Pages

Tuesday, September 7, 2010

மிட்டாய் வீடு - பார்க்க வேண்டிய குறும்படம்


கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது. ஆனால் அது காதல் திருமணமாக இருந்தால் சொர்க்கமாய் இருக்கிற வீட்டில் நிச்சயிக்க படுகிறது. முதல் முதலில் காதலியை வீட்டில் அறிமுக படுத்தும் பொழுது, அம்மா - காதலி இருவருக்கும் என்ன மாதிரியான மனநிலைமை இருக்குமென்று நல்ல எடுத்து காட்டிருக்கிறார் இயக்குனர் ("காதலில் சொதப்புவது எப்படி" எடுதரே அவரே தான் ..... )

திரு. பாலாஜி மற்றும் அவருடைய டீம் - வாய்ப்புகளே இல்லை ; பாராட்ட வார்த்தைகளில்லை.

பாலாஜியோட குறும்படங்கள் மேல எனக்கொரு சொல்ல முடியாத பிரியம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் - பொதுவாய் ரொம்ப பார்த்து பார்த்து தான் யூடுபில் சில பல சேனல்களை follow செய்வேன் - ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த குறும்படத்தை பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன்.

இயக்குனர் கொஞ்சம் குறும்புகாரர் போலிருக்கு - அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்சிகளில் தெரிகிறது, குறிப்பாய் "இதோட போதுமே" என்று பையன் அப்பாவை பார்த்து சொல்லும் பொழுது. அதென்ன காட்சி ??? குறும்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

குறும்படம் ஆரம்பித்ததில் இருந்து எட்டாவது நிமிஷம் வரைக்கும் இதொரு நகைச்சுவை பட பதிவென்றே நினைத்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன்..... ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியான வசன அமைப்புகளிலும் காட்சி அமைப்புகளிலும் இயக்குனர் நம்மை பெரிதும் கவர்கிறார்.

அதிலும் அந்த காதலியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படும் நிமிஷம் - நன்றாக சிரித்துவிட்டேன்.

என்னை சிரிக்க வைத்த மற்றொரு காட்சி - ஆரம்ப காட்சி தான் ( இயக்குனருடைய குறும்பின் உச்சமென்றே சொல்லலாம்).

இந்த குறும்படம் உணர்த்தும் மற்றொரு விஷயம் - நிதர்சன வாழ்வில் நாம் நம்முடைய மூளை வேலை செய்யும் முன்னரே, நம்முடைய உணர்வுகளை வெளிகாட்டி விடுகிறோம், அது மற்றவர்களை காயபடுதும் என்று அறியாமல். சுயநல கோவங்களுக்கு என்றுமே மதிப்பில்லை .

இந்த குறும்படத்தை பற்றி இன்னும் சொல்ல நிறைய தோன்றுகிறது, ஆனால் நேரமில்லாததால் இதோடு முடித்து கொள்கிறேன். என்னால் ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும் - இது உங்களுக்கொரு நல்ல ரசிப்பனுபவத்தை தருமென்பதை.

9 comments:

Balaji saravana said...

கண்டிப்பா பார்க்கிறேன்.அறிமுகத்துக்கு நன்றி பாஸ்!
இந்த டீமோட காதலில் சொதப்புவது எப்படி பார்த்துருக்கேன் நல்லா இருந்தது.

நட்புடன் ஜமால் said...

இரசனையான பகிர்வு

subra said...

மிகவும் அருமை .வாழ்த்துக்கள்

புன்னகை தேசம். said...

நிதர்சன வாழ்வில் நாம் நம்முடைய மூளை வேலை செய்யும் முன்னரே, நம்முடைய உணர்வுகளை வெளிகாட்டி விடுகிறோம், அது மற்றவர்களை காயபடுதும் என்று அறியாமல். சுயநல கோவங்களுக்கு என்றுமே மதிப்பில்லை .


-------------------------------

அருமையா சொன்னீங்க...

pinkyrose said...

hai maavi...
hw r u...

புது வேலை, புது ஆஃபீஸ்...
சொல்லவே இல்ல

//நிதர்சன வாழ்வில் நாம் நம்முடைய மூளை வேலை செய்யும் முன்னரே, நம்முடைய உணர்வுகளை வெளிகாட்டி விடுகிறோம், அது மற்றவர்களை காயபடுதும் என்று அறியாமல். சுயநல கோவங்களுக்கு என்றுமே மதிப்பில்லை .//

நிஜமான நிஜம்

ஆகாயமனிதன்.. said...

பதிவுக்கு முந்தீட்டீங்க... நான் கொஞ்சம் லேட்...ஆனா பேஸ்புக்ல போட்டிருக்கேன்...
பதிவுல நீங்க போட்டதைத்தான் முதல்ல பார்க்கறேன்...

ஹேமா said...

பகிர்வுக்கு நன்றி மேவீ.ரசித்தேன்.

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

டம்பி மேவீ said...

@ பாலாஜி சரவணா : வருகைக்கு நன்றி பாஸ் . கட்டாயம் பாருங்க நல்லாயிருக்கும்

@ ஜமால் : நன்றி அண்ணா

@ சுப்ரா : நன்றி

@ புன்னகை தேசம் : நன்றிங்க

@ பிங்கி ரோஸ் : என்ன ரொம்ப நாளாய் ஆளை காணல ..

@ ஆயாகமனிதன் : அப்படியா ....

@ ஹேமா : நன்றிங்க ..ரொம்ப நாளாய் உங்களை chat ல பிடிக்க முடியல

Related Posts with Thumbnails