Pages

Friday, March 29, 2013

கலவை - குவென்டின் டாரண்டினோ:::மரியான்:::சுஜாதா:::மோகன் ஸார்


தத்துவ ஆராயுதல் புத்தகமொன்றில் தத்துவங்களை பற்றி "உலகம் முழுக்க மக்கள் வெவேறு மொழிகளால் பிரிக்க பட்டாலும், அவர்களது மானுட உணர்வுகள் ஒரே அடித்தளத்தை கொண்டது தான். அதனால் உலகம் முழுக்க விரவி கிடக்கும் தத்துவங்களில் கண்ணுக்கு தெரியாத ஒரு நூல் இருக்க தான் செய்யும்.  

= = = = =
சுஜாதா கதை திரைக்கதையெழுதி வந்த கன்னட படம் ஆர்யபட்டா , அதை புத்தக வடியிலேயே படிக்க நன்றாக இருக்கும், அதுவும் இந்த காட்சி எழுத்துக்களின் மூலம் பாத்திரங்களின் மன நிலையை அழகாக படம் பிடித்து காட்டும். அதுவும் ஆசான் சுஜாதாவின்   நிகழ்தகவுகளை அருமையாய் கையாண்டு இருப்பார். 

ரமேஷ் அரவிந்த் கேட்டு கொண்டதற்காக அந்த நாள் திரைபட கதையை மையமாக கொண்டு  சுஜாதா எழுதினார் என்றாலும், சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாவகத்தில் கதை முற்றிலும் புது மாதிரியாக காட்சி அளிக்கிறது. 

ஆனால் இந்தகாட்சியை பார்த்தால், சுஜாதாவின் எழுதுயிரோட்டத்தை கொன்றிருப்பர்கள் என்று தெரிகிறது. முழு படம் பார்க்க ஆவல். இரண்டு காட்சிகள் தான் காண கிடைக்கிறது.

= = = = =
சற்று முன்பு தான் சுஜாதா 2000ம் வருடம் குமுதத்தில் எழுதின "ஓரிரவில் ஒரு ரயிலில்" கதையை படித்தேன் .... முடித்த பின் என்ன இது ஏமாற்றம் அளிக்கிறதே என்று யோசித்த பொழுது  குமுதத்தில் வந்ததாயிற்றே வேறெப்படி இருக்கும் என்று தோன்றிற்று. 

பக்கங்களை நிரப்ப வேண்டி ஆசான் எழுதிருக்கலாம் என்ற சந்தேகம் கிருஷ்ணதாசன் ராஜ பண்டிதனை ப்ருந்தா துப்பாக்கியால் சுட்ட பிறவு தான் வந்தது. அஷோக் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. வாசிப்பனுபவ சுவாரசியம் எதுவுமின்றி கதை ஒரு ராத்திரிலேயே என்று தொடங்கி சுவரில் ரத்தக் கோடிட்டது என்று முடிந்து விடுகிறது.  

விழுப்புரத்தில் ரயில் நின்ற பிறகாவது கதையில் சுவாரசியம் ஏறி கொள்ளுமென்று எதிர்பார்த்து ஏமார்ந்து போனேன். ஆசான் டச் இதில்.மிஸ்ஸிங். 

கதை உயிர்மை வெளியீட்டுள்ள சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 
இரண்டாவதிலும்,கிழக்கு வெளியீட்டில் தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. 

= = = = =
"பதிவர் அறிமுகம் - மேவி

மேவி என்கிற பெயர் கூகிள் பிளஸ் வட்டத்தில் மிகவும் பிரபலம். மிக இளைஞர் இப்போது தான் திருமணம் நிச்சயமாகி கடலை சாகுபடியில் பிஸி ஆக உள்ளார்.

ஆயினும் கொஞ்ச காலமாக தனது ப்ளாகை தூசு தட்டி அவ்வப்போது மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார் 

கொத்து பரோட்டா, வானவில் வகையில் கலவை என்று எழுதுவது சுவாரஸ்யமாக உள்ளது. மேவியின் ப்ளாக் பெயர் : தினசரி வாழ்க்கை. வாசித்து பாருங்கள் !"

வசிஷ்டர் கையால் குட்டு..... பிரபல பதிவர் +Mohan Kumar  ஸார் என்னைய பத்தி எழுதி இருக்காரு அவரோட பதிவில்.

இதை பத்தி Sriram Narayanan அண்ணன் கூகிள் பிளஸில் 

என்ன தவம் செய்தனை +மேவி .. ??

+Mohan Kumar புகழ் மேவி
வீடுதிரும்பல் புகழ் மேவி
வானவில் புகழ் மேவி

இனி மேவியை எப்படி அழைக்கலாம்? இந்த மூன்றில் எந்த ஆப்சனுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்குதோ - அப்படியே அழைக்கலாம். உங்க ஓட்டுக்களை கமெண்டா போடுங்க.

மேவி சார் (இனிமே எல்லாம் அப்படித்தான்), சில லட்சம் பேர் படிக்கும் விகடனில் ஒரு கவிதை (அ) கட்டுரை வந்தாலே உடனே அதை ஸ்கேன் பண்ணி கூகிள் பிளஸ், மைனஸ், ஃபேஸ்புக் எல்லாத்திலேயும் பப்ளிகுட்டி பண்ற மக்களுக்கு மத்தியில் பல கோடி பேர் படிக்கும் வீடு திரும்பலில் அறிமுகம் செய்யப் பட்டும் அதை வெளியில் சொல்லாமல் இருக்கும் உங்க தன்னடக்கத்தை நினைச்சா புல்லரிக்குது சார்!!!!!!!!!

= = = = =
பொதுவாகவே உலக சினிமாக்களை விரும்பி பார்ப்பேனென்றாலும், எந்த படத்தை இயக்குனரை மனதில் வைத்து அல்லது இயக்குனருக்காக படம் பார்த்ததில்லை. அதெல்லாம் தமிழ் சினிமாவோடு சரி. ஆனால்  குவென்டின் டாரண்டினோ பற்றி இந்த கட்டுரையில் வந்துள்ள குறிப்புகள் அவரது பிற படங்களை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது. எழுதியர் லக்கிலுக்காக இருக்குமோமென்று சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் கூகிள் கூட்டலில் முதல் பகிர்வு அவருடையது தான். 

= = = = =  
 தனுஷின் மரியான் பட டிரைலர் வந்துள்ளது என்று அறிந்து பார்த்த பொழுது .... வெளிநாட்டு வேலை செய்யும் இடத்தில சிக்கி தவிக்கும் உணர்வு போராட்டங்களுடைய படம் என்று சொல்ல முடிகிறது. 

தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் இருந்து ரசிக்கிறேன். தனுஷின் திரைப்படங்களுக்கும் என் கடந்தகால நினைவுகளுக்கும் ரகசியமான மெல்லிய தொடர்ப்புள்ளது. அந்த படத்தில் இருந்து தனுஷின் ஒரு படத்தையும் பார்க்காமல் விட்டதில்லை. மரியானை ஆர்வங்களுடன் எதிர்பார்க்கிறேன்.  

= = = = = 

Thursday, March 28, 2013

கலவை - டுடோரியல் / புணர்வு / பரதேசி / மாரடைப்பு


ஆண்,  பெண் என்று யாராக இருந்தாலும் உடைகளோடு இருக்கும் பொழுது தான் கவர்ச்சியா இருப்பார்கள். நிர்வாணம் என்பது சுவாரசியமற்ற உண்மை போல . 

புணர்வு சாஸ்திரபடி பார்த்தோமானால்..... முதல் புணர்வில் தான் அவயங்கள் காண இருவருக்கும் ஆர்வம் இருக்கும் ....புணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய புள்ளியாகவும் அது இருக்கும்....புணர்வு என்பது புணர்வுகள் என்று மாறிய பின் நிர்வாணம் என்பது அறிந்த ரகசியமாகி விடும். அறிந்த ரகசியங்கள் சுவாரசியம் தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு புணர்வின் பொழுதும் ஒரு வித நெருக்கத்தை உணர நிர்வாணம் உதவும் 

= = = = = 
டுடோரியல் வாழ்க்கை மாதிரி இனிமே வரவே வராது. அப்படி ரகளை பண்ணி வாழ்ந்த காலம் அது. பிட்டு  படம், குஜால்ஸ் சிடி, சைட் அடிக்குறது, எந்த பொண்ணுக்கு / நடிகைக்கு வாழ்க்கை தருவது போன்ற முக்கிய வேலை செஞ்சுட்டு  பொழுது போகலைன்ன அப்பப்ப படிப்போம்.

என்னால் மறக்கவே முடியாத பருவம் அது. அதுல கூட படிச்ச நண்பன், பத்து வருஷம் கழிச்சு எப்படியோ என் நம்பரை கண்டுபிடிச்சு போன் பண்ணினான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.

பேசி முடிச்ச பிறவு கண் மூடினப்ப, அப்ப பண்ணின ரகளை எல்லாம் மனசுல வந்து போச்சு. அந்த மாதிரி சந்தோஷமா பிறவு இருந்ததே இல்லை. இப்ப நினைச்ச ரொம்ப ஏக்கமா இருக்கு.

அதுவும் அவன் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஆளு. என் கூடவே சைக்கிள்ல சுத்திகிட்டு, மூணு ரூவா இருந்தாலே கட்டணம் வாங்காத இடத்துல சைக்கிளை நிறுத்திட்டு, தியேட்டருக்கு நடந்து போய் மூன்றாம் வகுப்புல உட்கார்ந்து பிட்டு  படம் பார்த்துட்டு சந்தோஷமா வருவோம்.

அவனும் நானும் அந்த மூணு ரூவாய தேத்துறதுக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்ன்னு நினைச்ச, இப்ப சிரிப்பு தான் வருது. ஆபீஸ் டென்ஷன் எல்லாம் பறந்து போயிருச்சு அவன் கிட்டக்க பேசின பிறவு.

அவன் - என் ஏதுமற்ற பருவத்தில் நட்பின் எல்லாவுமாய் இருந்தவன். அறிவு, அனுபவம் தான் நாம் எப்பொழுதும் ஏங்குகிற குழந்தை தன்மைக்கு எதிரி போல. அவனோடு இயல்பாய் பேசுவதற்கு நடந்த 13 வருடங்களாய் என் மனதை சுற்றி அனுபவமும் கொள்முதல் செய்து கொண்ட அறிவும்  போட்டு இருந்த திரைகளை கலைத்தேன்.... மகிழ்வின் தூய்மையை உணர்ந்தேன்.

சட்டை பையில் மூணு ரூபாய் இருந்த பொழுது கிடைத்த சந்தோசம், இப்பொழுது சில ஆயிரங்கள் இருக்கின்ற பொழுது கிடைப்பதில்லையே ???

விருப்பங்களை பறித்து கொண்டு, கட்டாயங்களின் இஷ்டங்களை தந்து... பறி குடுத்தவை பற்றி எப்பொழுது ஏங்க வைப்பதில் என்ன தான் காண்கிறதோ இந்த வாழ்க்கை. :((((

= = = = =
பரதேசி படம் உலக சினிமான்னு சில பல இலக்கியவாதிங்க சொல்லி பொது மக்களை ஏமாத்த பார்க்குறாங்க. நல்ல வேளை நான் படத்தை முன்னமே பார்த்துட்டேன் இல்லாங்காட்டி இந்த இலக்கியவாதிங்க உலக சினிமான்னு சொல்லுறத நம்பில படத்தை பார்த்து ஏமாந்து இருப்பேன் ... தப்பிச்சேன்டா சாமி.

ஏதோ உலக சினிமான்ன என்னனே எனக்கு தெரியாத மாதிரில இந்த இலக்கியவாதிங்க பேசுறாங்க. எங்களுக்கு தெரியாத உலக சினிமான்ன பல உதட்டு உம்மா சீனு,  இரண்டு மூணு குஜால்ஸ் சீனு .... பிறவு கதாநாயகி முண்டமா வர சீனு இருந்த தானே அது உலக சினிமா ?? (முக்கிய குறிப்பு கதாநாயகன் முண்டமா வந்த அது உலக சினிமாவான்னு தெரியல)

இது எல்லாம் ஒன்னும் இல்லாத பரதேசி படத்தை எப்புடி உலக சினிமான்னு ஏத்துக்குறது ??

நியாயமாரே... சீக்கிரம் சொல்லுங்க ,இல்லடி ராசா வண்டிய 

= = = = =
கொஞ்ச நாள் முன்பு மோனி கோயம்புத்தூர் (Mony Coimbatore)  தனது வதன புத்தக பக்கத்தில் "சாவை பற்றி கூட கவலை இல்லை, ஆனால் இனி வாழ போகிற நாட்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது"  என்று எழுதியது தான் இன்று முழுவதும் என் மனதில் ரிங்காரமிட்டபடியே இருந்தது.

அந்த வரிகளை பற்றி யோசிக்க, யோசிக்க தான் அவை எத்தனை பெரும் கருத்தை உடையது என்று தோன்றியது. மனிதன் தான் உருவாக்கிய வாழ்நிலையில் தானே தொலைந்து / தொலைத்து அழிந்து கொண்டிருக்கிறான் என்று தோன்றியது.

வாழ்க்கையில் பணத்தை நோக்கமாய் கொண்ட தேடல், ஒரு சமயத்திற்கு பிறவு பயத்தை நோக்கியதாக மாறுவது எத்தனை நிதர்சனம். வரிகள் மீண்டும் மீண்டும் என் இதயத்தில் ஒலிக்க ... எதொன்றுக்கான தேடல் புரிந்தது போல் இருந்தது. 

= = = = =
வத்திகுச்சி கதை களம் புதிதாய் இருந்தாலும், மோசமான திரைக்கதையினால் நொண்டி அடிக்கிறது. தேவை இல்லாத பல கதாபாத்திரங்கள். அழுத்தம் இன்னும் அதிகமாக தந்திருந்தால் நன்றாய் வந்திருக்க வேண்டிய பல காட்சிகள் ...என்னோ தானோ என்று கடந்து போகிறது.

ஸ்பெஷல் 26 - 1980களில் நடந்த பல வழிப்பறி கொல்லை நிகழ்வுகளை பலவற்றை கேள்விப்பட்டதினால் ஆர்வம் வந்து பார்த்தேன். படம் சூப்பர். பார்க்கவில்லையென்றால் பார்த்துவிடுங்கள். அதுவும் கடைசி அரை மணி நேர காட்சிகளை கண்டிப்பா தவற விடாதீர். 

= = = = =
மாரடைப்பை தவிர்க்க .. - எழுதியவர் - ஜெயச்சந்திரன்  {அவரது வலைப்பூவில் இது போல் நிறைய தகவல்கள் கொண்ட பதிவுகள் படிக்க கிடைக்கிறது}

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

Tuesday, March 26, 2013

எல்டன் மையோ - ஒளி ஆராய்ச்சி


உங்களுக்கு மேலாண்மை பக்கம் விருப்பம் இருந்தால், கட்டாயம் எல்டன் மையோ ஹவ்தொர்ன் விளைவு ஆராய்ச்சிகளில் ஒன்றான இல்லுமினெஷன் ஸ்டடி பற்றி கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டும். 

இந்த இல்லுமினெஷன் ஸ்டடி என்பது வேலை செய்யும் இடத்தில ஒளி அளவையும் வேலை செய்பவரின் செயல் பாடு திறனையும் ஆராய்வதே. இந்த ஆராய்ச்சி 1920களின் பிற்பகுதியிலும் 1930களின் முற்பகுதியிலும் மானுடவியல் ஆராய்ச்சியாளரான எல்டன் மையோவால் தொழிற்சாலைகளில் நடத்த பட்டது. 

இதன் மூலம் அவர் கண்டிபிடித்து என்னவென்றால், ஒளி அளவு குறைய குறைய ஒரு இடத்தில வேலை செய்பவரின் செயல் திறன் குறைந்து கொண்டே போகிறது என்பதை தான். அதே நேரத்தில் ஒளி அளவு குறையில் இருந்து அதிகமாக  அதிகமாக அவர்களது திறன் மேம்படுவதையும் கண்டுள்ளார். 

பல்கலைகழக மனித மேலாண்மை வகுப்பில் இதை எங்களுக்கு சொல்லி தரும் பொழுது, ஆசிரியர் அறையை இருட்டாகி பிறவு எங்களது மனநிலையை கேட்டார், அதை எழுதி வைக்கவும் சொன்னார், பிறவு ஜன்னல்களை திறந்து விட்டு, விளக்குகளை போட்ட பிறவு வீசும் இளந்தென்றல் காற்றை (மலை காடு பக்கம் எங்களது பல்கலைகழகம் இருந்தது)  சுவாசிக்க சொன்னார்.... பிறவு அப்பொழுத்திய மனநிலையை எழுதி வைக்க சொல்லிவிட்டு... முந்தைய குறிப்பை படித்து பார்க்க சொன்னார். ஆச்சரியம் ஒருவர் கூட மகிழ்வு மனநிலையில் இல்லை. 

நேற்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் வருவதற்கு திருமால்பூர் செல்லும் ரயிலில் ஏறினேன். திரிசூலம் ரயில் நிலையம் வருவதற்குள் தூக்கம் கண்ணை தட்டியது. எங்கே இப்படியே போனால் தூக்கத்தில் பெருங்களத்தூர் நிலையத்தை விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு பெட்டியாக  மாறி மாறி ஏறி இறங்கி கொண்டிருந்தேன். அப்பொழுது ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு விதமான ஒளி அளவு. 

ஒளி அளவு அதிகமாக இருந்த பெட்டிகளில் மக்களின் உற்சாக நிலை அதிகமாக இருந்தது. ஒளி அளவு குறையான பெட்டியில் உற்சாக நிலை ரொம்ப குறைவாக இருந்ததையும் கவனித்தேன். கவனித்த பொழுது தான்  இந்த ஆராய்ச்சி பற்றிய விஷயம் மனதில் தோன்றியது. 

வகுப்பை தாண்டிய எனக்கு பிடித்தமான ஆராய்ச்சியை பற்றிய நேரடி அனுபவம் இதுவே.  மனிதனுக்கும் ஒளிக்குமான உறவு பிறந்த நொடியில் இருந்தே ஆரம்பமாகிறது. இதை பற்றி நீங்கள் அதிகமாக விளித்து கொள்ள ஒரு விடுமுறை நாளில் உங்களுக்கு  காலையில் இருக்கும் மனநிலையையும்,  மாலையில் இருக்கும் மனநிலையையும் ஒப்பீட்டு பாருங்கள்... விவரங்கள் புரியும். 

ஒளி என்று மட்டும் இல்லை, மனிதன் ஐம்புலன்களால் நுகரும் எந்த விஷயத்தையும் வைத்து இந்த கோட்பாடை பரீட்சையித்து பார்க்கலாம். இதற்க்கு சிறப்பான உதாரணம் பருவ நிலை மாற்றங்களால் மாறும் நமது மன நிலையே. 

ஆனால் ஒளியை மாதிரியே தூய்மையான காற்றும் மனிதனுக்கு பெரும் உற்சாக நிலையை தர கூடியது. ஆனால் நகரங்களில் அதற்கு வழியே இல்லாத பொழுது ..... நகர மக்களின் உற்சாக நிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். 

ஏனென்றால் இன்று நகரங்களில் ஒளி தொகை தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது, உற்சாக / ஊக்க மனநிலை அவைகள் தந்து விடுகிறதா ??? இந்த காலத்தில் இந்த ஆராய்வு நிகழ்வு நடத்த பட்டிருந்தால் ஒளியோடு காற்றுக்கும் வேலை சார்ந்த மனநிலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று சொல்ல பட்டிருக்கும். டாட். 

Monday, March 25, 2013

மௌலியின் "ப்ளைட் - 172"


நேற்று இரண்டு திரைப்படங்களை பார்த்துவிட்டு வீடு வந்த பிறவு, திரைப்படங்கள் தந்த மன மகிழ்வை நீடித்து கொள்ள விரும்பி சுவாதி'ஸ் பேமிலி என்டர்டெயின்மென்ட் ரூ.199 வெளியீட்டுள்ள மௌலியின் வெற்றி பெற்ற "ப்ளைட் - 172"  நாடகத்தை இரண்டாவது முறை பார்த்தேன். 

சிறு வயதில் பார்த்த மாதிரி ஞாபகம், எதிலென்று நினைவு இல்லை, ஆனால் நாடகத்தில் வரும் ஆங்கில மொழி நகைச்சுவை காட்சி மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. 

பலதரப்பட்ட சமூக பின்னணியில் இருந்தும் பல பிரச்சனைகளுக்காகவும், நோக்கங்களிற்க்காகவும் பம்பாய் (நாடகம் மேடை ஏறிய காலத்தில் மும்பாய் பம்பாய் ஆக தான் இருந்தது) செல்லும் ப்ளைட் 172 பிடிக்க விமான நிலையத்திற்கு வருகிறார்கள். அவர்களிடையே நடக்கும் நிகழ்வுகளாக அழகாய் நாடகத்தை வடிவமைத்திருப்பார் இயக்குனர் மௌலி. 

நாடகத்தில் எல்லாமே சிறப்பு தான். குறிபிட்டு  சொல்ல வேண்டுமானால் .....ஒரு பட தயாரிப்பாளர்  தனது பட கதையை சொல்வதும், கூட்டத்தில் இருக்கும் இன்னொருவன் குற்ற உணர்வுடன் அவனது கடந்தகால நிகழ்வுகளை நினைத்து பார்ப்பதும்...மற்றவர் ஆர்வமுடன் கதை கேட்பதும் .... வாய்ப்புகளே இல்லை. மௌலியின் நுண்ணிய இயக்க திறமைகளின் வெளிப்பாடுகளவை. 

இரண்டு மணி நேர நாடகத்தில் சிரிக்க வைப்பதை மட்டும் முன் நிறுத்தாமல், அப்பொழுதிய சமூக அபத்தங்களையும் சாடியுள்ளார் மௌலி. 

முக்கியமாக விமான நடைபாதையில் நின்று கொண்டு, உள்ளூர் கதை..கடை வைக்கிற திட்டம் போடுதல் காட்சி எல்லாம்..... செம செம 

முக்கியமாக ஒத்து, மணியாச்சி காட்சிகளுக்காக இன்னொரு தடவை பார்க்கலாம். 

கட்டாயம் இந்த நாடக தொகுப்பு உங்களது டிவிடி கலெக்ஷன்ஸில் இருக்க வேண்டிய ஓன்று. நான் சென்னை மவுண்ட் ரோடு ஸ்பென்ஸர் பிளாஸா லேண்ட்மார்க்கில்  வாங்கினேன். 

நாடகத்தில் தனிப்பட்ட சிறப்புகள்  என்று பார்த்தால் .... 1970களில் பல நூறு தடவை மேடை ஏற்ற பட்டதும், பிறவு 1980களில் தொலைக்காட்சி நாடக வடிவில் பல நாடுகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்டதுமே இதன் வெற்றியை சொல்கிறதே. 

அவசியம் வாரயிறுதி மாலை மகிழ்விற்காக பார்க்கலாம். 

Friday, March 22, 2013

பாலாவின் "பரதேசி"



நேற்று பாலாவின் பரதேசி பார்த்தேன். படத்தை விட பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.  படத்தில் நுண்ணிய விவர விவரிப்பு  இல்லையென்றாலும் படம் அருமை. முற்றிலும் புதுமையான தளத்தில் இயங்குவதால் வரவேற்க வேண்டியதாக போகிறது. 

ஒட்டுபெருக்கியை விட ஒரு இடத்தில கங்காணியை "ப்ளேசஸ் மீ லோர்ட்" காட்சியில் பிடித்து போகிறது. அந்த சாப்பாட்டு பந்தியில் ஒட்டுபெருக்கியின் அழுகை மனதை ஏதோ செய்கிறது. பல காட்சிகளில் இருக்க வேண்டிய ஆழங்கள் இல்லை. 

கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.  பாலா தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது. மூன்றாவது படத்திலேயே அதர்வாக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதை அவரது அப்பா முரளி பார்க்காமல் போய் விட்டாரே என்ற வருத்தம் படம் முடிந்து வெளிய வரும் போது தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 

பாலா இயக்க தவறுகள்  என்று பார்த்தால், ஒட்டுபெருக்கி கங்காணி உடன் செல்வதற்கு முன் அங்கம்மாவை பார்த்து பேசும் இடத்தில பின்னணி இசையை அனுமதித்தது. அதே போல் கங்காணி கூலிகளை பிரட்டும் இடத்திலும் அதே தவறு.

தவறுகள் இல்லாத அதிர்வை தருவது இடைவேளை காட்சி தான். அதே போல் முடிவில் அழுகைனூடே வருத்த சோக எண்ணங்களின் தகவல் பரிமாற்றம் ...... வாய்ப்புகளே இல்லை, பாலா!!! பாலா தான். 

எரியும் பனிகாட்டை படித்ததில்லை இன்னும், தோன்றுகிறது இப்பொழுது. அடுத்த வாசிப்பின் தொடக்க புள்ளி எரியும் பனிக்காட்டின் குளிரில் தான். நீதிபதி மனப்பான்மையில் ஆர்வமில்லாத, ஆர்வ இலக்கிய இச்சை. அதனால் பரதேசி வியப்புகள் மாற போவதில்லை. 

அடுத்த மாத பயங்கள் பரதேசியை சார்ந்து வர போகும் இலக்கிய பத்திரிக்கை கட்டுரைகளை நினைத்து தான்.
 

Thursday, March 21, 2013

வந்தார்கள் வென்றார்கள் - மதன்



பெரும் செல்வாக்கு உடன் ராஜ்ஜியம் அமைத்து ராஜாங்கம் நடத்திய முகலாயப் பேரரசின் கடைசி காலத்தை அல்லது அழிவு காலத்தை அருமையாக வார்த்தைகள் மூலம் படம் பிடித்து காத்திருப்பார் மதன், அவரது "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தின் கடைசி பாகமான "மிஞ்சியது வெறும் நினைவு ..!"ல். 

கேட்பாரற்று, தனது குடும்பத்துடன் அவருக்கென்றிருந்த ஒரு மாளிகையில், செலவுக்கு காசு இல்லாமல் பிரிட்டிஷ் அரசின் அடிமையாய் காலத்தை கழித்த கடைசி முகலாய அரசரான பகதூர் ஷா பற்றி   எழுதி முடித்து இருப்பார் அந்த புத்தகத்தை மதன். 

இது வரைக்கும் இரண்டு மூன்று முறை "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தை படித்து இருப்பேன், ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் அந்த புத்தகத்திற்கான முழுமையான தலைப்பு அது இல்லை என்றே தோன்றும். ஒரு வேளை வியாபார நோக்கங்களிற்காக அப்படி வைத்து இருந்தாலும் ..... என் மனதில் ஒவ்வொரு முறையும் அந்த புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுதும் தோன்றும் தலைப்பு இதுவே "வந்தார்கள் ..வென்றார்கள் ..அழிந்தார்கள் ..!".

அப்படி தோன்ற காரணம் பகதூர் ஷாவை பற்றிய குறிப்புகள் தான். கதை போல் உரைநடையில் எழுதப்பட்ட இந்த அபுனைவு புத்தகத்தை பற்றி சுஜாதா இரண்டு பக்கத்திற்கு புகழ்ந்து எழுதிருப்பார், அந்த புகழுரையில் உச்சம் "இந்த மாதிரி பாட புஸ்தகங்களின் சரித்திரம் எழுத பட்டிருந்தால், நான் சரித்திரம் நன்றாக படித்திருப்பேன்" (வார்த்தைகள் சரியாக நினைவில்லை). 

கொலை, சூழ்ச்சி, வஞ்சகம், அரசியல் போர் ... என்று பல நினைவுகள் மத்தியில் ... நிகழ்வுகள் வழியாக புத்தக வரிகளை மதன் அவர்கள் கொண்டு சென்றிருந்தாலும், என்னால் இந்த புத்தகத்தை மறக்க முடியாமல் செய்தது பகதூர் ஷா பற்றிய பகுதி தான். 

கைதியாக பர்மா செல்லும் முன் ஆங்கிலயர்கள் நிகழ்வின் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கும் பொழுது, அந்த நிகழ்வின் அனாதையாக ஒரு ஓரம் கால்களை மடக்கி ஒடுங்கி அமர்ந்திருப்பார் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் பகதூர் ஷா. அந்த நிலையில் அவரை பற்றி படிக்கும் பொழுதே கண்கள் கலங்கி விடும் நமக்கு. அவரது அந்த நிலையை ஒரு கவிதையின் மூலம் சொல்லிருப்பார் மதன், அந்த கவிதை 

"நான் நேசித்த எல்லாமே 

எங்கோ போனது !

இது இலையுதிர் காலம் ...

இழந்தது பூந்தோட்டம் 

தன் அழகையெல்லாம் !

நான் இன்று ...

           மின்னிய பழம்பெருமையின் 

           மிஞ்சிய வெறும் நினைவு!"

எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். சரித்திரத்தை இவ்வளவு சுவையாக சொல்ல முடியுமா என்ற ஆச்சரியமே எனக்கு ஒவ்வொரு தடவையும். இந்த கட்டுரையை எழுதுவதற்காக குறிப்புகள் எடுக்க இந்த புத்தகத்தை புரட்டிய சமயம் மீண்டும் இதை இன்னொரு முறை படித்து விடலாமே என்று தோன்றிய பொழுது சரித்திர வாசிப்பு பிரிவில் ஏற்கனவே முகில் எழுதிய "அகம், புறம், அந்தபுரம்" போய் கொண்டிருப்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாமென்று விட்டுவிட்டேன். 

இதனுடைய சிறப்புகள் என்று பார்த்தால் ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியங்கள் தான். நிகழ்வுகளை கண் முன் நிறுத்தி விடுகிறது. பிறவு குறிப்புகள், பழங்கால ஓவியங்கள், இடங்களின் புகைப்படங்கள்.... வாசிப்பை சுவாரசியமாக்கி விடுகிறது. 

செங்கிஸ்கான் ரௌத்திரம், ஹேமுயின் தொங்கும் உடல் பாகங்கள், இனாயத்கான் மரணம், பைராம்கான் நிலை, ஆதாம்கானின் கொலை, ஷாஜஹானின் காதல், முகலாய எதிரி கோவிந்த்சிங், புலிநக கொலைகள் ...என்று பல நிகழ்வின் ஒரு பகுதியாக நம்மை ஆக்கிவிடுவதில் தெரிவது மதனின் வெற்றி. 

வாசித்தவர்களால் பல முறை பாராட்டு கிரீடம் சூட்டபட்டது என்றாலும் நானெழுதும் இந்த கட்டுரை அந்த கிரீடம் மேல் வீசும் இளந்தென்றல் போலாகட்டும். 

Wednesday, March 20, 2013

கலவை - இந்திரா பார்த்தசாரதி / உடையார் சாம்ராஜ்யம் / பரதேசி / வங்கி ஊழல்


"இக்கேள்வியிலுள்ள நாணயம் தான் புனிதத்தின் போலியை வெட்ட வெளிச்சமாக்குகிறது, மனத்தை மூடியிருக்கும் திட்டிக் கதவுகளையும் திரைகளையும் நீக்கி தில்லையம்பலச்  சூன்யத்தை நிர்வாணமாக காட்டுகிறது. உலகில் எதற்கு தான் பொருள் உண்டு ?

உலகில் நிரந்திர மதிப்புகள் என்று ஒன்றுமில்லை ; அந்தந்த கால சௌகரியம் தான் அவற்றின் பொருளை நிர்ணயிக்கும் அகராதி. அகராதி மாறி கொண்டே இருப்பது தான் காலத்துக்கு செய்யும் நியாயம். மனப் பரிணாம வளர்ச்சியின் அளவுகோல். ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சௌகரியத்துக்காக கற்பித்துக்கொண்ட அர்த்தங்களை தெய்வமாக்கி, நாம் அவற்றின் அடிமைகளாவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை"

தற்பொழுது வாசித்து கொண்டிருக்கும் இந்திரா பார்த்தசாரதி எழுதின "திரைகளுக்கு அப்பால்" நாவலில் இருந்து. கிழக்கு பதிப்பக வெளியீட்டு பதிப்பின் விலை ரூ.180  


= = = = = 
என்றோ என் வாழ்வழி பாதையிலிருந்து காணாமல் கனவுகள் இரவு வருமென்ற ஏக்கத்தில் இரவு வானத்தை பார்க்கிறேன் .... என் மனதின் பிரதியோ அல்லது என் மனதோ கண்ணில் தெரிவது தெரியவில்லை. கனவாக இருக்குமோ ??? கனவில் தான் காரணங்கலில்லாமல் ஞாண் நினைவுகள் பூரியார் போல் நம்மை ஆட்கொள்கிறது. 

கனவை பற்றிய மன உளறலுக்கு செவி சாய்க்கும் பொழுது தானெனக்கு  ட்டய் ரியோக்கன் எழுதிய ஜென் கவிதை யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பினால் நினைவுக்கு வருகிறது. அது 

"கனவின் பாதைகள் இரவில் 
தொடர்ந்து 
எந்த வழியாய் வந்தாய்,
மலை வெளியில் உறைபனி 
இன்னுமும் கனத்திருக்கும்போது ?"


= = = = =
மாறி வரும் காலத்தை உத்தேசித்து பல வேத பாட சாலைகளும் மதரஸாக்களும் கணக்கு, அறிவியல், கணினிவியல் போன்ற விஷயங்களை தங்களது மாணவர்களுக்கு அவை சொல்லி தருவதாக இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் சிறப்பு செய்தி கட்டுரையாக போட்டுள்ளனர். 

"என்ன காந்தி செத்துட்டாரா" என்று இதுபோன்ற அசட்டு தன செய்தி தாள் ஆச்சரியங்கள் எனக்கு பெரிதும் சிரிப்பையே வர வைக்கிறது. எனக்கு தெரிந்து 2000 லேயே ஒரு வேத பாடசாலையில் கணினி சொல்லி தந்து கொண்டிருந்தனர். ஸ்ரீரங்கம் என்று நினைக்கிறேன். ( தஞ்சையாக இருக்குமோ என்று சந்தேகம்).

கிருஸ்துவ பாதரியார் பயிற்சி பள்ளியில் ஆங்கில இலக்கியம் முதற்கொண்டு அறிவியல் வரைக்கும் சொல்லி தருவார்கள் என்று கேள்வி பட்டிருக்கேன்.

மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில், பணம் தேட வழிமுறை முயற்சிகளில் அவர்கள் எடுக்கும் முயற்சி இது. எப்படி முயற்சி எடுத்தாலும் வேத பாடசாலைகளில் தொடர்ச்சியாக படிக்கும் மாணவர்கள் குறைவு. பணம் ஏற்பாடு பண்ணியோ அல்லது கடன் வாங்கியோ தங்களது பிள்ளைகளை மெக்காலே முறை அடிமைகளாக மாற்றி விடுகிறார்கள் சில பெற்றோர்கள். 


= = = = =
இந்திரா பார்த்தசாரதி எழுதின "இயேசுவின் தோழர்கள்" நாவல் தமிழ் புத்தகாலயம் பதிப்பு ரூ.50 க்கு சென்னை மவுண்ட் ரோடு ஹிக்கின்போத்தம்ஸில் கிடைக்கிறது. அதே போல் பல நாவல்களும் கிடைக்கிறது. ஆர்வம் உள்ளோர் வாங்கி கொள்ளுங்கள். 

= = = = =
நேற்று கர்நாடகா உடையார் சாம்ராஜ்யத்தை பற்றி படித்து கொண்டிருக்கும் பொழுது பெங்களூரின் பெயர் காரணத்தை படித்தேன். 

அதாவது பதினோராம் நூற்றாண்டில் ஒரு நாள் ஹொய்சால நாட்டு மன்னனான முதலாம் வீரபல்லாலா அடர்காட்டிற்குள் வேட்டைக்கு வந்த பிறகு பல மணி நேரம் கழித்து வந்த வழியை மறந்து சரியான வழியை தேடி கண்டிபிடிக்க சுற்றி அலைந்து, மிகுதியான களைப்பில் பசி தாகம் வந்து ரொம்ப கஷ்ட பட்டு கொண்டிருக்கும் பொழுது, அந்த காட்டில் குடிசை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி அவரை கண்டு, அவரின் பசிக்கு அவித்த அவரை விதைகளை சாப்பிட தந்துள்ளார். 

சாப்பிட்டு பசியை துறந்த  அவர், இந்த நிகழ்வின் நினைவாக அந்த இடத்திற்கு "பெல்லெ பெண்ட கலு ஊரு" என்று பெயர் வைத்தாராம். 

இதற்கு என்ன அர்த்தம் என்று மைசூரில் பிறந்து வளர்ந்த என் அம்மாவிடம் கேட்டதற்கு "அவித்த அவரை விதை தந்த ஊர்" என்று சொன்னார்கள். 

அப்படி ஒரு காலத்தில் அடர்காடான பெங்களூரு இப்பொழுது காடே இல்லாத பகுதியாக மாற தலகாடு சாபம் மாதிரி எதாவது இருக்குமாமென்று யோசித்து பார்த்து தேடினேன். பொருளாதார வளர்ச்சி தான் காரணம்.


= = = = =
பரதேசி பிடிக்கலன்னா கூட ஓகே தான், ஆனா பரதேசி படம் பிடிச்சு இருக்குன்னு ஒருத்தன் சொல்லிட்டா.. படம் பிடிக்காத குரூப் அங்க போயி ஏன் அவங்களுக்கு பிடிக்கவில்லைன்னு  ஏன் சொல்லுறாங்கன்னு தெரியல. 

அவங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று படம் பிடிச்சு இருக்கு சொன்னவனுக்கு தெரிய படுத்துறதுக்கா ???

ஒரு பயபுள்ள பெஸ்புக் ல படம் பிடிச்சு இருக்குன்னு ஸ்டேடஸ் போட்டதும், ஒரு ஆடு வந்து எனக்கு ஏன் பரதேசி பிடிக்கலன்னு பக்கம் பக்கமா பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. 

"பாலா ஏன் அடி வாங்கின தமிழர்களை பத்தி படம் எடுக்கிறார், அடி குடுத்த தமிழர்கள் எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியலையா ??"ன்னு கேட்கிறாரு. 

படத்தை பத்தி அவரோட கருத்து இது தான் ன்ன, அதை அவரோட ஸ்டேடஸாகவே போடாம, எதுக்கு படம் பிடிச்சு இருக்குன்னு சொன்னனுக்கு பின்னூட்டமா போடுறாருன்னே புரியல.   


= = = = = 
Pan Card இல்லாம வங்கில இன்சூரன்ஸ் போடுறாங்கன்னு cobrapost வெளிப்படுத்தி இருக்கிறது எல்லாம் "என்ன காந்தி செத்துட்டாரா" வகையற தான். ஆளே இல்லாம கறுப்பு பணத்த வெள்ளை பணமா மாத்துற டெக்னிக் எல்லாம் இருக்கு.  

இவங்க இப்ப காட்டி இருக்குறது சிறு புள்ளி தான். இன்னும் பெரிய பெரிய மலை எல்லாம் இருக்கு. 


= = = = = 

Thursday, March 14, 2013

சர்வாங்கம் - முழு உடல் முடி மழித்தல்


இப்படி ஒரு விஷயம் இருக்கிறதென்பதெனக்கு இந்த வார குங்குமம் வாங்கும் வரைக்கும் தெரியாது. சர்வாங்கம் - பிராமண ஆண் உடலில் இருக்கிற அணைத்து பகுதிகளிலும் இருக்கும் முடியை மழித்தல். இந்தியாவில் வேதம் ஓதும் பிராமண வட்டத்தில் மட்டும் இதை செய்வதற்கென்று ஆட்கள் இருக்கிறர்களாம். கல்யாண நிகழ்வுகளுக்கு முன் மாப்பிள்ளைக்கு சர்வாங்கம் செய்தவருக்கு ராஜ மரியாதை கிடைக்குமாம், மாப்பிள்ளையின் எழுச்சி திறனை அறிய.  இவை எல்லாம் குங்குமத்திலிருந்து அறிந்தவை. 

அதை படித்து விட்டு சற்று கைவசம் குறிப்புகளை படித்ததில், கொஞ்சம் தேடி பார்த்ததில் பல சுவையான விஷயங்கள் கவனத்திற்கு வந்ததெனக்கு. 

எப்படி ஒரு சிறு ஓடையில் இருந்து ஒரு பெரும் நதி உருவாகி, அது பல கிளை நதிகள் உருவாக வழி செய்வது போல தான் நம்பிக்கைகளும். முடி மழித்தலும். இந்த காலத்தில் முழு உடல் முடி மழித்தல் என்பது பலரின் விருப்பமாக இருந்தாலும், அந்த காலத்தில் இது மத ரீதியாக மட்டும் செய்ய பட்டது. 

மதங்கள் பலவற்றில் பின் பற்ற பட்டிருந்தாலும், பண்டைய ரோமானிய காலத்தில் ஆண்மையின் அடையாளதிற்காக பின் பற்றப்பட்டது. அப்படி முடி இருக்கும் ஆண்களின் உடலை அவலட்சணத்தின் அடையாளமாக பார்க்க பட்டது. ஆனால் இதற்கும் சர்வாங்கதிற்கும் வித்தாயசம் என்பது ஆண் உறுப்பு பகுதியில் இருக்கும் முடி மழித்தலில் இருக்கிறது. அந்த கால சில ரோமானிய சிற்பங்களில் "அந்த" முடி இருப்பாதாக தெரிகிறது. சர்வாங்கத்தில் உடலில் சிறு முடி கூட இருக்க கூடாதாம். 

ஹிந்து மதத்தில் பிறப்புக்கு பிறவு செய்ய படும் பதினாறு கடமைகளில் ஷ்தகர்ணா, முண்டானா என்ற மொட்டை அடித்தலில் சர்வாங்கம் வராது. ஷ்தகர்ணா என்பது ஹிந்து மதத்தில் எல்லோருக்குமானது. 

இஸ்லாமிய மார்கத்தில் முழு உடல் முடி மழித்தல் செய்கையை பின்பற்றினாலும், அது கட்டாயமான ஒன்றாக பின்பற்ற படுவது ஹனபி பிரிவில் தான். (இது ஷுன்னி துர்க்ஸ் பிரிவையும் உள்ளடக்கியது.) 

கிறிஸ்துவ மதத்தை உலக அளவில் பலர் பின்பற்றிய பொழுது அந்தந்த நாகரிகங்களில்  முழு உடல் முடி மழித்தல் என்ற விஷயம் அடிப்பட்டு போனதாக குறிப்புகள் கிடைப்பதின் மூலம் இது பல கலாச்சாரங்களில் இருந்துள்ளதாக தெரிகிறது. 

புத்த மதத்தில் துறவறம் ஏற்கும் ஒரு நபருக்கு சர்வாங்கம் செய்ய படுவது என்பது அந்த நபரை தூய்மை படுத்துவது போல் ஆகுமாம்.விவரங்கள் சரியாக தெரியவில்லை.  

இலக்கியங்களில் மற்றும் சொல்வழக்கில் சர்வாங்கம் என்பது இல்லவே இல்லை போல் இருக்கு. ஏனென்றால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை காண தேடுதல் பொறியில் தேடிய  பொழுது, கிடைத்த தேடுதல் முடிவுகள் ஏமாற்றங்களையே அளித்தது. ஒரு வேளை அதற்கு வேற பெயர் இருக்கும் போல. எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். 

பொதுவான உலக வழக்கில் சர்வாங்கத்தின் பழமை என்பது கிமு 3000 வரை. ஆனால் கால இடைவேளைகள் பல. முக்கியமாக பெண் உடல் சார்ந்த முடி மழித்தல் பற்றியும் அதனை சார்ந்த ஓவியங்கள் பற்றியும் தன குறிப்புகள் கிடைக்கிறது. அந்த குறிப்புகள் என்பது நேர் கருத்துக்களாக இல்லாமல் இருக்கிறது. 

அதில் முக்கியமாக சிற்ப்பங்களை உதாரணம் காட்டி தான் உள்ளன. அதாவது 1250 - 1450 வரையிலான இத்தாலி நாட்டு ஓவிய தொகுப்பு புத்தகமொன்றில் ஆண் உடலில் முடி இல்லாததை பார்க்கும் பொழுது, அது அந்த கால மத நம்பிக்கையை குறிக்கிறது என்று படித்து உள்ளேன். அது பொதுவான நம்பிக்கையா (ஷ்தகர்ணா போல) இல்லை குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமானதாயென்று தெரியவில்லை. 

இந்திய கோவில்களில் இருக்கும் சிற்பங்களில் கூட உடலில் எந்த முடியும் இல்லை. அப்படி என்றால் பண்டைய இந்தியாவில் சர்வாங்கம் என்பது பொதுவாக பின்பற்றி உள்ளார்களாக என்று தெரியவில்லை. பழைய கோவில் எதுக்காவது நீங்கள் போனால் அங்கிருக்கும் சாமி சிலைகளை பாருங்கள். 

மேலும் விவரங்களை தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். உங்களுக்கு எதாவது விஷயம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Monday, March 11, 2013

கலவை - கர்ணனின் கவசம்


சிவராமன் அண்ணன் குங்குமத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் கர்ணனின் கவசம், காலையில் ஆபீஸ் போகும் வழியிலேயே பார்த்து...போய் சேர்வதற்குள் வாங்கி படித்துவிட்டேன். முதல் பகுதி நல்ல தொடக்கமாக இருக்கிறது. 

சூரியனுக்குள் ஊடுருவும் கனிமத்தை தேடி போகிற கதையில், அமெரிக்கா, ஜெர்மன், இந்திய என்று மூன்று இடங்களில் கதை நகர்கிறது. மைய புள்ளி எதுவென்று தெரியவில்லை. வர்ணனைகள் எடுதுவும் இல்லாமல் நேரடியாக கதைக்குள் நம்மை கொண்டு செல்வதில் அண்ணனின் தீவிர வாசிப்பு தன்மை தெரிகிறது. 

அப்படிய ஏதோ படம் பார்ப்பது போல் இருக்கிறது. வசனங்களிலேயே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. நல்ல இருக்கிறது. கதையின் அடர்த்தி வரும் பகுதிகளில் மெம்மேலும் பெருகும்  என்று நம்புகிறேன். 

இன்னும் அதிகமான படங்கள் போட்டால், கதையோடு ஒன்றி போக வசதியாக இருக்கும். செய்வார்களென்று நம்புகிறேன். 

தேசிய நோக்கம், விஞ்ஞான நோக்கம், தனிப்பட்ட நோக்கம் என்று தொடர் கதை என்ற கோலத்தின் முதல் மூன்று புள்ளி நோக்கங்களை வைத்திருக்கிறார் ஆசிரியர். 

வாழ்த்துக்கள் சிவராமன் அண்ணே.உங்களோட தொடர் கதைக்கு ரசிகர்கள் பலர் கிடைக்கட்டும்.  கதைய நல்லா கொண்டு போங்க. தொடர் கதை படிச்சே ரொம்ப நாளாச்சு.  


= = = = =

திட்டமிட்டு தான் அரசாங்கம் மக்களை நுகர்வு / பொருளாதார அடிமைகளாக மாற்றி இருக்கிறது. அந்த ஆட்டு மந்தையில் இருந்து சிந்தனைவயபட்டு தப்பிக்கும் சில ஆடுகளை அடக்குமுறை கொண்டே அழிக்க பார்க்கிறது. 

இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதின குருதிபுனல் நாவலில் ஒரு வரி வரும். வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை.... கருத்து இது தான் எதற்கும் பயன் தராத மிருகங்களை உருவாக்கி , அது என்றாவது பயன் தரும் என்று பொய்மை நம்பிக்கையில் நம்மை ஆள்வதற்கு தேர்ந்து எடுத்து கொண்டிருக்கிறோம். 

லயோலா மாணவர்கள் கைது :((((

தமிழக அரசின் அதிகபட்ச கோழைத்தனமான அடக்குமுறை நடுஇரவு கைது. 

= = = = = 

சென்னையில் நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்ட காரணத்தால் ஒரு நாய்க்கு ரூ.50 என்று ஒப்பந்த முறையில் ஆட்களை அமர்த்தி இருக்கிறார்களாம். ஒப்பந்த முறை என்றாலே வேலையை முடித்தால் காசு. ஆனால் நாய்களை பிடிக்கும் பொழுது நாய் கடித்து விட்டாலோ அல்லது காயங்கள் ஏற்பட்டு விட்டாலோ அந்த நபருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.  

நாய் கடி ஊசி ஓன்று ரூ.300, பிறவு முழுமையான மருத்துவத்திற்கு ரூ.1500 ஆகுமாம். இதெல்லாம்  நாய் பிடிக்கும் நபர்களால் ரூ.50ல்  எப்படி சமாளிக்க முடியும். என்னதான் அரசாங்க மருத்துவமனையில் இலவசமாக கிடைத்தாலும் ... அரசு மருத்துவ மனைக்கு போய் வரும் செலவு, அதனால் ஏற்படும் அன்றைய வருமான இழப்பு என்று பல விஷயங்களை எப்படி அந்த சாதாரணன் சமாளிப்பான் ??? 

இதில் விவரம் உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.  


= = = = =

இப்பெல்லாம் டைம் பாஸ் உள்ளடக்கத்திற்காக நம்பி வாங்கவே முடியறதில்லை. வந்த புதிதில் பள பள காகிதத்தில் வெளிநாட்டு / உள்நாட்டு நடிகைகளின் கவர்ச்சி படங்களை போட்டது போல இப்பொழுதெல்லாம் அந்த இதழில் காண கிடைப்பதே இல்லை. ஐந்து ரூபாயில் உலக அளவில் ஜொள்ளு விடலாமென்று என் பிரியத்துக்குரிய சினி கூத்து இதழை விட்டுவிட்டு டைம் பாஸ் இதழ் பக்கம் வந்ததற்கு ..... நம்ப வைத்து மோசம் செய்து விட்டார்கள். 

காமெடி என்ற பெயரில் மொக்கை போடுகிறார்கள். அதை தான் நானே பண்ணுகிறேனே. சினி கூத்து அழகியலின் மங்கிய வெளிப்பாடாக இருப்பது தான் டைம் பாஸ் இதழுக்கு பலமென்பதை அதன் ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும். பிறவு விகடன் குழும  பத்திரிக்கை என்பதால் தான் அதை வாங்குகிறேனென்று தெரிந்த பின்னும் வீட்டில் என்னை திட்டாமல் இருக்கிறார்கள். திசை மாறிய இதழ் குதிரையை சரியான திசைக்கு சீக்கிரம் திரும்ப வேண்டும் என்பது என் ஆசை. அதை வரும் இதழிலேயே காண அவா. 


= = = = =

சொல்வது தாமதம் என்று தெரிந்தாலும் தமிழ் ஆழியின் பிப்ரவரி மாத இதழில் வந்திருக்கும் செ.ச.செந்தில்நாதன் எழுதிருக்கும் "ரிஸானா ஒரு குழந்தையின் மரணம்" என்ற கட்டுரையை கட்டாயம் சேமித்து வைக்க வேண்டிய கட்டுரை என்பதை சொல்கிறேன். 

தமிழ் ஆழியின் ஜனவரி மாத இதழ் (அது தான் தமிழ் ஆழியின் முதல் இதழும் கூட) அவ்வளவாக கவரவில்லை என்னை, அல்லது என் விருப்பகுறியவை எதுவும் இல்லை என்றும் சொல்லலாம். அங்கொன்றுமிங்கொன்றுமாய் கட்டுரை பிடித்திருந்தாலும், முழு வடிவிலான பத்திரிக்கையாய் மன விருப்ப அரங்கில் உட்காரவில்லை. 

வரி சேமிப்பு காலம் என்பதால் வேலை பளுவில் எதுவுமே படிக்க முடியவில்லை. நேற்று இந்த மாத உயிர் எழுத்து பத்திரிக்கையில் கார்த்திகைப் பாண்டியன்  எழுதிய "Viva La Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்" சிறுகதையை இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன், வரிகள் கடந்து Fuck Me என்று வந்து பிறகு "நீ நீ நீ நீ" என்று நீண்ட நீக்கள் வந்தது. அதில் கடைசி நீ வந்திருந்த பொழுது சுயம் நீயான நான் நித்திர  தேவியிடம் அடைக்கலம் ஆனேன்.முழுமையாய் படிக்க வேண்டுமின்று.ஆமென். 


Viva La Muerte என்றால் தற்கொலையை கொண்டாடுவோம் என்று அர்த்தமாம். கதை முடிந்த  பிறவு பின்னிணைப்பாக இதன் பொருள் இருக்கிறது
= = = = = 


Related Posts with Thumbnails