Pages

Monday, April 4, 2011

எட்டெட்டு (My Top 8) - மேவிய விகடன்

கேட்ட இசை - எனக்கு எப்பவும் pop melody வகையற பாடல்களென்றால் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான பாடல்களை தேடி எப்பவும் youtube பில் உலவி கொண்டிருப்பேன். அந்த மாதிரி உலவிக் கொண்டிருக்கும் சில பல நல்ல பாடல்கள் கண்ணில் தட்டு படும். அதையெல்லாம் குறித்து வைத்து கொண்டு திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பேன். அந்த மாதிரி தான் போன வாரம் பாடலை கேட்டேன் : அருமையான இசை அருமையான பாடல் வரிகள் .... ஆரம்ப வரிகள் இப்படி வரும் .."AS WE GO ON , WE WILL REMEMBER ...." ... ஆனால் இந்த என்ன பாடல்ன்னு குறிச்சு வைச்சுக்க மறந்துட்டேன்.... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ...

பார்த்த படம் - பொதுவாய் நான் எல்லாம் வகையான படமும் பார்ப்பேன், அது பிடிக்குமா பிடிக்காதா என்பது வேற விஷயம். சமீப காலமாய் போர் மற்றும் அரசியல் சார்ந்த படங்கள் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி ROMAN HOLIDAYS ன்னு ஒரு ROMANTIC COMEDY படம் பார்த்தேன். கதைன்னு ஒன்னும் பெருசா இல்லாட்டியும் அவ்வளவு அழகு. அதிலும் கதாநாயகி ஸ்கூட்டர் ஓட்ட தெரியாமல் ஓட்டும் காட்சியில் , இளமை மிளிரும். படம் பார்த்து முடித்த உடன் ஏதோ ROME க்கு டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கும். திரைபடத்திற்கு மகுடமாய் கிளைமாக்ஸ் காட்சி... இயல்பான முடிவு. அதிலும் கேமரா கோணம் அந்த இடத்தில செமையா இருக்கும். திரைக்கதை படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கும்.

சென்ற இடம் - வேறு யார் சொல்லிருந்தாலும் இந்த இடத்திற்கு போயிருக்க மாட்டேன், ஆனால் சொன்னது அம்மா என்பதால் வேற வழியில்லாமல் போக வேண்டியதா ஆகிருச்சு. சிங்க பெருமாள் கோவில் - பெருங்களத்தூரில் இருந்து 18 கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த கோவில். ஞாயிறு காலை ஒரு ஏழு மணிக்கு கிளம்பி ஏழே முக்காலுக்கு போய் சேர்ந்தோம். அமைதியா இருக்கிறது. ஒரு சின்ன மலையில் அமைந்து இருக்கிறது. சிங்க பெருமாளுக்கு நெற்றி கண் இருக்கிறது. வேண்டி கொண்டால், நினைத்தது நடக்குமாம். பல்லவர் காலத்து கோவிலாம். காஞ்சியை பார்த்தபடி கோவில் இருக்கிறது
என்று நினைக்கிறேன்
. சாளுக்கியர்கள் கட்டியதாக இருக்கலாம். எல்லாத்தையும் விட அங்க கோவிலில் விற்கப்படும் மிளகு தோசை தான். மிளகாய் பொடியுடன் தருகிறார்கள். ரூபாய் பத்து தான்.

கலந்துக் கொண்ட நிகழ்ச்சி - ரொம்ப கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த உறவினர் ஒருவர் வேளச்சேரியில் FLAT ஓன்று வாங்கி இருந்தார். கிரஹப் பிரவேசத்தின் பொழுது அவருடைய அம்மா அப்பாவை பூஜைக்கு உட்கார வைத்து, அவர் தனிய தள்ளி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தார். சொல்ல முடியாத சந்தோசம் அவருடைய முகத்தில் பார்த்தேன், இத்தனை நாட்களில் நான் அவர் முகத்தில் பார்க்காத ஓன்று.


வாங்கிய பொருள் - நான் அதிகம் பொருளென்று எதையும் வாங்க மாட்டேன். வாங்கினால் புத்தகங்கள் அல்லது சினிமா டிவிடிக்கள் தான். உடை கூட அம்மா-அப்பா வாங்கி தந்தால் உண்டு. அப்படி இருந்தும் NILGIRIS கடையில் இருந்து, மல்லிகை பூவின் வாசனை மீதுள்ள பிரேமையால், AHSAN என்ற சென்ட்டை வாங்கினேன். மெல்லிய நறுமணம் நாள் முழுவதும் வீசி கொண்டே இருக்கும். முஸ்லிம் கம்பெனியின் தயாரிப்பு போலிருக்கிறது.


படித்த புத்தகம் - கடந்த ஞாயிறு அன்று சுஜாதாவின் எழுத்துக்கள் மீதுள்ள இச்சை மீண்டும் தலைதூக்கியது. கையில் கிடைத்த அவருடைய நாவலொன்றை படித்தேன். கமிஷனருக்குக் கடிதம். ஒரு பெண் போலீஸை சுற்றி கதை நடக்கிறது. உணர்வு போராட்டங்கள் கதையில் எதுவும் இல்லை வசங்களில் மட்டும் இருக்கிறது. ஒரு வித பரபரப்பு இல்லை : ஆனாலும் படிக்க நல்ல இருந்தது. திண்டும் இன்பம் படித்த பொழுது கிடைத்த ஏதொன்று, இதில் கிடைக்கவில்லை.

பாதித்த சம்பவம் - கடந்த வாரம் கார்த்திகை பாண்டியன் (காபா) சென்னை வந்திருந்தார்.காபா என்னை பார்க்க தாம்பரம் வருவதாய் சொன்னார். அத்திரி அண்ணனும் சேர்ந்து கொள்வதை சொன்னார். சரின்னு அவரை பார்க்க, அவருக்காக நான் வாங்கி வைத்திருந்த "கடவு" மற்றும் "சின்ன சின்ன வாக்கியங்கள்" இரண்டையும் எடுத்து கொண்டு கிளம்பினேன். பக்கத்தில் அத்திரி அண்ணன் உட்கார்ந்து இருக்க, தாம்பரம் வசந்த பவனில் வைத்து அந்த புத்தகங்களை அவருக்கு தந்தேன். அத்தனை வாங்கிய பொழுது அவர் முகத்தில் ஒரு வித பெருமிதம், அன்பு , காதல் அனைத்தும் பார்த்தேன். காபா புத்தகங்களின் காதலரென்று எனக்கு தெரியும், ஆனால் அதை அன்று தான் நேரில் பார்த்து, உணர்ந்தேன்.

சந்தித்த நபர் - வழக்கம் போல், அன்றும் ஒரு appointment இருந்தபடியால், அத்திப்பட்டு புதுநகர் வரை போக வேண்டி இருந்தது. இத்தனைக்கும் அது என்னுடைய கால் இல்லை. ஆபீஸ் ல வெட்டியா உட்கார பிடிக்காததால், இன்னொருவருடன் கிளம்பினேன் அத்திப்பட்டு புதுநகருக்கு. ஏரியாக்குள்ள போவதற்கு ஒரு வசதியும் இல்லை.
கிளையன்ட் தான் வந்து எங்களை அவர் வீட்டுக்கு கூட்டிகிட்டு போனார்.
அங்கு சுற்றி இருக்கும் மின் நிலையங்களால் அந்த ஏரியாவே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது. மின்சாரம் எப்ப வரும் போகும் என்று தெரியாதாம். இன்டர்நெட் வேலை செய்யதாம். எதாவது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டுமானால் 4 கிலோ மீட்டார் வரைக்கும் போக வேண்டுமாம். இன்னும் நிறைய சொன்னார்.
எங்களுக்கு அந்த குடிருப்பின் நிலைமையும், அந்த ஏரியாவின் நிலைமையை பார்த்த பொழுது, எங்களுக்கு ஏதோ சென்னையில் இருப்பதாய் தோன்றவில்லை. இத்தனைக்கும் சென்னை நகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் தான் உள்ளது இந்த ஏரியா.
ஏதோ சென்னையில் இருக்க ஆசைப்பட்டு, ரொம்ப வருஷம்
முன்னாடி
ரொம்ப கஷ்டப்பட்டு transfer வாங்கி
இங்க வந்திருக்கார். எப்படியோ அவருடைய பெண்களையும் படிக்க வைத்திருக்கிறார்.அவங்க பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாங்கலாம். போட்டோ காட்டினர். இப்போ என்ன பிரச்சனை என்றால், அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரே வயது.... இந்த வயசான காலத்தில் ஆத்திர அவசரமென்றால் பக்கத்தில் உதவி என்று யாருமில்லை, சென்னை வந்து போகவும் முடியவில்லை....
சரின்னு அவர் வேற ஏரியாவுக்கு transfer வாங்கிட்டு போகலாம்ன்னு இருந்தாலும் லட்ச லட்சமாய் லஞ்சம் கேட்குறாங்கலாம்.


இந்த மாதிரி ஒவ்வொரு காலுக்கும் போயிட்டு வரும் பொழுது சில சமயம், இந்த விஷயங்களை கேள்விப்பட்டு, கனத்த மனதுடன் வர வேண்டியதாக இருக்கிறது. அந்த காலுக்கு போயிட்டு வந்த சில நாட்காளில் அவர் என்னை பார்க்க ஆபீஸ்க்கு வந்தார். பார்க்கவே பாவமாய் இருந்தது. என்னிடம் பேசிவிட்டு அவர் கிளம்பும் போது மதியம் 12 மணி ஆகிருந்தது. கிளம்பி போறேன்ன்னு சொன்னாரு. நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரின்னு பைக் ல அவரை சென்ட்ரல் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் விட்டு வந்தேன். அவர் ஸ்டேஷன் நோக்கி தளர்ந்த நடையுடன் செல்லும் போது, ஏன்னோ என்னுடைய அப்பா நினைவுகளில் வந்து போனார்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிங்க பெருமாளுக்கு நெற்றி கண் இருக்கிறது.//
அற்புதம்.

ஹேமா said...

மேவீ..சுகமா.ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை எதையோ சொல்லிக்கொடுத்தபடிதான்.என்னை நொந்தபடி அடுத்தவரை எட்டிப் பார்த்தால் என்னைவிட மிகவும் அடிபட்டிருப்பார் வாழ்வில்.என் அனுபவமும் இப்படியேன்.சுகமா இருந்துக்கோங்க மேவீ சந்திக்கலாம்.

வாலு,கார்த்திக்கு,மகாவுக்கும் சுகம் சொல்லுங்க.நான் ரொம்பவும் கேட்டேன்ன்னு சொல்லுங்க !

Related Posts with Thumbnails