Pages

Monday, March 4, 2013

**மர்ம தேசம் {Marma Desam} - எதுவும் நடக்கும்**


1990 களின் இறுதியில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் கல்ட் பேஷனை உருவாக்கியதில் மர்ம தேசம் தொடர் ரொம்ப முக்கியவதுவம் பெற்றது. ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த தொடருக்காக காத்திருக்கிறது பார்த்ததெல்லாம் பசுமை நினைவுகள். 

கொஞ்ச காலத்திற்கும் முன்பு ராஜ்ஸ்ரீ தமிழ் யூ டியூப் சேனலில்  விடாது கருப்பு தொடரை பல பகுதிகளாக பார்த்த பிறகு மர்ம தேசத்தின் முதல் தொடரான ரகசியம் தொடரை பார்க்க எழுந்த ஆவலில் அதனுடைய டிவிடியை வாங்கி பார்த்துவிட்டேன் 2011 ல். 

அந்த தொடர் சன் டிவியில் வரும் பொழுதெல்லாம், யாரந்த நம்பூதிரி, மர்ம லாரி மற்றும் அதன் ஓட்டுனர் யார் , நவபாஷாண லிங்கத்தின் கைமாறு பயணம் எப்படி போகும் என்றெல்லாம் வாரம் முழுக்க அடுத்த தொடர் வருகிற வரைக்கும் நட்புகளோடு விவாதித்தபடி இருப்பேன். முதல் தொடரில் பல கேள்விகளோடு அதன் இயக்குனர் நாக ரசிக்க வைத்தது போல .... மர்ம தேசத்தின் இரண்டாம் தொடரான விடாது கருப்பிலும்  கருப்பண்ண சாமி, அவர் செய்யும் கொலைகள் என்று மைய புள்ளியை சுற்றி பல புள்ளிகளை வைத்து அழகிய கோலம் போல் தொடரை கொண்டு சென்றிருப்பார் நாகா. 

நடிகர் தேர்வு, இடங்களின் தேர்வு , கேமரா கோணம் என்று பல புதுமைகளை தமிழ் சின்ன திரைக்கு அறிமுக படுத்தியது இந்த தொடர். சன் டிவியின் மிகுதியான வளர்ச்சிக்கு இந்த தொடர் பெரிதும் உதவின என்றால் அது மிகையல்ல. 

வாரவாரம் ஒரு திருப்பத்தை அல்லது ஒரு மர்மத்தை அறிமுகம் செய்துவிட்டு, மக்களை ஆர்வ அலைகழிப்பில் வைத்திருந்ததில் புகழ் பெற்றது இந்த தொடர். 

எனது ஏக்கங்களை ஊக்க படுத்தும் விதமாக ராஜ்ஸ்ரீ ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறது யூ டியூப்பில். மர்ம தேசத்தின் கடைசி தொடரான எதுவும் நடக்கும் தொடரை வலையேற்றி கொண்டிருக்கிறது. வலையேற்றம் முழுமை பெற்று விட்டதாதென்று தெரியவில்லை. பார்க்க தொடங்கி விட்டேன் இன்று காலை.

எதுவும் நடக்கும் சிறப்புகள் பல. மலைவாழ் பூர்வ குடியான்  தானுமாலயக்குடி மக்களின் நம்பிக்கைகள், கற்பக விருட்சம் மரம், அது சார்ந்த தேடல்கள், வானத்து மனிதர்கள் ...காட்டின் பிரம்மாண்டம்   என்று சுவாரசியங்கள் பல இந்த தொடரில். நன்றிகள் பல ராஜ்ஸ்ரீ நிறுவனத்திற்கு. 

என்னயொரு குறை, இதன் முந்தைய தொடர்களான சொர்ண ரேகை, இயந்திர பறவை தொடர்களை பார்த்த பிறவு தான் எதுவும் நடக்கும் தொடரை பார்க்க வேண்டும் என்றிருந்தேன். ஏமாற்றங்களிருந்தாலும், நிறைவுகள் கொஞ்சத்தின் பல. 

என்ன ஓன்று அலுவலக நேரம் போக, பயணித்த நேர கொலைகளை தவிர்த்து கிடைக்கும் மீதி நேரங்களில் முழுமையாக பார்த்துவிடுவது என்று சங்கல்ப்பம்  செய்துள்ளேன். எதுவும் நடக்கும்...நட்புகளே எதுவும் நடக்கும்.    

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசிக்க வைத்த, எதிர்ப்பார்த்த வைத்த, திகில் தொடர்...

எதுவும் நடக்கும்...

புகழேந்தி said...

can u provide the online link

மேவி .. said...

ஆமா தனபாலன் ஸார், அதுவும் இந்த தொடர் ஏற்படுத்திய பரபரப்பை வேறெந்த சீரியலும் ஏற்படுத்தியது இல்லை.

புகழேந்தி ஸார், இப்ப பதிவை செக் பண்ணுங்க ....லிங்க் இணைச்சு இருக்கேன்

RAMG75 said...

எதுவும் நடக்கும் தற்பொழுது முழுமையாக வலையேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

துரதிர்ஷ்டவசமாக இந்தத் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது ராஜ் டிவியில்.

வானத்து மனிதர்கள் புத்தகமும் இப்பொழுது பிரிண்டில் இல்லை.

என்ன முடிவு என்பது மர்மமாகவே இருக்கிறது

RAMG75 said...

வானத்து மனிதர்கள், பல்சுவை நாவலில் டிசம்பர் - 1 - 2014 ஆம் தேதி மூன்று பகுதிகளும் வெளிவருகிறது.
www.palsuvainovel.com

Bala Sakthis said...

வானத்து மனிதர்கள் is available now. Please check:

http://www.udumalai.com/vanathu-manitharkal.htm

Related Posts with Thumbnails