Pages

Thursday, March 7, 2013

சன் டிவி - 1990களின் சீரியல்கள்


  இன்று மெகா சீரியல்களோடு மொக்கை போட்டுட்டு இருக்குற சன் டிவி ஒரு காலத்துல என்ன மாதிரியான அருமையான வார சீரியல் எல்லாம் போட்டிருந்தாங்கன்னு நினைச்சாலே ஏக்கமா இருக்கு. திரும்பவும் அந்த மாதிரியான நல்ல ரசனையான சீரியல் எல்லாம் வராதான்னு எதிர்பார்க்க வைக்குறது இப்போ பார்த்து கிட்டு இருக்குற சீரியல்கள்.

அருமையான கதைகள்...வாய்ப்புகளே இல்லை. சில சீரியல் டைரக்டருக்காக, சிலது கதாசிரியருக்காக பார்த்தெல்லாம் ஞாபகம் வருது. 

இப்ப பார்த்துகிட்டு இருக்குற சில சீரியல் :-  


இதுல ஜன்னல் தொடர் ல முதல்ல வந்த கதைய தான் தான் இப்ப தேடிகிட்டு இருக்கேன். அப்பா அம்மா அன்பு கிடைக்காத  IIT ல படிக்குற பணகார  பையனை பத்தியது கதை. ரொம்ப இளமையா இருக்கும். 

வழக்கமா யூ டியூப் ல எதாவது பாட்டு தான் கேட்டுகிட்டு இருப்பேன் ...கொஞ்சம் சலிப்பா தான் இருக்கும்..கொஞ்ச நேரத்துல எதுவும் ஒழுங்கா பார்க்காம தேடிட்டு , வீடியோ விட்டு வீடியோ தாவிட்டு இருப்பேன். இந்த சீரியல் பார்க்க ஆரம்பிச்ச பிறவு கொஞ்சம் இல்லை நிறையவே மனசு ரிலாக்ஸ் ஆகுது.

இந்த சன் டிவி ல வந்த வார தொடர்கள் தவிர்த்து மெகா சீரியல்ன்னு எனக்கு பிடிச்சதுன்ன அது சித்தியும் அலைகளும் தான். அதிலும் சித்தி ல வர ஈஸ்வர பாண்டியன், அலைகள்ல வர ரங்கா ..இவங்க இரண்டு போரையும் என்னால மறக்கவே முடியாது. ரங்காவா வேணு அரவிந்த் நடிப்பை ரொம்பவே ரசிச்சேன். 

சன் டிவிக்கு முன்னாடியே பொதிகை (DD தமிழ்) ல மெகா சீரியல் போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுல வந்த எத்தனை மனிதர்கள், விழுந்துகள், ஒரு பெண்ணின் கதை சீரியல் எல்லாம் மறக்கவே முடியாது. இது எல்லாம் டிவிடியா வந்திருக்கான்னு தெரியல. அப்புடி வந்திருந்த கட்டாயம் வாங்கணும்ன்னு வைச்சு இருக்கேன். 

சேனல் ஆரம்பிச்ச புதுசுல படபடமா போட்டு இடத்த நிரப்புன சன் டிவி ..எப்ப சீரியல் வந்துச்சுன்னு தெரியல. கொஞ்சம் யோசிச்சு பார்த்த நான் முதன் முதலில் சீரியல்ன்னு பார்க்க ரேவதி நடிச்ச ரேவதி சீரியல் தான். அதுல அம்மணி அவங்களோட வீட்டுக்காரோட சுரேஷ் மேனன் கூட நடிச்சாங்க. கொஞ்சம் திகில் கொஞ்சம் காமெடி கொஞ்சம் சஸ்பென்ஸ்ன்னு கலவையா சீரியல் அது வந்தது 1994 ல. சன் டிவியோட ஆரம்ப கட்டம். 

இதுக்கு பிறவு கே.பாலசந்தர் ஸார் டிவி பக்கம் வந்து வித்தயாச கதையால ஒரு சுனாமியையே உண்டு பண்ணினாரு. அதுல ரொம்ப முக்கியமானது கை அளவு மனசு சீரியல் தான். சேனல் விட்டு சேனல்ன்னு நாலஞ்சு ரவுண்ட் ஓடுச்சு. கேபி ஸார் சீரியல்ல என்ன ஒரு பிளஸ் பாயிண்ட்ன்ன டைட்டில் பாடு அப்படியே மனசை கொள்ளை அடிக்குற மாதிரி இருக்கும் ...."கை அளவு கை அளவு மனசு, அது கடல் அளவு கடல் அளவு பெருசு"..... செம பாட்டு. மனசை அப்படியே ஏதோ செய்யும். கேபி ஸாரோட மத்த சீரியல் பாட்டு ஞாபகம் இல்ல. ஆனா ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு மாதிரி வித்தயாசமா இருக்கும். புதுசா இருக்கும். 

கேபி ஸார் சீரியலை தவிர்த்து எனக்கு பிடிச்ச மாதிரி டைட்டில் பாட்டு வந்துச்சுன்ன அது நிம்மதி உங்கள் சாய்ஸ் சீரியல் ல தான். "நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்.... வாழ்க்கை என்ற தோட்டத்தில் பூக்களும் முட்களும் இருக்கும் ...பூவா முள்ளா உங்கள் சாய்ஸ் ..."ன்னு ஆரம்பிச்சு பாட்டு முழுக்க தத்துவ ரீதியா சொல்ல  பட்டிருக்கும். இன்னைக்கு வரைக்கும் நான் தேடிகிட்டே இருக்கும் பாட்டு. ஜன்னல், மர்ம தேசம் போன்ற சீரியல் மாதிரியே இந்த தொடர்லையும் இரண்டு மூணு கதை வந்ததா ஞாபகம். சரியா நினைவு இல்லை. ஆனா முத கதை மாதிரி வேறத்துல சுவாரசியம் இல்லைங்குறது உண்மை தான். 

பிறவு மெட்டிஒலி புகழ் திருமுருகன், மெட்டிஒலி புகழ் எல்லாம் இல்லாதப்ப சித்தி சீரியல் முடிஞ்சா உடனே பெண் கடத்தலை மையமா வைச்சு ஒரு சின்ன தொடரை இயக்கினாரு. கதை சரியா ஞாபகம் இல்லை.. முக்கிய கதாபாத்திரத்துல நடிகை மதூ நடிச்சாங்க. 

அப்ப இருந்தது சன் டிவி மட்டும் தான் இருந்தது, அல்லது அதை தான் மக்கள் அதிகமா பார்த்தாங்க போட்டியே இல்லை, அதனாலேயே நல்ல தரமான சீரியலை தர முடிஞ்சது அவங்களால. இந்த கால கட்டமும் என்னுடைய பதின்ம வயதும் ஒன்றாக வந்து போனதால், எல்லாம் எனக்கு மறக்க முடியாதவையாவே இருக்கிறது. 

சன் டிவில வந்த முக்கியமான சீரியல்ன்னு பார்த்த கேபி ஸார் சீரியலை தவிர்த்து பார்த்த அது மர்ம தேசம் தான். அதை பத்தி எழுதி இருந்தாலும், அதை பத்தி இன்னும் கொஞ்சம் எழுத போறேன்ங்குறதால, அதை பத்தி பெருசா எழுதால. ஆனா மர்ம தேச தொடர்கள்ல ரகசியமும் விடாது கருப்பும் பெஞ்ச் மார்க்டு தொடர்கள். 

இந்த சன் டிவிக்களோட சீரியல் தாக்கம் ஏது வரைக்கும் போச்சுன்ன, சினிமாவுக்கு போட்டியா பார்க்குற அளவுக்கு போச்சு. அந்த அளவுக்கு. சினிமாக்களை விட இதுல கதையும் நேர்த்தியும் அருமையா இருந்ததே இதுக்கு காரணம். இப்ப இரண்டுத்துலையும் மொக்கையா போயிட்டு இருக்குங்குறது வேற விஷயம். 

இதே காலத்துல மத்த சேனலையும் சீரியல் போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னாலும் கதை / ஒ (ளி/லி) அமைப்புல நேர்த்திய கொண்டு வர முடியல. நல்ல தரமான சீரியல்களுக்கு தர அளவுக்கு காசு அவன கிட்ட இல்லைங்குறது முக்கிய விஷயம். வேற என்ன எழுதுறதுன்னு தெரிய. கொஞ்சம் யோசிச்சு பார்த்த பிறவு எழுதுறேன். 

ஆனா இப்ப எல்லாம் இந்த சீரியல்கள் எல்லாம் தின மன கவலைகளை அழிச்சுட்டு சந்தோஷமான நினைவுகளை, NOSTALGIA வகையற மகிழ் குளிர்ச்சியானவையை மனசுக்குள் வைக்கிறது.  

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொ(ல்)லைக்காட்சி அதிகம் பார்ப்பதில்லை...

நன்றி....

ரஹீம் கஸ்ஸாலி said...

எனக்கு தெரிந்து சன் டி.வி.யின் முதல் மெஹா சீரியல் சக்தி என்று நினைக்கிறேன். அப்புறம் வாரந்தோறும் வியாழன் ஒளிபரப்பான நிஷா கந்தி என்னும் திகில் நாடகம்.

கே.பி.முதன்முதலில் தொலைக்காட்சிக்காக இயக்கிய நாடகம் ரயில் ஸ்நேகம் என்று நினைக்கிறேன். இதெல்லாம் உங்க பட்டியலில் மிஸ் ஆகிடுச்சு பாஸ்

Raj... said...

Sir where we can get these DVDs?

Related Posts with Thumbnails