Pages

Sunday, April 28, 2013

McDonald (மேக் டொனல்ட்) உணவில் தலைமுடி - ஒரு எச்சரிக்கை


கொஞ்ச நாள் முன்னாடி நியூஸ்பேப்பர்ல McDonald காரன் McFlurry with Oreo ன்னுட்டு விளம்பரம் குடுத்து இருந்தான். சரின்னு எப்படி இருக்குமுன்னு பார்க்க வளசரவாக்கம் கடைல குறைஞ்ச அளவுக்கு  51 ரூவாய் மொய் எழுதிட்டு கொஞ்ச நேரம் காத்திருத பிறவு ..... பச மாதிரி ஒன்னை தந்தான். 

சாப்பிட்ட சப்புன்னு இருந்துச்சு...அட கொடுமையேன்னு வேற வழி இல்லாம காலி பண்ண ஆரம்பிச்ச பிறவு பார்க்குறேன்...அதுல ஒரு தலமுடி. 

கவுன்ட்டர் ல இருந்த அம்மணி கிட்ட என்னமா இதுன்னு கேட்க, அதுக்கு அவங்க "சாரி சார்"ன்னு சொல்லிட்டு வேற அதைய கொண்டு போயிட்டு, வேற ஒன்னை கொண்டு வந்து தந்தாங்க. 

எனக்கு என்னவோ அந்த முடிய மட்டும் எடுத்துட்டு, மேலும் இரண்டு மூணு பிஸ்கட் போட்டு கிளறி கொண்டு வந்திருப்பாங்களோங்குற சந்தேகத்துலேயே அந்த பசைய முழுங்கி வைச்சேன். 

எதுக்கும் இருக்கட்டுமேன்னுட்டு இன்வாய்ஸோட இருந்த பில்லை எடுத்து சோப்பு ல வைச்சுகிட்டேன். கொஞ்சம் யோசிச்ச பிறவு தான் தோனுச்சு, அவங்க முத வாட்டி குடுத்ததை உள்ளறக்க எடுத்துகிட்டு போன பிறவு ஒன்னும் பண்ண முடியாதுன்னு. பல யோசனைல நான் இருந்ததால எனக்கு ஒன்னும் தோனல.

பல இடத்துல இந்த மாதிரி ஆகிருக்குறதால எனக்கு ஒன்னும் இது புதுசு இல்ல. ஆனா சுத்தம் தரம்ன்னு பெருமை பீத்திக்குற மேக்டொனல்ட் ல இப்புடி நடந்து இருக்குறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. 

சரி எப்புடி எதுவா இருந்தாலும் நான் அங்கனையே கம்ப்ளைன்ட் தந்திருக்கலாம் தான், ஆனா எனக்கு தெரிஞ்சு இந்த பெரிய பெரிய கொம்பனில தீர்வை கண்டுபிடிக்காமல், அவங்களுக்கு தெரிஞ்ச ஒரே தீர்வான அங்கன வேலை ல இருக்குற ஆளை வேலை விட்டு தூக்குறது இல்ல ஆப்பு வைக்குறதுன்னு தான் செய்வாங்க. 

இன்னொன்னு முக்கியமா அங்க ஸ்டாக் எல்லாம் பார்பாங்க, அதனால பழசையே கிளறி எனக்கு தந்திருக்கலாமுன்னு தான் தோணுது. தலமுடி தானேன்னு விட்டுட்டாலும், இங்கன்ன அது பிரச்சன இல்ல, சாப்பாட்டு பொருள்ல தலைமுடி விழுற அளவுக்கு அலட்சியமா இருக்காங்களேன்னு தான். இன்னைக்கு தலைமுடி விழுறதுக்கு வாய்ப்பு இருக்குன்ன, நாளைக்கு என்னவெல்லாம் விழ வாய்ப்பு இருக்கோ. அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். 

அதனால நாளபின்ன அந்த பக்கம் போன கொஞ்சம் உஷாரா இருந்துகோங்க. 

இந்த பதிவ டைப் அடிக்கும் போது எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்வாய்ஸ் நம்பரை போடலாமுன்னு நினைச்சேன், பிறவு அதனால ஒரு ஆணியும் புடுங்க முடியாதுன்னு தோனுச்சு அதனால விட்டுட்டேன். ஆனா அந்த பில்லுல சர்வீஸ் டக்ஸ் ன்னு போட்டு கொஞ்சமா சில்லறை காசு போட்டிருக்கான். தலமுடிய போட்டது எல்லாம் ஒரு சர்வீஸான்னு கேக்க தோணுது.  

1 comment:

ப.கந்தசாமி said...

கண்டிப்பாக அதுவும் ஒரு சர்வீஸ்தான். சந்தேகம் வேண்டாம்.

Related Posts with Thumbnails