Pages

Sunday, November 14, 2010

கலவை - காமசூத்ராவுல முதல் வரி

நேத்து ஆபீஸ் போயிட்டு இருக்கும் போது கந்தசாமி படத்துல இருந்து "என் பெயர் மீனாகுமாரி" ங்குற பாட்டை கேட்டுகிட்டே போனேன். அதுல ஒரு வரி வரும் பாருங்க "காமசூத்ராவுல நான் முத வரி"ன்னு, என்னன்னு தெரியல நேத்து முழுக்க அதே வரியே பாடிக்கிட்டு இருந்தேன். ஆபீஸ் விட்ட உடனே லேண்ட்மார்க் க்கு போனேன். ஒரு வேளை அந்த வரிக்கு குஜால்ஸ் மீனிங் இருந்துட்ட என்னபண்ணுறதுங்குற சமுதாய அக்கறை தான்.

சரின்னு அங்கணன போய் காமசூத்ரா புஸ்தகத்தை எடுத்து, முதல் வரி என்னன்னு பார்த்தேன், பெரிய ஏமாற்றம். "தர்மமே அனைத்துக்கும் மூலம்"ன்னு இருந்துச்சு. நான் இந்த புஸ்தகத்தை கைல வைச்சு இருக்கிறதை பார்த்த ஒரு ஆன்டி, ஏதோ நான் அவங்களை பண்ணிருவேனுன்கிற மாதிரி அந்த பக்கம் போய்ட்டாங்க.

எதுக்கு அந்த பாடலாசிரியார் அந்த மாதிரி எழுதினாருன்னு தெரியல. ஒரு வேளை ரைமிங் ஆ வருதுன்னு எழுதிட்டரோ. சும்மனாச்சு ஒரு எழுதிட்டரோ. எனக்கு தெரிஞ்சு தேடல் இல்லாத படைப்பாளனின் படைப்புகள் காலத்தை வென்றதில்லை. (உதாரணம் - ஆரூர் ராமநாதன் எழுதிய வீர பாண்டியனின் மனைவி......(மொக்கைன்ன மொக்கை அப்படி ஒரு மொக்கை))

எனக்கு தெரிஞ்சு ஊடகங்களில் காமசூத்ரத்தை ஏதோ மூன்றாம் தர "சூப்பர் குத்து" புஸ்தகம் அளவுக்கு ட்ரீட் பண்ணியிருக்காங்க.

அதென்ன சூப்பர் குத்துன்னு YOU PEOPLE ASKING ஆ ????

போன வாரத்துல ஒரு நாள் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் இருக்கிற பிளட்பாம் ல போய்கிட்டு இருக்கும் ஒரு ஆடு அங்க இருக்குற கடை ல போய் நின்னு ஒரு மாதிரி சிரிச்சு, இந்த பெயரை சொல்லி கேட்டுச்சு. அவருக்கு ஒரு 35 வயசு இருக்கலாம். இன்னுமும் இந்த மாதிரியான புஸ்தகத்தை படிக்குறாரேங்குறதை நினைக்கும் போது
கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. ஒரு வேளை குடும்ப சுமையால் கல்யாணம் ஆகாமல் இருக்கலாம் .....

= = = = =

இந்த வெள்ளிகிழமை TARAPORE TOWERS பக்கம் போயிட்டு, ஹிக்கின்போதம்ஸ் க்கு வந்துட்டு இருக்கும் போது, அங்க இருக்குற மசூதி முன்னாடி நின்னுகிட்டு இருந்த டிராபிக் போலீஸ் மாமா, மாமுல் தராம திருட்டு தனமா எஸ்கேப் ஆக பார்த்த ஆட்டோகாரரை "தே.... மவனே .... திருட்டு பு....." ன்னு திட்டி காலரை பிடிச்சாரு. போலீஸ் ட்ரைனிங் ல இதையெல்லாம் கண்டுபிடிக்க கூட சொல்லிதராங்க போலிருக்கு. ஒருவனோட பிறப்பை விமர்சிக்க யார் அந்த போலீஸ் மாமாவுக்கு ரைட்ஸ் தந்தாங்கன்னு தெரியல. ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும், அந்த ஆட்டோகாரர் ஒரு தே ..மவன் என்பதையும், அவனுக்கு இருப்பது திருட்டு பு என்பதையும் கண்டுபிடித்த போலீஸ் மாமாவின் விஞ்ஞான அறிவும், பின்நவீன இலக்கிய பார்வையும் என்னை மெய்சிலிர்க்க வைச்சுருச்சு.

எனக்கு வந்த கோவத்திற்கு நேர போலீஸ் மாமாகிட்ட போய் "எப்புடி சார் அவருக்கு திருட்டு பு..... ன்னு கண்டுபிடிச்சீங்க...கழுட்டி ....." ன்னெல்லாம் கேட்க தோனுச்சு. ஆனா முடியல. பொருளாதார அடிமை வேஷம் அப்ப போட்டு இருந்தேன் .

= = = = =

பொதுவா ஆங்கில மோகம் அதிகம் இருக்கிற சமுதாயத்துல சின்ன பசங்களுக்கு அப்பெல்லாம் TREASURE ISLAND, JOURNEY TO CENTER OF THE EARTH ங்குற இரண்டு நாவலை தான் அதிகம் படிக்க குடுப்பாங்க. இது இரண்டும் செம கிளாச்சிக் வகைரவை சேர்ந்தது. இதுல JOURNEY TO CENTER OF THE EARTH - JULES VERNE எழுதினது. பொதுவா இவர் எழுதினன நாவல்களில் எல்லாம் ஏதொரு பயணம் சமந்தபட்டதாகவே இருக்கும். பசங்களுக்கு ஆங்கில நாவல்களை அறிமுகபடுத்த விரும்புறவங்க, அவங்களுக்கு இவரோட நாவலை தாரளமா தரலாம்.

= = = = =

இதுவரைக்கும் எது நடக்க கூடாதுன்னு நினைசேன்னோ அது நடந்துருச்சு. சாரு சாரோட ஒரு புஸ்தகத்தை வாங்கிட்டேன், என்னவாக போகுதுன்னு தெரியல. எப்பவுமே ஒரு புஸ்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் முன்னாடி அந்த எழுத்தாளரை பத்தின்ன எந்த பிம்பமும் மனசுல இருக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால் நேசமுடன்
படிக்கலாம்ன்னு இருக்கேன். படிக்காமலும் இருப்பேன்.

= = = = =

சமீபத்துல ஒரு ஆடு சொல்லுச்சுன்னு சாண்டில்யன் எழுதின ராஜபேரிகை படிச்சேன். அதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு,கதை
ஸ்ரீ ரெங்கத்தை சுத்தி வருதுன்னு அந்த ஆடு சொன்னதால் தான். செம மொக்கை. ஒரு கட்டத்துக்கு மேல சாண்டில்யன் குழம்பி போயிட்டாருன்னே நினைக்கிறேன். கதை வெள்ள காரன் பக்கமும் கொண்டுபோகமா, தமிழ் நாட்டுக்காரன் பக்கமும் கொண்டுபோகமா ....
ஒரு கட்டத்திற்கு மேல யாரு கதையின் நாயகர்கள் ..எது கதையின் களம்ன்னு படிக்கும் நமக்கே குழப்பம் வந்துரும் .

இந்த நாவல் வேற ஏதோ ஒரு அவார்ட் வாங்கி இருக்காம். ம்ம்ம் ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியனுக்கு போன் பண்ணிருந்தேன், அப்ப அவரு நான் பதிவு எழுத வந்து இரண்டு வருஷம் ஆனதற்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு, ட்ரீட் கேட்டாரு. உடனே நான் "ட்ரீட்க்கு பதிலா ஒரு கவிதை சொல்லட்டுமா"ன்னு கேட்டேன் . அதுக்கு டென்ஷனாகி அவரு "ஆணிய புடுங்க வேண்டாம்"ன்னு சொல்லிட்டாரு.

= = = = =

METROPOLIS ன்னு படம். மௌன படங்களில் வந்து கொண்டு இருந்த காலத்திலையே வந்த மிக பிரமாண்டமான படம். இந்த படத்துக்கு நான் விமர்சனம் எழுதலாம்ன்னு இருக்கேன். (அந்த கொடுமையை எல்லாம் நீங்க தாங்கி தானாகணும்.) யாரும் MISS பண்ணாதீங்க. இந்த படம் இப்ப YOUTUBE ல முழு படமாகவும், பார்ட் பார்டாகவும் கிடைக்குது. MAD SCIENTIST வகைராவில் இது தான் படம்ன்னு சொல்லுறாங்க. நான் கொஞ்சம் தான் பார்த்திருக்கேன். மீதியை அடுத்த வாரம் தான் பார்க்க முடியும்.

= = = = =

சரி மக்கள்ஸ் , இன்னும் இரண்டு விஷயம் பாக்கி இருக்கு. அதையெல்லாம் அடுத்த கலவை ல முடிஞ்சா சொல்லுறேன்.

BYE

KEEP SMILING

ENJOY LIVING

Sunday, November 7, 2010

தினசரி வாழ்க்கைக்கு (DAILY LIFE ) இரண்டு வயசு


இதனால் எல்லோருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா நான் பதிவு எழுத வந்து இரண்டு வருஷம் ஆகபோகுதுங்கோ .... போகுதுங்கோ:). ரொம்ப ஆச்சரியமா இருக்கு : பதிவு எழுதுவதினால் நான் நிறைய நல்ல விஷயங்களை கத்துகிட்டு இருக்கேன். அதைவிட நிறைய நண்பர்கள் எனக்கு கிடைச்சு இருக்காங்க.

நான் எக்ஸாம் ல எழுதினதையெல்லாம் அதை திருத்துற வாத்தியாரே படிச்சு இருப்பாரா ங்கிறது சந்தேகம் தான். ஆனா நான் என்ன எழுதினாலும்(மொக்கை போட்டாலும்) ஏதோ பழகின தோஷத்திற்காச்சு படிச்சுட்டு "டேய் டம்பி, இவ்வளவு டம்மியா எழுதாதே..உருபடிய எதாச்சு எழுதுன்னு" சொல்லுறதுக்காச்சு கொஞ்சம் பேர் இருக்காங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருக்கு.

அமெரிக்காவுல இருந்தும், சுவிஸ் ல இருந்தும், லோக்கல் மதுரைல இருந்தும் என்னோட பதிவுகளை படிச்சிட்டு சிலபேர் நேசமா போன் பண்ணி பேசும் பொழுதெல்லாம் எவரெஸ்ட் அளவுக்கு சந்தோஷமா இருக்கும் : அதே சமயம் ரொம்ப பயமாகவும் இருக்கும். ஏன்ன இவங்களாவது அடுத்த பதிவுல மொக்கை போடமா உருபடிய எழுதணும் ங்குற பயம் தான். அதனால தான் கதாபாத்திரம் சிறுகதையை எழுதிட்டு வேறொன்னும் எழுதல. (இரண்டு சிறுகதை ரெடி ஆகிருச்சு (SCIFI ஒன்னு, மாயஜாலம் ஒன்னு). STORY PLOT பலபடுதுற வேலை நடந்துகிட்டிருக்கு

(தொலைந்த சொர்க்கம், மேவி...ஐ லவ் யூ ன்னு நான் எழுத ஆரம்பிச்சு, பிறகு தொடர முடியாமல் போன இரண்டு தொடர்கதை வேற பாதில அப்படியே இருக்கு)

)

நான் பதிவெழுத வந்த ஆரம்பத்துல நிறைய பேருக்கு பின்னோட்டம் போடணும்ன்னு சொன்னாங்க, இன்னொருத்தர் அவங்களுக்கு பின்னோட்டம் போட்ட தான் அவங்க நமக்கு பின்னோட்டம் போடுவங்கணும் சொன்னாரு. நானும் ஆரம்பத்துல சிலபலருக்கு பின்னோட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன், ஆனா பாருங்க அப்பரும் வேலை பளு காரணமா இப்பெல்லாம் யாருக்குமே பின்னோட்டம் போட முடியறது இல்லை. கிடைக்குற கொஞ்ச நேரத்திலும் ஏதோ கொஞ்சமாய் எழுத முடியுது. அதனால யாரும் என்னை தப்பாக நினைச்சிக்க வேண்டாம்ன்னு கேட்டுக்குறேன்.

இந்த சமயத்துல எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான தகவலை சொல்ல போறேனுங்கோ ( ஒபாமா இந்திய வந்திருப்பதையொட்டி இந்த தகவல் வெளியிடு) ..... அதுயேன்னா இனிமேல தினசரி வாழ்க்கை ல கொஞ்சம் இலக்கியத்தரமா எழுத போறேன், மொக்கை போடுறதெல்லாம் மேவியின் பகிர்வுகள் ல வைச்சுக்கலாம்ன்னு இருக்கேன். நான் இலக்கிய தரமா எழுதுறது மூன்றாம் உலக போர் வர காரணமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . BECAUSE SINCE CHILDHOOD WRITING WAS ALWAYS BEING MY PASSION...

இதுக்கு மேல சொல்லுறதுக்கும் ஒண்ணுமில்லை, இதோட முடிச்சுக்குறேன். இந்த பதிவை படிக்கிறவங்க முடிஞ்ச உங்களோட கருத்தை பின்னூட்டமாக சொல்லிட்டு போங்க.

= = = = =

டிவிட்டர் ல கூட நான் இருக்கிறேனுங்கோ. அதுல என்னைய பிடிக்க இங்க கிளிக் செய்ஞ்சு, என்னை பின் தொடருங்கோ ...

Related Posts with Thumbnails