Pages

Saturday, August 14, 2010

THE GREAT ESCAPE (1963) - திரைபார்வை

"போர் கால கைதிகளை சித்திரவதை செய்யவோ, கொலை செய்யவோ கூடாது" - LAW OF WAR

= = = = =


1944 , GERMANY
50 போர் கைதிகளை கொண்ட அந்த லாரி பெர்லின் நகரத்தை விட்டு தள்ளி இருந்த ஓர் வெட்டவெளிக்கு வந்து நின்றது. என்ன ஏதுன்னு தெரியாமல் முழித்த கைதிகளிடம், ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் "இன்னும் போக வேண்டய தூரம் ஜாஸ்தியா இருக்கு, அதனால கொஞ்சம் கீழ இறங்கி இளைப்பாறிட்டு வாங்க". எந்த ஊர் சிறைல போட போறாங்களோன்னு யோசித்துக் கொண்டே, சோகத்திலும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டே இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு rapid gun கள் அவர்களை நோக்கி குறி வைத்தன. பத்து நிமிடங்கள் கழித்து 50 சடலங்களை விட்டுவிட்டு லாரிகளும், இராணுவத்தினரும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.

"This picture is dedicated to the fifty."

= = = = =

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், ஆனால் எங்கே கதையை கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து யாருக்கும் தராமல் இருந்தார். அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.

= = = = =
இந்த படம் எல்லா விதத்திலும் ஸ்பெஷல் தான். உண்மையை அப்படியே பிரதிபலிக்க வேண்டுமென்று சிறை கூடங்களுக்கான செட்களை, Stalag Luft III யில் கைதிகளாக இருந்தவர்களை கொண்டே வடிவமைத்தார்கள். அதே போல் தான் பிற வெளி புற காட்சிகளின் பொழுதும்.
= = = = =

தப்பித்து போகும் கைதிகளை பிடிபதற்கு நிறைய செலவு ஆகுவதால், அவர்கள் தப்பித்து போக முடியாதளவுக்கு ஒரு சிறை வடிவமைத்து : அதில் பிரச்சனை குறிய அணைத்து கைதிகளையும் போடுகிறது ஜெர்மன் ராணுவம். கைதிகள் அனைவரும் சிறு சிறு முயற்சிகள் எடுத்து தோற்று போகிறார்கள்.


சிறைக்கு மிக பக்கத்தில் காடு, இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறை அறையிலிருந்து அந்த காடு வரைக்கும் ஒரு சுரங்கபாதை ஒன்றை வெட்ட வேண்டும். ஆனால் அத்தனை சிறப்பாக ஒருங்கிணைக்க ஒரு தலைவர் இல்லை. இந்த மாதிரி சுரங்கபதை அமைப்பதில் வல்லவரான ஒருவரை அங்கிருக்கும் எல்லோரும் எதிர் நோக்கி இருக்கிறார்கள் : BIG X .

அவரும் வருகிறார். ஆனால் அவரை சிறையிலடைக்கும் முன், மீண்டுமொருமுறை அவர் தப்பிக்க முயற்சி செய்தால், சுட படுவர் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் அவருக்கோ இப்படி சிறையில் சும்மா இருப்பதை விட, போரில் நாட்டுகாக போராட ஆசை.

அன்று இரவே, ரகசிய கூட்டத்தில் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க படுகிறது. அப்படி எடுக்க பட்ட முடிவின் படி, மூன்று சுரங்கபாதை வெட்ட படுகிறது. சிறை அதிகரிகள் ஒன்றை கண்டுபிடித்தால் கூட மற்ற இரண்டில் தப்பிக்க முடியுமே என்ற முன் யோசனையில் தான். அப்படி அவர்கள் வெட்டும் பொழுது, ஒரு பிரச்சனை வருகிறது. குழியில் இருந்து வரும் மண்ணை என்ன செய்வது என்று ???

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு சுரங்கபாதை சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க படுகிறது. அதனால் மீதி இருக்கும் இரண்டு சுரங்கத்தில் ஒன்றில் மட்டும் கவனத்தை செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தி அவர்கள் சுரங்கபாதையை வெட்டி அந்த பக்கம் வெளியேறும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது, திட்டமிட்ட படி அந்த பாதை காட்டின் உள்ள போய் முடியாமல் ....முள்வேலி தடுப்புக்கு பக்கத்திலும் : காட்டுக்கு 20 அடி முன் தள்ளியும் போய் முடிகிறது. சிறை காவலாளிகள் பார்வை.... வானத்தில் குண்டு போடும் விமானங்கள் .... ரொம்ப இக்கட்டான நிலை ...தப்பிதர்களா ???
= = = = =
iamkarki @mayvee இரவின் நிறம் பார்த்த பிறகு ஒரே உலகப்படமா பார்க்கறிங்க.. குட் குட்.
= = = = =
"30 அடி நேர் கீழ தோண்டிட்டு...பின்ன காட்டை நோக்கி தோண்டுங்க. அப்ப தான் வெளில இருக்கிற ஆளுங்களுக்கு சத்தம் கேட்காது"
" கேப்டன் ...."
"புரிது ...நீ என்ன கேட்க போறன்னு ...இந்த வாட்டி அவங்க முகத்துல கரிய புசனும் ..இருபது முப்பது பேர் இல்ல ..ஒரு 250 பேர்"
= = = = =
சுரங்கபாதை வெட்டும் சத்தம் அதிகாரிகளுக்கு தெரிய கூடாதென்று அவர்கள் எழுப்பும் பிற சத்தங்களும், கிளைமாக்ஸ்யில் தப்பித்து போனவர்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்று பரபரப்பு தனிமையில் அமர்ந்து பார்த்தால் நம்மையும் தொற்றிகொள்ளும்.

பிறகு அந்த அமெரிக்கா கைதி பந்தை சுவரில் அடித்து காவலாளிகளின் நடையை கணக்கிடும் முறை நல்ல தானிருக்கு. ஆனால் அது வேற ஏதோ நாவலில் வருகிறது என்று கேள்விபட்டேன்.
= = = = =
எனக்கு பொதுவாக போர் சமந்தப்பட்ட படங்கலேன்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர் ன்னாலே நிறைய உண்மை சம்பவங்கள் சொல்லபடாம இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி Dying Soldier (பெயர் சரியாய் ஞாபகமில்லை) படிச்சேன் ....அப்படியே உருகி போயிட்டேன். அதுவும் இதே மாதிரி போரில் இருந்து தப்பித்து வரும் இரண்டு வீரர்களை பற்றியது. அவர்களின் நாடு தோற்று போயிருக்கும்...அந்த வலி வேதனை எல்லாம் வார்த்தைகளில் ரொம்ப இயல்பபாக சொல்லிருப்பாங்க.
= = = = =
நான் மேல சொன்னது கதையாக இருந்தாலும், கதையுள்ளே பல சம்பவங்களிருக்கு. அதெல்லாம் சொன்னால் கதையுடைய சுவாரசியம் போய்விடும். முக்கியமா சொல்லனும்ன்ன அந்த சுரங்கம் வெட்டும் கதாபாத்திரத்தை சொல்லலாம். இருட்டு, தனிமை குழி போன்றவற்றுக்கு தனக்குள் இருக்கும் பயத்தை மறைத்து வேலை செய்யும் அவன் ...கடைசியில் தப்பிக்கென்று குறித்த நாள் முன் அவன் தப்பிபதற்கு சொல்லும் காரணம், கதையில் திருப்பம் இல்லையென்றாலும் நல்ல சுவாரசியம்.

இந்தப்படம் உங்களது சிடி / டிவிடி collections யில் இல்லாவிட்டாலும், இந்த உண்மை சம்பவத்தின் புத்தக வடிவை நீங்கள் கட்டாயம் வசித்ததாக வேண்டும்.

5 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா நோட் பண்ணுங்கப்பா.. உலக சினிமா பத்தி எழுதி இருக்கேன்.. நானும் இலக்கிய”வியாதி” தான் - பிரபல பதிவர் மேவியின் வாக்குமூலம்..

வாங்கி விட்டீர்களா? இந்த வார “சங்கு”மம்..:-))))

சி.பி.செந்தில்குமார் said...

சினிமாவின் மேல் நீங்க காட்டற ஈடுபாடும்,ஜனரஞ்சக்ப்பத்திரிக்கிகளை நக்கல் அடிக்கும் நையாண்டியும் ரசிக்க வைக்கிறது

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ரொம்ப நல்லா இருக்கு சார்!

அத்திரி said...

அண்ணன் கா.பா வழியில் இலக்கியவியாதியான அன்பு உடன்பிறப்பு டம்பி மேவியே...........

டம்பி மேவீ said...

@ கார்த்திகை பாண்டியன் : இலக்கிய விளம்பர சேவை நல்ல இருக்குன்னே...நான் நடத்தும் இலக்கிய இதழ் பத்தி உங்களுக்கு எப்புடி தெரிஞ்சுச்சு

@ சி.பி. செந்தில்குமார் : நன்றிங்க ...உங்க முத வருகை எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி : அண்ணே நன்றினே .....

@ அத்திரி : ஹே இதுக்கு எல்லாம் அழுவ கூடாது

Related Posts with Thumbnails