Pages

Sunday, August 7, 2011

முக்காத மூன்று முடிச்சுகள் / கடிச்சுகள் - தொடர் பதிவு

தேடல் என்ற மைய புள்ளியில் கேள்விகளுக்கான பதில் நமக்கு கிடைக்கும் பொழுது, அந்த பதில்களெல்லாம் மற்றொரு கேள்விக்கான விதையாக இருக்கும். வாழ்க்கை என்பதொரு கோலம் மாதிரி தான், எப்படி புள்ளிகளுக்கிடைய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாய் போய் ஒரு கோலத்தை உருவாக்குகிறதோ, அந்த மாதிரி நமது வாழ்வின் பல நிலைகளிலும் அந்த கோடுகள் மாதிரி யோசனைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்படிபட்ட ஒரு நிலையில் நானிருக்கும் பொழுதில் தான் நண்பர் கார்த்திகை பாண்டியன் என்னை இந்த கேள்வி பதில் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். சரி பதிவின் கேள்விகளுக்கான எனது பதிலில் பயணிப்போம்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
எனக்கு பெரியதாக விருப்பமென்று எதுவுமில்லை. ஆனாலும் சில விஷயங்கள் எனக்கு பிடித்தவை இருக்கின்றன ; அவை - யோசிப்பது, புதிய மனிதர்களுடன் பழகுதல் பிறகு புத்தகங்களும் சினிமாவும்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
ஒரு காலத்தில் இந்த பட்டியல் பெரியதாக இருக்கும், மன பக்குவத்தின் காரணமாக பட்டியல் சுருங்கி விட்டது. இப்பொழுது பட்டியலில் பிரதானமாக இருப்பவை இயற்க்கை அழிவு,
மனிதர்களின்
சுயநலம், பிறகு இஷ்டப்பட்டு வாங்கும் புத்தகங்கள் மொக்கையாய் இருப்பது. முக்கியமாக மதிய வேளையில் நான் சாப்பிடும் கோன் ஐஸ் கிரீம் உருகுவது... நான் விரும்பவே விரும்பாதொன்று.

3)
பயப்படும் மூன்று விஷயங்கள்
?
ஒரு வயது வரைக்கும் பயங்களோடு வளர்ந்ததினால், எதற்கு அதிகம் பயபடுவேனேன்று தெரியாது.

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
மரணம், மிருகங்களின் உலகம், படிக்காத புத்தகங்களில் இருப்பவை.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
அண்ணன் மகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படம், மொபைல் போன், SOURCE CODE மற்றும் BLACK SWAN பட டிவிடிகள்.

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லதுமனிதர்கள்?
சிரிப்பை மறந்து பல வருடங்களாகிவிட்டது. அதனால் சிரிக்க சந்தர்ப்பம் எப்பொழுது தேடிக்கொண்டே இருப்பேன். அப்படி கிடைத்தால் சிரித்துவிடுவேன். தனிமையில் இருக்கும் பொழுது சில கல்லூரி நினைவுகளால் புன்னகை பூப்பேன்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்றுகாரியங்கள்?
பாலியல் தொழிலாளிகளை பற்றி ஒரு கட்டுரை படித்து கொண்டிருக்கிறேன், உலக சந்தை பற்றி கவலை படுகிறவர்களின் கவலைகளை படித்துகொண்டிருக்கிறேன், ஜன்னல் வழியாக வரும் மாலை நேர குளிர் காற்றை அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்றுகாரியங்கள்?
பொருளாதார அடிமையாகி விட்டபின், நாடு போற்றும் ஒரு தலைமை பொருளாதார அடிமையாக வேண்டும் என்று ஆசை படுகிறேன், நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும், பள்ளிக்கு போக முடியாத சிறுவர்களுக்கு பாடம் சொல்லி தர வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
இதற்க்கான பதில்களும், எனது தேடலில் உண்டு.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
கேட்க கூடாது என்று இருப்பதை எல்லாம் கேட்டாகிவிட்டது. இனியும் என்ன இருக்கு ?? முக்கியமாக என் பிரியத்துக்குரியவர்கள் சோகமாய் இருப்பதாக கேட்க விரும்பவில்லை.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
உலகில் உள்ள பேச்சு மொழிகள் அனைத்தையும், ஓவியம், பிறகு எனக்கு தெரியாது என்று நினைக்கும் அனைத்தையும்.

12) பிடிச்ச மூன்று உணவு வகை?
ரவா தோசை, இட்லி, நூட்லஸ்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அப்படி எல்லாம் ஒன்றும் செய்ய மாட்டேன். எனக்கிருக்கும் ஞாபக மறதியால்.....எல்லா பாடல்களின் முதல் வரியை தவிர வேறெதுவும் ஞாபமிருக்காது.

14) பிடித்த மூன்று படங்கள்?
நிறைய இருக்கிறது, எதை சொல்லுவதென்று தெரியவில்லை . அதனால்: நான் அடிக்கடி விரும்பி பார்ப்பது :- சிம்லா ஸ்பெஷல், தில்லுமுல்லு, பாஷா, அண்ணாமலை

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியானமூன்றுவிஷயம்?
உயிர், தோழர்கள்/தோழிகள், புத்தகங்கள் ..... முக்கியமாகஎன்னுடைய நக்கல் நையாண்டி தனம்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
யாரை அழைப்பதென்று தெரியவில்லை ...ம்ம்ம்

இறந்தகால இலக்கியவாதிகள்
சமகால இலக்கியவாதிகள்
எதிர்கால இலக்கியவாதிகள்
Related Posts with Thumbnails