Pages

Sunday, September 19, 2010

கலவை - எண்ணங்கள்

நடிகர் முரளி - மக்கள் உணர மறந்துவிட்ட ஒரு சகாப்தம்.

முயல் ஆமை கதையில் நாம் என்றாவது ஜெயித்த ஆமையின் வெற்றியின் பாத சுவடுகளை பற்றி கவலை பட்டு இருக்கிறோமா ?? ?

இங்கே ரசிப்பு தன்மை என்பது பந்தய குதுரையின் மேல் பணம் கட்டுவது போலாகிவிட்டது.

மனுஷன் உயிருடன் இருக்கும் பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதில்லை. மக்களுக்கு இல்லாத ஒன்றின் மேல் தான் அதிகமான விருப்பும் இருக்கிறது. புதிய ஒன்றை ஒருவன் விரும்பும் பொழுது, அவன் ஏற்கனவே விரும்பி கொண்டிருந்த பொருளின் மீதான விரும்பம் காரணமே இல்லாமல் குறைகிறது : நிலையான விருப்பம் இல்லாத மனிதனுக்கு என்றுமே அமைதி இல்லை.

ரசிப்பு ஒப்பீடுகள் தான் தமிழ் சினிமாவின் மிக பெரிய எதிரி. ஆனால் ஒரு விஷயத்தை ஏற்று கொள்ள தான் வேண்டும் : ரசிபதற்க்கு என்று சினிமாவில் அதிகமில்லை.

இதை ஏன் சொல்கிறேனென்று எனக்கு தெரியவில்லை.

நடிகர் முரளியை எனக்கு ரொம்ப பிடிக்கும் : என்ன காரணம் என்று தெரியாது.

அவர் இறந்த செய்தி கேட்டன்று , அவர் நடித்த இதயம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.

= = = = =
கொஞ்ச நாளை எனக்கு எழுத்தாளர் தேவன் மீதான பித்து அதிகமாகி கொண்டே போகிறது. எழுத்தில் அப்படி ஒரு சுவாரசியம். மை ஊற்றி எழுதினாரா இல்லை மயக்க போடி போட்டேளுதினாரென்று தெரியவில்லை : நேரம் காலம் போவதே தெரியவில்லை. ஸ்ரீமான் சுதர்சனம் படித்தேன், பிறகு அவரெழுதிய சிற்பல கட்டுரை மற்றும் சிறுகதை தொகுப்புகளை படித்தேன். எழுத்துக்களோடு வாசகனை வாழ வைக்கும் சிறந்தவர்களில் அவருமொருவரென்று சில நாட்கள் முன்னர் தானுணர்ந்து கொண்டேன். தற்பொழுது துப்பறியும் சாம்புவின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருக்கிறேன் .

= = = = =
நான் பொதுவாய் "தொல்லை" காட்சியை அதிகம் பார்பதில்லை. அதனாலே பல நல்ல நிகழ்ச்சிகளை தவற விட்டிருக்கிறேன், அதில் நாளைய இயக்குனரும் ஓன்று. அதிலும் நலனின் குறும்படங்களிருக்கும் குறும்பு தனத்தை மிகவும் ரசித்தேன், அவைகளை யூடுபில் ( YOUTUBE ) பார்த்தபொழுது. நிச்சயம் நலன் சினிமா துறையில் பெரிய ஆளாய் வருவாரென்று நம்புகிறேன்.

= = = = =
வெற்றி - இந்த எண்ணம் ஒருவனின் மனதிற்குள் வரும் பொழுதே, மற்றொருவன் தோல்வி அடைந்தால் தான் ஒருவன் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வருகிறது, மக்கள் வெற்றியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டார்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் யாரும் WIN - WIN STRATEGY கையாள்வதில்லை.

என்னை கேட்டால் வெற்றி அடைவதற்கும் சிறப்பாக செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.

= = = = =
ஏற்கனவே நானெழுதிய "தேவதையின் கை" யின் பாதிப்பிலிருந்தே நானின்னும் வெளிவரவில்லை. அதற்குள் அடுத்த காதல் கதைக்கான கரு உதயமாகி விட்டது. "கம்ப்யூட்டர் கிளாஸ்" இது தான் கதையின் தலைப்பு. நான் இளநிலை கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு ஒரு வருடம் வெட்டியாகயிருந்தேன், அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எழுத போகிறேன். சுவையாக இருக்குமென்று நம்புகிறேன். அதிலொரு வசனம் இப்படி வருகிறது "IS CAMERA CELL PHONE THERE ?? SAY TRUE OR FALSE ...." (இனிமேல் கடவுளே வந்தாலும் தமிழர்களை முடியாது)

= = = = =
கொஞ்ச நாள் முன்பு நான் 1960 யில் வெளிவந்த "PEEPING TOM " என்றொரு படத்தை பார்த்தேன். மனநிலை சார்ந்த திகில் படம் அது. அந்த படத்தில் இருக்கிற கதையே ஓரிரு வரிகள் தான், அதனால் கதையை சொல்ல விருபவில்லை. ஆனால் பயத்தோடு ஒவ்வொரு பெண்ணையும் கொலை செய்யும் இடமாக இருக்கட்டும், கடைசியில் கதாநாயகியை கொள்ள மனமில்லாமல் தன்னை தானே மாய்த்து கொள்ளும் இடமாக இருக்கட்டும் ..... அதை நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்.

= = = = =

THE DARK ROOM என்று ஒரு ஆங்கில நாவலை படித்தேன் - இது தமிழிலும் இருட்டு அறை என்று விகடன் பதிப்பகத்தின் முலம் வெளி வந்திருக்கிறது. அந்த கால குடும்ப தலைவியை பற்றின்ன கதை. ஏக்கம், அதன் முலம் அவள் அடையும் ஏமாற்றம், தலைவனை கவர எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, தலைவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு, அதனால் அவள் எடுக்கும் முடிவு : அதில் அவள் அடையும் தோல்வி : அதனால் வேறு வழி இல்லாமல் மீண்டும் குடும்ப சிறைக்கே வரும் அந்த குடும்ப தலைவியின் மன போராட்டங்களை ரொம்ப வர்ணனை இல்லாமல் காட்சிகளின் மூலமாகவே சொல்லிருக்கிறார் RK நாராயண்.

இதே போன்ற மனநிலையில் இருக்கின்ற ஒரு தலைவி எடுக்கும் விபரீத முடிவை கதையாக வைத்து தான் ALEXANDRA PROJECT படத்தை எடுத்தார்களென்று நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன்.


= = = = =

எண்ணியதெல்லாம் எழுதிவிட்டேனாயென்று தெரியவில்லை. நினைவிலிருந்தவற்றை எழுத்துக்களில் கொண்டுவர நேரம் தானில்லை. இன்னும் எழுதிருப்பேன் சுவை குறைந்து விடுமோயென்ற ஐயத்தில் (இப்பொழுது மட்டும் இருக்கா ??) இதோடு நிறுத்தி விடுகிறேன்.

KEEP SMILING


ENJOY LIVING

பிறகொரு சமயம் பார்போம்

6 comments:

தாரணி பிரியா said...

ஹை நானும் இன்னிக்கு துப்பறியும் சாம்புதான் லைப்ரரியில் இருந்து எடுத்து வந்து இருக்கேனே :)

Rajalakshmi Pakkirisamy said...

:)

அப்பாவி தங்கமணி said...

//அவர் இறந்த செய்தி கேட்டன்று , அவர் நடித்த இதயம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்//

நானும் தான்...

நல்ல மனுஷன் பாவம்

Karthik lollu said...

peeping tom.. arumaiyaana thriller.. sadly anda padam taan directorkku nail in the coffin maadiri aagidicu..

Karthik said...

:))

டம்பி மேவீ said...

@ தாரணி பிரியா : அக்கா செமைய இருக்கும்.... நான் படிச்சு முடிக்க போறேன். மொத்தமா படிக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா படிங்க

@ இராஜலஷ்மி பக்கிரிசாமி : நாங்களும் :) போடுவோம் ல ..... :)))))))))))

@ அப்பாவி தங்கமணி : ஆமாங்க .... youtube ல அவரோட கடைசி interview இருக்கு பார்த்தீங்களா ???

@ கார்த்திக் லொள்ளு : ஆமாங்க ...ஆனா மேகிங் செமைய இருக்கும் ...அதுவும் அந்த முத சீன் ...

@ கார்த்திக் : :))))))))))))))))) (பார்த்துப்பா ரொம்ப மௌனமா இருக்காதீங்க)

Related Posts with Thumbnails