Pages

Monday, February 14, 2011

காதலும் நானும் - சுயம் சார்ந்த பதிவு

பெரிய மூக்கு, பெரிய காதுகள், திக்கு வாய், ஞாபக மறதி உடன் வளர்ந்த எனக்கு பதின்ம வயதில் அழகான பெண்களை பார்த்தால் காதல் வந்ததே இல்லை, அதற்க்கு பதில் பயமும், தாழ்வு மனப்பான்மையே வந்தது. அவர்களோடு பேச ஆயிரம் ஆசைகள் வரும். சொல்லாமலே படத்தில் ஒரு வசனம் வரும் " உடலையும் உருவத்தையும் வேற வேறன்னு படைச்ச ஆண்டவன், உணர்வுகளை ஒன்னு படைச்சிட்டான்....". என் வயதையொத்த மற்றவர்கள் பெண்களுடன் பேசு பொழுதெல்லாம் ( நான் படித்து கொஞ்சம் பணம் படைத்தவர்கள் படிக்கும் பள்ளி), தள்ளி நின்று ஏக்கத்தோடும் இயலாமையோடும் பார்ப்பேன். யாரவது என்னிடம் வந்து எனக்கெனகென்று விஷயங்களை பகிர்ந்து பேச மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு பள்ளி பருவம் ஒரு முடிவுக்கு வந்தது. மேலும் சரியாக படிக்காத என்னிடம் எந்த பெண் பேசுவாள் என்ற உணர்வும் நிறையவே இருந்தது.

+ 2 படிக்கும் பொழுது நான் இரசியமாக காதலித்த பெண் பக்கத்தில் group photo வில் நிற்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கே மனதில் ஆயிரம் ஆயிரம் பறவைகள் பறந்தது. பிற்பாடு பேசிக்கொள்ளலாம் என்று நின்றிருந்தேன். ஆனால் அவள் என்னை பார்க்காமல் பள்ளியை விட்டு கிளம்பி விட்டாள். பரீட்சை நேரத்திலும் தள்ளி நின்று பார்த்து கொண்டிருப்பேன். பரீட்சை முடிவுகள் வந்த உடன் பேசிக்கலாம் என்று மௌனமாய் இருந்தேன். முடிவுகள் வந்தது. அந்த பெண் நிறைய மதிப்பெண் வாங்கிருந்தாள். நான் எதுவுமே வாங்கவில்லை. பெயில்(fail ). தோல்வி. (ஆமாங்க நான் + 2 ல பெயில் ). பேச முடியாமல். யாரவது பார்க்கும் முன் வீட்டிற்கு வந்து விட்டேன்.

வாழ்க்கையை வெறுத்த நிலையில் கொஞ்ச நாள் சுற்றி கொண்டிருந்தேன். யுவாவையும் அப்பாஸையும் பார்க்க தைரியம் இல்லாமல். பிறகு சாத்தான் ஆசிர்வதித்த ஒரு வேளையில் அவர்களும் தோல்வி அடைந்ததை அறிந்து கொண்டு, மகிழ்ச்சி அடைந்தேன். இனம் இனத்தோடு சேர்த்து கொண்டதே என்று தான்.

மூவரும் பேசி வைத்து கொண்டு, வீட்டில் அடம் பிடித்து ஒரு டுடோரியலில் சேர்ந்தோம். அங்கே கூட படிக்கும் பெண்களை பார்க்க முடியாதவாறு வகுப்பறை அமைந்து இருந்தது. எக்காரணம் கொண்டும் பெண் பிள்ளைகளை நாங்கள் பார்த்துவிட கூடாதென்று அப்படியொரு அமைப்பு.அப்படியொரு கண்டிப்பு. சாயங்காலம் அவர்கள் போன அரை மணி நேரம் கழித்து தான் நங்கள் போக முடியும். அப்பொழுதெல்லாம் இந்த சமுதாயம் "அவர் பையனா நீ ?" "அவன் தம்பியா நீயு ?" ன்னு கேட்டும் கேலி செய்து கொண்டு இருந்தபடியால் , வாழ்க்கையில் பெருசா சாதிக்க வேண்டும் என்ற வெறியே மிஞ்சி இருந்தது, வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை. அப்படியும் ஒரு நாள் ஒரு பெண் தன் வீட்டில் செய்த உப்புமா என்று குரல் குடுத்த படிய கையை நீட்டினாள். முதல் வரிசையில் நான் இருந்ததால், பின்னாடி இருந்த பசங்களோட தொல்லை தாங்காமல் பயந்து கொண்டே வாங்கினேன். வாங்கும் பொழுது அவளது கை என் கை மேல் பட்டது. அவள் யாரென்று இன்று வரைக்கும் தெரியாது. அந்த முகம் தெரியாத, பெயரும் தெரியாத பெண்ணின் கையின் ஸ்பரிசம் இன்றளவும் நினைவில் இருக்கிறது.

பிற்பாடு அப்பாவின் செல்வாக்கு, அண்ணனின் நட்பு வட்டம் ஆகியவை இருந்ததால் ஒரு பெரிய கல்லூரியில் இடம் கிடைத்தது. பாடங்கள் புரியவில்லை. புதிய நட்புகளுடன் கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை பக்கம் இருந்த நடைமேடையில் ஜாகை. தினமும் அங்குதான். அப்படி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது தான் அவளை பார்த்தேன். ஐயர் பெண். நீண்ட தலைமுடி. கடவுள் அருகே இருக்கும் ஒரு தேவதை பூமிக்கு இறங்கி வந்தது போலிருந்தாள். கலையான முகம். வெண்ணிறம். கல்லூரியே அவள் பின் அலைந்தது. நானும். கல்லூரிக்கு வரும் பொழுது பஸ்ஸில் வருவாள். இதற்காக அரை கிலோ மீட்டர் தூரமிருக்கும் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, அவள் வரும் வரை காத்திருந்து, அவள் வந்த பின் அவளுக்கு பாதுகாப்பளித்து, கல்லூரி வரை பின் தொடர்வேன். மாலையும் அவ்வாறே ; ஆனால் அவள் வீட்டு வரைக்கும்.

எல்லோரும் அவர்களது காதலை சொல்லிவிட்டார்கள். அவள் ஏற்று கொள்ளவில்லை. நான் எதிர்பார்க்காத நபர்களும் அதில் அடக்கும். நான் பெரும் முயற்சிக்கு பிறகு எதாவது பேசலாமென்று போனால், யாரவது அப்பொழுது தான் நேரம் குறித்து கொண்டு, கடலை போட்டு கொண்டிருப்பார்கள். எல்லோரும் அவளின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருந்தார்கள். அவளொரு நாள் என்னை திரும்பி பார்த்தாள்.

கல்லூரி முடிந்தது. வேலை இல்லாத நாட்கள், என் வாழ்வில் வசந்த காலமாய் வந்தது. உலகமே என்னை பார்த்து உமிழ்வது போலிருந்தது. மீண்டும் கிண்டல் பேச்சுகள் ஏளன பார்வைகள் வாழ்வில் மீண்டு வந்தது. வீட்டில் அண்ணன் கல்யாண பேச்சு. குலதெய்வ வழிபாடுக்கு போய் இருக்கும் பொழுது, ஒரு உறவினர் என்னிடம் வந்து "தம்பி நீயாச்சும் அப்பாம்மா சொல்லுற பொண்ணை கட்டிக்கபா..." என்று சொன்னார். எனக்கென்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பொழுதும் என்னை பார்த்து சிரித்தவர்கள் முன்னாடி வளர்த்து காட்டணும் என்ற நினைவாய் இருந்தேன். வேறெந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன்.

முதுநிலை வகுப்புகளில் சேர்ந்த நாட்கள் அவை. ஒரு மேலாண்மை கோட்பாடை வைத்து ஒரு நாடகம் போடுமாறு ஆசிரியர் ஒருவர் சொன்னார். பிறகு அதற்காக என்னையும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் ஒரு குழு என்று அமைத்தார். பிறகு அன்று வகுப்புகள் முடிந்த மாலை நேரத்தில் அந்த பெண் என்னிடம் நாடகம் குறித்து பேசினாள், பேசினாள்.... அவ்வளவு பேசினாள். அவளது அழகை ரசித்த நான், பிறகு அவளது அறிவை கண்டு வியந்தேன். என் மொபைல் நம்பரை வாங்கி கொண்டு கூட்டத்தில் மறைத்து போனாள். நாளொரு மேனியுமாய், பொழுதொரு வண்ணமாய் பேச்சுகள் தொடர்ந்தது. அவள் பார்த்து ஆச்சரிய பட்ட இயற்க்கை, அவள் வளர்க்கும் செடிகள், படித்த புத்தகங்கள் என்று பேசுவாள். அவள் பேசும் பொழுதெல்லாம், சொல்ல முடியாத ஓன்று என்னை பறக்க செய்தது.

ஒரு சமயம், மற்ற பெண்கள் அவளை ஏதோ கிண்டலடித்து கொண்டிருக்கும் பொழுது, "YES I WAS TALKING WHOLE OF NIGHT WITH MY HUBBY ONLY " என்று சொன்னாள். அதிர்ச்சி அடைந்து அவளை பார்த்தேன். அவளும் என்னை வெட்கத்தோடு பார்த்தாள். முன்தினம் இரவு முழுவதும் நான் தான் அவளோடு பேசி கொண்டிருந்தேன் : அதனால் தான் அதிர்ச்சி அடைந்தேன். பேசி கொள்ளும் நேரங்கள் அதிகமானது.

வாழ்க்கை நாம் நினைத்த மாதிரி போனால், அதற்கும் கனவுக்கும் வித்தாயசம் இல்லாமல் போய்விடும். கல்லூரி முடிய போகும் நேரம் வந்தது. மூன்று நாட்களாய் அவள் காணவில்லை.போன் பண்ணினால், அவளேடுக்கவேயில்லை. பைத்தியம் பிடித்தது போலானது எனக்கு. நான்கு நாட்கள் போய் இருக்கும். இரவு பத்து மணி ஆகிருக்கும். அவளிடமிருந்து போன்.

எடுத்தேன். மூன்று நிமிஷங்கள் நீண்ட மௌனம். விசும்பி கொண்டிருந்தாள். ஏன் என்று தெரியவில்லை, புரியவில்லை. பிறகு ஒரு பெருமூச்சுக்கு பிறகு "mayvee , am going to get married .... got engaged " என்றாள். எனக்கு சொல்வதென்று புரியவில்லை. ஒரு நொடி அழுகலாமா என்று நினைத்தேன். பிற்பாடு ..." hey congrats ...." என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்தேன்.

பிறகு பல நிலைகள் கடந்து வந்துவிட்டேன். ஆனால் எந்த சிறப்பான உணர்வும் வரவில்லை. இயலாமைகளும் பயங்களும் நிறைய இருந்தாலும், வாழ்வில் எதாவது பெரிதாய் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிக்கிறது. எனது பொருளதாராதிற்க்கான போராட்ட வாழ்க்கையில் மெல்லிய உணர்வுகளுக்கான பக்கங்கள் என்று பார்த்தால், அவை மயான பூமியில் நிலவும் மௌனமாகவே இருக்கிறது. எதையோ இழந்து விட்டது போல், இரவின் தனிமையில் அழுகின்றேன். நினைத்த நிலையை அடைவேனா, ஆசைப்பட்ட காதலும் கிடைக்குமா என்று தெரியவில்லை. வீட்டில் கல்யாண பேச்சை எடுத்து இருக்கிறார்கள், எனக்கு நிலை இல்லாத பொருளாதார நிலையை கண்டு பயமே மேலோங்கிறது. (target முடிக்கவில்லையென்றால் வேலை காலி).

ஏனிந்த பதிவை எழுதிகிறேன் என்று தெரியவில்லை. நான் இன்றைக்கு காதலர் தினத்தை எவ்வகையிலும் கொண்டாடவில்லை. promotion க்காக online exam எழுதுவதில் தான் இன்றைய நாள் சென்றது. அதிலும் தோல்வி : எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. இந்த வாரத்திற்குள் கட்டாயம் முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை முடிக்கிறேன்.

எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

- - -
பதிவும் தளமும் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள். பின்னோட்டம் போட மறவாதீர்கள், அது என்னை கொஞ்சம் உற்சாக படுத்தும்.

இப்படிக்கு
மேவி

Saturday, February 12, 2011

பயணம் (2011) = Mivtsa Yonatan (1977)


கொஞ்ச மாதங்களுக்கு முன், என் அண்ணனோடு டிவிடியில் Mivtsa Yonatan என்ற HEBREW மொழி படத்தை பார்த்தேன். அந்த படத்தோட கதையும் ஏறக்குறைய இந்த பயணம் படத்தோட கதை மாதிரியே தானிருக்கும். Mivtsa Yonatan படம் 1976 யில் உகண்டா நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க பட்டது. பயணம் படம் ஒரு வேளை கந்தகாரில் நடந்த விமான கடத்தலை வைத்து எடுக்க பட்டதோ ??? தெரியவில்லை.

விதவிதமான மனிதர்களை அறிமுக படுத்துவதில் இருந்து படம் ஆரம்பம் ஆகிறது. ஏன் என்ற கேள்வி குறியை நம்மிடம் விட்டுவிடுகிறார்கள். எல்லோரும் விமானத்தில் ஏறுகிறார்கள். விமானம் கிளம்புகிறது. பிறகு ஒருவன் டாய்லட் க்கு போகிறான். கண்ணாடியை கழுட்டி உள்ளே இருந்து துப்பாக்கி எடுக்கிறான். பிறகு வெளிய வந்த உடன், அவனோடு வேறு சில கூட்டாளிகளும் சேர்ந்து கொள்கிறார்கள். விமானத்தை கடத்துகிறார்கள். விமான கோளாறு காரணமாய், திருப்பதியில் தரை ஏறக்குகிறார்கள். பிறகு என்னவானது என்பது தான் கதை.

டைட்டில் பாட்டை தவிர்த்து வேறெந்த பாடலுமில்லை.

நீண்ட நாள் கழித்து குடும்பத்தோ பார்க்க ஒரு படம் வந்திருக்கிறது.

அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற உணர்ச்சிகரமான படங்களை எடுத்த ராதா மோகன் முற்றிலும் வேறொரு தளத்திலான கதையை சொல்லிருக்கிறார். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சந்தோசம். அதே சமயம் இது போன்ற படங்களையெடுக்கும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா டைரக்டர் சார்???

பிறகு தற்கால அரசியல் அமைப்பை நல்லா கிண்டல் அடித்து இருக்கலாம். அதற்க்கான காட்சிகளில் டைரக்டர் சார் கோட்டை விட்டுட்டார். எனினும் புதிய முயற்சிக்காக டைரக்டர் ஸாருக்கு வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.

வசங்களெல்லாம் செம மொக்கை தனமாயிருக்கு. ஒரு வேளை நான் ரொம்ப எதிர்பார்த்து விட்டேனோ ?? அதே போல் பல இடங்களில் அழுத்தமில்லை.

முக்கியமாக டைரக்டர் சார் CASTING JUSTIFICATION சரியாக பண்ணவில்லை. குறிப்பாக "மேனேஜர்" சீனா .... எஸ்வி சேகரின் வண்ணகோலங்கள் நாடகத்தில் செமைய பட்டையை கிளப்பிருப்பர். பாவம் அவர்.

ஒரு சில காட்சிகளில் ஒரு பாதரி பேசுவது போல் வருகிறது...... எனக்கென்னமோ டைரக்டர் சொந்த செலவில் சூனியம் வைசுகிட்டார் என்றே தோன்றுகிறது. எதெல்லாம் இந்திய அரசின் படி இறையாண்மை ஆகும் என்று எனக்கு தெரியாததால், அதை பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

பல இடங்களில் சினிமா தனம் தெரிகிறது.சட்டட்டேன்று காட்சிகள் மாறினாலும், கதை வேகமாக போனாலும் : VERY SLOW ...

பின்னணி இசையை என்னால் உணர முடியவில்லை.

பிறகு பெருசாய் சொல்வதற்கு ஒண்ணுமில்லை. ஒரு தடவை பார்க்கலாம். தமிழில் வித்தயாசமான முயற்சி.

டிஸ்கி : யாருப்பா அந்த AIR HOSTRESS .... படம் முழுக்க குஜால்ஸ்சா வராங்க ???

Sunday, February 6, 2011

கலவை - யுத்தம் செய்

ஹாய் மக்கள்ஸ் !!! எப்புடி இருக்கீங்க ??? நலமா ?? சதோஷமா இருக்கீங்களா ??? கொஞ்ச நாளா சொந்த செலவுல கம்ப்யூட்டருக்கு சூனியம் வைச்சதால பதிவெழுத முடியல ... இப்ப அந்த சூனியத்த எடுத்தாச்சு. இணையம் பக்கம் வராத நாளிலெல்லாம் நிறைய புஸ்தகம் படிச்சேன் கொஞ்சம் சினிமா பார்த்தேன், பழைய நண்பர்களுடன் போனில் அரட்டை அடித்தேன். அப்படி ஒவ்வொருத்தருக்க போன் பண்ணி பேசிகிட்டு இருக்கும் போது தான் பள்ளி கால நண்பன் அபிராம் ஞாபகம் வந்துச்சு. பள்ளி எனக்கு சிறப்பாய் ஏதும் சொல்லித் தராவிட்டாலும், ஒரு சில சிறந்த நண்பர்களை தந்து இருக்கிறது. அபியும் அவர்களிலொருவன். அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது

"டேய் மாமா நீ தரே சமீன் பர் பார்த்து இருக்கீயா ???"

"உனக்கு தெரியாதா.. நான் சுத்த சைவம் .... பிறவு ஜமீன் எல்லாம் இப்ப இல்லடா..."

"டேய் மொக்கை போடாம சொல்லு ...."

"பார்க்கலடா ..."

"கண்டிப்பா பாருடா .... நம்ம ஸ்கூல் லைப் மாதிரியே இருக்கும் ...ரொம்ப பீல் பண்ணுவ"

சரின்னு அடுத்த நாள் ஆபீஸ் விட்டு வரும் பொழுது அந்த படத்தோட சிடி வாங்கி வந்து, படத்தை பார்த்தேன். அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்துச்சு. பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பாடங்கள் புரியாது. அப்படி புரியாத பொழுதுகளிலெல்லாம் கனவு காண்பேன். ராஜா அரண்மனை, போர் காட்சிகள், SHERLOCK HOLMES ... இப்படி நிறைய. இது நான் PG படிக்கும் வரை தொடர்ந்தது. இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி கனவுகள் வரவதில்லை. ஆனால் எதையோ இழந்து விட்டது மாதிரியொரு உணர்வு எப்பொழுதும் இருக்கிறது.

= = =
யுத்தம் செய் - நேத்து தான் படத்தை பார்த்தேனுங்க. ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.

அஞ்சாதே படம் பார்த்த பிறகு, எனக்கு அப்படி ஒரு கோவம் வந்துச்சு. அந்த படத்தோட வில்லன் மட்டும் என் கைல மாட்டி இருந்தான்னா, அப்படியே அம்மி கல்லை எடுத்து அவன் மண்டைய சுக்கு நூற உடைச்சு இருப்பேன். எனக்கு ஏதோ அப்பேற்பட்ட வில்லனுக்கு ஒரு தோட்ட குண்டு சரியான தண்டனையா தெரியல. அதனால படத்தோட டைரக்டர் மேலையும் கோவம் வந்துச்சு. செம கோவம். அந்த கோவம் எல்லாம் இந்த படத்தை பார்த்ததும் போச்சு : இருந்த இடம் தெரியாமல்.

நீண்ட காட்சிகள், ஒளி /ஒலி மொழிகள் போன்ற மிஷ்கினின் முத்திரைகளுடன் புதிதாய் ஓன்று - குறைந்த வசங்கள்.

எல்லா படங்களில் இருப்பது போலவே இந்த படத்திலும் சேரன் வருகிறார். காட்சி அமைப்புகளும், கேமரா கோணங்களும், கதை களமும் அவரது நடிப்பை சிறந்த முறையில் வெளிகாட்டி உள்ளது.

யாரிந்த கே ??? "மொழிகளின் அர்த்த வலிமை, அது பேசாத பொழுது தான் தெரியும்" என்று ஒரு வெளிநாட்டு பழமொழி உண்டு. அது போலவே படம் முழுவதும் வந்தும் வராமலும் பின்னணி இசையின் வலிமையை உணர்த்துகிறார் கே. அதிலும் கிளைமாக்ஸ்க்கு பிறகு CREDITS போடும் பொழுது வரும் இசை .... தயவு செய்து யாரும் மிஸ் பண்ணாதீங்க. (நான் பார்த்தது சத்யமில் .. அதனால் முழுமையாக போட்டார்கள். பிற தியேட்டர்களில் போடுவார்களா என்று தெரியவில்லை.)

மிஷ்கின் - மீண்டுமொரு முறை ....... !!!!!!!!

ஆரம்பத்திலும் கடைசியிலும் மிஷ்கினின் பெயர் வரவதில்லை. நூறு வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்பவர்கள் மத்தியில் "இந்த படத்தை இயக்கியது யார் ?" என்ற சர்ச்சை கட்டாயம் வரும். சங்ககால ஓவியங்களின் ஓவியர்களின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை.

டிவிட்டரில் ஒருவர் நந்தலாலா போல் ஒரு படத்தில் இருந்து காபி அடிக்காமல், இந்த தடவை பல படங்களில் காபி அடித்துள்ளார் மிஷ்கின்ன்னு சொன்னார். நான் உலக திரைப்படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. யுத்தம் செய் படத்தை நன்றாய் ரசித்தேன். வியந்தேன்.

முக்கிய குறிப்பு - இந்த படத்தின் மைய கரு, ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் வந்த "அலிபாபா"வில் சொல்லிவிட்டார்கள். எனக்கு ஒன்னு இரண்டு இடத்தில மட்டும் எனக்கு சினிமா தனம் இருப்பதாய் தோன்றியது.

என்னை போல் உங்களுக்கு செம ரவுசு விடும் நண்பர்களிருந்தால், அவர்களை உங்களுடன் இந்த சினிமாவிற்கு அழைத்து போகாதீங்க. ரசிக்க வேண்டிய படமிது. நான் தனியாக தான் போனேன்.

= = =
"நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அந்த மாற்றமாகவே நீ இருக்கு" - காந்திஜி

முஹம்மது யூனுஸ் - பங்களாதேஷில் ஏழைகளுக்கான வங்கி ஆரம்பித்து, அதற்காக பல விருதுகளை பெற்றவர். இவர் ஆரமித்த கிராமீன் வங்கி ஏழைகளுக்கான அடமானம் இல்லாத சிறு கடன்களை அவரது தொழில் வளர்சிக்காக தருகிறது.

இவர் ஆரம்பித்த பல திட்டங்கள், பல உலக பொருளாதார மேதைகளை கவர்ந்துள்ளது.இவர் ஆரம்பித்த MICRO - CREDIT திட்டம் இன்று உலக நாடுகளில் பலவற்றில் நடை முறையில் உள்ளது.

பொருளாதார மற்றும் சமுதாய வளர்சிக்காக படுபட்டதிற்காக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.

எனக்கு இவரை பற்றி இவ்வளவு தான் தெரியும், அதனால் இவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள, இவருடைய சுயசரிதையான "BANKER TO THE POOR " என்ற புஸ்தகத்தை நேற்று வாங்கினேன்.

பொருளாதார மாற்றங்களில் விருப்பம் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.

(எதை எதையோ மொழிபெயருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த புஸ்தகத்தை மொழிபெயர்த்தால் நல்லாயிருக்கும்)

= = =
கொஞ்ச நாள் முன்னாடி என்னுடைய இளநிலை கல்லூரி கால நண்பனை பார்த்தேன். பாவம் அவனும் என்னை போல், வேறு வகையான பண முதலீடு திட்டங்களுக்கான மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறான். IN MARKETING WE ARE MENTALLY RAPED EVERYDAY . டி கடையில் உட்கார்ந்து டி சாப்பிட்டபடிய சிரித்து பேசி கொண்டிருந்தோம் . நான் நானாக இருக்கும் நேரங்கள் அவை. மீண்டும் கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போலொரு உணர்வு.

கொஞ்ச நேரம் கழித்து சோர்வாய் இருக்கிறதென்று, தலையை என் தோள் மீது சாய்த்து கொண்டான்.

கொஞ்சம் நேரம் கழித்து என் தலை முடியை தடவி பார்த்து, "டேய் மச்சி, சின்ன பையன் மாதிரி முடிய வைச்சுக்காத... கொஞ்சம் நிறைய வளர்த்துக்கோ ..."

பிறகு ஏதேதோ பேசி கொண்டிருந்தோம்.

கொஞ்சம் நேரம் கழித்து அன்றைய டார்கெட் இருவருக்கும் ஞாபகம் வர, அவசர அவசரமாய் அவரவர் வேலையை பார்த்து கிளம்பினோம்.

= = =
புத்தக திருவிழாவிற்கு நானும் போனேன். எனக்கும் என் அண்ணனுக்கும் சேர்த்து பல புத்தகங்கள் வாங்கினேன். பல பதிவர்களை சந்தித்தேன். அந்த சந்திப்புகளை பற்றியும் திருவிழாவை பற்றியும் புத்தகங்களை பற்றியும் பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். அதனால் நான் ......

அன்று ஆபீஸ் விட்டு புத்தக திருவிழாவிற்கு சனிகிழமை மதியம் மூன்று மணிக்கே கிளம்பி விட்டேன். நுங்கம்பாக்கம் ரயில் ஸ்டேஷனில் இருந்து இருவருக்கு போன் செய்தேன். ஒருவர் பிரபல டிவிட்டர் ikarthik _ (இவரை வானவில் வீதி கார்த்திக் என்று கூட சொல்வார்கள்), மற்றொருவர் என்னுடைய இலக்கிய அண்ணன் அத்திரி.

கார்த்திக் ஏற்கனவே திருவிழாவுக்கு போய் கொண்டிருந்தார். அதனால் அவரை ப்ரீயாக விட்டுவிட்டு அத்திரி அண்ணனை FOCUS செய்தேன். அனால் அவரோ "வருவேன் ஆனா வரமாட்டேன் " என்று வடிவேலு காமெடி கணக்காய் சொன்னார்.

நானும் திருவிழாவுக்கு போய் ஏழரை மணி ஆகிருச்சு, பனி ஜாஸ்தியாய் இருந்ததால் எனக்கும் ஏழரை. பிரதமர் வருகைக்கு கூட அவ்வளவு UPDATE வந்து இருக்காது. எனக்கு அத்திரி அண்ணனின் வருகையையொட்டி அவ்வளவு கிடைத்தது.

நானும் பொறுமை இழந்து, ஓடினேன் ஓடினேன் புத்தக திருவிழாவின் எல்லா பக்கமும் ஓடினேன் : இலக்கியவாதிகளின் இலக்கிய கூட்டத்தில் இருந்து தப்பி ஓடினேன், பதிவாளர்களின் கூட்டத்தில் இருந்து தப்பி ஓடினேன், எல்லா கடைகளுக்கும் போனேன், புத்தகம் வாங்கினேன், வாங்கினால் காசு தர வேண்டுமென்று சொன்னார்கள், இயலாமை நிறைந்த பொருளாதார அடிமையாய் வெளிவந்தேன். வாலி வாளி நிறைய வார்த்தைகளை கொண்டு வந்து, அத்தனை கவிதையாக்கி கொண்டிருந்தார், அதை ஒரு ஆடு தலை தலை ஆட்டி ரசித்து கொண்டிருந்தது .

மணி எட்டரை. அண்ணன் போன் பண்ணினார்.

"டேய் தம்பி எங்க இருக்க ?"

"அண்ணன் டைம் யாச்சு ..கிளம்பிட்டேன் "

"அப்படியா ... வெளிய வாடா "

கூட்டத்தில் நத்தையாய் நகர்ந்து சென்று வாசலில் அத்திரி அண்ணனை பார்த்தேன் ...

என்னை பார்த்தார் ..பிறகு நான் வைத்திருந்த புத்தக மூட்டையை பார்த்ததும் "டேய் தம்பி எவ்வளவுக்கு புஸ்தகம் வாங்கின்ன ?"

சொன்னேன்.

"அடப்பாவி அடப்பாவி " என்றார்.

நான் சோர்ந்து போய் இருப்பதை பார்த்து, புஸ்தக மூட்டையை சுமந்து கொண்டு வந்தார். அவருடைய அன்பில் நெகிழ்ந்தேன் .

வழியில் டி கடையில் வைத்து "இலக்கிய சுமைதாங்கி" என்ற பட்டதை தந்தேன். ஹி ஹி ஹி ஹி

பிறகு ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்தபடிய கிண்டி வரை ரயிலில் வந்தோம். அங்கே அவர் இறங்கி கொண்டார். நினைவுகளுடன் நன் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி கொண்டேன்.

டிஸ்கி - அன்று இரவே கிழக்கு வெளியீடான "பேய்" யை படித்தேன். செம மொக்கை. மதனின் "மனிதனும் மர்மங்களும்" போலிருக்கும் என்று ஆசைப்பட்டு வாங்கினேன்.

= = =

அவ்வளவு தான். இரண்டு தளங்களிலும் நான் எழுதும் தொடர்கதையை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

KEEP SMILING

ENJOY LIVING
Related Posts with Thumbnails