Pages

Monday, August 9, 2010

THE SEVENTH SEAL (1957) - காலதேவனோடு சதுரங்கம் - திரைபார்வை

உங்களது ஆன்மீக நம்பிக்கை மீது என்றாவது சந்தேகம் வந்து இறைவன்யிருக்கிறனா இல்லையா என்ற அளவில் புலம்பி இருக்கீங்களா ???



இந்த படத்தை நானொரு இரண்டு முறை பார்த்திருப்பேன். முதல் முறை பார்த்த பொழுது எனக்கொன்றும் அவ்வளவாக புரியவில்லை. பிறகு அந்த காலத்தில் இருந்த ஜாதி, மத அமைப்புகளை பற்றி கொஞ்சம் கேள்விப்பட்ட பின்பு இரண்டாம் முறை பார்த்தேன். முக்கியமா இந்த படத்தின் கதை கிறிஸ்துவ மத நம்பிக்கைகளின் பின்னணியில் வருவதால் என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை : படத்திலிருக்கும் சில விஷயங்களை. ஒரு வேளை அத்தனையெல்லாம் பைபிள் படித்த நண்பர்கிட்ட இருந்து தெரிந்து கொள்ள வேண்டிருக்கும் போலிருக்கு.

பிறகு படத்தை பார்க்கும் முன்பு அந்த காலத்தில் நடந்த புனித போர்களை பற்றியும் : அந்த கால மூடநம்பிக்கைகளை பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் ...இன்னும் படத்தை பலமாக ரசிக்கலாம்.

படம் ஆரம்பமே .....அப்படிப்பட்ட புனித போரில் இருந்து திரும்புகிற இரண்டு புனித போர் வீரர்கள் கடற்கரையில் படுதிருப்பதிலிருந்து ஆரம்பமாகிறது ....... (சுவீடன் நாட்டு படம் என்பதால் பெயரெல்லாம் வாசிபதற்கே கஷ்டமாயிருக்கு. அதனால் கதாபாத்திரத்தை வைத்து கதையை சொல்கிறேன்....)

களைத்த நண்பனை பார்த்துக் கொண்டே தனது ஊரை பிளேக் (PLAGUE ) நோய் தாக்கி விட்டதை எண்ணி சோகமாய் இருக்கும் கதாநாயகனின் உயிரை எடுக்க காலதேவன் அவன் முன் தோன்றுகிறான். தன்னுடைய மரணத்தை ஒத்தி போட நினைக்கும் நாயகன் காலதேவனை சதுரங்கம் அட கூப்பிடுகிறான்.

அவனை பார்த்து மரண தேவன் "நான் சதுரங்கத்தில் வல்லவன் என்று தெரியுமா" ...

உடனே அதற்க்கு நாயகன் ....."தெரியும் ஓவியங்களில் பார்த்திருக்கிறேன்" என்று சொல்லுகிறேன்.
"அப்படி இருந்து என்னை விளையாட கூபிடுகிறாயே"
"என்னகென்னு சில தந்திரங்கள் வைத்திருக்கிறேன்"
" என்னிடமேவா"
"கதை வேண்டாம் ...நீ ஜெயித்தால் என் உயிரை கொண்டு போ"....

அவனை பார்த்து மர்மமாய் காலதேவன் சிரிக்கிறான். விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
"கருப்பு உங்களுக்கு"

"அதுவும் நான் தான். பிரச்சனை இல்லை"
= = =
இது தான் படத்துல வர முத சீன். சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் சின்ன பசங்க இந்த சீன்யை பார்க்குற போது. பிறகு என்னாகும்ன்ன ..... அடுத்த சீன் ல ஹீரோ தோழனோட கிளம்பி போயிட்டு இருப்பான். .....


அப்படி போயிட்டு இருக்கும் போது நம்ம ஹீரோயோட மனநிலைமையை வசனங்கள் முலமா நமக்கு சொல்லுறாங்க. அதாவது நம்ம ஹீரோ புனித போரினால் ரொம்ப குழப்பத்துல இருக்கிறாரு. அதாவது கடவுள்ன்ன யார் ? அவனோட தேவை தான் என்ன ?? இந்த மாதிரி ரொம்ப கேள்விகள் அவனுக்குள்ளே அவன் கேட்டுகிட்டு வருகிறான் (....பதிவில் ஆரம்பத்துல சொன்ன மாதிரி புனித போர் பற்றியும், அந்த கிறிஸ்துவ நம்பிக்கைகள் பற்றியும் கொஞ்சமாச்சு தெரிந்திருந்தால் தான் நமக்கு ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் ...இல்லாட்டியும் ரசிக்கலாம்.)

அப்படி போற வழில ...ஒரு தேவாலயம் வருது. சரின்னு உள்ள போறாங்க. ஹீரோயுடைய சிஷ்ய புள்ள அங்க இருக்கிற ஒரு ஓவியரோட பேச உட்கர்ந்துவிடுகிறாரு. நம்ம ஹீரோ ஏகப்பட்ட மன உளைச்சல் ஓட பவ மன்னிப்பு கேட்க போறாரு. ...
உணர்ச்சிகள் மேலிட..... கடவுளை பற்றி அவன் கொண்ட எண்ணத்தையும் , கடவுளை பற்றிய எண்ணத்தால் வரும் பின்விளைவுகளை பற்றியும் சொல்லிகிட்டே போறாரு... அப்படி சொல்லும் பொழுது சமுதாயத்தில் மக்கள் மதத்தினாலும், மத போதகரினாலும் கொண்ட பயங்கள் அர்த்தமற்றது என்றும் சொல்லுறான். அப்படி சொல்லிக்கொண்டே போகும் போது, காலதேவன் தனோடு சதுரங்கம் விளையாட வந்ததையும், அவன் போட்ட சவாலையும் சொல்கிறான், அப்படி என்ன சவால்ன்னு பாதிரி கேட்க ..... ஹீரோவும் அவன் போட்ட சவாலையும், அதில் அவன் வெற்றி பெற அவன் வைத்திருக்கும் விளையாட்டு முறையையும் சொல்லி விடுகிறான். சொன்னபிறகு தான் இத்தனை நேரம் கேட்டு கொண்டிருந்தது பாதிரி அல்ல காலதேவன் தான் தெரிந்த பிறகு அதிர்ந்து போகிறான் ...விளையாட்டில் வெற்றி பெற்றனா ???
தேவாலயத்தை விட்டு வரும் பொழுது, பிளேக் நோயால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை பார்க்கிறான். அந்த நோய் ஊரில் பரவாமல் இருக்க வேண்டி அவளை உயிருடன் எரிக்க மத போதகர்கள் அதற்க்கான சடங்குகளை செய்து கொண்டிருக்கிறார்கள். கதாநாயகன் தனது கேள்விகளுக்கான பதில் அவளிடத்தில் கிடைக்கும் என்று நம்புகிறான் தனது இயலாமையை நொந்துகொண்டே. ஆனால் பதில் வேறு விதமாய் கிடைக்கிறது அவனுக்கு.

இதற்க்கிடைய ஒரு நடிகனுடைய உயிரை எடுக்க போகும் காலதேவனுகும் அந்த நடிகனுக்கும் நடக்கும் உரையாடல்..... படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வழியில் அவனது நண்பனால் காப்பாற்ற பட்ட ஒரு கூத்தாடியை சந்திக்கிறான்.கூத்தாடி குடும்பமும் ஹீரோவும் அவனுடைய சகாவும் நட்பு பாராட்டி கொள்ளுறாங்க.
அப்படிருக்கும் ஒரு சமயத்தில் கதாநாயகனை பார்த்து காலதேவன் ....."நீ அவர்களுடன் இன்று இரவு இருக்க போகிறாய்யா.. அவர்களுடன் எனக்கொரு கணக்கிருக்கு" என்று கூறி வழக்கமான மர்ம புன்னகையை மீண்டுமொருமுறை பிரசவிக்கிறான்.





= = = = =


இந்த படத்தை பார்க்க பல முக்கியமான காரணங்களிருக்கு. அதில் முதல் காரணமாக வசனங்களை சொல்லலாம். வசனங்களெல்லாம் சுவீடன் நாட்டு மொழியில் இருந்தபடியால் நான் சப்-டைட்டில்யை வைத்தே என்ன பேசுகிறார்கள்ன்னு புரிந்து கொண்டேன்.

ஒரு கட்டத்தில் பாதிரி என்று நினைத்துக் கொண்டு காலதேவனிடமே பாவமன்னிப்பு கேட்டு கொண்டிருப்பான் ஹீரோ ..அப்பொரு வசனம் வரும் பாருங்க ....

"நம்முடைய இயலாமை, பயம் எல்லாத்தையும் சேர்த்து அதற்க்கு கடவுள் என்று உருவம் தந்து வழிபட்டு கொண்டிருக்கிறோம்.."

=
"நாம் ரொம்ப கவலை படுறோம்'
"இந்த மாதிரி சமயத்துல தான் இரண்டு பேரா இருக்குறது ரொம்ப உதவியா இருக்கு"
=
"எனக்கு என்னோட கூட்டாளியினால் மனசு வெறுத்து போயிருக்கு"
"யாரு ..உன்னோட சிஷ்யனை சொல்லுறீயா?"
"இல்ல ..நான் என்னை சொன்னேன்"

=
காலதேவன் "அடுத்த முறை நாம் பார்க்கும் பொழுது.... உன்னது வாழ்விலும் உன் நண்பர்கள் வாழ்விலும் அது எனக்கான நேரமாய் இருக்கும்"
"அப்ப நான் உங்களோட ரகசியங்கள் தெரிந்துகொள்ளலாம் ?"
"என்னிடத்தில் ரகசியங்கலோன்றும் இல்லை"
"அப்ப உங்களுக்கு ஒன்றும் தெரியாது.."
"இல்லை. நான் ஒரு தெரிந்த ஒன்றுமில்லாதவன்"

=
நடிகன் காலதேவனிடம் " வெட்கம் ....அவமானம்..... நடிகர்களுக்கு சலுகைகள் இல்லையா..."
"உனக்கு இல்லை"
"குறுக்கு வழி கூடவா"
=
"அவங்க சொல்லுறாங்க உனக்குள்ள சாத்தான் இருக்காமே"
"அதை நீங ஏன் கேட்குற"
"சொந்த விஷயத்துக்காக. நான் அவனை பார்க்கணும்"
"ஏன்"
"கடவுளை பத்தி கேட்க தான். கட்டாயம் அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்'
"நீ எப்ப்வேன்ன அவனை பார்க்கலாம்"
"எப்புடி?"
"நான் சொல்லுற மாதிரி செய். என்னோட கண்ணை பாரு"
"என்ன பார்க்கிற"
"பயம்..அத தவுர ஒன்னுமில்லா"
"ஒன்னுமில்லையா ....யாருமில்லையா"
"இல்ல. யாருமில்ல"
"அவன் எனக்குள்ள இருக்கிறான். இப்ப கூட உணர்கிறேன்..... என்னை எரிக்க போகும் நெருப்பு கூட என்னை ஒன்னும் செய்யாது..அவன் என்னுள் இருப்பதினால்...."
"சாத்தான் அப்படி சொன்னனா"
"இல்ல ..ஆனா தெரியும் ...."

"அதான் எப்படி"
"தெரியும் தெரியும்... நீ கூட அவனை பார்க்கணும். பாதிரிகளால் பார்க்க முடியுது, வீரர்களால்.... அதனால் தான் அவர்கள் என்னை தொடவில்லை...."

இந்த மாதிரி அங்கங்கே பளிச் பளிச் வசனங்கள்.... பல வசனங்கள் கதாநாயகனுடைய தேடலை சார்ந்தே இருக்கிறது. குறிப்பா பல வசனங்கள் அந்த கால கட்டமைப்பை கேள்வி கேட்கிறது. இன்றளவும் அந்த காலத்தில் நடந்த பல கொடூரங்களை வாடிகன் அமைப்பினர் ஏற்று கொள்ளவே இல்லை. மனிதர்களை கொடுமை படுத்தியதெல்லாம் புனிதம் புனிதம் என்றே சொல்லி கொண்டு வந்து இருக்கிறார்கள். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பு கொண்டு வருகிறார்கள்.
= = = = =
எனக்கென்னமோ அந்த பிளேக் நோயால் தாக்கப்பட்ட பெண்ணுடைய கதாபத்திரத்தை சரித்திர பெண் புரட்சியாளர் ஜோன் அப் அர்க் வைத்து சித்தரிக்க பட்டு இருப்பதாய் தோன்றுகிறது எனக்கு. அவங்களும் இதே மாதிரி தான் எரிக்க பட்டாங்க.
= = =

இந்த படமொரு ஒரு கிளாச்சிக் படம். பல விஷயத்துக்காக இந்த படத்தை கட்டாயம் பார்க்கணும். நான் முதலில் இந்த படத்தை காலதேவன் கேரக்டர்காகவே பார்த்தேன். அது கேரக்டர் இன்றளவும் மிக பிரபலம். பல இங்கிலீஷ் படங்களில் இந்த காலதேவன் உடைகளில் யாரையாச்சு பார்க்கலாம். பிறகு முக்கியமாக வசங்களுக்க்காகவே ஒருமுறை பார்க்கலாம்.

எனக்கு இந்த படத்தில் எல்லாம் புரிந்தது ஒன்றை தவிர ...ஏன் இந்த படத்தை கடைசி காட்சியில் DANCE OF DEATH யை காட்டி முடித்திருக்கிறார்கள்ன்னு. இந்த படத்திற்க்கான திரைப்பார்வை எழுதுமுன் இந்த DANCE OF DEATH ன்ன என்னனு படிச்சு பார்த்தேன். சுத்தமா புரியல ..... ஏறக்குறைய நம்ம திருநீறு அர்த்தத்தை தான் அதுவும் சொல்லுதுன்னு நினைக்கிறேன்.
வழக்கமாய் சில படங்களை நான் சிடி/டிவிடி COLLECTIONS வைச்சுக்க வேண்டிய படங்களுன்னு தைரியமா சொல்லுவேன். ஒன்னு அது பொழுதுபோக்கு படமா இருக்கும், இல்லாட்டி கிளாச்சிக் வகைராவா இருக்கும் .... எனக்கு இந்த மாதிரியான ரொம்பவே RAW வான சப்ஜெக்ட் படங்கள்ன்னாலே கொஞ்சம் அலர்ஜி தான். சோ ....நீங்களே இந்த படத்தை பார்த்து முடிவு பண்ணிகொங்க. ஒரு வேளை இந்த படம் உங்களுக்கு நல்ல viewing experience யை தரலாம்.
டிஸ்கி - படம் ஸ்வீடன் நாட்டு மொழி இருந்ததால் படத்தை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் எனக்கு புரிந்தவரைக்கும் சொல்லிருக்கிறேன். வசனங்களை சப் டைட்டில் உதவி உடன் என்னால் முடிந்த வரைக்கும் மொழிபெயர்த்து இருக்கிறேன்.

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி போட்டப் பதிவு.. ரைட்டு..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

பார்க்க வேண்டிய படம் லிஸ்டுல வச்சுக்குறேன் தல

Prasanna Rajan said...

இந்த படம் பற்றி எழுத நினைத்து ட்ராஃப்டில் வைத்திருந்தேன். பெர்க்மென்னின் க்ளாசிக் திரைப்படம். இன்னொரு முறை பார்க்க தூண்டி விட்டது உங்கள் விமர்சனம்...

வால்பையன் said...

கேஸட் இருக்கா தல?

மேவி... said...

@ கார்த்திகை பாண்டியன் : ஆமா தல, கொஞ்சம் மெனக்கெட்டு தான் எழுதினேன். உங்க கிட்ட இந்த படத்தை பற்றி சொல்லி பல ஆண்டுகாலம் ஆச்சு ...நீங்க இன்னும் பார்க்கவில்லையா ??

@ பிரசன்னா ராஜன் : அப்படியா ....சீக்கிரம் எழுதுங்க பாஸ். அந்த முத சீன் செமைய இருக்கும்ல. வாய்ப்புகளே இல்லைங்க.

@ வால்பையன் : சிடி ஒரு பக்தி ஆடுகிட்ட இருந்து அட்டிய போட்டது தல. திரும்ப தந்தாச்சு. youtube ல கூட இருக்கு

MT said...

great review..

you should also read about 'operation entebbe' and see my DVD 'mivtsa yonatan' which you took it from me and review it...

Related Posts with Thumbnails