Pages

Sunday, May 15, 2011

*பாக்கெட் நாவல் - அறிவு திருட்டு - பருப்பு வேகல*


வெள்ளிகிழமை வழக்கம் போல சாயங்காலம் ரயில் ல திரும்ப வந்துகிட்டு இருக்கும் போது, தென் தமிழகத்துல இருந்து வரும் ஒரு நண்பருக்காக தாம்பரம் ரயில் ஸ்டேஷன் ல கொஞ்சம் காத்துகிட்டு இருக்கும் படியா ஆகிருச்சு, சரின்னு சும்மா இருக்குறதுக்கு எதாச்சும் படிப்போமேன்னு புஸ்தக கடை பக்கம் போய் பார்த்தா.. மேல படத்துல இருக்குற புக் அங்கணன இருந்துச்சு. "எந்திரன் திரைப்படத்தின் கதை என்னுடைய ரோபாட் தொழிற்சாலை - ஆர்னிகா நாசர்" ன்னு அட்டை ல போட்டு இருந்துச்சு. அதை படிச்ச உடனே ஒரு வேளை நிஜமாவே ஆர்னிகா நாசர் பெரிய அப்பாடக்காரா இருப்பாரோன்னு சந்தேகபட்டு புஸ்தகத்தை வாங்கிட்டேன். (அப்போதைக்கு அந்த புஸ்தகம் வாங்குற அளவுக்கு தான் என்கிட்டே காசு இருந்துச்சுங்குறது வேற விஷயம்).

எடுத்த உடனேயே ஜீயே பதிப்பக ஆசிரியர் அசோகன் அஞ்சு பக்கத்துக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்தி இருந்தாரு, ஒரே உணர்ச்சி பொங்கல் வைச்சு, அனத்தி இருந்தாரு. நானும் அப்படியே நம்பிட்டேன். போற போக்குல கௌதம் மேனன் எடுத்த "வேட்டையாடு விளையாடு" படம் ரொம்ப வருஷம் முன்னாடி ராஜேஷ்குமார் எழுதின்ன கதைன்னு வேற சொல்லிருக்காரு, அது ராஜேஷ்குமார் ஐயாவுக்கு தெரியுமான்னு தெரியல. ம்ம்ம் இதையெல்லாம் விடுங்க ஆர்னிகா நாசர் ஒரு இடத்துல சொல்லிருக்காரு "... தமிழ் நாட்டுல சுஜாதாவும் நானும் மட்டும் தான் அறிவியல் கதைகள் எழுதிருக்கிறோம்"ன்னு. ரோபாட் தொழிற்சாலை படிச்சதுக்கு அப்பரும் எங்க போய் முட்டிக்குறதுன்னு தெரியல. கதை அம்புட்டு மொக்கை.

ஜீயே அசோகன் இந்த மொக்கை கதைக்கு பட்டுகோட்டை பிரபாகர் ஐயா எழுதின்ன "இது இந்திய படை" ங்குற நாவலை வேற துணைக்கு இழுத்து இருந்தாரு. அந்த கதை தான் ராதாமோகன் காபி அடிச்சு "பயணம்" எடுதிருக்குறதா சொல்லுறாங்க, அதனால அதையும் வாங்கி இருக்கேன், இன்னும் படிக்கல.

அந்த முன்னுரை கடைசில "எழுத்தாளர் நல வாரியம் அமைக்க பாடுபடுவோம்"ன்னு சொல்லிருக்காரு. இங்க தான் மேட்டர் இருக்கு. விஷயம் என்னன்னா ரொம்ப வருஷம் ஜீயே பதிப்பக வெளியீடுகளாக ராஜேஷ்குமார் குறுநாவல்களையை எல்லாம் யாரோ திருட்டு தனமா பிரிண்ட் போட்டு, புது புது போலி பதிப்பக பெயர்களில் மார்க்கெட்டில் ரொடேஷன் ல விட்டு காசு பார்த்துகிட்டு இருந்தாங்க. ( உதாரணத்துக்கு - நாவல் எக்ஸ்பிரஸ், நாவல் மலர்). இத எதிர்க்கும் விதமா போன வருஷத்துல ஏதோ ஒரு மாசத்துல "ஒரிஜினல் ராஜேஷ்குமார் கதைகளை படிக்க க்ரைம் நாவல் மட்டுமே வாங்குங்கள்"ன்னு எழுதி இருந்தாராம். இதுக்காக தான் இவரு ஆவேசமா பொங்கி இருக்காரு. ராஜேஷ்குமார் குமார், பிகேபி இரண்டு பேரும் இந்த விஷயத்துக்காக இவரோட துணை நிக்கல போலிருக்கு, அதனால ஆர்னிகா நாசரை கூட்டு சேர்த்துகிட்டார் போல. அறிவு திருட்டு - எதிர்க்க வேண்டிய விஷயம் தான். எதிர்க்கட்டும் வேண்டாம்ன்னு சொல்லல, ஆனா இந்த
மாதிரி
மொக்கை தனமா இருக்க வேண்டாம்ன்னு தான் நினைக்கிறேன்.

இப்படி ஜீயே அசோகன் போறரதுக்கு இன்னொரு காரணமும் இருக்குன்னு நினைக்குறேன் ... போலி பதிப்பகங்கள் மேல கேஸ் போட்டா , அது ஜீயே பப்ளிஷர்ஸ் பிரச்சனை ஆகிவிடும், பிறகு அசோகன் தான் காசு செலவு பண்ணனும்... இதை எழுத்தாளர்களோட பிரச்சனைன்னு கொண்டு போன அவங்க செலவுலையே எல்லாம் நடக்கும். ம்ம்ம் அவரோட சுய நலன்லையும் ஒரு பொது நலன் இருக்க தான் செய்யுது.

எல்லாம் சரி ... ஆனா எந்திரன் கதை தன்னோட கதை தான்ன்னு ஆர்னிகா நாசர் ஒரு நாலஞ்சு பாயிண்ட்ஸ் தந்திருக்காரு பாருங்க.... செம மொக்கை... ஏன்டாபா படிச்சோம்ன்னு ஆகிருச்சு.

முக்கியமான விஷயம், இந்த பாக்கெட் நாவலை ரொம்ப தீவிரமா படிக்குற பயபுள்ளைங்க நிறைய பேர் இருக்காங்க. என்னுடைய ஆபீஸ் ல இருக்குற என்னுடைய பெண் உயர் அதிகாரியே இந்த பாக்கெட் நாவலளுக்கு தீவிர ரசிகை. இதை படிக்குற பாமர மக்கள் நிறைய இருக்காங்க. இன்றைய காலகட்டத்துல பிரபல எழுத்தாளர்கள் எழுதும் புஸ்தகம் எல்லாம் 300 ரூபாய், 500 ரூபாய்ன்னு விக்குது. ( அவ்வளவு ஏன், உழைக்கும் மக்களுக்காக குரல் குடுக்கும் புரட்சி புஸ்தகங்களின் விலையே 500 ரூபாய்ன்னு இருக்கு - புரட்சி புஸ்தகங்களில் முதலாளி வர்க்கம்ன்னு சொல்லுற வர்க்கம் மட்டுமே இதையெல்லாம் வாங்க முடியும்). இதையெல்லாம் வேலை வெட்டியை எல்லாம் விட்டுட்டு நுலகம் போனால் தான் சாதாரண மக்களால் படிக்க முடியும்... அதிலும் பல அரசு நுலகங்களில் கிடைக்கவே கிடைக்காது.... தனியார் நுலகம் போகணும்ன்ன உள்ள நுழையவே காசு கட்டி ஆகணும். இப்படி பட்ட சிக்கல்களில் இருக்கும் பல சாதாரணன்களை இன்னும் வாசிப்பாளனாக வைத்திருப்பது இந்த மாதிரியான பாக்கெட் நாவல்களே ... 15 ரூபாயில் அவனுக்கு அவன் கவலைகளை மறக்க ஒரு கதைசொல்லி ஊடகம் கிடைக்கிறது. அதில் ஏன் இந்த மாதிரி வெத்து வாதங்களை முன் வைக்குறாங்கன்னு தான் தெரியல.

ஏதோ கொஞ்சம் நல்ல விஷயங்களையும் சொல்லுறாங்க ( உதரணத்துக்கு விளக்கம் ப்ளீஸ் விவேக் ).... அதே மாதிரி இன்னும் பல நல்ல விஷயங்கள் சொன்னால் நல்லா இருக்கும். அதைவிட்டு வீண் வாதங்கள் வேண்டாமே. அதே மாதிரி உசுபேத்தி உசுபேத்தி பலரை ரணகளமாக்காமல் இருந்தால் சரி.

என்னை பொறுத்த வரைக்கும் பல எழுத்தாளர்களும் பல சாதாரணன்களும் சந்தித்து, கருத்துக்களை பரிமாறி கொள்ளும் ஒரு மைய புள்ளியாக இந்த பாக்கெட் நாவல்கள் விளங்கினால் சந்தோஷம்.
Related Posts with Thumbnails