Pages

Sunday, October 20, 2013

*கலவை* - }லிங்காயத் சீரொட்டி, காவல் துறை சீருடை, கே.பாலசந்தர்{

"குடகு மலை காற்று வந்து" என்ற இளையராஜா பாடலை கேட்டு 
மகிழ்ந்திருப்போம்.

இந்த குடகு மலை என்பது கர்நாடக மாநில கூர்க் மாவட்டத்தை குறிக்கும். 
பண்டைய காலத்தில் இந்த பகுதியை ஆண்ட வம்சத்தை குடவர் வம்சம் என்று சொல்வர்கள். இவர்கள் ஆட்சி கரையோர கேரளா, கர்நாடகா, மாரட்டம் ஆகிய பகுதிகளில் பறந்து விரிந்திருந்தது. இந்த பகுதியில் அந்த காலத்தில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தார்கள். பிராமண சமூகத்தார் மாதிரியே பூணூல் அணிந்து, அதில் சின்ன லிங்க வடிவை கட்டி வைத்திருப்பார்கள். பூஜையின் பொழுது அதை அவிழ்த்து, அபிஷேகம் பண்ணுவார்கள். பிறவு மீண்டும் பூணூலில் கட்டி கொள்வார்கள். 

சமையற்கலையிலும் திறம் வாய்ந்தவர்கள். ஹைதர்அலி காலத்துக்கு பிறகான காலகட்டத்தில் மைசூர் வந்தவர்கள், பிழைப்புக்காக அங்கங்கே சிற்றுண்டி உணவகங்கள் வைத்து பிழைப்பை ஓட்டி கொண்டிருந்தார்கள். அதிலும் இவர்கள் போடும் மசால் வடையின் சிறப்பு அம்சம்.... அதற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்ததாம் 1950களின் மைசூரில். 

பொருளாதார தேடலின் காரணமாக நாடெங்கும் பரவி விட்டார்கள். லிங்காயத் சிற்றுண்டி என்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

வியாபார போட்டியில் உணவு பண்டங்களை சாதி பெயர் வைத்து சந்தையிடுவதை நிறுத்தி விட்டார்கள். என்னை போன்ற உணவு பிரியர்களுக்கு பெரும் இழப்பு அது.

இவர்கள் மைசூர் அரண்மனையில் தலைமை சமையல்காரர்களாக இருந்து உள்ளார்கள். 

கர்நாடக கல்யாணங்களில் சீரொட்டி / சீரோடி என்ற பண்டம் இல்லாமல் இருக்காது. சுவையில் உச்சமது.

அதை சாப்பிடுவதும் தனி கலை. சீரொட்டிக்கென்றே தனிபட்ட பூரியோடு லட்டையும் பாதாம் பாலையும் கலந்து பிசைந்து சாப்பிட்டால் ..... அந்த சுவை நாக்கிலிருக்கும் வரை சொர்கத்தை அனுபவிப்பீர்.

இந்த சீரொட்டியும் லிங்காயத்காரர்களின் கண்டுபிடிப்பு தான் என்று கேள்வி. 

= = = = =
தமிழக அரசு தமிழ் நாட்டு காவல்துறையினருக்கு சீருடை படியாக ரூ.2650 வருடம்தோறும் வழங்கிறதாம். 

அதெப்படியோ இருந்துவிட்டு போகட்டும், நான் சென்னை மாநகரில் பார்க்கும் பல போலீசார் ஒவ்வொரு மாதிரியான காக்கி நிறத்தில் ஏன் உடை அணிகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

ஒரு வேளை தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் திரைபடத்தில் வைக்கும் குறியீடு போல் தமிழக அரசும் எதோ ஒரு குறியீடு வைத்து நாட்டு மக்களுக்கு புதிய கருத்தை சொல்ல வருகிறார்களோ ????

= = = = =
சின்ன வயசுல தீபாவளிக்கு மட்டும் தான் புது துணி எடுத்து தருவாங்க வீட்டுல. தீபாவளி துணி எடுக்க தான் வருஷத்துக்கு ஒரு வாட்டி டவுனுக்கு போவோம். துணி எல்லாம் எடுத்து முடிச்சு பிறவு சாப்பிட வசந்த பவனுக்கு போவோம்.

நாங்க இரண்டு பேர் கேட்டதை எல்லாம் சாப்பிட வாங்கி தருவாங்க. ஆனா அம்மா ஒரே ஒரு தோசை சாப்பிடுவாங்க. அப்பா காபி மட்டும் சாப்பிடுவார். சில சமயம் காபியஒன் பை டூ போட்டு அம்மா அப்பா இரண்டு பேரும் சாப்பிடுவாங்க. 

அப்ப எல்லாம் ஒன்னும் தெரியாது. ஆனா இப்ப ஒவ்வொன்னா ஞாபகம் வருது. 

= = = = =
கே.பாலசந்தர் அவர்கள் சின்னதிரையில் முத்திரை பதித்த வார தொடர்களில் முக்கியமான தொடர்களில் ரயில் ஸ்நேகம், கையளவு மனசு மற்றும் ஜன்னல் - சில நிஜங்கள் சில நியாயங்கள் ஆகியவை அடங்கும். 

பதின்ம வயதில் பார்த்து ரசித்ததை இப்பொழுது மீண்டும் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன் ராஜ்ஸ்ரீ தமிழ் சேனலில்.

= = = = =
முன்னாடி எல்லாம் ஞாயித்து கிழம நியூஸ் பேப்பர்ன்ன.... முதல் பக்கத்திலேயே அழகா கவர்ச்சி படம்ன்னு ஒன்னு போடுவான்.

ஆனா நான் இன்னைக்கு வாங்கின நாலு நியூஸ் பேப்பரிலும் கவர்ச்சி படமே இல்லை. 

இப்ப எனக்கு என்ன சந்தேகம்ன்ன .....

தமிழ் நாட்டுல முதல் பக்க கவர்ச்சி படம் இல்லாம ஞாயித்து கிழம நியூஸ் பேப்பர் விக்குற அளவுக்கு மக்களோட மன பக்குவம் வளர்ந்துருச்சா இல்லை இப்ப இருக்குற நாயகி ல யாரும் கவர்ச்சியா இல்லைன்னு நியூஸ் பேப்பர்காரன் நினைக்குறானா ?????

= = = = =
இந்திய ஆங்கில எழுத்தாளர்களிடம் கொஞ்சம் கவனித்து பார்த்தல் மில்ஸ் & பூன்ஸ் நாவல் பாதிப்பு இருக்கும். அல்லது அப்படி இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. 

அந்த நாவல்களில் தான் கதையின் போக்கு ஆரம்பித்து கொஞ்ச பக்கங்களிலேயே நாயகன் நாயகி உடை கலைந்து உறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். சேத்தன் பகத் இந்த விஷயத்தை படிப்பவர்கள் கதையோடு ஒன்றி போக பயன்படுத்துவார்.

இப்பொழுது நான் படித்து முடிக்க போகும் ரவீந்தர் சிங்க்கின் "எனக்கும் ஒரு காதல் கதை இருந்தது" நாவலில் இதே போல் ஒரு கட்டம் வருகிறது. 

இந்த கட்டங்களுக்கிருக்கும் இலக்கண படி நாயகன் நாயகி இருவரும் மூடிய அறையில் தனியாக மாலையில் தனியாக இருக்கிறார்கள். 

தொடுதல்... வாசம் முகருதல்... பின் உதட்டு முத்தம். இவைகளுக்கு பின் நாயகன் சொல்லும் வரிகளால் இந்த நாவலெனக்கு மிகவும் பிடித்து போகிறது. அந்த வரிகள்.....

"நான் நமது நம்பிக்கைகளுக்கு புறமான காரியத்தை செய்ய மாட்டேன். ஏன் என்றால் கண்ணே ...நான் உன்னை காதலிக்கிறேன். என் எல்லை எனக்கு தெரியும். உன்னை சங்கட பட வைக்கும் பிறகு வருத்த பட வைக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன். சத்தியம். வாழ்க்கையின் இப்பொழுதுகளை மறக்க முடியாதவைகளாக மாற்ற என்னோடு இருக்கு என் காதலியே...காதலின் குளுமையை அனுபவிக்க"

(எதோ என்னால் முடிந்த அளவுக்கு மொழி பெயர்த்து இருக்கேன்)

= = = = =
ஆபீஸ் ல புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்து இருந்தாங்க. 

கொஞ்சம் வேலையா இருந்ததால பெயர் மட்டும் கேட்டுட்டு ..... வேலை விஷயமா வெளில போயிட்டேன். இன்னைக்கு மதியம் சாப்பிட்டுகிட்டு இருக்குறப்ப அந்த பொண்ணும் சாப்பிட வந்தாங்க. சரி எடுத்த உடனேயே பிசினஸ் பத்தி பேசி பயம் காட்ட கூடாதேன்னு .... சும்மா பொதுவா பேச ஆரம்பிச்சேன். 

பேசினப்ப தான் தெரிஞ்சுது அந்த பொண்ணு இந்த வருஷம் தான் B.E. FASHION TECHNOLOGY பாஸ் பண்ணிருக்காம். கேம்பஸ் இண்டர்வியூலேயே பெங்களூர் ல வேலை கிடைச்சுச்சாம்.

அங்க போய் தனியா தங்கின பொண்ணு கெட்டு போயிரும்ன்னு அவங்கப்பா விடலையாம். இத்தனைக்கும் அந்த பொண்ணு படிச்சதுக்கு தொடர்ப்பான வேலையாம். இரண்டு மாசம் வேலை போகவாச்சு அனுமதி குடுங்கன்னு சண்டை போட்டு இங்க வந்து சேர்ந்து இருக்காங்க. படிக்குறப்ப வேலை ல பெருசா சாதனை செய்யணும்ன்னு கனவு கண்டு இருந்திருக்காங்க. 

இதை கேட்டுப்ப எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல .....

"உங்களுக்கு அது தான் கனவுன்ன பகுதி நேரமா கூட செய்யலாம் ...... " ன்னு பலது சொல்லி அட்வைஸ் தந்தேன். 
இப்ப எல்லாம் பெண்களால் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் காலேஜ் முடிக்குற வரைக்கும் தான் இருக்க முடியுது போல. 

ஏன் பல அப்பாகள் பலமான அடக்குமுறை ல பெத்த பொண்ணுகளை வளர்க்குறாங்கன்னு தெரியல. பெத்தவங்களுக்கு பாதுகாப்பு உணர்வு தேவை தான் ...ஆனா அது அவங்க பொண்ணுக்களோட கனவை நசுக்குற அளவுக்கு தேவையா ????

= = = = =
என் வாழ்வில் காந்தியின் "உலகில் எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அந்த மாற்றமாக நீ இரு" என்ற கருத்து தான் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

நான் வளர்ந்த சமூகத்தில் வேற்றுமைகள் பார்க்க படுவதை கண்டு எனக்கு வெளி உலகம் அறிமுகமான நாளிலிருந்து பெரும் கோபம் வரும். கோபம் வந்த காலத்திலிருந்து இன்று வரை நான் யாரிடமும் எந்த அடிபடையிலும் வேற்றுமை பார்ப்பதில்லை.

அதே காந்தியின் எளிமையை நானும் முடிந்த வரைக்கும் கடைப்பிடித்து வருகிறேன். என் ஆழ்மன ஆசைகளே இந்த கடைபிடிப்பிலுள்ள தளர்வுகளுக்கு காரணம்.

அப்படிபட்ட காந்தியின் எளிமைக்கும் காரணமாக அமைந்தது ஒரு புத்தகம். அது John Ruskin அவர்கள் எழுதிய "Unto This Last" என்ற புத்தகம் தானாம்.

காந்தியின் 144வது பிறந்த நாளை தொடர்ந்து THE WEEK பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையில் இந்த தகவலை படித்தேன்.

தன் வாழ்வின் போக்கை மாற்றியதாக ஹரிச்சந்திர நாடகத்தை காந்தி சொன்னதை அடுத்து, நான் அந்த நாடகத்தை தேடி கடைசியின் திரைபட வடிவில் பார்த்தேன். இப்பொழுது இந்த புத்தகத்தையும் படிக்க ஆவலெனக்கு.

= = = = =
மல்பா தஹானின் "எண்ணும் மனிதன்" நாவலை படித்ததுண்டா ??? 

அதில் வரும் பெரமிஸ் சமீருக்கு சற்றும் கணித திறமையில் குறையில்லாதவன் தான் மஹாபாரத சகுனி. 

சிறுவயதில் சகுனியின் கணித திறன் பற்றிய கிளை கதையொன்றை கேட்டிருக்கிறேன். அதில் அவன் தனது கணித திறமையால் கணக்கீட்டு பகடையை உருட்டி தனக்கு வேண்டிய எண்களை போட்டு பகடையாட்டம் ஆடுவானாம். அந்த திறமை அவனுக்கு தந்தை வழி வந்தவை.

பெரமிஸ் சமீரும் சகுனியும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான். 

கால போக்கில் நாயக வழிபாட்டு சிக்கலில் மாட்டி கொண்ட மஹாபாரத்தில் சகுனியின் இந்த கணித திறனும் புத்திசாலித்தனமும் அடிபட்டு காணாமல் போனது.

தந்தையின் எலும்புகளிலிருந்து சகுனி பகடைகளை செய்தான் என்பது ஒரு குறியீடு தான். உண்மையில் அது தந்தை மூலம் அவனுக்கு வந்த அறிவு திறனை தான் குறிக்கும்.

= = = = =
கிட்டதட்ட பத்து வருஷம் கழிச்சு என்னோட உயிர் நண்பனை பார்க்க போறேன். 

கொஞ்ச நாள் முன்னாடி தான் அவன் நம்பர் கிடைச்சு .... போன் பண்ணி பேசினேன்...

இன்னைக்கு என்னை பார்க்க சென்னை வந்திருக்குறதா அவன் போன் பண்ணி சொன்னப்ப, இணையத்தின் மூலம்  ஸ்பரிசம் இல்லாத நானும் அவனும் மாற்றி மாற்றி ஒரே கேள்விய தான் கேட்டு கொண்டிருந்தோம்....

"மச்சி ..இப்ப பார்க்க எப்புடிடா இருப்ப... மீசை எல்லாம் வைச்சு இருக்கீயா... வெயிட் போட்டுட்டியா ???"

என் பதின்ம வயத்தில் நானின்றி அவனில்லை, அவனின்றி நானில்லை என்று கூட சொல்லலாம். அவனது சிறப்பு என்னவென்றால் அவனை சுற்றி உள்ள எல்லோரையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பான். இப்பொழுதும் அதே சிறப்போடு இருக்கிறான்.

சீக்கா.... அவனது செல்ல பெயர். அப்படியே வானத்தில் பறப்பது போலிருக்கு.

ஒவ்வொரு நிகழ்வாய் நினைவிற்கு வந்து மகிழ்வூட்டுகிறது.

தொடர்சியாய் ஏழு மணி நேரம் போவது தெரியாமல் பேசிகொண்டே இருப்போம் அப்பொழுதெல்லாம்.

என்னை என்னிலிருந்து மீட்டெடுக்க வந்துவிட்டான் என் தோழன்.

= = = = =

 காலேஜ் படிக்கும் போது இன்னோருத்தன் லவ் பண்ணிகிட்டு இருந்த பொண்ணை நானும் லவ் பண்ணிகிட்டு இருந்தேன். எப்புடியும் அவங்கக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சுருவாங்க...அப்ப நமக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கும்ங்குற நம்பிக்கை தான். 

நல்லா படிக்குற பொண்ணு வேற.... கட்டாயம் நல்ல வேலை கிடைக்கும்...அவங்களுக்கு வாக்கபட்ட காலம் முழுக்க கண்கலங்காம என்னை பார்த்துப்பாங்க நம்பிக்கை. என்னோட விதி காலேஜ் முடிக்குற வரைக்கும் அவங்க இடைல சண்டையே வரல.

காலேஜ் முடிஞ்சு நான் ஊருக்கு வந்து ...வருஷம் பல போய்..நான் அந்த பொண்ணை மறந்தே போயிட்டேன். 

பத்து வருஷம் கழிச்சு ....

இன்னைக்கு சாயங்காலம் எதாவது மொக்கலாம்ன்னு ஆபீஸ் பக்கத்துல இருக்குற பெரிய பேக்கரிக்கு போய் உட்காரேன் கொஞ்சம் தள்ளி அந்த பொண்ணு கைல குழந்தையோட யார்கிட்டையோ பேசிகிட்டு உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க. அந்த பொண்ணு என்னை பார்த்துட்டாங்க. நான் பார்க்காத மாதிரியே எஸ்கேப் ஆகிறலாம்ன்னு இருந்தேன்.

ஏன்ன ..... ஆண்ட்டிங்க கிட்ட பேசுறது எல்லாம் ரொம்ப  பாவம்.... அந்த நேரத்துல எதாவது பிகர் உஷார் பண்ண ட்ரை பண்ணலாம்ல. 

ஆனா கை கழுவ போகும் போது "ஏய் நீ மேவி தானே..."ன்னு சொல்லி கூப்பிட்டு உட்கார வைச்சு பேச ஆரம்பிச்சுட்ட காலேஜ் பத்தி. நான் காலேஜ் படிக்கும் போது முக்கவாசி நேரம் டி கடையிலேயே இருந்ததால ஒன்னும் புரியல. 

ஒரு ஆண்ட்டி கூட உட்கார்ந்து பேசி இருக்குறத மத்த பிகர்ஸ்  பார்த்தா என்னைய பத்தி என்ன நினைப்பாங்கன்னு கவலை ல இருந்தேன். 

பேச்சு வாக்குல அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம்கிட்டாங்கன்னு தெரிஞ்சுது. ஒரே சந்தோஷம் தாங்க முடியல. ஓழிந்தான் எதிரின்னு விட்ட போதும் அரைகுறைய பேசிட்டு வந்துட்டேன். 

ஆபீஸ் வந்த பிறவு தான் நினைவுக்கு வந்துச்சு.... நாங்க காலேஜ் படிக்கும் போது அந்த பொண்ணோட தங்கச்சி ஸ்கூல் படிச்சு கிட்டு இருந்தாங்க. அவங்களை பத்தி ஒன்னும் கேட்காம வந்துட்டோமேன்னு. 

எஸ்கேப் ஆகுற அவசரத்துல அந்த பொண்ணுகிட்ட மொபைல் நம்பர் கூட வாங்காம வந்துட்டேன். வாங்கி இருந்தா.... இந்த நேரத்துக்கு அந்த பொண்ணுகிட்ட பேசி இருப்பேன்

 :((((((((

No comments:

Related Posts with Thumbnails