Pages

Sunday, February 6, 2011

கலவை - யுத்தம் செய்

ஹாய் மக்கள்ஸ் !!! எப்புடி இருக்கீங்க ??? நலமா ?? சதோஷமா இருக்கீங்களா ??? கொஞ்ச நாளா சொந்த செலவுல கம்ப்யூட்டருக்கு சூனியம் வைச்சதால பதிவெழுத முடியல ... இப்ப அந்த சூனியத்த எடுத்தாச்சு. இணையம் பக்கம் வராத நாளிலெல்லாம் நிறைய புஸ்தகம் படிச்சேன் கொஞ்சம் சினிமா பார்த்தேன், பழைய நண்பர்களுடன் போனில் அரட்டை அடித்தேன். அப்படி ஒவ்வொருத்தருக்க போன் பண்ணி பேசிகிட்டு இருக்கும் போது தான் பள்ளி கால நண்பன் அபிராம் ஞாபகம் வந்துச்சு. பள்ளி எனக்கு சிறப்பாய் ஏதும் சொல்லித் தராவிட்டாலும், ஒரு சில சிறந்த நண்பர்களை தந்து இருக்கிறது. அபியும் அவர்களிலொருவன். அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது

"டேய் மாமா நீ தரே சமீன் பர் பார்த்து இருக்கீயா ???"

"உனக்கு தெரியாதா.. நான் சுத்த சைவம் .... பிறவு ஜமீன் எல்லாம் இப்ப இல்லடா..."

"டேய் மொக்கை போடாம சொல்லு ...."

"பார்க்கலடா ..."

"கண்டிப்பா பாருடா .... நம்ம ஸ்கூல் லைப் மாதிரியே இருக்கும் ...ரொம்ப பீல் பண்ணுவ"

சரின்னு அடுத்த நாள் ஆபீஸ் விட்டு வரும் பொழுது அந்த படத்தோட சிடி வாங்கி வந்து, படத்தை பார்த்தேன். அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்துச்சு. பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பாடங்கள் புரியாது. அப்படி புரியாத பொழுதுகளிலெல்லாம் கனவு காண்பேன். ராஜா அரண்மனை, போர் காட்சிகள், SHERLOCK HOLMES ... இப்படி நிறைய. இது நான் PG படிக்கும் வரை தொடர்ந்தது. இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி கனவுகள் வரவதில்லை. ஆனால் எதையோ இழந்து விட்டது மாதிரியொரு உணர்வு எப்பொழுதும் இருக்கிறது.

= = =
யுத்தம் செய் - நேத்து தான் படத்தை பார்த்தேனுங்க. ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.

அஞ்சாதே படம் பார்த்த பிறகு, எனக்கு அப்படி ஒரு கோவம் வந்துச்சு. அந்த படத்தோட வில்லன் மட்டும் என் கைல மாட்டி இருந்தான்னா, அப்படியே அம்மி கல்லை எடுத்து அவன் மண்டைய சுக்கு நூற உடைச்சு இருப்பேன். எனக்கு ஏதோ அப்பேற்பட்ட வில்லனுக்கு ஒரு தோட்ட குண்டு சரியான தண்டனையா தெரியல. அதனால படத்தோட டைரக்டர் மேலையும் கோவம் வந்துச்சு. செம கோவம். அந்த கோவம் எல்லாம் இந்த படத்தை பார்த்ததும் போச்சு : இருந்த இடம் தெரியாமல்.

நீண்ட காட்சிகள், ஒளி /ஒலி மொழிகள் போன்ற மிஷ்கினின் முத்திரைகளுடன் புதிதாய் ஓன்று - குறைந்த வசங்கள்.

எல்லா படங்களில் இருப்பது போலவே இந்த படத்திலும் சேரன் வருகிறார். காட்சி அமைப்புகளும், கேமரா கோணங்களும், கதை களமும் அவரது நடிப்பை சிறந்த முறையில் வெளிகாட்டி உள்ளது.

யாரிந்த கே ??? "மொழிகளின் அர்த்த வலிமை, அது பேசாத பொழுது தான் தெரியும்" என்று ஒரு வெளிநாட்டு பழமொழி உண்டு. அது போலவே படம் முழுவதும் வந்தும் வராமலும் பின்னணி இசையின் வலிமையை உணர்த்துகிறார் கே. அதிலும் கிளைமாக்ஸ்க்கு பிறகு CREDITS போடும் பொழுது வரும் இசை .... தயவு செய்து யாரும் மிஸ் பண்ணாதீங்க. (நான் பார்த்தது சத்யமில் .. அதனால் முழுமையாக போட்டார்கள். பிற தியேட்டர்களில் போடுவார்களா என்று தெரியவில்லை.)

மிஷ்கின் - மீண்டுமொரு முறை ....... !!!!!!!!

ஆரம்பத்திலும் கடைசியிலும் மிஷ்கினின் பெயர் வரவதில்லை. நூறு வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்பவர்கள் மத்தியில் "இந்த படத்தை இயக்கியது யார் ?" என்ற சர்ச்சை கட்டாயம் வரும். சங்ககால ஓவியங்களின் ஓவியர்களின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை.

டிவிட்டரில் ஒருவர் நந்தலாலா போல் ஒரு படத்தில் இருந்து காபி அடிக்காமல், இந்த தடவை பல படங்களில் காபி அடித்துள்ளார் மிஷ்கின்ன்னு சொன்னார். நான் உலக திரைப்படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. யுத்தம் செய் படத்தை நன்றாய் ரசித்தேன். வியந்தேன்.

முக்கிய குறிப்பு - இந்த படத்தின் மைய கரு, ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் வந்த "அலிபாபா"வில் சொல்லிவிட்டார்கள். எனக்கு ஒன்னு இரண்டு இடத்தில மட்டும் எனக்கு சினிமா தனம் இருப்பதாய் தோன்றியது.

என்னை போல் உங்களுக்கு செம ரவுசு விடும் நண்பர்களிருந்தால், அவர்களை உங்களுடன் இந்த சினிமாவிற்கு அழைத்து போகாதீங்க. ரசிக்க வேண்டிய படமிது. நான் தனியாக தான் போனேன்.

= = =
"நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அந்த மாற்றமாகவே நீ இருக்கு" - காந்திஜி

முஹம்மது யூனுஸ் - பங்களாதேஷில் ஏழைகளுக்கான வங்கி ஆரம்பித்து, அதற்காக பல விருதுகளை பெற்றவர். இவர் ஆரமித்த கிராமீன் வங்கி ஏழைகளுக்கான அடமானம் இல்லாத சிறு கடன்களை அவரது தொழில் வளர்சிக்காக தருகிறது.

இவர் ஆரம்பித்த பல திட்டங்கள், பல உலக பொருளாதார மேதைகளை கவர்ந்துள்ளது.இவர் ஆரம்பித்த MICRO - CREDIT திட்டம் இன்று உலக நாடுகளில் பலவற்றில் நடை முறையில் உள்ளது.

பொருளாதார மற்றும் சமுதாய வளர்சிக்காக படுபட்டதிற்காக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.

எனக்கு இவரை பற்றி இவ்வளவு தான் தெரியும், அதனால் இவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள, இவருடைய சுயசரிதையான "BANKER TO THE POOR " என்ற புஸ்தகத்தை நேற்று வாங்கினேன்.

பொருளாதார மாற்றங்களில் விருப்பம் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.

(எதை எதையோ மொழிபெயருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த புஸ்தகத்தை மொழிபெயர்த்தால் நல்லாயிருக்கும்)

= = =
கொஞ்ச நாள் முன்னாடி என்னுடைய இளநிலை கல்லூரி கால நண்பனை பார்த்தேன். பாவம் அவனும் என்னை போல், வேறு வகையான பண முதலீடு திட்டங்களுக்கான மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறான். IN MARKETING WE ARE MENTALLY RAPED EVERYDAY . டி கடையில் உட்கார்ந்து டி சாப்பிட்டபடிய சிரித்து பேசி கொண்டிருந்தோம் . நான் நானாக இருக்கும் நேரங்கள் அவை. மீண்டும் கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போலொரு உணர்வு.

கொஞ்ச நேரம் கழித்து சோர்வாய் இருக்கிறதென்று, தலையை என் தோள் மீது சாய்த்து கொண்டான்.

கொஞ்சம் நேரம் கழித்து என் தலை முடியை தடவி பார்த்து, "டேய் மச்சி, சின்ன பையன் மாதிரி முடிய வைச்சுக்காத... கொஞ்சம் நிறைய வளர்த்துக்கோ ..."

பிறகு ஏதேதோ பேசி கொண்டிருந்தோம்.

கொஞ்சம் நேரம் கழித்து அன்றைய டார்கெட் இருவருக்கும் ஞாபகம் வர, அவசர அவசரமாய் அவரவர் வேலையை பார்த்து கிளம்பினோம்.

= = =
புத்தக திருவிழாவிற்கு நானும் போனேன். எனக்கும் என் அண்ணனுக்கும் சேர்த்து பல புத்தகங்கள் வாங்கினேன். பல பதிவர்களை சந்தித்தேன். அந்த சந்திப்புகளை பற்றியும் திருவிழாவை பற்றியும் புத்தகங்களை பற்றியும் பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். அதனால் நான் ......

அன்று ஆபீஸ் விட்டு புத்தக திருவிழாவிற்கு சனிகிழமை மதியம் மூன்று மணிக்கே கிளம்பி விட்டேன். நுங்கம்பாக்கம் ரயில் ஸ்டேஷனில் இருந்து இருவருக்கு போன் செய்தேன். ஒருவர் பிரபல டிவிட்டர் ikarthik _ (இவரை வானவில் வீதி கார்த்திக் என்று கூட சொல்வார்கள்), மற்றொருவர் என்னுடைய இலக்கிய அண்ணன் அத்திரி.

கார்த்திக் ஏற்கனவே திருவிழாவுக்கு போய் கொண்டிருந்தார். அதனால் அவரை ப்ரீயாக விட்டுவிட்டு அத்திரி அண்ணனை FOCUS செய்தேன். அனால் அவரோ "வருவேன் ஆனா வரமாட்டேன் " என்று வடிவேலு காமெடி கணக்காய் சொன்னார்.

நானும் திருவிழாவுக்கு போய் ஏழரை மணி ஆகிருச்சு, பனி ஜாஸ்தியாய் இருந்ததால் எனக்கும் ஏழரை. பிரதமர் வருகைக்கு கூட அவ்வளவு UPDATE வந்து இருக்காது. எனக்கு அத்திரி அண்ணனின் வருகையையொட்டி அவ்வளவு கிடைத்தது.

நானும் பொறுமை இழந்து, ஓடினேன் ஓடினேன் புத்தக திருவிழாவின் எல்லா பக்கமும் ஓடினேன் : இலக்கியவாதிகளின் இலக்கிய கூட்டத்தில் இருந்து தப்பி ஓடினேன், பதிவாளர்களின் கூட்டத்தில் இருந்து தப்பி ஓடினேன், எல்லா கடைகளுக்கும் போனேன், புத்தகம் வாங்கினேன், வாங்கினால் காசு தர வேண்டுமென்று சொன்னார்கள், இயலாமை நிறைந்த பொருளாதார அடிமையாய் வெளிவந்தேன். வாலி வாளி நிறைய வார்த்தைகளை கொண்டு வந்து, அத்தனை கவிதையாக்கி கொண்டிருந்தார், அதை ஒரு ஆடு தலை தலை ஆட்டி ரசித்து கொண்டிருந்தது .

மணி எட்டரை. அண்ணன் போன் பண்ணினார்.

"டேய் தம்பி எங்க இருக்க ?"

"அண்ணன் டைம் யாச்சு ..கிளம்பிட்டேன் "

"அப்படியா ... வெளிய வாடா "

கூட்டத்தில் நத்தையாய் நகர்ந்து சென்று வாசலில் அத்திரி அண்ணனை பார்த்தேன் ...

என்னை பார்த்தார் ..பிறகு நான் வைத்திருந்த புத்தக மூட்டையை பார்த்ததும் "டேய் தம்பி எவ்வளவுக்கு புஸ்தகம் வாங்கின்ன ?"

சொன்னேன்.

"அடப்பாவி அடப்பாவி " என்றார்.

நான் சோர்ந்து போய் இருப்பதை பார்த்து, புஸ்தக மூட்டையை சுமந்து கொண்டு வந்தார். அவருடைய அன்பில் நெகிழ்ந்தேன் .

வழியில் டி கடையில் வைத்து "இலக்கிய சுமைதாங்கி" என்ற பட்டதை தந்தேன். ஹி ஹி ஹி ஹி

பிறகு ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்தபடிய கிண்டி வரை ரயிலில் வந்தோம். அங்கே அவர் இறங்கி கொண்டார். நினைவுகளுடன் நன் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி கொண்டேன்.

டிஸ்கி - அன்று இரவே கிழக்கு வெளியீடான "பேய்" யை படித்தேன். செம மொக்கை. மதனின் "மனிதனும் மர்மங்களும்" போலிருக்கும் என்று ஆசைப்பட்டு வாங்கினேன்.

= = =

அவ்வளவு தான். இரண்டு தளங்களிலும் நான் எழுதும் தொடர்கதையை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

KEEP SMILING

ENJOY LIVING

10 comments:

! சிவகுமார் ! said...

//என்னை போல் உங்களுக்கு செம ரவுசு விடும் நண்பர்களிருந்தால், அவர்களை உங்களுடன் இந்த சினிமாவிற்கு அழைத்து போகாதீங்க//

>>> அடுத்த முறை நம்ம ரெண்டு பேரும் போலாம் ... நான் ரொம்ப நல்லவன் சாமி.. டிக்கட் மட்டும் நீங்க எடுங்க..

டம்பி மேவீ said...

@ சிவகுமார் : கட்டாயம் ...அடுத்த சனிகிழமை சத்யம்.... ஓகேவா ????

MANO said...

hai mavee...


how are you.... this is mano from chennai. your re-view is nice.

mano

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த இடுகையில் இலக்கியவாசம் கம்மியாக இருப்பதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்..:-))

bandhu said...

நானும் சில வருடம் மார்கெடிங் துறையில் இருந்தேன் உங்கள் அனுபவம் என் நினைவுகளை கிளறி விட்டது!

நட்புடன் ஜமால் said...

nice kalavai ...

Karthik said...

Yov thala, naanellam eppa pirabalam aanen? :D

TZP neenga 2050 la than parppeenganu nenachen. ;)

! சிவகுமார் ! said...

enna padam, thalaivaa???

நா.மணிவண்ணன் said...

அந்த மார்கெடிங் கருத்து உங்களுடையதா ஆனாலும் அது என்னவோ உண்மைதான்

டம்பி மேவீ said...

@ mano : am fine.how r u ???

@ கார்த்திகை பாண்டியன் : ஒரு வேளை குளித்த பிறகு நான் இந்த பதிவை எழுதியதால், இலக்கிய வாசனை இல்லையோ ???

@ bandhu : அப்படியா ???? வருகைக்கு நன்றி நண்பா

@ ஜமால் : நன்றிண்ணே

@ கார்த்திக் : நீங்க பிரபலம் தானுங்கோ ... பிறவு விதி வசத்தால் சீக்கரம் பார்துட்டேனுங்கோ

@ சிவகுமார் : உங்க சாய்ஸ் தல

@ நா.மணிவண்ணன் : ஆமாங்க, அது என்னோட சொந்த கருத்து தான்

Related Posts with Thumbnails