Pages

Sunday, October 17, 2010

நினைவுகள் ஒரு தொடர்கதைஇரண்டு பெண்கள் நிர்வாணமாய் என்னை கட்டிபிடித்து இருப்பது போல் உணர்தேன். இடது பக்கம் நின்ற கௌஷிக்கை ஏளனமாய் பார்த்தேன் ; அவன் என்னை வெறுப்பாய் முறைதான்.

"ok guys ... listen " என்றாள் திக்க்ஷா எதிரே நின்ற கூட்டத்தை பார்த்து . வழக்கமாய் நடக்கும் வெளிக்கிழமை COMMON SALES MEETING அது.

திக்க்ஷா பக்கத்தில் நான் நின்றதால் எல்லோரும் கொஞ்சமாய் ஆர்வமுடன் பார்த்தார்கள்.

"MAYVEE HAS DONE A BUSINESS FOR EIGHT CRORES .... GIVE HIM A BIG CLAP "

ஆரவாரம் அடங்கிய பின் அவள் "THEN MAYVEE .... WHAT DO YOU WANT ???"
"A WEEK OFF ..."
"OK DONE ....."
"AND ....."
"AND "
என்ன கேட்பது என்று தெரியவில்லை . "AND SOME THOUSAND BUGS AS INCENTIVES ...."

= = = = =

அடுத்தது ஒரு வாரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று என் டீம்க்கு சொல்லிவிட்டு பெருங்களத்தூர் நோக்கி பைக்கில் பயணமானேன் . ஒரு வாரம் லீவ் கேட்டு விட்டேனே தவிர ; அந்த ஒரு வாரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அறைக்கு வந்த பின்னும் யோசனை தொடர்ந்தது.

புத்தகம், சினிமா, போதை...... .... முடிந்தால் ....

இரவும் யோசனையில்லாமல் கடந்தது.

"டேய் ..ஆபீஸ் இல்லையா " யுவனுடன் ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்த அப்பாஸ் கேட்டான். தகவல் அறிந்த பின்பு கிளம்பி போனார்கள் : தனிமை திரும்பி வந்தது .

கணேஷ் பவனில் ரவா தோசையை மென்றுக் கொண்டிருக்கும் போது ரேடியோ "நண்பனை பார்த்த தேதி மட்டும்" பாடலை துப்பி கொண்டிருந்தது. கல்லூரி ஞாபகங்கள் வந்து இனித்த பொழுது அவளின் நினைவுகள் வந்ததுடனே தோசையையும் கசத்தது.

மணி பத்து.

வெறுமையின் கண்ணாடியில் வெறுமையை தவிர வேறெந்த பிம்பமும் தெரியாது. அதை போல கவலை கொண்ட மனம் இழந்த காதலை தவிர வேறெதுவும் யோசிப்பதில்லை .

பைக்கில் கிளம்பினேன் . இருபது நிமிஷத்தில் கல்லூரி வந்தது. மனம் ஒரே நேரத்தில் லேசாகவும் பாரமாகவும் இருந்தது. அதைவிட பாரமாக இருந்தது வாட்ச்மேன் கேட்டை திறக்க மறுத்த பொழுது. பணத்தால் அடித்தேன் : வலியில்லாமல் சிரித்துக் கொண்டே கேட்டை திறந்து விட்டான்.

நண்பர்களும் சேட்டைகளுமாய் சுற்றி திரிந்த நாட்கள் ஒரு முறை கண்முன்னே வந்து போனது . சூரியன் கோவமாய் இருந்தான், வேர்வை அதிகம் வந்தது, கல்லூரி வளாகத்தை சுற்றிய கால்களும் வலித்தது, அந்த இடமும் வந்தது. ஜூனியர்ஸ் காண்டீனில் அருகே இருக்கும் அந்த சிமென்ட் பெஞ்ச். என் காதலியாய் வந்த அவள், வேறொருவனை கல்யாணம் கட்டிக் கொள்ளும் பெண்ணாய் என்னை விட்டு பிரிந்த இடம்.

"நல்ல படிச்சு இருக்காரு ...நல்ல சம்பாதிக்கிறாரு ..... "
வேறேதேதோ பேசினாள், எதுவும் ஞாபகம் இல்லை. அன்று முதல் அவளது நினைவுகளும் அவள் பேசிய வார்த்தைகளும் தந்த வலி தான் என் மனதை புணர்ந்து கொண்டே இருந்தது.

கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டேன் , நினைவுகளை சுமக்க முடியாமல் டி கடையில் நின்றுக் கொண்டிருந்த பொழுது ரேடியோ "சொர்கமாக நான் நினைத்ததுஇன்று நரகமாக மாறி விட்டது" என்று 
பாடிக்கொண்டிருந்தது.

பிறகு வந்த நாட்கள் வெறுமையாய் போனது. அப்பாஸ், யுவன் வேலை விஷயமாய் வெளி ஊர் போனார்கள். ஆணுறைக்கு கொஞ்சம் செலவானது. திக்க்ஷா இரண்டு முறை வந்து போனாள்.

மீண்டும் வெளிக்கிழமை வந்தது. ஆபீஸ்க்கு போக இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் உலக பொருளாதார ஆடுகள் என்னென்ன பண்ணி இருக்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருந்தேன். யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. கொஞ்சம் குழம்பி போன பின், அது என் போன் தான் என்று அதை எடுக்க போனேன்.

"சார் ...." என்றான் சிவா : மூன்று மாதம் டார்கெட் முடிகாதவன்.

"சொல்லுப்பா..."

" CHENNAI PROPERTY FAIR போட்டு இருக்காங்கல ..... அதுல நம்ம ஸ்டால் போடுறோம் சார் ..."

"அப்படியா ..ரைட்டு போடுங்கப்பா .... திக்க்ஷா மேடம் இல்லாட்டி பிரவீனை...."

"சார் நீங்க வருணும் ......"

"அப்படிங்கிற ..ஆமா PRPOERTY FAIR INVESTMENT பத்தி கேட்க ஆளுங்க...... சரி விடு நாளைக்கு வரேன்."
= = = = =

சனிகிழமை.

காலை முதல் டீம் பசங்களுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தேன்.

"ஆமா சார் ...ஏன் MBA வுல MARKETING & HR எடுக்கணும்ன்னு சொல்லுறீங்க ??"

"ஏன்ன்ன நாளைக்கு நீ ஒரு டீம் லீடர் ஆகிட்டன்னு வைச்சுக்கோ...ஒரு இருபது பேரை ஹான்டில் பண்ண உனக்கு நிச்சயம் ஹுமன் ரிசௌர்ஸ் ஸ்கில்ஸ் தேவைப்படும்."

நேரம் போனது. மதிய உணவும் உள்ளே போனது எல்லோருக்கும் என் செலவில். மாலை நேரம் நெருங்க அதிகமான பேர் வந்தார்கள்.

கொஞ்சம் பிஸியாக டீம் பசங்களுக்கு அவர்கள் கிளைன்ட் உடன் பேசும் போது உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது ...

"மேவி ...." பழகிய குரலில் என் பெயர் கேட்டது. என்னுடைய அன்றைய அவள். திரும்பி பார்த்த பொழுது

இன்று வேறு ஒருவனின் மனைவி என்பது அவள் பதட்டத்துடன் திரும்பி பார்ப்பதில் இருந்தே தெரிந்து கொண்டேன். கல்லூரி நாட்களில் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் வரும் அழகிய அவஸ்தைகள் எதுவுமில்லை ஏனென்றால் நானும் அவளுடைய அவனாக இல்லை. காயம் பட்ட உணர்வுகள் எதுவும் தலைகாட்டவில்லை.

அருகே வந்தாள்.

"மேவி... அப்படியே வா ....அங்க உட்கார்ந்துகிட்டு என் கிட்ட கிளைன்ட் கிட்ட பேசுற மாதிரியே பேசு...."

"காயத்திரி ...." ஒருவன் ஐந்து வயது சிறுவனை கையில் பிடிபதபடி வந்தான்

"ஒரு INVESTMENT PLAN பத்தி கேட்டுட்டு வரேன் .நீங்க FOOD COURTக்கு போய்அவனுக்கு எதாச்சு சாப்பிட வாங்கி  தாங்க . நான் இதோ வரேன்."

நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன், பார்வையில் இருந்து அவன் மறைந்தான். திரும்பி அவள் என்னை பார்த்தாள்.

எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. வேலை விஷயமாய் உட்கார்ந்து இருந்ததால் ரொம்ப உணர்ச்சியை காட்ட முடியவில்லை. வேஷமிட்டு பழகி பல வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் சாதரணமாய் உட்கார்ந்து இருந்தேன். அவள் தான் தவிப்பாய் தவித்து கொண்டிருந்தாள். எனக்கு டார்கெட்யை பற்றி தான் கவலையாக இருந்தது. டீம் பசங்களை அப்பப்பொழுது பார்த்து கொண்டிருந்தேன்.

அவளின்னும் பேசவில்லை. எனக்கு வேறொருவன் மனைவியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

ஐந்து நிமிடம் போயிருக்கும்.

"கல்யாணம் ஆகிருச்சா ?"

அப்பொழுது தான் கண்களை பார்த்தேன். கலங்கி இருந்தது. கன்னங்களில் இரண்டு கண்ணீர் துளி. சிவா ஏதொரு ஆளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இருந்தான்.

திக்க்ஷாவை பற்றி சொல்லலமா என்று யோசித்தேன்.

"இன்னுமில்லாம்மா".

தலையை குனிந்து அழுக ஆரம்பித்தாள். முக்கு சிந்தினாள்.

"சார் இரண்டு LOGIN ...." என்று சொல்லியபடி திரும்பிய சிவா இவள் அழுவதை பார்த்தவுடன் மேற்கொண்டு பேசாமல் திரும்பி கொண்டான்.

முகத்தை திருப்பி பார்த்தேன். அவளை காணவில்லை தூரத்தில் நடந்து போய் கொண்டு இருந்தாள். அவள் பின்னாடியே தொடர்ந்து போக என்னோ தோன்றவில்லை.


கொஞ்சம் நேரம் கழிந்து காப்பி சாப்பிட போனேன். டோக்கன் வாங்கிவிட்டு காப்பிக்காக காத்திருந்த போது. அவளை பார்த்தேன்.

கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள். குழந்தையை போட்டு அடித்து கொண்டு இருந்தாள்.

"ஏம்மா இன்னைக்கு மட்டும் குழந்தையை போட்டு இப்படி அடிக்குற ?" அவளுடைய கணவன் என்பவன் கேட்டு கொண்டிருந்தான். அவள் முகத்தில் ஏதொரு சொல்லமுடியாத வலி தெரிந்தது.

அன்றைய நாள் பொழுதின் டார்கெட் முடித்த பிறகு : இரவு பெருங்களத்தூர் கணேஷ் பவனில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

"உறவுகள் தொடர்கதை ; உணர்வுகள் சிறுகதை ...." ரேடியோ பாடிக் கொண்டு இருந்தது.

ஒரு இட்லி மிச்சம் இருந்தது. கை கழுவி, காசு தந்துவிட்டு அறைக்கு வந்தேன்.

மீண்டும் அவளின் நினைவுகள். நிஜத்தில் வேறொருவனில் மனைவியாக இருந்தாலும் : நினைவுகளில் இன்னும் அவள் என் காதலியாக தான் இருந்தாள் .

ஜன்னல் வழிய வானத்தை பார்த்தேன். இருள். நான் தேடி கொள்ளாத இயலாமைகளின் வலி வலித்தது. தனிமை. அப்பாஸ் யுவன் இன்னும் வரவில்லை.

காகிதம் எடுத்து எதாவது எழுதி மனதை திசை திருப்பலாம் என்று பார்த்தேன். எழுத்துக்களாய் ஒன்றும் வரவில்லை .

"MAYVEE ..... BE ... MBA ... MS ...." பட்டங்கள் இருந்தது...ஆனால் அவள் இல்லையே என்ற எண்ணம் அழுகையில் முடிந்தது.

கண்களை மூடினேன். திக்க்ஷா, காயத்திரி, அவள் கணவன், அவளின் குழந்தை, அம்மா அப்பா ; எல்லோரும் கண்முன்னே வந்தார்கள்.

பல குழப்பத்துடன் தூங்காமல் இரவை கழித்தேன்.


10 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நல்லாயிருக்கு மேவி.. எப்பவுமே உண்மைக்கு நெருக்கமா எழுதப்படும் எழுத்துகள்தான் அழகா இருக்குது..:-)))

philosophy prabhakaran said...

என்னது உண்மைச் சம்பவமா...

/* வாட்ச்மேன் கேட்டை திறக்க மறுத்த பொழுது. பணத்தால் அடித்தேன் : வலியில்லாமல் சிரித்துக் கொண்டே கேட்டை திறந்து விட்டான். */

இந்த வரிகளில் இருந்த creativity எனக்கு பிடித்திருந்தது..

ஸ்ரீ said...

நடை அருமையா இருக்கு மேவீ .
உணர்வுகளைச் சொல்லத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளும் அருமை.மொத்தத்தில கலக்குற சந்துரு.

எஸ்.கே said...

ரொம்ப அருமை! மனம் கனக்கும்! எழுத்து நடை மிகச் சிறப்பு!

Karthik said...

Good stuff thala. Way to go! :-)

பரிசல்காரன் said...

ப்ளஸ்: நடை

மைனஸ்: என்னவோ ஒரு வெறுமை கதையின் கருவில். ஆனால் அதுவும் ஒருவகையில் ப்ளஸ்தான் இது போன்ற கதைக்கு.

ரசித்த வரிகள்:

//வெறுமையின் கண்ணாடியில் வெறுமையை தவிர வேறெந்த பிம்பமும் தெரியாது.//

குறை:

அங்கங்கே எழுத்துப் பிழைகள்.

நன்றி மேவி.

Saran said...

//"ஆமா சார் ...ஏன் MBA வுல MARKETING & HR எடுக்கணும்ன்னு சொல்லுறீங்க ??"
"ஏன்ன்ன நாளைக்கு நீ ஒரு டீம் லீடர் ஆகிட்டன்னு வைச்சுக்கோ...ஒரு இருபது பேரை ஹான்டில் பண்ண உனக்கு நிச்சயம் ஹுமன் ரிசௌர்ஸ் ஸ்கில்ஸ் தேவைப்படும்."
//

என்னாமா யோசிக்குது பயபுள்ளக...

அற்புதம் மேவீ

டம்பி மேவீ said...

@ கார்த்திகை பாண்டியன் : நன்றி ..... என்ன சொல்லுறதுன்னே தெரியல

@ பிரபகாரன் : அப்படியா நன்றி பாஸ் ....பிறகு இது உண்மை சம்பவம் இல்லைகோ ...

@ ஸ்ரீ : தேங்க்ஸ் தல

@ எஸ்.கே. : ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து வாங்க

@ கார்த்திக் : நன்றி தம்பி

@ பரிசல்காரன் : எழுத்து பிழைகளை குறைத்து கொள்ள முயற்சிக்கிறேன்

@ சரண் : நாங்களும் யோசிப்போம் ல ...ஹி ஹி ஹி ஒரு வேளை நான் இலக்கியவாதி ஆகிட்டேனோ ?

Karthik said...

//இரண்டு பெண்கள் நிர்வாணமாய் என்னை கட்டிபிடித்து இருப்பது போல் உணர்தேன்.//

I close my eyes and imagine.. LOL :P

//அவளின்னும் பேசவில்லை. எனக்கு வேறொருவன் மனைவியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.//

BEst

Karthik said...

Poya.. naanum ninaivugalukku poiten :(

Related Posts with Thumbnails