Pages

Friday, April 22, 2011

கோ (ko) - பார்க்க வேண்டிய சூப்பர் படம்

கொஞ்ச நாளா ரொம்ப பிஸியா இருந்தால டிவில இந்த படத்தோட டிரைலர் நான் பார்க்கவே இல்ல .... சும்மா இன்னைக்கு காலைல தான் டி கடை ல வைச்சு இந்த படத்தோட விளம்பரத்தை தின தந்தி ல பார்த்தேன். பிறவு இந்த படத்துக்கு போகலாம்ன்னு எல்லாம் யோசிக்கவே இல்ல .... இன்னைக்கு புனித வெள்ளி என்பதால ரூம் ல வெட்டியா தான் உட்கரந்துகிட்டு இருந்தேன். சரின்னு இந்த படத்துக்கு போகலாம்ன்னு கிளம்பிய போது தான் ஒரு கிளைன்ட் ஆடு போன் பண்ணி என்னை டென்ஷனாக்கி விட்டுருச்சு. காலை காட்சிக்கு போக முடியல. சரின்னு கூட்டமே இருக்காதுன்னு மதியானமா போனேன்.

தாம்பரம் வித்யாவுல அவ்வளவு கூட்டம்.... ஒரு வேளை நமக்கு தெரியமா ஜீவா நடிச்ச புரட்சி காவிய படமான சிங்கம் புலி பெரிய வெற்றி பெற்றுருச்சான்னு சந்தேகமா இருந்துச்சு. பயமாவும் இருந்துச்சு. ஏன்னா சிங்கம் புலி பட தண்டனையை இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் அனுபவிச்சேன் ..... நான் வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல, என்னை கதற கதற அந்த படத்துக்கு ஒரு தேச துரோகி கூட்டிகிட்டு போனான். ஒரு வேளை சொந்த செலவுல சூனியம் வைச்சு கிட்டோமான்னு கூட சந்தேகம் வந்துச்சு, அப்பருமா பட போஸ்டரில் டைரக்டர் - கேவி ஆனந்த்ன்னு பெயரை பார்த்த பிறவு தான் நிம்மதி வந்துச்சு. டிக்கெட் வாங்கிகிட்டு உள்ளே போனேன்.

அயன் படத்தை ரொம்ப ரசிச்சு நான் பார்த்தேன் ன்ன அதுக்கு அவர் தான் காரணம் : கேவி ஆனந்த் - மனுஷன் படம் எடுக்குறதுல பெரிய எம்டன் ஆ இருப்பார் போல. படத்தோட கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் நூல் பிடிச்ச மாதிரி கொண்டுகிட்டு போய் இருக்காரு ... எந்த எந்த காட்சி எவ்வளவு நீளம் இருக்கணும் ... வசனத்துல எவ்வளவு வார்த்தைகள் இருக்கணும் கத்து வைச்சு இருப்பார் போல ..... ம்ம் மத்த டைரக்டர்ஸ் எல்லாம் அதை இவர் கிட்ட இருந்து கத்துக்கணும்.

சுபா நாவல் படிச்சு இருக்கீங்களா ???? அதுல ஹீரோவும் வில்லனும் சண்டை போடுறதை கூட அப்படியே நம்ம கண் முன்னாடி எழுத்துல கொண்டு வந்துருவாங்க. அவங்களும் இந்த படத்துல வேளை செய்ஞ்சு இருக்காங்க ..... நடிச்சும் இருக்காங்க .... ஒருத்தர் ஜீவா ஓட பாஸ் ஆ ...இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் ஓட அசிஸ்டன்ட் ஆ.
அதுலையிலும் சுபா எழுதினன ஒரு நாவல் ல ஒரு சைகோ கொலைகாரன் பொண்ணுகளை ஒரு மாதிரி கட்டி வைச்சு, அவன் கொலை பண்ணுவான். அதை சுபா அந்த நாவல் ல அப்படி விவாரிச்சு எழுதி இருப்பார் .....இந்த படத்துல கூட ஜீவா அதே மாதிரி ஒரு இடத்துல வில்லனோட அடியாளை கட்டி போடுறாரு.
பிரகாஷ்ராஜ் வராருது கொஞ்சம் நேரமுனாலும், அந்த கார்குள்ள புலம்புற சீன் ல பட்டைய கிளப்பி இருக்காரு.

பிறவு... முக்கியமா சொல்லணும்ன்னா இசை மியூசிக் ..... அதுவும் டைட்டிலின் போது வர மியூசிக் செம : வாழ்த்துக்கள் ஹாரிஸ் ஸார் ....அதுவும் அப்ப வர போடோஸ் - கிளாஸ்.
அதுவும் அந்த "என்னமோ ஏதோ" பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.


நல்ல வேளை சிம்பு இந்த படத்துல நடிக்கல : கட்டாயம் ஹீரோ பந்தா, இன்ட்ரோ சாங் எல்லாம் சிம்பு கேட்டு இருப்பாரு ...... ம்ம்ம் ஜீவா பல சமயங்களுல புத்திசாலி தனமா முடிவு எடுதுருறாரு......ராதா பொண்ணு நடிச்சு இருக்காங்க, பெயர் ஞாபகம் வரல, நல்ல இருக்காங்க. அஜ்மல் சூப்பர் வில்லன் .... நடிப்புன்னு யாரும் OVER PLAY பண்ண விடமால் கதையே எல்லா இடங்களிலும் DOMINATE பண்ணுது ... குறும்பான காட்சிகள் - இளமை இளமை.
பாடல் காட்சிகளும் - பட காட்சிகளும் அழகோ அழகு
. சிலபல
லாஜிக்
ஓட்டைகளும் இருக்கு....

கதை -

அன்றும் வழக்கம் போல அலுவலகம் நோக்கி தனது பைக்கில் போய் கொண்டிருக்கிறான் அஷ்வின், அப்பொழுது ஒரு வங்கியை கொள்ளை அடித்து தப்பித்த கும்பலை உயிரை பணயம் வைத்து புகைப்படம் எடுக்கிறான், அதில் தலைவனை தவிர எல்லோர் முகத்தையும் புகைப்படம் எடுத்து விடுகிறான், தலைவனை மட்டும் முகமுடி உடன் தான் அவனால் எடுக்கிற முடிகிறது. பிறகு அளவந்தனின் ரகசியங்களை அம்பல படுத்துகிறான். முதல்வர் யோகேஸ்வரனின் எதிர்ப்பையும் சம்பாதித்து கொள்கிறான். வசந்த பெருமாள் என்கிற இளைய தலைமுறை தேர்தல் போட்டியாளரின் நேர்மையான நோக்கம் கண்டு, அவனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பாடுபடுகிறான். இதனிடையில் வசந்த பெருமாள் சார்ந்த கட்சியான சிறகுகள் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சார மேடையில் பிரச்சாரத்தின் உச்ச கட்டத்தின் பொழுது குண்டு வெடிக்கிறது. அஷ்வின் வசந்த பெருமாளை காப்பாற்றுகிறான். பிறகு ஒரு டிவி சேனலின் செய்திகளை கண்டு சந்தேகம் கொண்டு, நேராக அந்த டிவி சேனல் ஆபீஸில் தனிப்பட்ட முறையில் அந்த வீடியோ தொகுப்பை பார்க்கும் போது, குண்டு வெடிப்புக்கு பிறகான கலவரத்தில் யாரோ தனது அலுவலக தோழி சரோவை கொல்வதை கண்டு பிடிக்கிறான். யார் அந்த கொலையாளி ????? இந்த குண்டு வெடிப்புக்கும் வங்கி கொள்ளைக்கும் என்ன சமந்தம் ??? தேர்தல் என்னவானது ???

= = =
மொத்ததில் - கோ (KO) வுக்கு எல்லோரும் கோ (GO) வுங்க .
= = =
BYE

KEEP SMILING

ENJOY LIVING

Monday, April 4, 2011

எட்டெட்டு (My Top 8) - மேவிய விகடன்

கேட்ட இசை - எனக்கு எப்பவும் pop melody வகையற பாடல்களென்றால் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான பாடல்களை தேடி எப்பவும் youtube பில் உலவி கொண்டிருப்பேன். அந்த மாதிரி உலவிக் கொண்டிருக்கும் சில பல நல்ல பாடல்கள் கண்ணில் தட்டு படும். அதையெல்லாம் குறித்து வைத்து கொண்டு திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பேன். அந்த மாதிரி தான் போன வாரம் பாடலை கேட்டேன் : அருமையான இசை அருமையான பாடல் வரிகள் .... ஆரம்ப வரிகள் இப்படி வரும் .."AS WE GO ON , WE WILL REMEMBER ...." ... ஆனால் இந்த என்ன பாடல்ன்னு குறிச்சு வைச்சுக்க மறந்துட்டேன்.... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ...

பார்த்த படம் - பொதுவாய் நான் எல்லாம் வகையான படமும் பார்ப்பேன், அது பிடிக்குமா பிடிக்காதா என்பது வேற விஷயம். சமீப காலமாய் போர் மற்றும் அரசியல் சார்ந்த படங்கள் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி ROMAN HOLIDAYS ன்னு ஒரு ROMANTIC COMEDY படம் பார்த்தேன். கதைன்னு ஒன்னும் பெருசா இல்லாட்டியும் அவ்வளவு அழகு. அதிலும் கதாநாயகி ஸ்கூட்டர் ஓட்ட தெரியாமல் ஓட்டும் காட்சியில் , இளமை மிளிரும். படம் பார்த்து முடித்த உடன் ஏதோ ROME க்கு டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கும். திரைபடத்திற்கு மகுடமாய் கிளைமாக்ஸ் காட்சி... இயல்பான முடிவு. அதிலும் கேமரா கோணம் அந்த இடத்தில செமையா இருக்கும். திரைக்கதை படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கும்.

சென்ற இடம் - வேறு யார் சொல்லிருந்தாலும் இந்த இடத்திற்கு போயிருக்க மாட்டேன், ஆனால் சொன்னது அம்மா என்பதால் வேற வழியில்லாமல் போக வேண்டியதா ஆகிருச்சு. சிங்க பெருமாள் கோவில் - பெருங்களத்தூரில் இருந்து 18 கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த கோவில். ஞாயிறு காலை ஒரு ஏழு மணிக்கு கிளம்பி ஏழே முக்காலுக்கு போய் சேர்ந்தோம். அமைதியா இருக்கிறது. ஒரு சின்ன மலையில் அமைந்து இருக்கிறது. சிங்க பெருமாளுக்கு நெற்றி கண் இருக்கிறது. வேண்டி கொண்டால், நினைத்தது நடக்குமாம். பல்லவர் காலத்து கோவிலாம். காஞ்சியை பார்த்தபடி கோவில் இருக்கிறது
என்று நினைக்கிறேன்
. சாளுக்கியர்கள் கட்டியதாக இருக்கலாம். எல்லாத்தையும் விட அங்க கோவிலில் விற்கப்படும் மிளகு தோசை தான். மிளகாய் பொடியுடன் தருகிறார்கள். ரூபாய் பத்து தான்.

கலந்துக் கொண்ட நிகழ்ச்சி - ரொம்ப கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த உறவினர் ஒருவர் வேளச்சேரியில் FLAT ஓன்று வாங்கி இருந்தார். கிரஹப் பிரவேசத்தின் பொழுது அவருடைய அம்மா அப்பாவை பூஜைக்கு உட்கார வைத்து, அவர் தனிய தள்ளி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தார். சொல்ல முடியாத சந்தோசம் அவருடைய முகத்தில் பார்த்தேன், இத்தனை நாட்களில் நான் அவர் முகத்தில் பார்க்காத ஓன்று.


வாங்கிய பொருள் - நான் அதிகம் பொருளென்று எதையும் வாங்க மாட்டேன். வாங்கினால் புத்தகங்கள் அல்லது சினிமா டிவிடிக்கள் தான். உடை கூட அம்மா-அப்பா வாங்கி தந்தால் உண்டு. அப்படி இருந்தும் NILGIRIS கடையில் இருந்து, மல்லிகை பூவின் வாசனை மீதுள்ள பிரேமையால், AHSAN என்ற சென்ட்டை வாங்கினேன். மெல்லிய நறுமணம் நாள் முழுவதும் வீசி கொண்டே இருக்கும். முஸ்லிம் கம்பெனியின் தயாரிப்பு போலிருக்கிறது.


படித்த புத்தகம் - கடந்த ஞாயிறு அன்று சுஜாதாவின் எழுத்துக்கள் மீதுள்ள இச்சை மீண்டும் தலைதூக்கியது. கையில் கிடைத்த அவருடைய நாவலொன்றை படித்தேன். கமிஷனருக்குக் கடிதம். ஒரு பெண் போலீஸை சுற்றி கதை நடக்கிறது. உணர்வு போராட்டங்கள் கதையில் எதுவும் இல்லை வசங்களில் மட்டும் இருக்கிறது. ஒரு வித பரபரப்பு இல்லை : ஆனாலும் படிக்க நல்ல இருந்தது. திண்டும் இன்பம் படித்த பொழுது கிடைத்த ஏதொன்று, இதில் கிடைக்கவில்லை.

பாதித்த சம்பவம் - கடந்த வாரம் கார்த்திகை பாண்டியன் (காபா) சென்னை வந்திருந்தார்.காபா என்னை பார்க்க தாம்பரம் வருவதாய் சொன்னார். அத்திரி அண்ணனும் சேர்ந்து கொள்வதை சொன்னார். சரின்னு அவரை பார்க்க, அவருக்காக நான் வாங்கி வைத்திருந்த "கடவு" மற்றும் "சின்ன சின்ன வாக்கியங்கள்" இரண்டையும் எடுத்து கொண்டு கிளம்பினேன். பக்கத்தில் அத்திரி அண்ணன் உட்கார்ந்து இருக்க, தாம்பரம் வசந்த பவனில் வைத்து அந்த புத்தகங்களை அவருக்கு தந்தேன். அத்தனை வாங்கிய பொழுது அவர் முகத்தில் ஒரு வித பெருமிதம், அன்பு , காதல் அனைத்தும் பார்த்தேன். காபா புத்தகங்களின் காதலரென்று எனக்கு தெரியும், ஆனால் அதை அன்று தான் நேரில் பார்த்து, உணர்ந்தேன்.

சந்தித்த நபர் - வழக்கம் போல், அன்றும் ஒரு appointment இருந்தபடியால், அத்திப்பட்டு புதுநகர் வரை போக வேண்டி இருந்தது. இத்தனைக்கும் அது என்னுடைய கால் இல்லை. ஆபீஸ் ல வெட்டியா உட்கார பிடிக்காததால், இன்னொருவருடன் கிளம்பினேன் அத்திப்பட்டு புதுநகருக்கு. ஏரியாக்குள்ள போவதற்கு ஒரு வசதியும் இல்லை.
கிளையன்ட் தான் வந்து எங்களை அவர் வீட்டுக்கு கூட்டிகிட்டு போனார்.
அங்கு சுற்றி இருக்கும் மின் நிலையங்களால் அந்த ஏரியாவே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது. மின்சாரம் எப்ப வரும் போகும் என்று தெரியாதாம். இன்டர்நெட் வேலை செய்யதாம். எதாவது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டுமானால் 4 கிலோ மீட்டார் வரைக்கும் போக வேண்டுமாம். இன்னும் நிறைய சொன்னார்.
எங்களுக்கு அந்த குடிருப்பின் நிலைமையும், அந்த ஏரியாவின் நிலைமையை பார்த்த பொழுது, எங்களுக்கு ஏதோ சென்னையில் இருப்பதாய் தோன்றவில்லை. இத்தனைக்கும் சென்னை நகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் தான் உள்ளது இந்த ஏரியா.
ஏதோ சென்னையில் இருக்க ஆசைப்பட்டு, ரொம்ப வருஷம்
முன்னாடி
ரொம்ப கஷ்டப்பட்டு transfer வாங்கி
இங்க வந்திருக்கார். எப்படியோ அவருடைய பெண்களையும் படிக்க வைத்திருக்கிறார்.அவங்க பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாங்கலாம். போட்டோ காட்டினர். இப்போ என்ன பிரச்சனை என்றால், அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரே வயது.... இந்த வயசான காலத்தில் ஆத்திர அவசரமென்றால் பக்கத்தில் உதவி என்று யாருமில்லை, சென்னை வந்து போகவும் முடியவில்லை....
சரின்னு அவர் வேற ஏரியாவுக்கு transfer வாங்கிட்டு போகலாம்ன்னு இருந்தாலும் லட்ச லட்சமாய் லஞ்சம் கேட்குறாங்கலாம்.


இந்த மாதிரி ஒவ்வொரு காலுக்கும் போயிட்டு வரும் பொழுது சில சமயம், இந்த விஷயங்களை கேள்விப்பட்டு, கனத்த மனதுடன் வர வேண்டியதாக இருக்கிறது. அந்த காலுக்கு போயிட்டு வந்த சில நாட்காளில் அவர் என்னை பார்க்க ஆபீஸ்க்கு வந்தார். பார்க்கவே பாவமாய் இருந்தது. என்னிடம் பேசிவிட்டு அவர் கிளம்பும் போது மதியம் 12 மணி ஆகிருந்தது. கிளம்பி போறேன்ன்னு சொன்னாரு. நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரின்னு பைக் ல அவரை சென்ட்ரல் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் விட்டு வந்தேன். அவர் ஸ்டேஷன் நோக்கி தளர்ந்த நடையுடன் செல்லும் போது, ஏன்னோ என்னுடைய அப்பா நினைவுகளில் வந்து போனார்.
Related Posts with Thumbnails