Pages

Sunday, October 3, 2010

தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம்




எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். இத்தனைக்கும் அவரது நாவல்களை நான் அதிகம் படித்ததில்லை. அவரோட விச்சுவுக்கு கடிதங்கள், ரங்கூன் பெரியப்பா , போக்கிரி மாமா, பார்வதியின் சங்கல்பம் , சீனு பயல் போன்ற கட்டுரை + சிறுகதை தொகுப்பை தான் படித்திருக்கேன். so ஸ்ரீமான் சுதர்சனம் தான் நான் படித்த தேவனுடைய முதல் நாவல்.

படிக்க ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் பயமாக தான் இருந்துச்சு, ஏதோ சிறுகதை ல அடிச்சு எழுதிட்டாரு, அதையையே நாவலையும் கையாண்டு இருப்பாரான்னு.
பிறகு இந்த புத்தகம் வாங்கின்ன போது, புஸ்தகத்தை திறந்து அதிகம் படிக்கல : சும்மா அட்டையை பார்த்தே வாங்கிட்டேன். அதுவே முக்காவாசி கதையையும் சொல்லிரும். ஏழை குமாஸ்தாவான சுதர்சனத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளும் , அத்தனை அவன் சமாளிக்கும் வழிகளும் தான் மொத்த கதைக்கும் அடிநாதம்.

தேவன் அவர்கள், தனிமனித உணர்வு போராட்டம் ன்னெல்லாம் போகாமல் : ரொம்ப சாதாரணமாய் , ஒரு சாமானிய மனிதனின் பார்வையில் சொல்லிருக்காரு. பிறகு இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும், என்னதான் கதை 1930 களில் நடப்பது போல் இருந்தாலும், அந்த காலத்தை ஆவண படுத்த முயற்சிக்காமல் நம்மை கதையின் நாயகனான சுதர்சனதுடன் பயணிக்க வைக்கிறார் தேவன், இது சுதர்சனம் ஸ்ரீமான் சுதர்சனம் ஆகும் வரைக்கும் ...முதலில் இருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட விலகாமல் : சுவாரசியம் அப்படியே இருக்கிறது.

சுதர்சனம் ரொம்ப பாவமுங்க. வீட்டுலையும் சரி, ஆபீஸ்லையும் சரி இரண்டு பக்கமும் அவனுக்கு பயங்கர இடி கிடைக்குது. அவனுடைய மனைவி கோமளத்தை சந்தோஷ படுத்த வசதிக்கு மீறிய வீட்டிற்கு ஜாகை மாறுகிறான், அதற்க்கு தேவையான பணத்தை : அக்கவுண்டண்ட் கங்காதர பிள்ளை அசந்த நேரத்தில் திருடி விடுகிறான். புது வீடிற்கு போன கோமளம் கொஞ்ச குஷியாகி தனது வீடிற்கு லெட்டர் போட்டு விடுகிறாள். பிறகு அவளுடைய அப்பா அம்மா வருகிறாங்க : ஆஸ்பத்திரி செலவுகள். இதை கேள்வி படும் சுதர்சனத்தின் அம்மா கோவத்துடன் சுதர்சனத்தின் தங்கையை பிரசவம் பார்க்க அழைத்து வந்து விடுகிறாள்.... இதனால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க சம்பள உயர்வு கிடைக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் ஆபீஸ் பணத்தை திருடுகிறான் அதுவும் சிறு சிறு தொகைகளாக, ஏனென்றால் அவனுக்கும் மனசாட்சி இருக்கிறதல்லவா . ஒவ்வொரு முறையும் எப்படியோ தப்பி விடுகிறான்.

இதனிடைய அவனது முதலாளி பரமேசுவர முதலியாரின் நல்ல உள்ளதை கண்டு வருந்துகிறான். ஆனால் என்ன செய்ய வருஷ ஆடிட்டிங் செய்வதற்கு ஆடிட்டரின் இரண்டு உதவியாளர்கள் வறாங்க..... ஆடிட்டிங் நேரத்துல நடக்கும் பெரிய பண கொள்ளை ..அதனால் ஒரு விபத்து.. பிறகு என்ன என்பது தான் கதை.

இதில் ஆபீஸ் அரசியல், வேலை செய்பவர்களிடைய இருக்கும் விரோத மன போக்கு...... சத்யமாக தேவன் அவர்கள் தனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதி உள்ளாரோன்னு எண்ண தோன்றும்.

என்னதான் கங்காதர பிள்ளையை ஆரம்பம் முதல் ஒரு வில்லன் மாதிரி காட்டி இருந்தாலும், கடைசில் அவர் பரமேசுவர முதலியாரிடம் சுதர்சனதிற்காக பேசும் பொழுது அவருடைய நல்ல மனசு தெரியுது. பிறகு பரமேசுவர முதலியார் - இந்த கதையிலையே மிகவும் அருமையான பாத்திர படைப்பு.
= = = = =

இதை நான் ஆபீஸ் போகும் பொழுதும் திரும்ப வரும் பொழுதிலும் எலெக்ட்ரிக் ரயிலில் தான் படித்தேன். FIRST CLASS வகுப்பு என்பதினால் ; 50 வயதை கடந்தவர்கள் கொஞ்சம் நிறைய இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இந்த புஸ்தக அட்டையை பார்த்துட்டு , என்கிட்டே பேசுவாங்க. நிறைய சுவாரசியமான தகவல்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதையெல்லாம் கேட்டு கேட்டே ரொம்ப ஆர்வமாக படிச்சு முடிச்சேன் .


அதுவும் அந்த காலத்துல இந்த கதை மவுண்ட் ரோடு, வடபழனி முருகன் கோவில் என்று சுற்றி வந்ததால் அப்பொழுதைய சென்னை மக்கள்ஸ் கொஞ்சம் குஷியாக படிப்பார்கள்ன்னு ஒருத்தர் சொன்னாரு.
= = = = =
அங்கங்கே முருகன் பக்தி பாடல்கள் கொஞ்சம் வருது ...தேவன் அவர்களுக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தின்னு தெரிஞ்சுக்க முடிது.


அதே போல் .... சுதர்சனம் குடி போகும் அந்த ஏரியாவாக தேவன் எதை சொல்லி இருப்பாருன்னு நாவலை படிச்சு முடிக்குர வரைக்கும் யோசிச்சுகிட்டே இருந்தேன் .


இந்த நாவலை வெளியிட்டு இருப்பது கிழக்கு பதிப்பகம். விலை நூறு ரூபாய்

கடைசியா முடிக்குறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் - நகைச்சுவை கதைகள்ன்னாலே அதற்க்கு வயசு ரொம்ப கம்மி தான். ஏன்ன அன்னைக்கு நகைச்சுவைன்னு இருந்த எழுத்தக்கள் இன்னைக்கும் நகைச்சுவையாக பார்க்க படுமான்னு தெரியாது. நான் இதை படிக்கும் பொழுது விழுந்து விழுந்து சிரிக்க விட்டாலும் ; I ENJOYED READING .

இந்த நாவல் வாரயிறுதி நாட்களில் படிக்க ஏற்றது ....
= = = = =
டிஸ்கி - நாவலை படிச்ச பிறகு ; ஒரு தொழிற்சாலையில் சாதாரண ஊழியரான எங்க அப்பா எப்புடி நாங்க கேட்டதை எல்லாம் வாங்கி தந்து , எப்புடி ஒரு பணகார தன்மையான சந்தோஷங்களுடன் எங்களை வளர்த்தார்ன்னு ஆச்சரியமா இருக்கு. EAST OR WEST : MY DAD IS BEST . MA DAD ALWAYS ROCK ....

8 comments:

Karthik said...

Thanks for sharing thala.

There is a saying which goes like this.. When you finally realizes the value of your parents, you either already are or ready to be a parent yourself. :-)

ஹேமா said...

மேவீ ரொம்ப அழகா விமர்சனம் செய்திருக்கிறீங்க.அதோட படித்ததால் அப்பாவின் கஸ்டங்களையும் யோசிக்கிறீங்க.இதுதான் அந்தக் கதையின் வெற்றி.

Asha said...

மேவீ,

புத்தக விமர்சனம் அருமை!! :))

தேவனோட "துப்பறியும் சாம்பு" படிச்சிருக்கீங்களா?
ஒரு டிடெக்டிவ் ஸ்டோரிலே எந்த வித ஃபாண்டஸியும் இல்லாம இயல்பா ஆனா சுவாரசியமா கதைய சொல்லியிருப்பார்.. One of my favorite books!! :)) எப்போ படிச்சாலும் அலுக்காத புத்தகம்..

//EAST OR WEST : MY DAD IS BEST . MA DAD ALWAYS ROCK ....
//
Yup!! Very True!! :))

Keep rocking, Mayvee!!

மேவி... said...

@ கார்த்திக் : நன்றி .... அதற்க்கு எல்லாம் பொறுப்பு வேண்ணும் ப்பா ...எனக்கு பொறுப்பு பருப்பு அளவுக்கு கூட இல்லை

@ ஹேமா : உண்மைதானுங்க ...... நாவல் கிடைச்ச படிச்சு பாருங்க . கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும்

@ ஆஷா : உங்களது முதல் பின்னோட்டம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருதுங்க ... துப்பறியும் சாம்பு படிச்சு இருக்கேன் ..செமைய இருக்கும். அதுவும் சாம்புவின் யோசனைகளை அங்கங்க சொல்லி இருப்பார் பாருங்க ...செமைய இருக்கும் .... இவரோட சிறுகதை கட்டுரை தொகுப்பை படிச்சு பாருங்க கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும் ..... பிறகு உங்களது பிளாக் பார்த்தேன் ...நிறைய எழுதுங்க ....

Srividhya R said...

I am big fan of Devan. I have read almost all novels by Devan. NO WRITER CAN REPLACE HIM. All the stories or novels by him are really a treat!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படித்துவிட்டேன்.

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்கு... நானும் படிக்கறேன்...

மேவி... said...

@ Altruist : yes ... none can write like him.

@ ஸ்ரீ : ரைட்டு ஓகே

@ பிரேம் : கட்டாயம் படிங்க

Related Posts with Thumbnails