Pages

Sunday, October 24, 2010

கதாபாத்திரம் - {சிறுகதை }


"சார் அடுத்த வார இஷ்யூ ரெடி ஆகிருச்சு .... நீங்க எப்ப கதைய    அனுப்பி வைக்க போறீங்க ?"

இரவு மணி பத்து. அனுப்பி இருப்பேன், ஆனால் கதையை எப்படி முடிப்பது என்று தான் குழம்பி இருந்தேன். சரி, முன்னர் எடுத்த முடிவின் படியே ...." வயற்றில் கத்தி குத்து வாங்கியவன் , பூமியில் சரிந்தான். ரௌடிகள் அவனது காதலியை கதற கதற மறைவுக்கு இழுத்து செல்வதை மௌனமாய் பார்த்துக் கொண்டே இறந்தான்."

மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. கதையை மெயிலில் அனுப்பிவிட்டு ஜன்னல் பக்கம் வந்து நின்றேன். மழை. யுவா, அப்பாஸ் இன்னும் வரவில்லை : WORKAHOLICS .... ஒன்னும் செய்ய முடியாது.

இரவு, மழை மற்றும் நான் தனிமையில். தனியாக இருக்கும் எனக்கு துணையாக மழையும் இரவும் வந்து தனிமையில் இருந்தன.

காதலுடன் காம்மும் வருவது போல, என் தனிமையுடன் பயமும் கலந்திருந்தது.

டொக் டொக் .....

அறை கதவை யாரோ...... அப்பாஸ் அல்லது யுவாவாக தானிருக்க வேண்டும் என்று நினைத்த படிய கதவை திறந்தேன்.

அங்கே ....அவன், அறைக்கு வெளியே. வெள்ளை சட்டை. வெள்ளை பேண்ட். மழையில் நனைந்து இருந்தான். சட்டையில் நிறைய சேறு.

வயற்றில் சொருகியபடி ஒரு கத்தி. !!!!!! ரத்த அடையாளங்கள். பேண்ட்டில் சட்டையில்.

நிமிஷ பயங்கள் வந்து போனது. எதாவது நண்பர்களின் விளையாட்டாக இருக்குமோ என்ற எண்ணம் வந்த பொழுது கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் அதைவிட பயமே அதிகம் தந்தான் அவன் எனக்கு.

இதயம் இரண்டுக்கு ஒன்றாகவும், ஒன்றுக்கு இரண்டு முறையாகவும் இயங்கியது. ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி இதயத்தை புண் ஆக்கியது.

சிரித்தான். நாராசமாய் இருந்தது. உள்ளே வந்து விடுவனோ என்ற பயத்தில் அறை கதவை மறைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.


அனுமதில்லாமல் உள்ள வந்தான். பயத்தில் அவனை நோக்கியபடி நான் பின்னோக்கி வந்தேன். அவன் சுவாசிக்கவில்லை.

கவனித்தேன் வயற்றில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அறையில் குளுமை அதிகமானது. என் இடது புருவம் தொடர்ச்சியாய் துடித்தது. தூரத்தில் நாய் பசியின் காரணமாக சத்தமிட்டது.

அதர்ச்சியில் இருந்து வெளிய வந்த பொழுது அவன் சோபாவில் அமர்ந்து இருந்தான், நான் எதிர் சோபாவில்.

இடது கையால் அவன் வயற்றில் குத்தி இருந்த கத்தியை மெல்ல மெல்ல ஆட்டி ஆட்டி எடுத்தான். கத்தியில் ரத்தம் சொட்டி கொண்டிருந்தது. வயற்றில் இருந்து எதுவும் வெளியேறவில்லை. மரண பயம். குளுமையிலும் வேர்த்தேன் அதிகமாக.

அப்பாஸ், யுவனை காணவில்லை. கடிகாரம் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை.

அவன் மட்டும் .....நானும்


"யா ..யா ...யாரு நீங்க ?"

சிரித்தான்.

"யார்ன்னு கேட்குறான்ல "

சிரித்தான். சிரித்தான்.... பார்வையால் சிறைபிடித்தான்.

முதல் முறையாக ஏதோ பேசினான். உதடுகள் அசைந்தது. சத்தம் எனக்கு கேட்கவில்லை. ஒரு முறை தலையை உலுக்கி கொண்ட பிறகு..

"நா அசோக் . ஆசையா ஒரு பொன்னை காதலிச்சேன்..."

நானொண்ணும் பேசவில்லை. என் உடம்பில் இருந்த வாயு மட்டும் மெல்லிய சத்தம் போட்டான்.

"........ நாங்க இரண்டு பேரும் டூர் போகும் போது, வழில சில ரௌடிங்க ..."

நடுவில் என்ன பேசினான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் கதை நான் முன்பே கேட்டது போல் ஒரு உணர்வு.

"....... அதுல ஒரு ரௌடி குத்தின கத்தி தான் இது ..."

அதிகமான வேர்வை... படபடப்பு .. எல்லாம் எனக்கு. ஒரு வேளை ஜாம்பி பேய் ஆகா இருப்பானோ......

"ஏன்டா என்னைய கொன்ன?"

கேள்வி என்னை நோக்கி தான் என்று புரிந்த பொழுது, ஒன்றுமே புரியவில்லை எனக்கு.


"நான் எப்ப உன்னைய கொலை பண்ணின ...."


"இப்ப தான் ... ஒரு அர மணி நேரத்துக்கு முன்னாடி ......" என்றபடி கம்ப்யூட்டரை கட்டினான்.

கொஞ்சம் நேரத்தில் பிரமாண்ட பயங்கள் வந்து போனது, சில பயங்கள் அப்படியே தங்கியது. கதையில் நான் கொன்ற அசோக் எப்புடி நேரில் வரமுடியும் ??

"கதை எழுதினன என்ன வேண்டுமானாலும் எழுதுவிய ??"

"ஆமா ..என் கதை நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்......"

"என்ன வேண்னுமானாலும் எழுதிவிய ....." சிரித்தான்.

பக்கத்தில் நின்று என் கையை பிடித்தான். அது ஜில்லிட்டு போயிருந்தது.

"நீ எழுது...யாரு வேண்டாம்ன்ன ....ஆனா எதுக்குடா என்னை கொன்ன ...??"

ஒன்னும் பேசவில்லை . கோவபட்டான்.

அவன் பிடித்திருந்த என் கையை நோக்கி ..... கத்தியை மேலே தூக்கி கீழே இறக்கினான். ஆபத்தை
உணர்ந்த நான் அவன் பிடியில் இருந்து தப்பி ஓடினேன். இருந்த சின்ன வீட்டில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. கடைசியாக போராட சக்தில்லாமல் குளியலறையில் ஒளிந்து கொள்ள அதை நோக்கி ஓடினேன். உள்ள நுழைந்து கதவை முட நினைத்த நேரத்தில் கதவை தள்ளி கொண்டு வந்து விட்டான்.

அவன் கதவை தள்ளிய வேகத்தில் நான் கீழ விழுந்து விட்டேன். அறையின் மூலைக்கு உட்கார்ந்த படியே வந்தான். மேலும் போக முடியவில்லை.

பக்கத்தில் நெருங்கி வந்தான்.

"ஏன்டா என்னைய கொன்ன ..... அவ என்னடா உனக்கு பாவம் பண்ணினா ...."

அவன் கோவத்தின் உச்சியில் இருந்தான். முகம் காட்டி தந்தது.

கத்தியை ஓங்கி என் தொடையில் குத்தினான். வலி உயிர் போனது. தாங்க முடியவில்லை. அழுவ ஆரம்பித்தேன்.

என் வயற்றை நோக்கி கத்தியை ஓங்கிய பொழுது ..... நாம் அவ்வளவு தான் என்று எண்ணிவிட்டேன்.

வெளிய பைக் சத்தம் கேட்டது. யாரோ படியில் ஏறி வருவது கேட்டது.

"மேவி ..மேவி ...."

"யாரு ..யாரு ...அது யாரு ..."

"தெரியல ...."

அவன் முகத்தில் பதட்டம் மறைந்தது: சிரித்த படிய பின்னாடி போனான்.

பிறகு அவன் "அ" , "சோ" , "க்" என்று எழுத்துக்களாய் மாறி மறைந்து போனான்.

8 comments:

எஸ்.கே said...

செம திரில்லான பயங்கரமான கதை சார்! சூப்பர்!

நட்புடன் ஜமால் said...

முடிவ இன்னும் கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்

நல்ல எழுத்தோட்டம்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சிப்பா.. நைஸ்..:-)))

Karthik said...

ஜமால் கமெண்ட்டை ரிப்பீட்டிக்கிறேன். செமையா இருந்துச்சு. :)

philosophy prabhakaran said...

நல்ல கதை... அருமையான எழுத்து நடை...

Balaji saravana said...

நல்லாருக்கு மேவி..
ஒரு சின்ன பதட்டம் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு...

-- mt -- said...

nalla kadhai

டம்பி மேவீ said...

@ எஸ்.கே. : ரொம்ப நன்றிங்கோ

@ ஜமால் : அண்ணே .... முடிவை பற்றி நிறைய யோசிச்சேன். ஆனா எழுத தான் அப்ப டைம் இல்லை

@ கார்த்திகை பாண்டியன் : நன்றிங்கோ

@ கார்த்திக் : இதை இதை தான் எதிர்பார்த்தேன்

@ பிரபாகரன் : :)))))))))))

@ பாலாஜி : அடுத்த சிறுகதைல பாருங்க

@ mt : thanks

Related Posts with Thumbnails