Pages

Wednesday, March 20, 2013

கலவை - இந்திரா பார்த்தசாரதி / உடையார் சாம்ராஜ்யம் / பரதேசி / வங்கி ஊழல்


"இக்கேள்வியிலுள்ள நாணயம் தான் புனிதத்தின் போலியை வெட்ட வெளிச்சமாக்குகிறது, மனத்தை மூடியிருக்கும் திட்டிக் கதவுகளையும் திரைகளையும் நீக்கி தில்லையம்பலச்  சூன்யத்தை நிர்வாணமாக காட்டுகிறது. உலகில் எதற்கு தான் பொருள் உண்டு ?

உலகில் நிரந்திர மதிப்புகள் என்று ஒன்றுமில்லை ; அந்தந்த கால சௌகரியம் தான் அவற்றின் பொருளை நிர்ணயிக்கும் அகராதி. அகராதி மாறி கொண்டே இருப்பது தான் காலத்துக்கு செய்யும் நியாயம். மனப் பரிணாம வளர்ச்சியின் அளவுகோல். ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சௌகரியத்துக்காக கற்பித்துக்கொண்ட அர்த்தங்களை தெய்வமாக்கி, நாம் அவற்றின் அடிமைகளாவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை"

தற்பொழுது வாசித்து கொண்டிருக்கும் இந்திரா பார்த்தசாரதி எழுதின "திரைகளுக்கு அப்பால்" நாவலில் இருந்து. கிழக்கு பதிப்பக வெளியீட்டு பதிப்பின் விலை ரூ.180  


= = = = = 
என்றோ என் வாழ்வழி பாதையிலிருந்து காணாமல் கனவுகள் இரவு வருமென்ற ஏக்கத்தில் இரவு வானத்தை பார்க்கிறேன் .... என் மனதின் பிரதியோ அல்லது என் மனதோ கண்ணில் தெரிவது தெரியவில்லை. கனவாக இருக்குமோ ??? கனவில் தான் காரணங்கலில்லாமல் ஞாண் நினைவுகள் பூரியார் போல் நம்மை ஆட்கொள்கிறது. 

கனவை பற்றிய மன உளறலுக்கு செவி சாய்க்கும் பொழுது தானெனக்கு  ட்டய் ரியோக்கன் எழுதிய ஜென் கவிதை யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பினால் நினைவுக்கு வருகிறது. அது 

"கனவின் பாதைகள் இரவில் 
தொடர்ந்து 
எந்த வழியாய் வந்தாய்,
மலை வெளியில் உறைபனி 
இன்னுமும் கனத்திருக்கும்போது ?"


= = = = =
மாறி வரும் காலத்தை உத்தேசித்து பல வேத பாட சாலைகளும் மதரஸாக்களும் கணக்கு, அறிவியல், கணினிவியல் போன்ற விஷயங்களை தங்களது மாணவர்களுக்கு அவை சொல்லி தருவதாக இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் சிறப்பு செய்தி கட்டுரையாக போட்டுள்ளனர். 

"என்ன காந்தி செத்துட்டாரா" என்று இதுபோன்ற அசட்டு தன செய்தி தாள் ஆச்சரியங்கள் எனக்கு பெரிதும் சிரிப்பையே வர வைக்கிறது. எனக்கு தெரிந்து 2000 லேயே ஒரு வேத பாடசாலையில் கணினி சொல்லி தந்து கொண்டிருந்தனர். ஸ்ரீரங்கம் என்று நினைக்கிறேன். ( தஞ்சையாக இருக்குமோ என்று சந்தேகம்).

கிருஸ்துவ பாதரியார் பயிற்சி பள்ளியில் ஆங்கில இலக்கியம் முதற்கொண்டு அறிவியல் வரைக்கும் சொல்லி தருவார்கள் என்று கேள்வி பட்டிருக்கேன்.

மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில், பணம் தேட வழிமுறை முயற்சிகளில் அவர்கள் எடுக்கும் முயற்சி இது. எப்படி முயற்சி எடுத்தாலும் வேத பாடசாலைகளில் தொடர்ச்சியாக படிக்கும் மாணவர்கள் குறைவு. பணம் ஏற்பாடு பண்ணியோ அல்லது கடன் வாங்கியோ தங்களது பிள்ளைகளை மெக்காலே முறை அடிமைகளாக மாற்றி விடுகிறார்கள் சில பெற்றோர்கள். 


= = = = =
இந்திரா பார்த்தசாரதி எழுதின "இயேசுவின் தோழர்கள்" நாவல் தமிழ் புத்தகாலயம் பதிப்பு ரூ.50 க்கு சென்னை மவுண்ட் ரோடு ஹிக்கின்போத்தம்ஸில் கிடைக்கிறது. அதே போல் பல நாவல்களும் கிடைக்கிறது. ஆர்வம் உள்ளோர் வாங்கி கொள்ளுங்கள். 

= = = = =
நேற்று கர்நாடகா உடையார் சாம்ராஜ்யத்தை பற்றி படித்து கொண்டிருக்கும் பொழுது பெங்களூரின் பெயர் காரணத்தை படித்தேன். 

அதாவது பதினோராம் நூற்றாண்டில் ஒரு நாள் ஹொய்சால நாட்டு மன்னனான முதலாம் வீரபல்லாலா அடர்காட்டிற்குள் வேட்டைக்கு வந்த பிறகு பல மணி நேரம் கழித்து வந்த வழியை மறந்து சரியான வழியை தேடி கண்டிபிடிக்க சுற்றி அலைந்து, மிகுதியான களைப்பில் பசி தாகம் வந்து ரொம்ப கஷ்ட பட்டு கொண்டிருக்கும் பொழுது, அந்த காட்டில் குடிசை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி அவரை கண்டு, அவரின் பசிக்கு அவித்த அவரை விதைகளை சாப்பிட தந்துள்ளார். 

சாப்பிட்டு பசியை துறந்த  அவர், இந்த நிகழ்வின் நினைவாக அந்த இடத்திற்கு "பெல்லெ பெண்ட கலு ஊரு" என்று பெயர் வைத்தாராம். 

இதற்கு என்ன அர்த்தம் என்று மைசூரில் பிறந்து வளர்ந்த என் அம்மாவிடம் கேட்டதற்கு "அவித்த அவரை விதை தந்த ஊர்" என்று சொன்னார்கள். 

அப்படி ஒரு காலத்தில் அடர்காடான பெங்களூரு இப்பொழுது காடே இல்லாத பகுதியாக மாற தலகாடு சாபம் மாதிரி எதாவது இருக்குமாமென்று யோசித்து பார்த்து தேடினேன். பொருளாதார வளர்ச்சி தான் காரணம்.


= = = = =
பரதேசி பிடிக்கலன்னா கூட ஓகே தான், ஆனா பரதேசி படம் பிடிச்சு இருக்குன்னு ஒருத்தன் சொல்லிட்டா.. படம் பிடிக்காத குரூப் அங்க போயி ஏன் அவங்களுக்கு பிடிக்கவில்லைன்னு  ஏன் சொல்லுறாங்கன்னு தெரியல. 

அவங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று படம் பிடிச்சு இருக்கு சொன்னவனுக்கு தெரிய படுத்துறதுக்கா ???

ஒரு பயபுள்ள பெஸ்புக் ல படம் பிடிச்சு இருக்குன்னு ஸ்டேடஸ் போட்டதும், ஒரு ஆடு வந்து எனக்கு ஏன் பரதேசி பிடிக்கலன்னு பக்கம் பக்கமா பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. 

"பாலா ஏன் அடி வாங்கின தமிழர்களை பத்தி படம் எடுக்கிறார், அடி குடுத்த தமிழர்கள் எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியலையா ??"ன்னு கேட்கிறாரு. 

படத்தை பத்தி அவரோட கருத்து இது தான் ன்ன, அதை அவரோட ஸ்டேடஸாகவே போடாம, எதுக்கு படம் பிடிச்சு இருக்குன்னு சொன்னனுக்கு பின்னூட்டமா போடுறாருன்னே புரியல.   


= = = = = 
Pan Card இல்லாம வங்கில இன்சூரன்ஸ் போடுறாங்கன்னு cobrapost வெளிப்படுத்தி இருக்கிறது எல்லாம் "என்ன காந்தி செத்துட்டாரா" வகையற தான். ஆளே இல்லாம கறுப்பு பணத்த வெள்ளை பணமா மாத்துற டெக்னிக் எல்லாம் இருக்கு.  

இவங்க இப்ப காட்டி இருக்குறது சிறு புள்ளி தான். இன்னும் பெரிய பெரிய மலை எல்லாம் இருக்கு. 


= = = = = 

No comments:

Related Posts with Thumbnails