவோம் ..... வேற எந்த அரசாங்க துறைக்காவது இந்த மாதிரி குறுகிய காலத்தில் சம்பள உயர்வு கிடைச்சு இருக்கான்னு எனக்கு தெரியல. கேட்ட விற்பனை கிர்பனைன்னு ஏதேதோ சொல்லுவாங்க.

= = = = =

எந்திரன் பட பாட்டெல்லாம் வந்துருச்சு. சென்னைல எந்த ரேடியோ ஸ்டேஷன் பக்கம் திருப்பினாலும் இந்த எந்திரன் பாட்டு இம்சை தாங்க முடியல. இது பத்தாதுன்னு இந்த RJ க்கள் அதுக்கு சொம்பு அடிக்குறது சத்யமா தாங்க முடியல. இன்னொரு விஷயம் எந்திரன் பட பாட்டு எல்லாம் எனக்கு இன்னும் புரியல / பிடிக்கல. ஒரு வேளை படத்தோடு சேர்த்து பார்த்தால் பிடிக்குமோ என்னவோ. அதுவும் பட ட்ரைலர் ல ஒரு இடத்துல ஐஸ் "i am yours " ன்னு சொல்லு போது..அப்படியே அம்முது. கட்டாயம் முத நாள் முத ஷோ பார்க்கணும்.

= = = = =


புது வேலைல சேர்ந்தாச்சு. என்ன ஒன்னு முதல் முதலா வேலை செய்ஞ்ச ஆபீஸ்யை தாண்டி தான் போக வேண்டிருக்கு. பழைய ஆபீஸ்யை பார்க்கும் பொழுதெல்லாம் யாரோ மனசுக்குள்ள "அது ஒரு அழகிய கனகாலம்"ன்னு பாடுறாங்க. வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு அப்பெல்லாம். ம்ம்ம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த AUGUST 15 ல இருந்து நானும் ஒரு பொருளாதார அடிமையகுவதுன்னு முடிவெடுத்து இருக்கேன். நமக்குன்னு இல்லாட்டியும் வாழ்க்கைல சிலபல பேரை சந்தோஷ படுத்த வேண்டி இருக்கு ல ....so only this முடிவு.

= = = = =

நேத்து மதியம்... திநகர் பஸ் ஸ்டாண்ட் முன்னமே நின்னுகிட்டு இருந்தேன். ஒரே பசி. சரின்னு சாப்பிடலாம்ன்னு போன, அந்த சமயம்ன்னு பார்த்து கைல 39 ரூபாய் தான் இருந்துச்சு.(நான் எப்பவுமே நூறு ரூபாய்க்கு மேல கைல காசு வைச்சுக்க மாட்டேன்) ATM ல எடுக்கலாம்ன்னு பார்த்த, அதுக்கு அக்கௌன்ட் ல காசு இருக்கனுமாம் (என்ன கொடுமை சார் இது) ... சரி எப்படியாச்சு சமாளிச்சுரலாம்ன்னு பஸ் ஸ்டாண்ட் எதிர்க்க இருக்குற முருகன் இட்லி கடைக்கு போனேன் ....ஒரு இட்லி 6 ரூபாய் அங்க. நாலு இட்லி சாப்பிட்டுட்டு மிச்ச காசை பஸ்க்கு வைச்சுபோம்ன்னு நினைச்சேன். அப்படி உள்ள போரருதுக்கு முன்னாடி பக்கத்துல இருந்த வசந்த் விகார் ல சாப்பாடு 32 ரூபாய்ன்னு போட்டு இருந்துச்சு. இருந்த பசிக்கு சாப்பாடே சாப்பிடலாம்ன்னு உள்ள போயிட்டேன். மூணு மணி ஆகிருச்சு அப்ப, அதனால சிறப்பாக ஒன்னும் இல்லை. முக்கியமா ரசம் மிளகாய் ரசம் போலிருக்கு. செம காரம்.

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி மன்மோகன் சிங் சார் .... நக்சல் நாட்டு பாதுகாப்புக்கு இடைஞ்சலாக இருக்காங்க, அதனால விமான படைக்கு அவர்களை சுட உத்தரவு தந்து இருக்காரு.

ம்ம்ம் ... சிலபல நாள் முன்னாடி சென்னை பல்கலைக்கழகம் 150 வது வுஷம் முன்னிட்டு விழா எடுதாங்க ....அப்ப நம்ம டெல்லி ஆடுகள் வருவதற்காக ஏர்போர்ட் பக்கம் இருக்கிற ரோடு யை இரண்டு மணி நேரத்துக்கு BLOCK பண்ணிருந்தாங்க. நிறைய பேர் மாட்டிகிட்டு முளிச்சாங்க. அந்த கூடத்துல இரண்டு ஆம்புலன்ஸ் அடக்கம். இது எல்லாம் நாட்டு பாதுகாப்புக்கு ரொம்ப நல்லது போலிருக்கு, ம்ம்ம்

= = = = =

அம்மாவுக்கு நான் வெயில்ல சுத்தி ரொம்ப கருப்பா இருக்குறது கஷ்டமா இருக்கு போல .... நிறைய BEAUTY டிப்ஸ் தந்து இருக்காங்க. அது வேற இல்லன்னு கடலை மாவு, அந்த மாவு இந்த மாவு ...சீக்காய் தந்து இருக்காங்க. ம்ம்ம் என்னை ரித்திக் ரோஷன்க்கு தம்பி மாதிரி ஆக்குவது தான் அவங்க டார்கெட் போலிருக்கு.

= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியன் அண்ணா எழுதின "
தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா? " யை FRIENDSக்கு ஈமெயில் ல அனுப்பி வைச்சேன். உடனே ஒரு ஆடு போன் பண்ணி "மச்சான் இது எல்லாம் படிக்குறவங்க கவலை பட வேண்டியது ...நீ எதுக்கு இதுக்கு எல்லாம் பீல் பண்ணுற..நீ எந்த காலத்துல........" ...இப்படியே பல போன் கால்கள் ..பல பல்புகள் ..சந்தோஷமா போனது.

= = = = =

சரிங்க ...பதிவு ரொம்ப பெருசாகிருச்சு போல இருக்கு. பிறகொரு சமயம் பார்போம்.

KEEP SMILING

ENJOY LIVING

9 comments:

Jackiesekar said...

கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியன் அண்ணா எழுதின " தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா? " யை FRIENDS க்கு ஈமெயில் ல அனுப்பி வைச்சேன். உடனே ஒரு ஆடு போன் பண்ணி "மச்சான் இது எல்லாம் படிக்குறவங்க கவலை பட வேண்டியது ...நீ எதுக்கு இதுக்கு எல்லாம் பீல் பண்ணுற .." ...இப்படியே பல போன் கால்கள் ..பல பல்புகள் ..சந்தோஷமா போனது.--//

இதுதான் செம கமெடி... நல்லா எழுதி இருக்க நண்பா...

"ராஜா" said...

//அதுவும் பட ட்ரைலர் ல ஒரு இடத்துல ஐஸ் "i am yours " ன்னு சொல்லு போது..அப்படியே அம்முது.

சரியான ஆண்டி பண்டாரமையா நீர்... இருந்தாலும் அழகான ஆன்டிய!!! பாத்துதான் ஜொள்ளு விடுறீர்... ராவணன் போல பல்ப் கொடுக்காமல் இந்த படம் உம்ம எதிர்பார்ப்பை நிறைவேற்றட்டும்... (ஷங்கர் படம் கண்டிப்பா உரிச்சி காட்டுவார்)

ஜில்தண்ணி said...

ஓய் உம்ம கலவை கலக்கலா இருக்கு

எல்லாத்தையும் ரவுண்டு கட்டுறீங்க :) ம்ம்ம்ம் கட்டுங்க கட்டுங்க

வால்பையன் said...

//மச்சான் இது எல்லாம் படிக்குறவங்க கவலை பட வேண்டியது ...நீ எதுக்கு இதுக்கு எல்லாம் பீல் பண்ணுற//


உண்மைய தானே சொல்லியிருக்கார்!

கார்த்திகைப் பாண்டியன் said...

ATM எடுக்கலாம்ன்னு பார்த்த, அதுக்கு அக்கௌன்ட் ல காசு இருக்கனுமாம் (என்ன கொடுமை சார் இது) ...

:-))))))))))

தாரணி பிரியா said...

திரும்ப வேற ஆபிசா மசூர் என்ன ஆனார் மேவி :)

Saran said...

மிஸ் ஆகிட போகுது... படிச்சு வெயுங்க...

"பின்நவீனத்துவமும், மேவீயும்"

http://onlyjalli.blogspot.com/2010/08/blog-post_18.html

Saran said...

//சொல்லிகிட்டே இரண்டு துணி துவைக்குற சோப் எடுத்து வைச்சு, அத்தையையும் பில்ல சேர்க்க போனாரு.//

என்னது "அத்தையையும்" பில்லுல சேர்த்துடாரா....

மேவி... said...

@ ஜாக்கி சேகர் : ரொம்ப நன்றிங்க ....... நானே ஒரு காமெடி பீஸ் தான் பாஸ்

@ ராஜா : ஹி ஹி ஹி ஹி ஹி ......

@ ஜில்தண்ணி - யோகேஷ் : வாவ் ..தேங்க்ஸ் நண்பா ..... இன்னும் நிறைய இருக்கு ப்பா கட்டுறதுக்கு :)

@ வால்பையன் : ஆமா தோழா ..ஆனா நான் படிக்குற காலத்திலையே படிச்சது இல்லை . அதை தான் அவரு சொல்லிருக்கார்

@ கார்த்திகை பாண்டியன் : எதாச்சு சொல்லிட்டு போயிருக்கலாம் ல ...இப்படி பின்னோட்டம் போட்ட எப்படி ?????

@ தாரணி பிரியா : நான் இன்னும் கொஞ்ச நாள் அங்க இருந்திருந்தா கொலை கேஸ் ஆகி இருக்கும். மசூர் ஜெயில் பக்கம் போயிருப்பார். ஹி ஹி ஹி ஹி ..அவரை காப்பாற்றவே இந்த இலக்கிய தரமான முடிவு

@ சரண் : அண்ணே படிச்சு ...

@ சரண் : டைபிங் மிஸ்டேக் (திருச்சி பக்கம் அந்த மாதிரியும் சொல்லுவாங்க ..... இப்புடி தான் உங்களுக்கு பதில் சொல்லலாம்ன்னு இருந்தேன் )

Related Posts with Thumbnails