Pages

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - சூப்பர் திரைக்கதை

திரையில் கதநாயகன் என்ன உணர்கிறானோ அதையே ரசிகர்களையும் உணர வைக்க முடியுமா ?? முடியும் என்று காட்டி இருக்கிறார் சுசீந்திரன். இவருடைய முதல் படத்தை நான் ஒரு மொக்கை தியேட்டரில் (தாம்பரம் நேஷனல்) பார்த்தால், அந்த படம் என்னை ஒன்னும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனா இந்த படத்தை நான் தாம்பரம் வித்யாவில் பார்த்தால் : நன்றாக ரசிக்க முடிந்தது ( வேறெங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை).

LONG LONG AGO : SO LONG AGO : NOBODY KNOWS HOW LONG AGO ..... நான் ஒரு வங்கியில் ஒரு பரீட்சை எழுதிருந்தேன் அப்பருமா நானே அத பத்தி மறந்து போயிட்டேன்... நேத்து திடிர்ன்னு போன் பண்ணி offer letter வந்து வாங்கிட்டு போங்கன்னு சொன்னாங்க. வாங்கின்ன பிறகு பார்த்த .....ஏய் தண்டனக்கான் டனுக்குனக்கான். இப்ப வாங்கிட்டு இருக்குற சம்பளத்தை விட ஒரு 125 % அதிகமான சம்பளம், பதவியும் அதுக்கு எத்த மாதிரி. அது கூட எனக்கு பெரிய விஷயமா படல. சென்னை சிட்டி ல அந்த கணக்கு பரீட்சையை (NOTE THIS POINT ) எழுதினவங்க ல நான் தான் முதல் மார்க் காம். அப்படியே ஷாக் ஆகிட்டேன். அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியல. அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி இத சொன்ன "டேய் உண்மைய சொல்லுற ..நீயா கணக்கு ல அவ்வளவு மார்க் எடுத்த?" ன்னு கேட்குறாங்க. அண்ணன் கிட்ட சொன்ன OFFER LETTER யை ஸ்கேன் பண்ணி அனுப்புன்னு சொல்லுறான். சரின்னு அவங்க கிட்ட OFFER LETTER ஸ்கேன் அனுப்பின பிறகு. சந்தோஷத்தை கொண்டாடலாம்ன்னு ஸ்வீட் சாக்லேட் சாப்பிடலாம்ன்னு பார்த்த : அம்மா திட்டுவங்களோன்னு பயந்துகிட்டு சினிமாவுக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணி பார்த்த ; எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை .... சரி நேர தாம்பரம் வித்யாவுக்கு நடைய போட்டேன். சினிமாவும் பார்த்தேன்.
= = = = =
முதல ஒன்னு சொல்லிய ஆகணும், படம் ஆரம்பிச்சதும் தெரியல : முடிஞ்சதும் தெரியல, அவ்வளவு FAST ஆ போகுது படம். எனக்கு எந்த இடத்திலையும் சோர்வு வரல. கார்த்திய தவிர வேற யாராச்சு இந்த படத்தை இவ்வளவு சிறப்பா பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல. அந்த கல்யாண மண்டபத்தில் ல அந்த குறும்பு சிரிப்பு ல இருந்து, கடைசி சீன் ல அந்த ரௌத்திரம் வரைக்கும் பின்னி பெடல் எடுத்திருக்கார்.

கார்த்தி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நாலு பேர், யப்பா செம நடிப்புடா சாமி. எங்க இருந்து அவங்களை டைரக்டர் பிடிச்சாரோ தெரியல. அதுவும் பிணத்தின் தலையை வெட்டும் பொழுது அவங்க முகத்துல காட்டுற REACTION எல்லாம் செம. ஆனா டைரக்டர் அவங்களை கொண்டு நம்பள இன்னும் மிரட்டி இருக்கலாம்.
= = = = =
நான் எந்த படத்துக்கு போனாலும் முக்கியமா நான் பார்க்கிறது கவர்ச்சியான கதாநாயகியை தான். ஏன்ன படம் எவ்வளவு மொக்கைய இருந்தாலும் குடுத்த காசுக்கு திரையில் கதாநாயகியின் கவர்ச்சியை பார்த்துட்டு வரலாம் ங்கிற SIMPLE LOGIC தான். அந்த விஷயத்துல இந்த படம் மிக பெரிய ஏமாற்றம் தான். கடுகு அளவுக்கு கூட கவர்ச்சி இல்லை. சரி காஜல் அகர்வாலாச்சு தமிழ் சினிமா மார்க்கெட்யை பிடிக்க எதாச்சு முயற்சி பண்ணுவாங்கன்னு பார்த்த ...ம்ம்ம் பிழைக்க தெரியாத பிள்ளையா ல அது இருக்கு. இது பத்தாதுன்னு இரண்டு மூணு சீன் ல அவங்க முகத்துல டொங்கு விழுந்த மாதிரி தெரியுது.
= = = = =
அடடடா இன்னும் இரண்டு பேரை சொல்லிங்குகாட்டி என்னை இந்த இலக்கிய சமுதாயம் என்னை மன்னிக்காது.

நம்ம யுவன் தான் மியூசிக். பாட்டெல்லாம் நல்ல தான் இருக்கு. ஆனா வழக்கமா இந்த THRILLER படங்கள் ....பேய் படங்கள் ன்னாலே ஒரு மியூசிக் வைச்சு இருப்பாங்க ல , அதை ஏன் யுவன் சார் முதல் சீன் ல பயன்படுத்தி இருக்கார்ன்னு தெரியல. பாட்டுன்னு பார்த்த எனக்கு இந்த கார்த்தி-காஜல் அடிக்கடி செல்போன் ல பேசிக்குற பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. மத்த பாட்டு எல்லாம் என்னை அவ்வளவாக கவரல.

ஒளிப்பதிவு மதி ...... செம சேட்டைய காட்டி இருக்காரு. எப்புடி தான் சில சீன்களை எடுத்தாரோன்னு தெரியல, அம்புட்டு அழகு.
= = = = =
சண்டை காட்சிகள் இந்த படத்துக்கு மிக பெரிய பலம்ன்னு சொல்லலாம். கிளைமாக்ஸ் ல அவ்வளவு இயற்கையான சண்டை காட்சி இல்லாட்டி இந்த படத்தை நான் இந்த அளவுக்கு ரசிச்சு இருக்க முடியுமான்னு தெரியல. எனக்கே கார்த்தி சண்டை போடும் போது , நான் போய் வில்லன்கள் முகத்துல இரண்டு குத்து குத்தலாமான்னு யோசிக்கிற அளவுக்கு இருக்கு. STUNT MASTER யாராக இருந்தாலும் அவருக்கு தனி சபாஷ் (அவருடைய பெயர் யாருக்காச்சு தெரிந்த பின்னூட்டத்துல சொல்லுங்க)
= = = = =
டைரக்டர் : இவரை பத்தி என்ன சொல்லுறதுன்னே தெரியல. வழக்கமான எல்லோரும் யோசிக்க கதை தான், ஆனா இவரு கொஞ்சம் வித்த்யாசமா யோசிச்சு இருக்காரு. வழக்கமா பலி வாங்குற கதை ன்னாலே .... ஆரம்பம் முதல அதைய சொல்லி சொல்லியே கொல்லுவாங்க. ஆனா இதுல அப்படி இல்லை. வருங்காலத்தில் இவருடைய படங்கள் வந்தால் நம்பி போகலாம்ன்னு இந்த படத்தை பார்த்த பிறகு தோணுது.
= = = = =
இந்த படத்தோட ஒரிஜினல் சிடி வரும் வரைக்கும் காத்து இருக்க வேண்டாம். தியேட்டரில் பார்த்தால் தான் இந்த மாதிரியான படங்களை ரசிக்க முடியும்.

= = = = =
டிஸ்கி - படம் முடிஞ்சு வெளிய வந்து பார்த்த .... மழை ல பைக் ல மாட்டி இருந்த ஹெல்மெட் FULL ஆ ஈரம் ஆகிருச்சு. சரின்னு ஹெல்மெட் மாட்டமா பைக் ஓட்டிகிட்டு போனேன். கொஞ்ச தூரம் போன பொழுது, ஒரு போலீஸ் மாமா கிட்ட திட்டு வாங்கின பிறகு, வேற வழிய இல்லமா ....அவ்வளவு ஈரமான (உள் பக்கம்) ஹெல்மெட்யை மாட்டிகிட்டு பெருங்களத்தூர் பக்கம் கிளம்பினேன். உலக சினிமாவை பார்க்கும் பொழுது கூட இந்த அனுபவம் ஏற்படல. கட்டாயம் எனக்கு இந்த படம் ஒரு வித்த்யசமான அனுபவத்தை தந்தது. வாழ்க்கை ல மறக்கவே முடியாது.

7 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல படம் நண்பரே... இரண்டாவது பாதி அதிக விறுவிறுப்பு..

Philosophy Prabhakaran said...

உங்க பதிவ படிச்சதுக்கு அப்புறம் சில விஷயங்களை புரிஞ்சிக்க முடியுது... இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனம் எழுதியதற்காக வருத்தப்படுகிறேன்...

வால்பையன் said...

புது வேலைக்கு வாழ்த்துக்கள் தல!

ஹேமா said...

இவ்ளோ கெட்டிக்காரனா மேவீ நீங்க.வாழ்த்துகள் புது வேலைக்கு.
முதல் சம்பளம் வாங்கி ஏதாச்சும் வாங்கித் தரணும்.சரியா !

விமர்சனம் அருமை மேவீ.
இணையத்தில் தெளிவான பிரதி வரும்வரை காத்திருக்கவேணும்.

Saran said...

unga number enakku mail pannunga saran6@gmail.com

Unknown said...

stunt master- anal arasu

மேவி... said...

@ வெறும்பய : ஆமாங்க ...இரண்டுதுகும் சமந்தமே இல்லாத மாதிரி இருக்கு .... சூப்பர்

@ philosophy prabhakaran : அட விடுங்க பாஸ் ..நீங்க உங்க கருத்தை சொல்லிருக்கீங்க. why feelings of India

@ வால்பையன் : தேங்க்ஸ் தல

@ ஹேமா : அப்படியெல்லாம் ஒரு தப்பான முடிவுக்கு நீங்க உடனே வர கூடாது...ஏதோ அதிர்ஷ்டம் ..... முதல் சம்பளம் வந்த
உடனே வாங்கி தந்துட்டா போச்சு .. youtube ல சீக்கிரம் வந்துரும் ன்னு நினைக்கிறேன்

@ சரண் : mail check பண்ணி பாருங்க தல

@ பிரகாஷ் பாபு : தகவலுக்கு நன்றி தோழரே

Related Posts with Thumbnails